யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

குஷ்பு

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 10, 2005
குஷ்பு
இப்போ எல்லாம் இந்த தலைப்பைப்பத்தி எழுதாவிட்டால் வலைப்பதிவெழுத்தாளானாக மதிக்கமாட்டார்களாமே.. சரி எதற்கு வம்பு.. நானும் எனக்கு தெரிந்த குஷ்புவைபத்தி எழுதிவிடுகின்றேன்..


வாசனை என்றவுடன் பளிச்சென மூக்கின் முன் நிற்பது "மண்வாசனை"-தான்... அதைவிட சடாலென சந்தோஷத்தை அள்ளித்தருவது எதுவுமே இல்லை.. அந்த முதல் துளி விழுந்ததுமே பரபரவென எப்படித்தான் பரவுதோ.. சின்ன குழந்தையோ, வயதானவரோ.. வித்தியாசமின்றி உற்ச்சாகத்தை அள்ளிப்பரப்புவது மண்வாசனையால் மட்டுமே முடியும்..

மண்வாசனை என்றவுடன் நினைவுக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று.., பள்ளியில் ஒருமுறை ஆங்கில வகுப்பில் நானும் என் நண்பனும் கடைசி வரிசையில் எதோ பேசிக்கொண்டிருப்பதை கண்ட நிர்மலா ஆசிரியர், கூப்பிட்டு என்னவென்று கேட்க்க, மண்வாசனைக்கு இணையான ஆங்கில வார்த்தையை கண்டுபிடிக்க நாங்கள் நடத்திய விவாதத்திற்கு அவருக்கும் விடை தெரியவில்லை. :-) சில வார்த்தைகள் மொழிபெயர்க்க முடியாதென உணர்ந்தது அன்றுதான்..

மண்வாசனைக்குப்போட்டியாக அடுத்து நிற்பது, அம்மா கடுகு தாளிக்கும் போது எழும் வாசனை.. என்னதான் சுவையான சாப்பாடாயிருந்தாலும், இந்த சாதரண கடுகு தாளிக்கும் வாசனையை மிஞ்ச முடியாது.. கல்கத்தாவிலிருக்கும் போதும் சரி, இங்கே வந்து சமைக்கும் போது கடுகை தாளிக்கும் போது சட்டென ஆயிரம் மைல்கள் தாண்டி வீட்டின் சமையலறையில் அம்மா முதுகின் பின்புறம் நின்று என்ன சமையல் என்று எட்டிப்பார்ப்பது போன்று தோன்றும்... :-(

ஹீம்.. அடுத்து.. புதிதாய் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் உள்ளிருந்து வரும் அந்த ஈர சிமெண்ட் வாசனை... எவ்வளவு அவசராமாயிருந்தாலும்... செல்லும் வழியில் இந்த வாசனைக்காக சிறிது நொடி அங்கே கண்மூடி நிற்கத்தவறியதில்லை..

வீடு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, வீட்டின் வாசனைதான்... ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வாசனை உண்டு... அது நறுமணமா, நாற்றமா என்று இனம் பிரிக்கமுடியாத இருவகையானது... எத்தனை நாட்கள் கழித்து வீடு திரும்பினாலும், வீட்டின் வாசனை நுகர்ந்தபின் வரும் அந்த பாதுகாப்பான உணர்வே தனி.. அது இங்கே அடிக்கும் எத்தனை விலையுயர்ந்த அறை வாசனை திரவியத்திலும் கிடைக்காது...

அடுத்து, பழைய புத்தக வாசனை..., எழுதிய பழைய நாட்குறிப்பு, பள்ளி நோட்டு புத்தகங்கள், அம்மா சின்ன வயதில் பைண்ட் பண்ணி வைத்த பொன்னியின் செல்வன்... என சொல்லிக்கொண்டே போகலாம்... எல்லோரும் புதிய புத்தக வாசனையை சிலாகித்து பேசும் போது, அட இவர்களெல்லாம் பழைய புத்தக வாசனையுடன் எழும் நினைவலைகளில் திளைத்ததில்லை என்று பரிதாபப்படத்தோன்றும்...

பத்தாவது பள்ளித்தேர்வு விடுமுறையில், அந்த பழைய பைண்ட் பண்ணிய பொன்னியின் செல்வனின் வாசனைக்கே அதை திருப்பி திருப்பி படித்துக்கொண்டிருந்தது வாசனைக்கு.. மன்னிக்கவும் நினைவுக்கு வருது...

அப்புறம்... பெட்ரோல் வாசனை, நல்லா ஆசை தீரத்தீர விளையாடிவிட்டு வரும்போது வரும் வியர்வை வாசனை, அப்பாவுடைய பீரோ வாசனை, டெட்டால் வாசனை.. புதிதாய் அடித்த பெயிண்ட் வாசனை.. இப்படி நிறைய உண்டு...

இப்போ இங்கே வந்து எந்த வாசனையும் புதிதாய் பரிச்சியமானதாய் நியாபகம் இல்லை...

அப்படியே எல்லோரும் ஒரு நொடி கண்மூடி உங்களுக்கு என்ன வாசனை வருதுனு சொல்லுங்க பார்ப்போம்

பி.கு:
யாருக்காவது, "மண்வாசனை"-க்கு இணையான ஆங்கில வாசனை.. ச்.சீ.. ஆங்கில வார்த்தை தெரிந்தால் சொல்லுங்களேன்...!!!

அப்பாட.. நாமலும் ஒருவழியா குஷ்புவைப்பத்தி எழுதியாச்சு.. , ஆமாம் ஹிந்தில வாசனைக்கு குஷ்புனுதான் சொல்லுவாங்கலாமே...

ஆஹா.. இப்பொ.. யாரோ தார் கொண்டு வர்ர மாதிரி தெரியுது.. அண்ணா.. நான் அப்படிப்பட்ட ஆளு இல்லைங்கன்னா......





19 மறுமொழிகள்:

rv சொன்னது… @ திங்கள், அக்டோபர் 10, 2005 8:19:00 AM

//அம்மா கடுகு தாளிக்கும் போது எழும் வாசனை//
கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகா வத்தல்.. அடாடாடா.. இத அடிச்சிக்க வேற ஓண்ணும் கிடையாதுங்க..

//"மண்வாசனை"-//
சில தாவரங்கள் உருவாக்கும் ஒருவகை எண்ணெய் மழையின் போது வடிந்து நிலத்திலும், கற்களிலும் மேல் படிந்து, பின்னர் இந்த வாசனையை அவை வெளியிடுகின்றன என்று எங்கேயோ கேட்டிருக்கிறேன்.. சரியாகத் தெரியவில்லை

புது கார் பிளாஸ்டிக் வாசனை, பெவிகால் வாசனை, operation theater வாசனைன்னு இன்னும் நிறைய இருக்கு.

நல்லாத்தான் மோப்பம் பிடிச்சிருக்கீங்க.. நல்ல பதிவு!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 10, 2005 8:20:00 AM

அட சரியா சொன்னீங்க.. கஜனி.. குளிர் இங்கே ஆரம்பிச்சிடுச்சு.. அதான் நுகரமுடியா வாசனை பத்தி.. ஓர் நியாபகம்.. ;-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 10, 2005 8:22:00 AM

:-)))) நன்றி இராமநாதன்

Pot"tea" kadai சொன்னது… @ புதன், அக்டோபர் 12, 2005 11:25:00 PM

மண் வாசனையை பற்றி விளக்கிய நீங்கள் இன்னொரு...ண் வாசனையை விட்டு விட்டீர்களே! அதில் கூட ஒரு கிறக்கம் உள்ளது. அதுவும் ஊடலில் இருந்து சந்திக்கும் பொழுது...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், அக்டோபர் 13, 2005 1:40:00 AM

வருகைக்கு நன்றி... பொட்-டீ-க்கடை...
என்ன பன்னுவது எனக்கு அறிமுகமான வாசனைகள் மட்டுமே நினைவுகொள்ள முடிந்தது ;-)

பெயரில்லா சொன்னது… @ வியாழன், அக்டோபர் 13, 2005 2:27:00 AM

உடையில் ஒட்டிக்கொள்ளும் தாளிக்கும்
வாசனை மட்டும் தாங்க முடியாதது!
மண்வாசனை= fresh earth smell ????

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், அக்டோபர் 13, 2005 2:43:00 AM

உடையில் ஒட்டிக்கொள்ளும் தாளிக்கும் வாசனையா ?? புரியலையே

ஹீம்.. பொருத்தமாத்தான் தெரியுது.. ஆனால் ஒரே வார்த்தையா எதுவுமே இல்லையா ?!

வருகைக்கு நன்றி.. மீண்டும் சந்திப்போம் பண்டாரம்...

Pradeep Kuttuva சொன்னது… @ வியாழன், அக்டோபர் 20, 2005 9:26:00 AM
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Pradeep Kuttuva சொன்னது… @ வியாழன், அக்டோபர் 20, 2005 9:28:00 AM
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
NaiKutti சொன்னது… @ வியாழன், அக்டோபர் 20, 2005 9:47:00 AM

அருமையான வலைப்பதிவு... எனக்கு சட் என்று நியாபகம் வரும் வாசனை: மூன்று அல்லது நான்கு நாள் துவைக்காமல் வியர்வையுடன் இருக்கும் "விளையாட்டுக்கு உபயோகிக்கும் உடைகள்"...:-)

"நீ உங்க அப்பா அம்மாவுக்கு எத்தனாவது குழந்தை?" -- இதை ஆங்கிலத்துக்கு மாற்றுவது கடினம்!!!!

கண்டிப்பாக சில வார்த்தைகள் மொழிபெயர்க்க முடியாது... தாய் மொழி, தாய் மொழி தான்

Pradeep Kuttuva சொன்னது… @ வியாழன், அக்டோபர் 20, 2005 11:50:00 AM

sorry had to delete the previous comments...spelling mistake...ithukku thaan oru language le pesanum...

very nice post...Mann vasanai...and kadugu vasanai...too good..neenga pona janmathuley scotland yard le "moppa dog" aa irundeengala..smell le ivlo memoriesaa..very very nice post...

US lernthu varum pothu flight lernthu erangina udaney...namma chennai airport smell irukkey...athuvum nalla smell thaan..

G.Ragavan சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 21, 2005 1:51:00 PM

வாசன எத்தனை வகை. அடடா! பால நல்லாக் காச்சி அத ஒரு கிண்ணத்துல எடுத்து மேல தூக்கி டம்ளர்ல ஊத்தி ஆத்தும் போது ஒரு வாசனை வரும்.

நான் அசைவம். ஆகையால கடுகு தாளிக்கும் வாசனை மட்டுமல்ல வேறு பல வாசனைகளும் என்னைக் கவர்ந்திருக்கின்றன. காரிலோ பைக்கிலோ பஸ்ஸிலோ போகையில் மீன் விற்பவர் கடந்து போனால் ஒரு வாசம் வந்து உறவாடி விட்டுப் போகும். அதே மீனை எண்ணெய்யில் போடும் பொழுது அப்பொழுதே பசிக்கும். ம்ம்ம்....சிறுவயதில் ஊருக்குப் போனால் புளியங்காய் பறித்து அதைத் தணலில் வாட்டுவோம். அந்த வாசமும் சுகம். கம்பந்தட்டைகளைப் பறித்து நெருப்பில் வாட்டினால் எழும் வாசமும் சுகமும். கேப்பையையும் சோளத்தையும் இப்படி வாட்டியிருக்கிறோம்.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 9:50:00 AM

@kalai: விவகாரமான விஷயமெல்லாம் துணி டர் ஆகுர அளவுக்கு மத்தவுங்களாம் அலசிட்டாங்கன்னுதான் கொஞ்சம் ஜாலியா இந்த பதிவு :-)

அதோட அன்னைக்கு மழை வேறயா, அந்த மண்வாசனை எல்லாத்தையும் தூண்டிருச்சு..

@naikutti: நீங்கள் சொன்னது அருமையான வாசனை (அட்லீஸ்ட் அது நம் வேர்வையாய் இருக்கும் வரை ;-)

ஹீம் நீங்கள் சொன்ன வாக்கியத்தை முயற்சித்துக்கொண்டே இருக்கின்றேன் :-)))

@MaduraiAriyan: ஆஹா உங்க வாசனை சக்தி போன ஜென்மம் வரைக்கும் போயிருச்சு... ;-)

G.Ragavan: நகரத்துலயே வளர்ந்ததால நீங்க சொன்ன பல வாசனைகள உங்கள் பின்னூட்டத்திலயே உணர முடிந்தது :-)

பரஞ்சோதி சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 10:30:00 AM

ஆகா, செந்தில் தலைப்பு பார்த்து உள்ளே வந்தால், ஒரே குஷ்பு மயமாக இருக்கிறதே.

அதுவும் இராகவன் அண்ணா சொன்ன வாசனைகள் இன்னும் அருமை.

யாருக்காவது பனம்பழம் சுட்ட போது வந்த வாசனை நினைவில் இருக்கிறதா?

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 8:52:00 PM

@பரஞ்சோதி: வாங்க பரஞ்சோதி... :-)

என்ன பண்ண,எல்லாத்துக்கும் ஒரு வெளம்பரம் தேவப்படுதில அதான் அப்படி ஒரு தலைப்பு ;-)

பனம்பழமா ? அப்படீன்னா :-(

பரஞ்சோதி சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 10:27:00 AM

செந்தில், நீங்க ஏற்கனவே நகரவாசி என்று சொல்லிட்டீங்களே!

அதான் பனம்பழம் பற்றி தெரியலை.

அடுத்த முறை ஊருக்கு வந்தால் இராகவன் அண்ணாவை பிடித்துக் கொள்ளுங்க, எங்க ஊர் பக்கம் அழைத்து போய் கிராமிய வாழ்க்கையை காட்டுவார். குறைந்தது ஒருவாரம் திருநெல்வேலி, குற்றாலம், தூத்துக்குடி, கன்யாகுமர் இப்படி பல இடங்களுக்கு போங்க.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 6:30:00 PM

கட்டாயம், சொல்லிட்டீங்கள்ல ;-)

எனக்கும் இப்படி எல்லாம் போய் தங்கி இருந்து பார்க்கனும்னு ஆசை..

அதுக்குதான், கல்கத்தாவிலிருக்கும் போது, ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள கிராமங்களில் மகர சங்கராந்தி (பொங்கல்) விழா கால கொண்டாட்டங்களைப்பார்க்க திட்டமிடாமல் சென்றேன், மிகவும் அருமையாக இருந்தது...

நம்ம ஊருக்கு திரும்புனதும், கட்டாயம் இப்படியெல்லாம் ஊர் சுத்தனும்.. :-)

ஐடியாவுக்கு நன்றி பரஞ்சோதி..

பெயரில்லா சொன்னது… @ வியாழன், நவம்பர் 17, 2005 8:30:00 PM

"சேழர்காலத்தில இருந்த மாதிரியா இன்னிக்கும் நம்ம பெண்கள் இருக்காங்க ? தமிழ் பெண்கள் கண்ணகிமதிரி இரூந்தா நம்ம ஊர்ல தண்ணியேன் இல்லாம போவுது ? பெய்யென பெய்யணுமே ??"
appadingkalaa?

பெயரில்லா சொன்னது… @ புதன், செப்டம்பர் 08, 2010 1:30:00 AM

pharmacy health care solutions http://drugstore4.com/de/product/epivir.html turkey pharmacy [url=http://drugstore4.com/fr/product/rebetol.html]rebetol[/url]
schultz pharmacy inc http://drugstore4.com/de/product/eulexin.html pharmacy schools in ga [url=http://drugstore4.com/fr/product/acai-pure-1000x.html]guardian pharmacy[/url]
new jersey phentermine pharmacy http://drugstore4.com/de/product/prednisolone.html new roles of pharmacy tech [url=http://drugstore4.com/fr/product/moduretic.html]moduretic[/url]
capella online university pharmacy http://drugstore4.com/category/gastrointestinal.html jobs in texas for pharmacy technicians [url=http://drugstore4.com/fr/product/plendil.html]university of tennessee pharmacy[/url]

கருத்துரையிடுக