யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, நவம்பர் 21, 2010


வெளியான உடனே தரவிறக்கிவிட்டு, பின்னெப்போதும் கேட்டே இராத பாடல்கள் பல GB இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது ஒரு பக்கம்மெனில், மற்றொருபக்கம் புதிய பாடல்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. அப்படித்தான் இந்த படப்பாடல்களும் தொடங்கியது. சசி-ஜேம்ஸ் அப்படியொன்றும் எதிர்பார்க்கும் கூட்டணியில்லையென்றாலும், வேலையொன்றிற்கு பிண்ணணியில் ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டாவது வரி கேட்டதுதான் தாமதம், கவனம் உடனே வேலையிலிருந்து பாட்டின்மேல் திரும்பியது. பொதுவாகவே என் கவனம் வரிகள் மீது படியாது, இதனாலயே பாட்டின் வரிகள் நினைவில் நிற்காமல் சரிந்துபோகும் சாபம் பெற்றவன் நான்.

இரவைப்பற்றியும், அதன் மீதான கவர்ச்சிக்கு காரணம் எது என விரிந்து கொண்டிருந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்துப்போனது. மண்டைக்குள் நுழைந்துகொண்டு, இன்று நாள் முழுவது இரவுக்கு காத்துக்கொண்டு முணுமுணுத்துக்கொண்டிருக்கிறேன்.

இரவின் மீதான் காதல் எப்போது தொடங்கியதென தெரியவில்லை, ஆனால் தூங்கா நகரத்திலிருந்து வந்தவனுக்கு அந்த காதல் இல்லையெனில்தான் ஆச்சரியமாயிருக்கும்.

இரவைப்பற்றியும், அதன் மீதான பல்வேறு நினைவுகளை எழுத நினைக்கையில் எல்லாமே வரிசைக்கட்டிகொண்டு நிற்கின்றன.

மிகப்பிடித்த இரவொன்று, சாந்திநிகேதனின் rail நிலையத்தின் bench-னில் கடத்தியது. சிறிதும் முன்னேற்பாடேதுமின்றி, எங்கே போவது என்று கொஞ்சமும் யோசிக்காமல், கண்ணில்பட்ட முதல் rail-இல் ஆரம்பித்த பயணம். எங்கேயும் தங்க பணமில்லை, ஒர் இரவை கடத்தியாகவேண்டும், வித்தியாசமாகயிருக்கட்டுமென rail நிலையத்திலேயே இருந்துவிட்டேன். மொழி தெரியாத ஊர், கொஞ்சம் முரட்டுத்தனமாய் தெரியும் மனிதர்கள், மிகவும் அந்நியனாய் தெரிவது நான் ஒருவன்தான், மற்றொருபுறம் குளிரும் துளைத்துக்கொண்டிருந்தது, வசதிகளேதுமற்ற rail நிலையம் இருளில் முழுகிக்கொண்டிருந்தது. இப்படியிருந்த இரவு சுவாரசியமான நினைவாக மாறப்போவது தெரியாமல், தூங்கிவழியாமல் சுற்றத்தை கவனித்துக்கொண்டிருந்தேன்.

சாந்திநிகேதன் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு திரும்ப காத்திருக்கும் மாணவர்கள் குவியத்தொடங்கினார்கள். இவர்கள் கையிலொன்றும் T-square இல்லை, இசை கருவிகளும், காகிதமும்-தூரிகையும்தான். அங்கங்கே உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு குழுவும் சிறு சிறு கச்சேரிகள் நடத்த, தொடர் andhakshari வகை கச்சேரிகளும் களைகட்ட, இத்தனை களேபரத்திலும் அங்கங்கே தூரிகைகளும் வேலை செய்துகொண்டிருந்தது.

இவை அத்தனையும் நடந்தது, அந்த கிராம மக்களின் கூட்டத்திற்கு நடுவே. ஆக சுவாரசியமான மனிதர்களுக்கும் குறைவில்லை. நீண்ண்ண்ண்ட இரவும் கரைந்துபோனது.

கொசுவர்த்தி சுருளை அணைத்துவிட்டு, இனி முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாட்டிற்கு போவோம். Celebrate your night.
இந்த இரவுதான் போகுதேஏஏ.. போகுதேஏஏ..
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் சொர்கம் நரகம் ரெண்டும் உள்ளதேஏஏ.. உள்ளதேஏஏ..

ஆந்தை போலதான் இரவிலேஏஏ.. இரவிலேஏஏ..
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலேஏஏ..
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கைமேலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

இந்த இரவுதான் பிடிக்குதேஏஏ.. பிடிக்குதேஏஏ..
அர்த்தஜாமம் அர்த்தம் உள்ளதே நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..

இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதேஏஏ.. உள்ளதேஏஏ..

இன்னும் இன்பம்தான் இருக்குதேஏஏ.. இருக்குதேஏஏ..
ஒற்றை இரவிலே யாவும் தீருமோ நண்பனேஏஏ.. நண்பனேஏஏ..
என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழும் வாழ்க்கைமேலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் பகலிலே,
ஏதேதோ வலியிலே,
பொல்லாத நியாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்விலே,
மெய்யான இன்பம் இந்த போதையாலேஏஏ..

என்றென்றும் மனதிலே,
ஏதேதோ கனவிலே,
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுபோடு இரவிலே
பொய்யான வாழ்க்கை வாழும் வாழ்விலே, மெய்யான இன்பம் இந்த போதையாலே

இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
Kolkata Night Photo courtesy: http://www.flickr.com/photos/cambug/

இனி இரண்டு பயணச்சீட்டு

Published by யாத்ரீகன் under , on வெள்ளி, நவம்பர் 12, 2010
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல... எனத்தொடங்கினால் யார் அந்த வேதாளம் ? எனவும்,
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி.. என ஆரம்பித்தால் யார் அந்த மந்திரவாதி ? எனவும்,
தேவையற்ற கேள்விகள் எழும் என்பதால் :-)
எப்படித்தொடங்குவதென யோசித்துக்கொண்டே சில வாரங்கள் தாண்டிவிட்டன

பலவருட காத்திருக்குப்பின், நான் மேற்கொள்ளும் பயணங்களில் சிறு மாற்றம்,
30-Jan-லிருந்து நான் எடுக்கும் பயணச்சீட்டுகள் இனி இரண்டாகும் :-)

இந்த முறையும் நான் பார்த்த பெண்ணுக்கு, கல்யாணம் நடக்கப்போகுது,
ஆனா இந்த முறை என்கூட நடக்கப்போகுது :-)
எனக்கே நம்ப முடியல, ஆனா என்ன செய்ய, நீங்க எல்லோரும் நம்பித்தான் ஆகனும் :-D

பாரதியார் சொன்னது எது செய்ய முடிஞ்சதோ இல்லையோ, ஏதோ என்னால முடிஞ்சது, சேரநன்னாட்டிளம் பெண்ணை கண்டது ;-)

பேசும் மொழியிலிருந்து, பார்க்கும் படங்கள், கேட்கும் பாடல்கள்,
படிக்கும் புத்தகங்கள், செய்யும் வேலை,கனவுகள்.... என பெரும் காரியங்களிருந்து,
பிடித்த நிறம், பிடிக்காத உப்புமா,வணங்காத கடவுள்கள்... என சிறு காரியங்கள் வரை,
பல வேறுபாடுகள் இருந்தாலும்
பயணங்களின் மேலிருந்த காதலே எங்களிருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தது..

சந்தித்த இடமொன்று, பழகிய இடமொன்று,
தொடங்கிய இடமொன்று.. என பயணித்துக்கொண்டிருந்தது
நாங்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து காதலும்தான் :-)

திருமண தேதி: 30-January-2011
இடம்: மதுரை

திருமண வரவேற்பு: 2-Feb-2011
இடம்: திருவனந்தபுரம்

பதிவுகள் எழுதி பலகாலம் ஆனதால் இந்த வலைத்தளத்தை எவரும் தொடரவோ படிக்கவோ செய்வார்கள் என்று நம்பிக்கையில்லை :-) , பதிவர்கள் எவரிடமும் தொடர்ந்து பேசியதும், பழகியதுமில்லை..
இருப்பினும் நண்பர்கள் இந்த நேரத்தில் மதுரையிலோ, திருவனந்தபுரத்திலோ இருந்தால் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :-)

மேலும் விபரங்கள் விரைவில்..