யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தோழி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014


                    எனக்கிருக்கும் மிகச்சிறிய தோழியர் வட்டத்தில் மிகுந்த ஆளுமையான தோழி அவள். கல்லூரி காலத்தில் பெண்கள் மீதிருந்த, ஆழப்பதிந்திருந்த stereotyping-ஐ உடைத்தெறிந்தவள், கல்லூரிக்காலத்தில் விட்டிருந்த வாசிப்பனுபவத்தை மீண்டும் தூண்டி, நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தியவள், பகட்டைப்பார்த்து வாயைப்பிளந்து கொண்டிருந்த காலத்தில்  தன் இயல்பான எளிமையால் ஆச்சரியப்படுத்தியவள் , தன்னையுமறியாமல் தன் ஆளுமையால் பல விஷயங்களை புதிதாய் பார்க்கக்கற்றுக்கொடுத்தாள்.

                   அவளை கண்ணீர் வழிய, இத்தனை உணர்ச்சிவசப்பட்டு கண்டதேயில்லை. பல வருடங்கள் தாண்டி, பல எதிர்ப்புகளை மீறிய காதல்  என்றாலே இந்த  உணர்வு தவிர்க்கவியலததாகிவிடுகிறது. இன்று அவளுக்கு திருமணம்.

              ஆதர்ச தோழியின் மனதையே கவர்ந்தவர் எப்பேர்ப்பட்டவராயிருப்பார் என்ற ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிதான் இன்று மனதை நிறைத்திருக்கிறது.