என்னிடமிருக்கும் சில போர்ட்ரெய்ட்கள் - 2
Published by யாத்ரீகன் under புகைப்படபோட்டி, புகைப்படம், போர்ட்ரெய்ட் on திங்கள், ஜூலை 30, 2007இமாலய பயணத்தின் போது மூன்றாம் நாள் சம்பா பள்ளத்தாக்கு நோக்கி செல்கையில் இடையே தென்பட்ட சிறு குழந்தை வியாபாரிகள், நுனி சிவந்த மூக்கும், கன்னங்களும், சிரிப்பதா வேண்டாமென்பதா என்ற யோசனையும், இலைகளூடே விழுந்த வெளிச்சத்தில் மிகுந்த அழகாய்த்தெரிந்தது....
சீனி - நெருங்கிய நண்பர் வட்டதினுள் ஒருவன், எப்போதும்ம்...எங்கேயும்ம்ம்... ஒருவித தேடலுடன் இருப்பவன். 8000 ஆயிரம் அடி உயரத்தில்....
வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணங்கள் மிகப்பெரிதாய் இருக்க வேண்டுமென்பதில்லையே, ஒரு மிட்டாய் சாப்பிடுவதாகக்கூட இருக்கலாமல்லவா.......
சூடாய் ஒரு டீ ஸீரோ டிகிரிக்குளிரில்.......
ஒளி வட்டம் தெரியுதுங்களா...!!!
யாரை எதிர்பார்த்து...!!! (less resolution pic - original lost)
ஒரு வெயில்கால உச்சி வெயிலில், குலசேகரப்பட்டின தென்னந்தோப்பினுள் ஆனந்த குளியல்
நினைவுகளில் தொலைந்திருந்த ஒரு வேளையில்
விளக்குகள் அணைந்த்துக் கொண்டிருக்கையில் ஓடும் இரயிலில் எதிர்பாரத ஒரு அற்புத சிரிப்பு
ஒரிஜினல் படமில்லாததால் ஏகப்பட்ட புள்ளிகள்...