Published by யாத்ரீகன் under
பாடல்வரிகள்,
புதுப்பேட்டை
on சனி, செப்டம்பர் 29, 2007
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்த்னை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
ஓஓஓஓஓஓ …
போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
ஓஓஓஓஓஓ …
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை
நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
ஓஓஓஓஓஓ …
Published by யாத்ரீகன் under
புகைப்படபோட்டி,
புகைப்படம்,
வண்ணங்கள்
on திங்கள், செப்டம்பர் 10, 2007

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள், originally uploaded by யாத்திரீகன்.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா கலர்ஸ் கீழே - போட்டிக்கு இல்லை
Published by யாத்ரீகன் under
கனவு
on வியாழன், ஆகஸ்ட் 30, 2007

கூட்டிலிருக்கும் பறக்கப்போகும் குஞ்சுகளின் கதகதப்புக்காக
பறக்கத்தயாராய் இருப்பதின் இறகுகளை பிய்த்து எரிக்கும்
நிகழ்காலத்தை குறை சொல்லிப்பயனில்லை
இதை விட பலம் வாய்ந்த சிறகுகளை வளர்த்துக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு
ஆயினும் குருதி கசியும் வலியினை மறக்க இயலவில்லை
Published by யாத்ரீகன் under
நீலம்,
மாலை,
மெரீனா,
மேகம்
on ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2007
Published by யாத்ரீகன் under
அனுபவம்,
பெண்கள்
on திங்கள், ஜூலை 30, 2007
பெண்கள்
கடவுள், அரசியல் போன்றவற்றை விட அதிகம் விவாதிக்கப்படும் கருப்பொருள். எப்பொழுதிலிருந்து விவாதிக்க தொடங்கினோம் என்று சரியாக நினைவில்லை. அது என் ஆள், இது உன் ஆள் என ஆறாப்புலயே, ஆள் என்றால் என்னவென்றெல்லாம் தெரியாமல் தூரத்திலிருந்தே காமிக்க பயன் படும் பொருள்களாகத்தான் தொடங்கியது. எட்டாப்புலிருது எதெடுத்தாலும் சண்டை, சண்டை போடுவது சரிதானெறெல்லாமல் வீம்புக்கென்றே திரிந்த காலங்களில் இனிமையான நட்பென்பதை தவற விட்டுக்கொண்டிருந்தோம்.
கல்லூரியில், வீம்பே அடையாளமானது, தனித்திருக்க காரணமானது ஆனால் அதுவே பல உயிர் தோழிகளை அடையாளம் காட்ட உதவிக்கொண்டிருந்தது. கல்லூரியில் அதிகம் டாப் டென் அலசுவதற்கும், கூட்டை கலைப்பதுமென தான் பெண்கள் எங்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருந்தனர். மிகவும் ஆர்வமுள்ள அரட்டைகள் அப்பொழுது எங்களுக்குள் தொடங்கியதில்லை.
தினந்தோறும் புதிய மனிதர்களும், மொழிகளும், நினைத்தேபார்த்திராத அனுபவங்களும் எங்களை கொஞ்ம் கொஞ்சமாய் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த நேரம். தினசரி வாழ்வே, 6 பெண்களின் நடுவேதான் என்று ஆனபோது, கண்கள் மட்டுமல்ல மெல்ல மெல்ல மனசும் விழித்துக்கொண்டு தன் கண்ணையும் வைத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தது. ஒவ்வொருத்தரும் ஒரு இரகம் என்பதை மூளை முன்பே உணர்ந்திருந்தும், மனமும் அதை புரிந்து கொள்ளத்தொடங்கியது. ஒவ்வொருவருக்குள்ளும் கூட ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு முகங்களை அடையாளம் காட்டத்தொடங்கியது. நல்ல தோழி என தொடங்கி, விரோதி என்ற நிலை தொடர்ந்து, யாரையும் எந்த ஒரு வட்டத்துக்குளேயும் அடைக்க, நம்மையும் அவர்களுடனான நம் உறவையையும்தான் சேர்த்து உரைகல்லில் உரசிப்பார்க்க வேண்டியதின் நிதர்சனம் புரிந்து கொண்டிருந்தது, அதில்லாமல் தனிப்பட்ட விமர்சனங்கள் எவ்வளவு சீக்கிரம் அர்த்தமற்றவையாக் போய்க்கொண்டிருந்தது.
புதிய நட்புகளின் சூழ்நிலையில், முன்பு உணர்ந்திருக்காத அருகிலில்லாத நண்பர்களின் நட்பும், தான் எவ்வளவு விலைமதிப்பில்லாதது என்று மெளனமாய் ஒரு புன்சிரிப்புடன் தூரத்தில் அருகிலேயே இருந்தது.
அனைவருக்குமிடையில் புயல்கள் ஓய்ந்து புரிதல்கள் மெல்ல ஆரம்பிக்கும் நேரம், காலம் தன் இருப்பை பதிவு செய்ய மாற்றங்கள் தொடங்கின, இடங்கள் பெயர ஆரம்பித்த தருணம் அது. ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அவர்களைப்பற்றிய பார்வைகளை இன்னும் கூராக்க காலம் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தது.
வட்டங்கள் பெரியதாய் வரையப்பட, வரையப்பட... நட்பின் தொடர்புக்கு அருகாமையின் அவசியம் கொஞ்சமாய் ஒவ்வொருத்தருக்கும் புரிந்துகொண்டிருந்தது.
இதுவரை பார்த்ததே பெரிய மாற்றங்கள் என்று ஆசுவாசப்படுதிக்கொண்டிருந்த மனத்திற்கு, தொடுவானத்திற்கும் அப்பாலுல்ல கடலின் ஆழத்தையும், ஆகாசத்தின் வர்ணத்தையும் காலம் கோடிட்டுக்காட்டத்தொடங்கியிருந்தது. அங்கிருக்கும் ஆழமும், வர்ணமும்தான் பயணத்தை சுவாரசியமாக்க போகின்றன என புரியப் புரிய, கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்சி கலைந்து புன்னகைக்கத்தொடங்கினோம்.
அடுத்த கட்டமாய் ஒவ்வொருத்தர் வாழ்விலும் முக்கியத்துவங்கள் மாறத்தொடங்கின, புதிய நபர்கள் எங்களிடையே என்பதல்ல, புதிய நபர்கள் மத்தியில்தான் நாங்கள் என வாழ்வின் நிதர்சனமும் எங்களுகு வழிகாட்டதொடங்கியது.
இப்போது பெரும் கும்பல்களில் மட்டுமே அவர்களை காண முடிந்தது, நெருக்கமான கோஷ்டிகளில் ஆண்கள் மட்டுமே அதிகமாயிருக்கின்றனர்.
இப்போது எங்கள் விவாதத்தலைப்புகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், அதிகம் விவாதிக்கபட்ட தலைப்பும் சரி, அதிகம் பார்த்திராத கோணங்களிலெல்லாம் சுற்றியெங்கும் நிறைந்திருப்பதாய் உணர்கின்றோம். காற்றைப்போலவே, உடனே பயணித்துக்கொண்டிருக்கின்றதா என்று தோன்றுவதைப்போல், எங்கே சென்றாலும் கேட்க்க முடிகின்றது.
இவ்வளையும் கேட்டுவிட்டு, டைம் ஆகிடிச்சு மாப்ளே வீட்ல சொல்லனும்னு சொல்ற எதிரிகளும் சரி, மச்சி இன்னும் நாலு வருசம் இருக்குடா இத்தயெல்லாம் யோசிச்சிகின்னு, ஜாலியா போய்கிட்டே இருப்போம்னு சொல்ற நண்பர்கள்ம் உண்டு.
இன்றைக்கு சுவாரசியமாய், சூடாய் மோதிக்கொள்ளும் கருத்துகளும், புரிதல்களும் சரி, மனிதர்களைப்போல மாற்றங்களுக்கு உட்பட்டே இருந்திருக்கின்றது. நாளை நகைப்புக்கும், வெட்கத்துக்கும் கூட இழுத்துச்செல்லலாம் இன்று மூச்சு முட்ட விவாதித்துக்கொண்டிருக்கும் பார்வைகள். அவற்றில் கொஞ்சத்தை பதிவு செய்து வைப்போமென்று நினைதிருந்தேன். அடுத்து வரும் பதிவுகளில் எங்கள் so called வயசுக்கோளாறு பட்டறைகளை பகிர்ந்துகொள்கிறேன்.
Published by யாத்ரீகன் under
புகைப்படபோட்டி,
புகைப்படம்,
போர்ட்ரெய்ட்
on திங்கள், ஜூலை 30, 2007
Published by யாத்ரீகன் under
புகைப்படபோட்டி,
போர்ட்ரெய்ட்
on திங்கள், ஜூலை 30, 2007
Published by யாத்ரீகன் under
இயற்கை,
புகைப்படபோட்டி,
புகைப்படம்
on புதன், ஜூலை 18, 2007
புகைப்பட போட்டிக்கு:
தலைப்பு: இயற்கை
புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்
ஒரிசாவில் உள்ள ச்சில்கா ஏரியின் ஒரு முனையில் உள்ள சிறு தீவு, இங்கிருந்த நீரின் நீல நிறமும், ஆள் அரவமற்ற சூழலும், அவளின் இருப்பையும் மீறி கவர்ந்தது.. புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்
Published by யாத்ரீகன் under
TAG
on செவ்வாய், ஜூலை 03, 2007
8 Random Facts சரி.. ஆனால் என்னப்பற்றி பிறர் அறியா தகவல்களா !!!! ஹீம்.. பார்த்துதான் எழுதனும்..
8) ஆரம்பத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து, 3/4 மாதங்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்த பிறகு அவளுக்கு திருமணமாகும் (வேறு ஒருவருடருந்தான் :-( ) என்று இருந்த இராசி இப்போ பவர் கூடி ஒரு பெண்ணைப்பார்த்து அழகாயிருக்கிறாள் என்று சொல்லி 2ஏ வாரத்தில் அவள் கல்யாணப்பத்திரிக்கையுடன் வந்து நிற்பது !!!! (நெருங்கிய நட்பு வட்டாரத்துக்கு மட்டும் இந்த தகவல் இதுவரை தெரிந்திருந்ததால் "கல்யாண மாலை" என்று நிறுவனம் ஒன்று ஆரம்பிக்க யோசித்துக்கொண்டிருந்தேன்)
5) கூட்டத்தோட இருக்கும்போது கல கல, ஆனால் தனிமை விரும்பி, குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒருமுறை எங்கே போறேன்னு தெரியாம அப்டியே கிளம்பி, போற இடத்தை இரசிச்சிட்டு வர்றது பிடிக்கும்.. கடந்து மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்கள்(?) எனக்கு என்னோடதான் யாருக்குமே தெரியாம.. (No Travel Talks as said by ப்ரியா !!!! so stopping it)
1) சொல்லாமல் முறிந்தது முதல் முறை, சொல்லி முறிந்தது இம்முறை !!!
3) அநியாயத்துக்கு மிஷ்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், தினமும் வீட்டுக்கு வர்ற வழியில 10 ரூபாய்க்கு, 1ரூபாய்/2ரூபாய்ல ஏகப்பட்ட மிஷ்டீக்கள், ஒரு கட்டத்துல நண்பர்கள் யாருமே கம்பெனி குடுக்க முடியாத நிலமைக்கு போனது உண்டு, சில வகை மிஷ்டிக்கள் சாப்பிடுவதற்கெனவே "உல்டாடங்கா", "கருணாமொயி","சார் நம்பர் டேங்க் foot ப்ரிட்ஜ்", "MG ரோட்","நியு மார்கெட்" இப்படி பல இடங்கள் அலைந்து திரிந்து சாப்பிட்ட காலம் உண்டு... இப்போ, என்ன சாப்பிடுறேன்னு கூட யோசிக்கிறதில்லை
7) எல்லோருக்கும் தெரிந்தது எனக்கு இரு தம்பிகள் இருப்பது, தெரியாதது ஜீவி எனது தங்கை மாதிரியல்ல தங்கைதான் என்பது, எனது உயிர்த்தோழியின் தங்கை, கிராமத்து வெள்ளந்தி உள்ளத்தோடு "அண்ணா.. அண்ணா" என்று மனசு நிறைய கூப்பிடும் தங்கை.., சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தவறிய தங்கை அந்த வீட்டில் பிறந்துவிட்டாலோ என்று நினைக்குமளவுக்கு !!!
2) லடாக் பைக் டூரை சமீபத்தில் தவறவிட்ட அபாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.
6) சுண்டல் மடித்துக்கொடுக்கும் காகிதத்தை கூட பிரிச்சு பிரிச்சு படிக்கும் ஆசாமி , எதைக்கண்டாலும் படிக்கணுமென்று தோன்றும், ஒவ்வொரு மாத சம்பளத்திலும் ஒரு புத்தகம் என்பதையும் மீறிவிடுவதால், புத்தகக்கடைக்கு போவதை முடிந்தவரை குறைக்கபார்க்கின்றேன்.. சமீபத்திய சாதனை: வெங்கடேஸ்வரா ரோட்டிலுள்ள "Crossword" கடைக்கு போய் பல மணிநேரம் புத்தகம் படிச்சிட்டு அங்கிருந்த காபி ஷாப்பில் செலவழிச்சது :-D !!!
4) உயிர்தோழர்களிடமும், உயிர்த்தோழிகளிடமும் சிறிது நேரம் செலவழித்து பல காலம் ஆகிவிட்டது..... :-(
சுவாரசியமா எழுத முடியாட்டியும், எதைச்சொல்றடு, எதைச்சொல்ல வேணாம்னு ரொம்ப யோசிக்க வைச்சிடுச்சு.. என்ன ப்ரியா & சுதர்சன் அண்ணாச்சி .. தேறுமா !?!?!?!
ஊருக்குள்ளே பலரும் எட்டு போட்டுட்டாங்க இனிமே யாரைக்கூப்பிடுறது.. சரி.. எங்க மொட்டை பாஸ் சீனியை கூப்பிடுறேன், உங்கள்ல்ல பலபேருக்கு தெரியாத எங்க கோஷ்டியில இருக்கும் ஒரு Interesting Character ...
Published by யாத்ரீகன் under
கலை,
சிற்பங்கள்,
தஞ்சாவூர்,
தஞ்சை,
பயணம்,
புகைப்படம்
on செவ்வாய், மே 08, 2007
மாமன்னன் இராச இராச சோழன்
இராசேந்திர சோழன் பற்றிய குறிப்பு (பொன்னியின் செல்வன் நியாபகம் வருகின்றதா ?) இராசேந்திர சோழனின் கீழ் பரவிய சோழ சாம்ராஜ்யம், கடல் கடந்து நாடு கடந்து
மாளிகைமேடு - முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்குப்பின்னால் இருந்த சோழர்கள் வழுவிழந்த நிலையில், படையெடுத்து வந்த பாண்டிய மன்னர்களால் இடித்து தள்ளப்பட்டது என்று கூறப்படுகின்றது. சுட்ட செங்கல்கள் மூலம் கட்டிய பெரும் அரண்மனை சுவர்கள், அங்கிருந்து கிடைத்திருக்கும் பல வெளிநாட்டு பழங்கால பொருட்கள் என தன்னுள் ஒரு மாபெரும் இரகசியத்தை பூமித்தாய் புதைத்து வைத்திருக்கும் மற்றுமொரு இடம்.
இராச இராச சோழனின் முத்திரை பத்திரம், இதுவே தஞ்சை பெரிய கோவிலை இவர்கள் எழுப்பியதற்கானதொரு மிகவும் முக்கியமான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னம்.மேலும் சுவையான தகவல்கள்
Published by யாத்ரீகன் under
கலை,
சிற்பங்கள்,
தஞ்சாவூர்,
தஞ்சை,
பயணம்,
புகைப்படம்
on செவ்வாய், மே 08, 2007
வடக்கே கங்கை கரையோரம் கொண்ட தன் வெற்றியை கொண்டாட பேரரசன் மகன், உருவாக்கிய சோழர்கால தலை நகரமான கங்கை கொண்ட சோழீச்வரம்.சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க
தன் தந்தையின் படைப்பான பிரகதீஸ்வரர் கோவில் போன்ற தோற்றத்தில் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுர கோவிலின் நுழைவாயிலில்.
தஞ்சை பெரிய கோவிலைப்போலவே இங்கேயும் உள்ள ஒரே கல்லில் உருவான நந்தி. இங்கே வழிபாடு அவ்வளவாய் இல்லாததும் ஒரு விதத்தில் நல்லது, இந்த நந்தி சிலையில் உள்ள வேலைப்பாடுகளை அருகே இருந்து இரசிக்க முடிந்தது.
தஞ்சை கோவில்களுள் உள்ள துவாரகபாலர்கள் சிலைகளின் அமைப்பு மிகவும் பிரசித்தி பெற்றவை, இதனருகே நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் எடுத்த புகைப்படம். ஆறடி உயரம் உள்ள நாங்கள் எங்கே, அந்த சிலையின் உயரம் எங்கே !!!
எங்களுள் எழுந்த மிகப்பெரும் கேள்வி, யாருக்காவது விடை தெரியுமா ??
கேள்வி: கோவிலை கட்ட தீர்மானித்த உடன், எங்கிருந்து ஆரம்பித்திருப்பார்கள் ? அவ்வளவு பிரமாண்ட சிலைகளை எங்கிருந்து செதுக்க துவங்கிருப்பார்கள் ? கோவிலின் வெளியே செதுக்க துவங்கியிருந்தால், தூண்களை நிறுவுவதற்கு முன் உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும், இப்படி பல கேள்விகள் !!!!
ஒரு கால இயந்திரம் இருந்தால் , தஞ்சை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விஜயநகர காலம், ஹம்பி நகரம் செழிப்பாக இருந்த காலம் என்று சுற்றி வரவேண்டும் !!!!
பண்ணிரண்டரை அடி உயரம் உள்ள கோபுர கலசம்
வெயில் கொடுமை !!! :-)
பெரிய கோவிலைப்போலவே உள்ள கங்கை கொண்ட சோழபுர கோவில்
நடராசர் சிலையின் முகத்தில் உள்ள புன்சிரிப்பையும் நளினத்தையும் பாருங்கள், இதை செதுக்கியவர் எவ்வளவு அனுபவித்து செய்திருக்கவேண்டும்.
கோபுரத்தின் மேலே இருந்த பல சிற்பங்களில் ஒன்று, 12X புகைப்பட கருவி பயன்படுத்தியதன் பயன்.
கோவிலின் மேலே இருந்த அதிகம் கவனிக்கப்பட்டிராத ஒரு பெண்ணின் சிலை, எந்த நாட்டுப்பெண்ணோ !!! இது போல் இங்கிருக்கும் "வடபுரமிருந்த சிவன் மன்மதனை எரிக்கும்" சிற்பம் மிகவும் அழகானது என்று கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் அதை இறுதி வரை கண்டு பிடிக்க முடியவில்லை :-(கோபுரத்தின் மேலிருந்த பட்டைகள்.
Published by யாத்ரீகன் under
கலை,
சிற்பங்கள்,
தஞ்சாவூர்,
தஞ்சை,
பயணம்,
புகைப்படம்
on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க
பெரிய கோவிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம், ஒரு அற்புதத்தை காண தயாராகுங்கள்
நம் முன்னோரின் அறிவியல்/கட்டிடத்திறன் உலகப் புகழ் பரப்பும் தஞ்சை பெரிய கோபுரம். இதன் உச்சியில் இருப்பது 80 டன் எடையளவு கொண்ட இரு கற்கள் (40+41), இதை எந்த தொழில்நுட்பம் கொண்டு 150 அடிகளுக்கு மேல் கொண்டு சென்றார்கள், எப்படி உச்சியில் வைத்தார்கள், எல்லாவற்றிற்கும் மேலே இந்த கோவில் முழுவது கிரானைட் எனப்படும் கடின பாறையினால் ஆனது, தற்போதைய காலத்திலேயே, 50 டன் அளவுள்ள ஒரே கிரானைட் கல்லை உடைத்து செதுக்குவதற்கு பல நாட்களும், பெறும் முயற்சியும் தேவை, இந்நிலையில் அவர்கள் எப்படி இந்த கோபுரத்தை மட்டுமின்றி கோவில் முழுவதையும் செதுக்கினார்கள் ?! ஆச்சரியமே...
தஞ்சை கோவிலின் புகழ் பெற்ற ஒரு கோணம், அந்தி மயங்கும் மாலை வேளையில்.
நவக்கிரகங்கள் லிங்கங்களாய், இதில் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை, ஆனால் இதிலிருந்த ஓளி அமைப்பில் ஒரு இனம் புரியாத உணர்வு...
கோவில் சுவர்களில் உள்ள ஓவியங்கள், இதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என நினைக்கின்றேன், நாம் கோவில்களை ஆன்மீக தளங்களாய் மட்டுமே பார்க்கின்றோம் :-( , இதில் பொதிந்து இருக்கும் அறிவியல் திறன், கலைத்திறன் என எப்போது நம் தலைமுறையிடம் சுட்டுக்காட்ட பழகப்போகின்றோம் ?
ஒற்றைக்கல்லினால் ஆன பிரமாண்ட நந்தி, இதை செதுக்கும் போது தவறிழைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ?!?! இது என்ன காகிதமா அழித்து விட்டு முதலிலிருந்து தொடங்க ?!
கோவிலின் முன்புறமிருந்து
காணக்கிடைத்த பொம்மலாட்டம்
நந்தியின் பின்புறம். (நந்தனுக்காக ஒதுங்கியதாக சொல்லப்படும் நந்தி எந்த கோவிலில் ?)
Published by யாத்ரீகன் under
கலை,
சிற்பங்கள்,
தஞ்சாவூர்,
தஞ்சை,
பயணம்,
புகைப்படம்
on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க
சரபோஜி மன்னரின் தொகுப்பிலிருந்த ஒரு தஞ்சாவூர் ஓவியம், 3D effect தெரியும் இந்த ஓவியங்களை, அந்த 3D effect-க்காக அவர்கள் வரையும் முறையை கண்டுபிடிக்க எவ்வளவு கற்பனைத்திறனோடு யோசித்திருப்பார்கள், எளிதான முறை ஆனால் அதன் பலன் அருமை.
சரபோஜி மன்னரின் தர்பார், வட இந்தியாவில் பல பழங்கால அரண்மனை தர்பார்களை பார்த்திருந்தும், இதன் வசீகரம் தனி. அள்ளித்தெளித்த வண்ணங்களா காரணம் என்று தெரியவில்லை :-)
தர்பாரின் மேற்க்கூடம்
கலைநயம் மிக்க பல சுதை சிற்பங்களும், வளைவுகளும், வண்ணங்களும் ஒரு சேர
தர்பார் சுவற்றிலுள்ள ஒரு பிரமாண்ட்ட தஞ்சாவூர் ஓவியம்.