புத்தாண்டு வாழ்த்துக்கள்
Published by யாத்ரீகன் under கவுஜ on வெள்ளி, ஜனவரி 01, 2010என அனைத்திலும் நிரம்பி வழியும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,
நேரில் சொல்லத்தான் யாருமில்லை.....



பி.கு: சென்ற மாதத்தின் இந்திய பயணத்தின் போது, விமானத்தில் தட்டச்சியது, இத்தனை நாள் கழித்து பல வேலைகள் முடித்து மீண்டும் இணையத்தில் சேரும் வரையில் தங்கையின் கணிப்பொறியில் உறங்கிக்கொண்டிருந்தது.


போளி ஆன கதை
இதில் "Mountain Patrol: Keklexi" எதிர்பாராமல் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு documentary படம் போல இருக்குமென்ற நினைப்போடு தொடங்கியவனுக்கு, அட்டகாசமான கேமரா கோணங்கள், மனதை மயக்கும் திபெத்தின் மலைமுகடுகள், காடுகள், அற்புதமான-வேகமான திரைக்கதை, அங்காங்கே அதிர்ச்சியூட்டும் உண்மைச்சம்பவங்கள், முற்றிலும் எதிர்பாராத நிகழ்வுகள் என மனதை கவர்ந்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் முடிவு cinematic-ஆக இருந்துவிடுமோ என்று வருத்தப்படுக்கொண்டிருந்த வேளையில் .. அதை ஏன் சொல்ல வேண்டும், பாருங்களேன்.
ஒரு சாவிற்கான அதிர்ச்சியூட்டும் திபெத்திய மதச்சடங்குகளுடன் தொடகுகின்றது படம், கொஞ்சம் கொஞ்சமாய் அந்த குழுவினருள் ஒருவனாய் நாமும் அவர்களுடன் பயணிக்கத்தொடங்குகின்றோம், ஓடுகின்றோம், மூச்சுவாங்க உயிர்பிழைக்கின்றோம்.
இதில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் படத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். Patrol செய்ய புறப்படும்போது அந்த குழுவினருடைய உணர்ச்சிகள், நூற்றுக்கணக்கான மான்கள் கொல்லப்பட்டு கிடக்கும் அந்த தருணம், அதைக்காணும் அவர்களின் உணர்வு, கைதிகளை மேற்கொண்டு செல்ல முடியாமலும் கொல்ல முடியாமலும் அவர்களை விட்டுச்செல்வதும், உணவின்றி, எரிபொருளின்றி குழுவில் சிலரை நடுவே வேறு வழியின்றி பனிபொழியாது என்ற நம்பிக்கையுடன் விட்டுச்செல்லும்போதும், சரியான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுக்கு கூட பணமின்றி, அவர்கள் மனசாட்சிக்கு விரோதமாய் செயல்படுவதைத்தவிர வேறு வழியின்றி சூழ்நிலை அமைவதும்.
கட்டாயம் பாருங்கள் !!!!
ஒரு அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து படம் வேண்டும் என்பவர்கள் மேலுள்ள படம் பார்க்கையில், இப்போதைக்கு ஒரு அழகிய கவிதைபோல, வித்தியாசமான, சுவாரசியமான படம் ஒன்று பார்க்கும் மனநிலைக்கொரு படம் வேண்டுமென்றால் நீங்கள் பார்க்க வேண்டியது, "Story of the Weeping Camel".
இதெல்லாம் அறிவியல்பூர்வமான உண்மையா ?, இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் ஆராய்ந்து யோசிப்பதை விட்டு பார்க்கத்துவங்கினால் நிச்சயமாய் இரசிப்பீர்கள். நடக்கும் நிகழ்வுகளை மிக கவிதைத்துவமாய் விஷுவலாய் காமிப்பதும், அதை போர் அடிக்காமல் கொண்டுசெல்வதும்.. மிகவும் சந்தோசத்தை வரவழைக்கும் படம் இது.
நம் ஊர்பக்கம்,அனுபவம் மூலமும், instinct மூலமும் பெரியவர்கள் செய்யும் சில விஷயங்களை பார்த்திருப்போம், இதுபோலதொரு நிகழ்வுஐ நாம் பார்த்திராத ஒரு பிரதேசத்திளுள் காமிக்கும்போதுதான், இதுபோன்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்யும் விருப்பம் மிகவும் அதிகரிக்கின்றது.
இறுதியில் அந்த முடிவை காண்பவர்கள் இசைப்பிரியர்களாய் இருந்தால் இன்னும் இரசிப்பார்கள் :-)
சென்ற ஞாயிறு அறை நண்பரின் தேர்வில், விருப்பத்தில் அருகே நடந்த "Linkin Park"-இன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கிளம்பினோம். பீட்டர் பாட்டின்மேல் ஆர்வமிலாத நானும், அதன் மேல் கடும் கிரேஸ் கொண்ட இருவரும் என.. எப்படி 5 மணி நேரத்தை போக்குவது என்ற குழப்பத்துடனே சென்றேன்.
சென்றதும் முதலில் தெரிந்தது மகிழ்ந்தது , அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அதிகபட்சம் 8 desi மக்களை மட்டும் கண்டிருப்போம் (அதில் 3 பேர் நாங்கள் ;-) , அடுத்து அங்கு வந்திருக்கும் கூட்டத்தின் சராசரி வயது :-D , அவர்களின் வித்தியாச பேஷன் உடைகளும், அலங்காரங்களும் என சாரசரியான high excited அமெரிக்க இளைஞர் கூட்டம். கொஞ்சம் அதிர்ந்து போனது, Linkin Park வரப்போவது 9 மணிக்குத்தான் அதுவரை சிறு சிறு band-கள் என்பது.
மேடையில் கண்ணுக்கு தெரிந்த மிகப்பெரிய 67 ஸ்பீக்கர்களை கண்டதும் அதில் இன்னும் இசை வராமலே அதிர்ந்து போனேன். ஒன்னும் புரியாததுடன் காது செவிடாகபோகுது என்றுதான் நினைத்தேன்.
சின்ன சின்ன Band-கள் ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டத்தினுள் உற்சாகம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது, ஆனாலும் வரிபுரியா அந்த இசையில் ஏனோ ஆர்வமே வரவில்லை. அவ்வப்போது முழு பாடலிலும், சிறு சிறு பகுதிகள் அட்டகாசமாய் இருந்தது. எப்போடா முடியுமென lemonade-களும், french fries-களும் படுவேகமாய் உள்ளே போய்க்கொண்டிருந்தது.
சரியாய் 9 மணிக்கு தொடங்கியது "Linkin Park"-இன் வரவு, அட்டகாசமான பில்டப்களுடன், தீப்பொறி பறக்க, நூத்துக்கணக்கான விளக்குகளின் ஒளிவிளையாட்டுடன் தொடங்கியது. அப்படியென்ன band இது என நினைத்திருக்கையில், கடல் மணலில் பெயரை எழுதிஇருக்கையில் எதிர்பாராமல் வரும் அலையின் ஈரம் பெயரை அழித்து மணலில் வேகமாய் இறங்கும் பாருங்கள், அதுபோலத்தான் அதிரடியான இசை உள்ளத்தில் உற்சாகத்தையும், பரவசத்தையும் பரப்பத்தொடங்கியது.
வீட்டில் இருக்கும் இரண்டு கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்ககளில் வரும் அட்டகாச இசைக்கு பரவசப்படும் நான், அந்த 67 ஸ்பீக்கர்களுக்கு எவ்வளவு சந்தோஷப்பட்டிருபேன் என விவரிக்க முடியவில்லை. அதிரடியான எலெக்ட்ரிக் கிதாரும், டிரம்சும் வெட்டியாய் அதிரவில்லை.. அட்டகாசமான இசை... 2:30 மணி நேரம், எப்படி போனதே என்று தெரியவில்லை.. அத்தனை நேரமும் எங்களில் எல்லோருக்கும் உற்சாகம் கூடிக்கொண்டிருந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை.
இறுதியில் அவர்களின் "In the End" பாடலுடன் முடித்தது சரியான சாய்ஸ். ஆனால் உற்சாகத்தில் கரைபுரண்டுகொண்டிருந்த எங்களுக்கு அதில் விருப்பமில்லை, கூட்டத்தோடு குரல் கொடுக்கத்துவங்கினோம்.. 15 நிமிடங்கள் போட்ட சப்தத்திற்கும், கூச்சலுக்கும் பலன்.. "What have i done" என்ற அந்த சூழலுக்கு பொருத்தமான பாடலுடன் அட்டகாசமாய் மீண்டும் ஒரு இறுதி பாடலுக்கு வந்தார்கள், வென்றார்கள்.
இப்போது youtube-இல் அவர்களின் பாடல்களாக (பாடல் வரிகளுடன் தேடி) முணுமுணுக்க துவங்கியிருக்கிறேன்.. இதுவும் இசைதான், வித்தியாசமானதொரு பரவசம்..
I'll face myself
To cross out what I've become
Erase myself
And let go of what I've done
What I've done
Forgiving what I've done!!!
யாரிடமாவது சொல்லிப்பாருங்கள், நான் ஓவியனாக இருக்கிறேன், செஸ் விளையாடுவது என் தொழில் என்று, எம்.எப். ஹுசைன்-ஐயும், விஸ்வநாதன் ஆனந்தையும் கேலி செய்ய துணியாதவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்று.. சிறு வயதிலிருந்தே, விளையாட்டு ஒரு hobby என்று மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நம்மில் பெரும்பாலானவர்கள்.
சில வருடங்களுக்கு முன் படித்த குற்றாலீஸ்வரனின் பேட்டி ஒன்று நியாபகம் வந்து தொலைக்கின்றது, நிதர்சனத்தின் மறுஉருவம் என்று சொல்லுமளவுக்கு அமைந்திருந்தது அந்த பேட்டி.. மீடியாவின் வெளிச்சத்திலிருந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவருக்கு ?
இத்தனையும் தாண்டி 110 கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கம் மட்டுமா ? (ஒலிம்பிக்கில் என்ன இத்தனை பேருக்கு ஒரு தங்கம் என்று திட்டமா இருக்குது) , சிறிய நாடுகள் குவிக்கவில்லையா ? என சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு விடைகாண முயற்சிப்போம்.
