யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

முதல் பயணம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூலை 18, 2005

ஜன்னலின் வெளியே மெல்லிய மழைத்தூறல், கோப்பையில் சுடச்சுட பால், பிண்ணணியில் இளையராஜா-வின் இசை, வெளியே சென்று நனையத்தான் ஆசை. தரை விரிப்பைப் பற்றிய குடியிருப்பின் விதி முறைகள் மனதில் தோன்ற, மீறலாம் என நினைத்தால், உடன் இருக்கும் வீட்டு உரிமையாள நண்பர் முறைக்கிறார். அன்னிய நாட்டில் சுதந்திரம் அவ்வளவு தான் என தேற்றிக்கொண்டேன்.


நல்ல வேளை இணையம் இல்லை, இருந்தால் , வராத மின்னஞ்சலை எதிர்பார்த்து, கிளிக்கிக் கொண்டு இருப்பேன்.


சரி, என்ன புத்தகம் படிக்கலாம் என பெட்டியை திறந்தால், பாரதியாரின் கவிதைக்கும், வாலியின் வள்ளுவத்திற்கும் இடையே சில வழக்கத்திற்கும் மாறான அட்டையுள்ள புத்தகங்கள், என்னவென்று பார்த்தால், முந்தைய வருட டைரிகள். அத்துடன், திருவனந்தபுரத்தில், பயிற்சி முடியும் போது அங்கே அறிமுகமான முகங்களிடம் வாங்கிய கையெழுத்து பதிவுகள்.


சரி இரண்டு வருடங்கள் தான் ஆகி விட்டதே, படித்தால் சிறிது பொழுது போகுமே என்று பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். புரட்டும் போதே, யார் எழுதி இருப்பார் என கீழே பார்க்காமல் கண்டு பிடிப்போம் என ஆரம்பித்தேன்.

முதல் பக்கத்திலேயே தோல்வி, அடுத்தடுத்த பக்கங்களிலும் அதே தொடர்ந்தது.

இரண்டு வார்த்தைகளே பேசி இருப்பேன், இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த நண்பன் தான், அனைவருக்குமே வாழ்க்கையில் மறக்க முடியாத நண்பன் தான், இரண்டே மாதங்களே ஆனாலும் உயிர்த்தோழன் தான், நட்ப்பைப்பற்றி மொழி வாரியாக வார்த்தைத் தோரணங்கள் தான், என அனைவருக்கும் பிடித்தவனாய்த்தான் இருந்தேன்.


இதே உயிர்த்தோழர்கள் (?), இனி பதில் மின்னஞ்சல் கூட அனுப்ப இயலாமல் போவார்கள் என அறிந்துதான், பின்னொருநாள் இன்று போல் படித்து சிரிக்கவே இதை அன்று வாங்கினேன்.


அதில், கல்கத்தா நண்பர்கள் சிலரின் கையொப்பங்கள் சிலவற்றை தாண்டி வர வேண்டி இருந்தது. மனம் தானாக பின்னோக்கி பாய்ந்து செல்வதை நிறுத்த முடியவில்லை. அவர்களுடனான நட்பு எப்படி இன்று உருமாறி நிற்கின்றதை அன்று திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் போது துளியளவும் நினைத்து பார்த்ததில்லை.


வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது, எத்தனை புத்தகங்களில், எத்தனை பாடல்கள், எத்தனை வலைப்பூக்களில் இந்த சிந்தனையை தாண்டி வந்திருந்தாலும், நாமே உணரும் போது வரும் உணர்வே தனி.


ஒரு கால கட்டதில், நல்ல தோழிகள் என்று கருதப்பட்டவர்கள், பின்னர் நேரில் காணும் போது மட்டும் வார்த்தைகளில் தேன் தடவி பேசும் நிலை வந்தது கூட விசித்திரமாக தோனவில்லை, உயிர்த்தோழி என்று கருதப்பட்டு, கல்லூரி காலத்துக்குப்பிறகு இப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது, என்றெல்லாம் நினைக்கப்பட்டவை சில நொடிகளில் தலை கீழாக உருமாறும் என என்றுதான் நான் நினைத்ததில்லை.


இதில் எத்தனை என் தவறுகள், எத்தனை நியாயமானவை என்று ஆராய்ந்து பார்க்கத்தோனவில்லை


ஆயினும் வாழ்க்கை விசித்திரமானது, இந்நிலை என்று மீண்டும் மாறி பழைய நிலைக்கு மாறும் என்றோ, வேறு எங்கோ போய் நிற்கும் என்றோ யாருக்கு தெரியும்.

8 மறுமொழிகள்:

Suresh சொன்னது… @ திங்கள், ஆகஸ்ட் 08, 2005 3:08:00 PM

It's a very good post Senthil....Keep posting.. also please add your blog to 'Thamizmanam'

Sud Gopal சொன்னது… @ வியாழன், ஆகஸ்ட் 11, 2005 5:54:00 PM

கால ஓட்டத்துக்குத் தக்கவாறு மனிதனின் ப்ரியாரிட்டிப்(ப்ரியாரிட்டி-தமிழ் வார்த்தை என்ன??) பட்டியல் மாறுகிறது.

நேற்று உயிராயிருந்தவை நாளையும் அப்படியே இருப்பதில்லை.

மாற்றமே இங்கு நிரந்திரம்.

நல்லா எழுதியிருக்கீங்க செந்தில்.

யாத்ரீகன் சொன்னது… @ சனி, செப்டம்பர் 17, 2005 9:16:00 AM

நன்றி சுரேஷ்..

உங்கள் ஊக்கத்தினால் தமிழ் மணத்தில் பதிந்தாயிற்று.. :-)

யாத்ரீகன் சொன்னது… @ சனி, செப்டம்பர் 17, 2005 9:49:00 AM

நன்றி சுதர்சன்..

PRIORITY = முதன்மை, முதலுரிமை

இந்த தமிழாக்கம் பொருந்துமா ??

கால ஓட்டத்துக்கு தக்கவாறு உறவுகளின் முதன்மை நிலையில் மாற்றம் வரலாம்.. ஆனால் தவறான உறவுகளுக்காக நட்பு பலியிடப்படும் போதுதான், மனது கொஞ்சம் கண்ணீர் சிந்துவதை தவிர்க்க முடியவில்லை.. நானும் சாராசரி மனிதன் தானே ;-) இன்னும் விருப்பு வெறுப்புகளை துறக்க முடியவில்லை :-D

சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. உங்கள் கதை பரிசு வாங்குமா என்ற கோணத்திலெல்லாம் சிந்திக்கவில்லை, ஆனால் நிதர்சன நிலையை பளிச்சென்று முகத்தில் அறைந்தார்போல் இருந்தது..

பெயரில்லா சொன்னது… @ புதன், அக்டோபர் 19, 2005 12:55:00 AM

"ஒரு கால கட்டதில், நல்ல தோழிகள் என்று கருதப்பட்டவர்கள், பின்னர் நேரில் காணும் போது மட்டும் வார்த்தைகளில் தேன் தடவி பேசும் நிலை வந்தது கூட விசித்திரமாக தோனவில்லை, உயிர்த்தோழி என்று கருதப்பட்டு, கல்லூரி காலத்துக்குப்பிறகு இப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது, என்றெல்லாம் நினைக்கப்பட்டவை சில நொடிகளில் தலை கீழாக உருமாறும் என என்றுதான் நான் நினைத்ததில்லை."
olunga pesuna than mariyatha illa,mathikurathu kooda illiyae..(both boys and girls)naanum oru blog create panni atha pathi eluthanum.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 9:55:00 AM

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி tina

நீங்கள் சொன்னதின் அர்த்தம் புரியவில்லை எனக்கு...

G.Ragavan சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 12:33:00 PM

// ஒரு கால கட்டதில், நல்ல தோழிகள் என்று கருதப்பட்டவர்கள், பின்னர் நேரில் காணும் போது மட்டும் வார்த்தைகளில் தேன் தடவி பேசும் நிலை வந்தது கூட விசித்திரமாக தோனவில்லை, உயிர்த்தோழி என்று கருதப்பட்டு, கல்லூரி காலத்துக்குப்பிறகு இப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது, என்றெல்லாம் நினைக்கப்பட்டவை சில நொடிகளில் தலை கீழாக உருமாறும் என என்றுதான் நான் நினைத்ததில்லை. //

இது பெரும்பாலும் அனைவரின் வாழ்க்கையிலும் நடப்பதே என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன விதம் வித்தியாசமாகப் படுகிறது. இதில் நமது தவறும் எதுவுமில்லை. அவர்களது தவறும் எதுவுமில்லை. எல்லாம் மாயைதான்.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 8:45:00 PM

@g.ragavan: வருகைக்கு நன்றி ராகவன்

நீங்கள் சொன்னது சரி, ஒவ்வொருவருக்கும் ஓர் காரணங்கள், சூழ்நிலைகள்..

இத்தகைய புண்களுக்கு காலம்தான் நல்ல மருந்து, ஆயினும் நண்பர்கள் மனம் விட்டுப்பேச முன்வரவேண்டும், பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று..

கருத்துரையிடுக