Turtles Can Fly
Published by யாத்ரீகன் under மனம் கவர் திரைப்படம் on சனி, மார்ச் 15, 2008
போரின் கொடுமைகளை , குழந்தைகளின் மேல் / அடுத்த தலைமுறையின் மேல் அதன் பாதிப்பை , போரின் பெயரால் நியாயப்படுத்த முயலும் அல்லது மறைக்கப்படும் கொடுமைகள் என.. அத்தனை விஷயங்களையும் .. உச்சஸ்தாயில் கதறி கதறி சொல்லாமல், மவுனத்தாலேயே உணர வைத்த திரைப்படம் .. அங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவை தூறல்கள், கட்டாயம் உங்கள் நாளை மிகவும் சோகமாக்காது .. இணையத்தில் தோழி ஒருவர் தரவிறக்கி கொடுத்தது .. ஆங்கில சப் டைட்டில் உடன் கிடைத்தது நல்லதாய்போனது ..