யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எங்களிடையே பெண்கள் - 1

Published by யாத்ரீகன் under , on திங்கள், ஜூலை 30, 2007
பெண்கள்

கடவுள், அரசியல் போன்றவற்றை விட அதிகம் விவாதிக்கப்படும் கருப்பொருள். எப்பொழுதிலிருந்து விவாதிக்க தொடங்கினோம் என்று சரியாக நினைவில்லை. அது என் ஆள், இது உன் ஆள் என ஆறாப்புலயே, ஆள் என்றால் என்னவென்றெல்லாம் தெரியாமல் தூரத்திலிருந்தே காமிக்க பயன் படும் பொருள்களாகத்தான் தொடங்கியது. எட்டாப்புலிருது எதெடுத்தாலும் சண்டை, சண்டை போடுவது சரிதானெறெல்லாமல் வீம்புக்கென்றே திரிந்த காலங்களில் இனிமையான நட்பென்பதை தவற விட்டுக்கொண்டிருந்தோம்.

கல்லூரியில், வீம்பே அடையாளமானது, தனித்திருக்க காரணமானது ஆனால் அதுவே பல உயிர் தோழிகளை அடையாளம் காட்ட உதவிக்கொண்டிருந்தது. கல்லூரியில் அதிகம் டாப் டென் அலசுவதற்கும், கூட்டை கலைப்பதுமென தான் பெண்கள் எங்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருந்தனர். மிகவும் ஆர்வமுள்ள அரட்டைகள் அப்பொழுது எங்களுக்குள் தொடங்கியதில்லை.

தினந்தோறும் புதிய மனிதர்களும், மொழிகளும், நினைத்தேபார்த்திராத அனுபவங்களும் எங்களை கொஞ்ம் கொஞ்சமாய் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த நேரம். தினசரி வாழ்வே, 6 பெண்களின் நடுவேதான் என்று ஆனபோது, கண்கள் மட்டுமல்ல மெல்ல மெல்ல மனசும் விழித்துக்கொண்டு தன் கண்ணையும் வைத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தது. ஒவ்வொருத்தரும் ஒரு இரகம் என்பதை மூளை முன்பே உணர்ந்திருந்தும், மனமும் அதை புரிந்து கொள்ளத்தொடங்கியது. ஒவ்வொருவருக்குள்ளும் கூட ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு முகங்களை அடையாளம் காட்டத்தொடங்கியது. நல்ல தோழி என தொடங்கி, விரோதி என்ற நிலை தொடர்ந்து, யாரையும் எந்த ஒரு வட்டத்துக்குளேயும் அடைக்க, நம்மையும் அவர்களுடனான நம் உறவையையும்தான் சேர்த்து உரைகல்லில் உரசிப்பார்க்க வேண்டியதின் நிதர்சனம் புரிந்து கொண்டிருந்தது, அதில்லாமல் தனிப்பட்ட விமர்சனங்கள் எவ்வளவு சீக்கிரம் அர்த்தமற்றவையாக் போய்க்கொண்டிருந்தது.

புதிய நட்புகளின் சூழ்நிலையில், முன்பு உணர்ந்திருக்காத அருகிலில்லாத நண்பர்களின் நட்பும், தான் எவ்வளவு விலைமதிப்பில்லாதது என்று மெளனமாய் ஒரு புன்சிரிப்புடன் தூரத்தில் அருகிலேயே இருந்தது.

அனைவருக்குமிடையில் புயல்கள் ஓய்ந்து புரிதல்கள் மெல்ல ஆரம்பிக்கும் நேரம், காலம் தன் இருப்பை பதிவு செய்ய மாற்றங்கள் தொடங்கின, இடங்கள் பெயர ஆரம்பித்த தருணம் அது. ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அவர்களைப்பற்றிய பார்வைகளை இன்னும் கூராக்க காலம் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தது.

வட்டங்கள் பெரியதாய் வரையப்பட, வரையப்பட... நட்பின் தொடர்புக்கு அருகாமையின் அவசியம் கொஞ்சமாய் ஒவ்வொருத்தருக்கும் புரிந்துகொண்டிருந்தது.

இதுவரை பார்த்ததே பெரிய மாற்றங்கள் என்று ஆசுவாசப்படுதிக்கொண்டிருந்த மனத்திற்கு, தொடுவானத்திற்கும் அப்பாலுல்ல கடலின் ஆழத்தையும், ஆகாசத்தின் வர்ணத்தையும் காலம் கோடிட்டுக்காட்டத்தொடங்கியிருந்தது. அங்கிருக்கும் ஆழமும், வர்ணமும்தான் பயணத்தை சுவாரசியமாக்க போகின்றன என புரியப் புரிய, கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்சி கலைந்து புன்னகைக்கத்தொடங்கினோம்.

அடுத்த கட்டமாய் ஒவ்வொருத்தர் வாழ்விலும் முக்கியத்துவங்கள் மாறத்தொடங்கின, புதிய நபர்கள் எங்களிடையே என்பதல்ல, புதிய நபர்கள் மத்தியில்தான் நாங்கள் என வாழ்வின் நிதர்சனமும் எங்களுகு வழிகாட்டதொடங்கியது.

இப்போது பெரும் கும்பல்களில் மட்டுமே அவர்களை காண முடிந்தது, நெருக்கமான கோஷ்டிகளில் ஆண்கள் மட்டுமே அதிகமாயிருக்கின்றனர்.

இப்போது எங்கள் விவாதத்தலைப்புகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், அதிகம் விவாதிக்கபட்ட தலைப்பும் சரி, அதிகம் பார்த்திராத கோணங்களிலெல்லாம் சுற்றியெங்கும் நிறைந்திருப்பதாய் உணர்கின்றோம். காற்றைப்போலவே, உடனே பயணித்துக்கொண்டிருக்கின்றதா என்று தோன்றுவதைப்போல், எங்கே சென்றாலும் கேட்க்க முடிகின்றது.

இவ்வளையும் கேட்டுவிட்டு, டைம் ஆகிடிச்சு மாப்ளே வீட்ல சொல்லனும்னு சொல்ற எதிரிகளும் சரி, மச்சி இன்னும் நாலு வருசம் இருக்குடா இத்தயெல்லாம் யோசிச்சிகின்னு, ஜாலியா போய்கிட்டே இருப்போம்னு சொல்ற நண்பர்கள்ம் உண்டு.

இன்றைக்கு சுவாரசியமாய், சூடாய் மோதிக்கொள்ளும் கருத்துகளும், புரிதல்களும் சரி, மனிதர்களைப்போல மாற்றங்களுக்கு உட்பட்டே இருந்திருக்கின்றது. நாளை நகைப்புக்கும், வெட்கத்துக்கும் கூட இழுத்துச்செல்லலாம் இன்று மூச்சு முட்ட விவாதித்துக்கொண்டிருக்கும் பார்வைகள். அவற்றில் கொஞ்சத்தை பதிவு செய்து வைப்போமென்று நினைதிருந்தேன். அடுத்து வரும் பதிவுகளில் எங்கள் so called வயசுக்கோளாறு பட்டறைகளை பகிர்ந்துகொள்கிறேன்.

என்னிடமிருக்கும் சில போர்ட்ரெய்ட்கள் - 2

Published by யாத்ரீகன் under , , on திங்கள், ஜூலை 30, 2007

இமாலய பயணத்தின் போது மூன்றாம் நாள் சம்பா பள்ளத்தாக்கு நோக்கி செல்கையில் இடையே தென்பட்ட சிறு குழந்தை வியாபாரிகள், நுனி சிவந்த மூக்கும், கன்னங்களும், சிரிப்பதா வேண்டாமென்பதா என்ற யோசனையும், இலைகளூடே விழுந்த வெளிச்சத்தில் மிகுந்த அழகாய்த்தெரிந்தது....





சீனி - நெருங்கிய நண்பர் வட்டதினுள் ஒருவன், எப்போதும்ம்...எங்கேயும்ம்ம்... ஒருவித தேடலுடன் இருப்பவன். 8000 ஆயிரம் அடி உயரத்தில்....





வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணங்கள் மிகப்பெரிதாய் இருக்க வேண்டுமென்பதில்லையே, ஒரு மிட்டாய் சாப்பிடுவதாகக்கூட இருக்கலாமல்லவா.......




சூடாய் ஒரு டீ ஸீரோ டிகிரிக்குளிரில்.......




ஒளி வட்டம் தெரியுதுங்களா...!!!





யாரை எதிர்பார்த்து...!!! (less resolution pic - original lost)




ஒரு வெயில்கால உச்சி வெயிலில், குலசேகரப்பட்டின தென்னந்தோப்பினுள் ஆனந்த குளியல்





நினைவுகளில் தொலைந்திருந்த ஒரு வேளையில்





Cutie, originally uploaded by யாத்திரீகன்.

விளக்குகள் அணைந்த்துக் கொண்டிருக்கையில் ஓடும் இரயிலில் எதிர்பாரத ஒரு அற்புத சிரிப்பு






ISmile, originally uploaded by யாத்திரீகன்.

ஒரிஜினல் படமில்லாததால் ஏகப்பட்ட புள்ளிகள்...

என்னிடமிருக்கும் சில போர்ட்ரெய்ட்கள் - 2

Published by யாத்ரீகன் under , on திங்கள், ஜூலை 30, 2007

Dark, originally uploaded by tcesenthil.

தி டார்க் லார்ட் :-)





Karadu Muradu, originally uploaded by tcesenthil.

சுந்தரகுமார் @ சம்பா பள்ளத்தாக்கில் ஒரு கிராமத்தில் - வெளியே கரடுமுரடாய் தெரிந்தாலும் இவன் ரொம்பபபபப நல்லவன்... :-)

புகைப்பட போட்டிக்கு

Published by யாத்ரீகன் under , , on புதன், ஜூலை 18, 2007
புகைப்பட போட்டிக்கு:
தலைப்பு: இயற்கை
புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்

திருச்சி-துறையூர் அருகே நாகலாபுரம், நண்பனின் வயல்வெளி. அடர்ந்த பசுமையின் அழகுக்காகவே இந்த புகைப்படம் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று.



Chilka, originally uploaded by யாத்திரீகன்.

ஒரிசாவில் உள்ள ச்சில்கா ஏரியின் ஒரு முனையில் உள்ள சிறு தீவு, இங்கிருந்த நீரின் நீல நிறமும், ஆள் அரவமற்ற சூழலும், அவளின் இருப்பையும் மீறி கவர்ந்தது..

புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்

போட்டாச்சு எட்டு

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 03, 2007
8 Random Facts சரி.. ஆனால் என்னப்பற்றி பிறர் அறியா தகவல்களா !!!! ஹீம்.. பார்த்துதான் எழுதனும்..

8) ஆரம்பத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து, 3/4 மாதங்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்த பிறகு அவளுக்கு திருமணமாகும் (வேறு ஒருவருடருந்தான் :-( ) என்று இருந்த இராசி இப்போ பவர் கூடி ஒரு பெண்ணைப்பார்த்து அழகாயிருக்கிறாள் என்று சொல்லி 2ஏ வாரத்தில் அவள் கல்யாணப்பத்திரிக்கையுடன் வந்து நிற்பது !!!! (நெருங்கிய நட்பு வட்டாரத்துக்கு மட்டும் இந்த தகவல் இதுவரை தெரிந்திருந்ததால் "கல்யாண மாலை" என்று நிறுவனம் ஒன்று ஆரம்பிக்க யோசித்துக்கொண்டிருந்தேன்)

5) கூட்டத்தோட இருக்கும்போது கல கல, ஆனால் தனிமை விரும்பி, குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒருமுறை எங்கே போறேன்னு தெரியாம அப்டியே கிளம்பி, போற இடத்தை இரசிச்சிட்டு வர்றது பிடிக்கும்.. கடந்து மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்கள்(?) எனக்கு என்னோடதான் யாருக்குமே தெரியாம.. (No Travel Talks as said by ப்ரியா !!!! so stopping it)

1) சொல்லாமல் முறிந்தது முதல் முறை, சொல்லி முறிந்தது இம்முறை !!!

3) அநியாயத்துக்கு மிஷ்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், தினமும் வீட்டுக்கு வர்ற வழியில 10 ரூபாய்க்கு, 1ரூபாய்/2ரூபாய்ல ஏகப்பட்ட மிஷ்டீக்கள், ஒரு கட்டத்துல நண்பர்கள் யாருமே கம்பெனி குடுக்க முடியாத நிலமைக்கு போனது உண்டு, சில வகை மிஷ்டிக்கள் சாப்பிடுவதற்கெனவே "உல்டாடங்கா", "கருணாமொயி","சார் நம்பர் டேங்க் foot ப்ரிட்ஜ்", "MG ரோட்","நியு மார்கெட்" இப்படி பல இடங்கள் அலைந்து திரிந்து சாப்பிட்ட காலம் உண்டு... இப்போ, என்ன சாப்பிடுறேன்னு கூட யோசிக்கிறதில்லை

7) எல்லோருக்கும் தெரிந்தது எனக்கு இரு தம்பிகள் இருப்பது, தெரியாதது ஜீவி எனது தங்கை மாதிரியல்ல தங்கைதான் என்பது, எனது உயிர்த்தோழியின் தங்கை, கிராமத்து வெள்ளந்தி உள்ளத்தோடு "அண்ணா.. அண்ணா" என்று மனசு நிறைய கூப்பிடும் தங்கை.., சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தவறிய தங்கை அந்த வீட்டில் பிறந்துவிட்டாலோ என்று நினைக்குமளவுக்கு !!!

2) லடாக் பைக் டூரை சமீபத்தில் தவறவிட்ட அபாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.

6) சுண்டல் மடித்துக்கொடுக்கும் காகிதத்தை கூட பிரிச்சு பிரிச்சு படிக்கும் ஆசாமி , எதைக்கண்டாலும் படிக்கணுமென்று தோன்றும், ஒவ்வொரு மாத சம்பளத்திலும் ஒரு புத்தகம் என்பதையும் மீறிவிடுவதால், புத்தகக்கடைக்கு போவதை முடிந்தவரை குறைக்கபார்க்கின்றேன்.. சமீபத்திய சாதனை: வெங்கடேஸ்வரா ரோட்டிலுள்ள "Crossword" கடைக்கு போய் பல மணிநேரம் புத்தகம் படிச்சிட்டு அங்கிருந்த காபி ஷாப்பில் செலவழிச்சது :-D !!!

4) உயிர்தோழர்களிடமும், உயிர்த்தோழிகளிடமும் சிறிது நேரம் செலவழித்து பல காலம் ஆகிவிட்டது..... :-(

சுவாரசியமா எழுத முடியாட்டியும், எதைச்சொல்றடு, எதைச்சொல்ல வேணாம்னு ரொம்ப யோசிக்க வைச்சிடுச்சு.. என்ன ப்ரியா & சுதர்சன் அண்ணாச்சி .. தேறுமா !?!?!?!

ஊருக்குள்ளே பலரும் எட்டு போட்டுட்டாங்க இனிமே யாரைக்கூப்பிடுறது.. சரி.. எங்க
மொட்டை பாஸ் சீனியை கூப்பிடுறேன், உங்கள்ல்ல பலபேருக்கு தெரியாத எங்க கோஷ்டியில இருக்கும் ஒரு Interesting Character ...