PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகளுக்கு முன்னால்
Published by யாத்ரீகன் under போட்டி முடிவுகள் on செவ்வாய், அக்டோபர் 16, 2007PiT குழுவினர் நடத்தும் புகைப்பட போட்டி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது என்று சொல்லலாம். இந்த வலைத்தளத்தில் வரும் பாடங்களை படிப்பவர்களுக்கு, களத்தில் இறங்கி படித்ததை பயன்படுத்திப்பார்க்க வாய்ப்பாய் மட்டுமின்றி, மேலும் முயற்சிகள் செய்து பார்க்க படிப்பவர்களை ஊக்கமூட்டுவதாகவே செயல்படுகின்றது.
இதுவரை வந்த புகைப்பட தலைப்புகளும் சரி, புகைப்படங்களும் சரி, தங்களிடையே இருக்கும் தொகுப்பிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்புவதையே அதிகமாக கொண்டிருந்தது (என்னையும் சேர்த்துதான் ;-) , இதில், படித்ததை பயன்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமின்றி போனது.
இம்முறை சர்வேசன்/ஆனந்த்/சிவிர்/நாதன் அவர்களின் தேர்வுகளில் "உணவு" என்ற தினமும் நாம் காணும் காட்சி தேர்வானது. அட உணவுதானே என்றில்லாமல் அதிலும் வித்தியாசங்கள் காட்ட தேவையானதை சிவிர்-இன் பதிவு சரியான நேரத்தில் அமைந்தது, பங்கேற்பாளர்களுக்கு போட்டியின் நோக்கத்தை புரியச்செய்தது.
பழைய புகைப்படங்களை எடுத்து போடும்போதே அசத்தும் நம் மக்கள், இம்முறை கற்றதை பயன்படுத்தி அசத்தியுள்ளார்கள். சென்ற முறை போன்று அதிக அளவில் போட்டியாளர்கள் இல்லாதபோதும் படங்களின் தரம் நடுவர்களின் தேர்வை சென்ற முறை போலவே கடினமாக்கியிருந்தது.
போட்டியாளராய் மட்டுமின்றி நடுவராக பணி புரிதலும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தது. முக்கியமாய் முதல் பத்து படங்கள் தேர்வு செய்தபோது கவனிக்கவேண்டிய விஷயங்கள், எதில் எல்லாம் சாதரண விஷயங்கள் என்று நினைத்திருந்தோமோ, அதில் எல்லாமும் கவனம் வேண்டும் என்பது ஒரு முக்கியமான பாடம்.
போட்டிக்கான இறுதிப்படங்கள் தேர்வு செய்யும் நிலையில் இருப்பதால், கொஞ்ம் சுவாரசியத்தை உண்டாக்க, இந்த டாப் ட்வெல்வ் + ஒன் புகைப்படங்கள். (அட இல்லிங்க, இதை தேர்வு செய்யும் போது கோர்ட் சூட் போட்டு நாற்காலியெல்லாம்... அந்த கூத்தெல்லாம் இல்லீங்க..) இதில் இருக்கும் வரிசை நிலை எதையும் குறிப்பதில்லை.
ஒவ்வொரு படங்களுக்கும் கமெண்டுகளை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம், சிறிது தாமதமானதுக்கு மன்னிக்கவும் மக்களே !!!!
விரைவில் முடிவுகளை !!! அதுவரை கெஸ் செய்வது ஒரு போட்டியாக நடக்கட்டுமே... சர்வேசன் ஒரு சர்வே ? ;-)
முதல் சுற்றுக்கு தேர்வானவை


