யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 2

Published by யாத்ரீகன் under , , on சனி, செப்டம்பர் 29, 2007
இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருந்த குகை ஒன்றின் மேற்பரப்பில் இருந்த ஒரு சிறு தேவதையின் ஓவியம் ஒன்று. என்னமாய் கொழுக்மொழுகென்று இருக்கின்றது.

2. மேலிருந்த வண்ணப்பூக்களின் ஓவியம் ஒன்று, இதிலிருந்த நீல நிறம் இன்னும் வரையப்பட்டபோதிருந்த வனப்பிருந்ததைபோன்றிருந்தது.

3. மற்றுமொரு மேற்கூரை ஓவியம். இந்த ஓவியம் சிறிது சிதைந்திருந்தாலும், அதன் அழகும்,நேர்த்தியும் சிறிதும் குறைவின்றி இருந்தது.

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 1

Published by யாத்ரீகன் under , , on சனி, செப்டம்பர் 29, 2007
மேற்கு, இந்தியாவில் இந்த திசையில் இன்னும் எந்த இடமும் பார்த்திராத குறை வெகு நாளாக உறுத்திக்கொண்டிருந்தது. இம்முறை வேறொரு பயணம் திட்டமிட்டபடி நடக்காததால், மிக சந்தோஷமாய் கிளம்பிவிட்டோம் அஜந்தா-எல்லோரா-பூனே என்று; சிறிது நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தோம்.

அஜந்தா - சிறு வயதில் சரித்திரப்பாட மனனம் மட்டுமே செய்திருந்த இடம். பின்பு என்ன வகையான இடம் என்று தெரிய வந்தபோது வாழ்நாளில் என்றாவது ஒருநாள் சென்று வரவேண்டும் என்றானது.

அவுரங்காபாத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது அஜந்தா குகைகள். இது பல குகைகளை ஒரே இடத்தில் செதுக்கியிருக்கும் இடம்.

குகை என்று ஒருவித எண்ணத்தில் சென்ற எங்களுக்கு இதன் அமைப்பு மிகவும் பிரமிக்கதக்கதாய் இருந்தது. அடர்ந்த கானகத்தினுள், பள்ளத்தாக்கினுள், கீழே ஓடும் ஆறு, அருகே பெரிதாய் இருக்கும் அருவி என.. எப்படி இதை செய்து முடித்திருப்பார்கள் என்று.

இதை முதலில் யோசித்ததிலிருந்து, இறுதியில் செய்து முடித்தவரை எவ்வளவு உழைப்பு, கற்பனை இருந்திருக்கும் என்று பிரமித்தபடியே மயங்கியிருந்தோம். பல கால கட்டங்களில் செதுக்கப்பட்ட குகைள் இவை.

அஜந்தாவில் பெரும்பாலும் பவுத்த குகைகள், இங்கிருக்கும் குகைகள் இதிலிருக்கும் பவுத்த ஓவியங்கள், புத்த விகாரக குகைகள் உலகப்புகழ் பெற்றவை.

இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கவை, இங்கிருக்கும் ஓவியங்கள். இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்க்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருக்கும் குதிரை லாட 'யு' வடிவிலான பள்ளத்தாகின் சுவர்களில் தான் அஜந்தா குகைகள் இருக்கின்றன. கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு தெரிகின்றதா ? எப்படி செதுக்கியிருப்பார்கள் இந்த குகைகளை ???


2. அஜந்தாவின் கடைசி குகைகளில் இருந்து அழகிய ஜன்னல்கள் வேலைப்பாட்டுடன்.



3. அங்கிருக்கும் தூண்களில் உள்ள ஒரு சிறு வேலைப்பாடு. எத்தனை நுணுக்கமான கலைநயம், காலத்தை தாண்டி நிற்கும் கலை.




4. மற்றுமொரு அழகான தூண்.



5. இங்கிருக்கும் தூண்களைப்பார்த்தால் மலையில் செதுக்கியதைப்போலா இருக்கின்றது ? எவ்வளவு நேர்த்தியாய் செதுக்கப்பட்டு, வரிசையாய் கொஞ்சம் கூட அங்கிங்கு விலகாதபடி ஒரே நேர்க்கோட்டில். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அப்படியே இருக்கின்றது ஆச்சர்யம்.


ஓஓஓஓஓஓ

Published by யாத்ரீகன் under , on சனி, செப்டம்பர் 29, 2007
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்த்னை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்

ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை
நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,

ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
ஓஓஓஓஓஓ …

வண்ணங்கள் - புகைப்படபோட்டிக்கு

Published by யாத்ரீகன் under , , on திங்கள், செப்டம்பர் 10, 2007





ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள், originally uploaded by யாத்திரீகன்.

கல்கியின் பார்த்திபன் கனவில் பார்த்திபன் அரண்மனையின் சுரங்க அறையில் உள்ள சித்திரங்களைப்பார்த்து பிரமித்து நிற்பதை போன்று உணர்ந்தேன்




கொஞ்சம் எக்ஸ்ட்ரா கலர்ஸ் கீழே - போட்டிக்கு இல்லை