யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

அடுத்த பயணம்

Published by யாத்ரீகன் under on வியாழன், ஆகஸ்ட் 10, 2006

ஆங்கிலம் இங்கில்லை

மொழிப்பிரச்சனை இங்கும் உண்டு

மொழிவாரியாக நாடும், மக்களும் பகுக்கப்பட்டுள்ளது

உலகின் இந்த நாட்டின் பகுதியில் இருக்கும் நாடுகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றிய நாடு.

சாக்ஸபோன் என்ற இசைக்கருவியை உருவாக்கிய நாடு

Art Nouveau என்ற கட்டடக்கலை முறையை உருவாக்கியவர் இருந்த நாடு.

உலகப்புகழ் பெற்ற ஒரு கார்ட்டூன் தொடர்/கதாபாத்திரம்/புத்தகம் இந்த நாட்டிலிருந்துதான் உருவானது.

பிக் பாங்க் எனப்படும் பொளதிக தியரியை பயன்படுத்தியது இந்த நாட்டவர்தான்.

ஆகஸ்ட் 15 அங்கேயும் விடுமுறைதான்

Waffles மற்றும் French Fries, இங்கிருந்து தான் தொடங்கியது.

Steak இவர்களின் தேசிய உணவு

உலகின் இவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள நாடுகளிலேயே, நதிகளின் தண்ணீரின் தரம் இங்கேதான் மிகக்குறைந்தது. 122 நாடுகளில் கடைசி.

எல்லாம் சரி எதுக்கு இதெல்லாம்.... இந்த நாட்டுக்குத்தான் அடுத்த பயணம், பணிரீதியாக.. எத்தனை நாளென்று தெரியவில்லை.. சராசரியாக மூன்று மாதம் முதல் தவணையாக இருக்குமென்று நினைக்கின்றேன்...

பதிலில்லை, பின்னூட்டமில்லை என்றால் மன்னிக்கவும்... :-)

10 மறுமொழிகள்:

கப்பி | Kappi சொன்னது… @ வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 10:44:00 PM

பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சீனியர்..

உங்கள் நண்பன்(சரா) சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 12, 2006 11:14:00 AM

தங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்,

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 12, 2006 11:16:00 AM

யாத்ரீகன் தாங்கள் அடுத்து செல்ல இருக்கும் தேசம் France, சரியா?


அன்புடன்...
சரவணன்.

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2006 5:41:00 PM

@கப்பி: நன்றி கப்பி...

@உங்கள் நண்பன் சரவணன்: French Fries பிரான்ஸிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமா நண்பா ;-) ... வாழ்த்துக்களூக்கு நன்றி..

வடுவூர் குமார் சொன்னது… @ திங்கள், ஆகஸ்ட் 14, 2006 2:32:00 PM

பயணம் முடிந்து அனுபவங்களை போடுங்கள்,
காத்திருக்கோம்.....

Adaengappa !! சொன்னது… @ திங்கள், ஆகஸ்ட் 14, 2006 8:09:00 PM

Belgium ??

Senthil,Am glad for you !
Keep in touch !Good luck in your endeavors !

Sorry,didnt have tamil fonts in this system !(Will mail you,pal)

Maayaa சொன்னது… @ ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006 2:56:00 AM

belgium dhaane??
good luck and i am sure u will find more time to blog while u r in other country!!

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 30, 2006 6:53:00 PM

@குமார்:
குமார்.. முதல் கட்ட பயணம் நல்லபடியாய் பத்து நாட்களிலேயே முடிந்தது.. பயணத்துக்குப்பின்னான வேலைப்பளு மிகவும் அதிகம்.. மேலும் பணியிடத்தில் சில தடைகள்.. சீக்கிரம் பதிவுசெய்ய வேண்டும் பெல்ஜிய நினைவுகளை.. :-)

@அடேங்கப்பா:
பிரபு.. நீங்கதான் முதல்ல சரியா கண்டுபிடிச்சிருக்கீங்க :-) என்ன பொதுஅறிவு .. கலக்குறீங்க ;-) .. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

@ப்ரியா:
சரியான விடை ப்ரியா.. , விஷயம் என்னன்னா.. முதல்கட்ட பயணம் 10 நாள்லயே முடிஞ்சது.. அடுத்து எப்போ, எவ்வளவு நாள்னு தெரியல.. உங்க பதிவை பார்பதிலே எதோ பிரச்சனை, அதான் காமெண்ட் கூட போட முடியல..

@மிர்ரர்:
வாங்க வாங்க.. முதல் முறையா வந்திருக்கீங்க.. பெல்ஜியம்தான் அந்த நாடு.. சும்மா பெல்ஜியம் போனேனு சொல்றத விட.. கொஞ்சம் சுவாரசியமா செய்யலாம்னு பார்த்தேன் ;-) .... மறுபடியும் வாங்க..

Priya சொன்னது… @ புதன், செப்டம்பர் 13, 2006 8:28:00 PM

வாழ்த்துக்கள்! Have a safe trip. ரொம்ப அழகான நாடுனு போன freinds சொல்லி இருக்காங்க. Enjoy பண்ணுங்க. Belgium பத்தி சொல்லிட்டு chocolates பத்தி சொல்லாட்டி எப்படி? நிறைய வாங்கிட்டு வாங்க.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், செப்டம்பர் 14, 2006 2:52:00 PM

நன்றி ப்ரியா... 3 மாத பயணம் என்பது முதல்கட்டமா 10 நாள்லயே நல்லபடியா முடிஞ்சது.. ப்ருஸெல்ஸ் பொருத்தவரை "Fell in Love at first Sight"னு சொல்லலாம்... வரலாறும்,கலைநயமும், அழகும் நிறைஞ்ச ஊர்...

ஆமா சாக்லெட் பத்தி சொல்லாம விடக்கூடாதுதான், அவ்வளவு வகைகள், அற்புதமான சுவை.. கொண்டு வந்த ரெண்டுநாள்ல தங்கைகள் ரெண்டுபேரும் அவுங்களே காலி பண்ணீட்டாங்க.. :-))

மத்த எல்லோர்கிட்டயும் சாக்கலெட் குடுக்காததுக்கு திட்டுதான் கிடைச்சது...

கருத்துரையிடுக