யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கொல்கத்தா துர்கா பூஜா - 2

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006
மிக மிக வித்தியாசமான, பிரமாண்டமான பண்டல், காட்டுக்குள்ளிருக்கும் குகை ஒன்றில் குடையப்பட்ட பயங்கரமான காளி கோவில் எனும் தீம். இரத்தமெங்கும் தெளித்திருப்பதை போல் ஒரு உணர்வை உருவாக்கி, மண்டை ஓடுகளும், மிக நீண்ட பாறையில் குடைந்த குகைப்பாதையும், தொங்கும் வேர்களும், இறுதியில் பயங்கரமான காளி சிலையும் என உள்ளத்தை கவர மட்டுமின்றி, உள்ளத்தை கொஞ்சம் உறைய வைத்த பண்டல்.

முழுவதுமாய் சட்டை பொத்தான்களால் ஆன பண்டல், அந்த வித்தியாசத்தை தவிர, இந்த கலை நுணுக்கம் கொண்ட சிலையும் இந்த பண்டலின் கவன ஈர்ப்பை பெற்றது.


துர்க்காவின் உடையில் உள்ள வேலைப்பாடுகள்.



முகம்மது அலி பார்க்கில் உள்ள பந்தல் (கொல்கத்தாவில் மிக மிக புகழ்பெற்ற பண்டல்), ஒருமைப்பாட்டை உணர்த்தும் தீம்கள் எப்போதும் இங்கு உண்டு.



இங்கு வித்தியாசமான தீம் ஏதுமில்லாவிடினும், சிலைகளின் தோற்றம் மிக மிக அழகாய் :-)



பூஜை நடந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன பண்டல்


மணிக்டாலாவில் உள்ள பிரமாண்டமான மரவேலைப்பாடுகள் கொண்ட பண்டல், முழுவதுமாய் மர கரண்டிகள், பூரிக்கட்டைகள் என மர சமையல் சாமான்கள் கொண்டு நான்கு குதிர்கைகள் இழுக்கும் சாரதி கொண்ட தேர் வடிவில் செய்யப்பட்டது. தேரின் உயரம் 20 அடிக்கும் மேல், (சாரதி மற்றும் குதிரைகள் உயரத்தை கணக்கில் கொள்க).


மிக மிக வண்ணமயமாய் செய்யப்பட்ட சிலை, இதில் மிகவும் கவர்ந்தது சிலையின் கூந்தல். மிக மிக மிக நுணுக்கமாக செய்யப்பட்ட வேலை அது, நிஜமாகவே சவுரி கொண்டு செய்து விட்டார்களா என திகைக்க வைத்தது.

3 மறுமொழிகள்:

துளசி கோபால் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 09, 2006 12:34:00 PM

என்னங்க இவ்வளவு அற்புதமா காளிகளைச் செஞ்சிருக்காங்க.

சினிமா செட் ஆளுங்க எல்லாம் பிச்சை வாங்கணும்போல இருக்கே!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 09, 2006 12:49:00 PM

ஆமாங்க, கிட்டத்திட்டா ஆறு மாசம் முன்னாடியே வேலையை ஆரம்பிச்சிருவாங்களாம்... அந்த கடைசி இரு படங்களை கிளிக்கினால் முழு படத்தையும் பார்க்கலாம்.. (அந்த பூரிக்கட்டை பண்டல் எடுக்கும்போது பாட்டிரி காலி, அதனால் அவசர அவசரமாய் எடுத்ததால் கொஞ்சம் சரியில்லாமல் போய்விட்டது :-( )

உங்க மின்னஞ்சல் முகவரி தந்தீங்கனா.. இன்னும் நிறைய படங்கள் ஏற்றியிருக்கும் முகவரி தர்றேங்க...

Sud Gopal சொன்னது… @ திங்கள், அக்டோபர் 09, 2006 1:14:00 PM

படங்கள் எல்லாம் நல்லாவே வந்திருக்கு.

ஆமா,அந்த ரவுடி செந்தில்ங்கிறது யாருங்ணா? ;-)

கருத்துரையிடுக