ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 3
Published by யாத்ரீகன் under அஜந்தா, பயணம், புகைப்படம் on திங்கள், அக்டோபர் 01, 20071. புத்தரின் மரணப்படுக்கை (?) என்று சொல்வது தவறு, புத்தர் இறுதி நிர்வாண நிலை அடைந்த தருணம்.
2. புத்தரின் பாதத்தின் வழியே அவரின் ஆன்மா மேலுலகத்திற்கு செல்வதைப்போன்று செதுக்கப்பட்டிருக்கும் சிற்பம், மேலே உள்ள சிற்பத்தின் தொடர்ச்சி இது, படத்தில் தோன்றுவதை விட மிகவும் நீளமான சிலை. இன்னும் கூர்ந்து நோக்கினால், மேலுலகத்தில் உள்ளவர்கள் புத்தரின் வருகையால் மகிழ்ந்திருப்பதை மேலுள்ள மற்ற சிலைகளின் முக உணர்ச்சிகளில் காணலாம்.
3. அதே தருணத்தில், பூலோகத்தில் உள்ள மக்கள், புத்தரின் பிரிவால் அழுவதைக்காணலாம். 4. போதிக்கும் நிலையில் உள்ள புத்தரின் அனைத்து சிலைகளிலும் காணப்பட்ட முத்திரை. விரல்களும் , முத்திரையும் சிறப்பாய் செதுக்கப்பட்டிருப்பதை காணலாம்.
5. புத்தவிகாரங்களினுள் காணப்படும் புத்தரின் சிலை.அங்கிருக்கும் ஓவியங்களுக்கு பாதிப்பு வராதவகையில் சிறப்பான விதத்தில் ஒளியமைப்பு செயப்பட்டிருந்தது.
6. விஸ்வகர்மா குகை எனக்கூறப்பட்ட மிகவும் அழகான ஒரு குகையின் வாயிலில் இருந்த புத்தர் சிலை ஒன்று. பாதத்தினருகே புத்தர் அணிந்திருக்கும் ஆடையை செதுக்கியிருப்பதை பாருங்கள்.
7. சாவில்லாத வீட்டிலிருந்து ஒரு தாயை கடுகைக்கொண்டு வரச்சொல்லி, தவிர்க்க முடியாத வாழ்வியல் அங்கம் சாவு என்று உலகுக்கு உணர்த்தும் ஒரு காட்சி.
8. மஹாயனா எனப்படும் காலகட்டங்களில், புத்தர் என்பவர் உருவ வழிபாடில்லாமல், தூண்களாய், ஸ்தூபங்களாயும் உருவகப்படுத்தப்பட்டிருந்தார்.
9. ஹனாயனா எனப்படும் அதற்கு அடுத்து வந்த காலகட்டங்களில், புத்தரின் உருவ வழிபாடு தோன்றியது. இந்த இருவகை விஹாரங்களே, அஜந்தா குகைகள் என்பவை, ஒரு மூச்சில் செதுக்கப்பட்டவையல்ல, பல காலகட்டங்களில் செதுக்கப்படவை என்பதற்கான ஆதாரம்.
4 மறுமொழிகள்:
அருமை அருமை அருமை
நன்றி இம்சை ...
செந்தில்
என்னை மிகவும் கவர்ந்த படம், புத்தர் காட்டும் அந்தச் சின்முத்திரை!
ஒவ்வொரு விரல் அளவும் கூட மிக இயல்பாகச் செதுக்கப்பட்டிருக்கு, பாருங்களேன்!
சுண்டு விரல், மற்றொரு கையில் படும் நேர்த்தி...வெகு அருமை!
நிழல் விழுந்திருக்கே! அது இல்லாமல் படம் பிடிக்க முடியவில்லை போலும்! :-)
குகைகளில் பதம் பிடிப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன் PiT-இல்! :-)
அட இன்று சிலர் பார்வைக்காவது இந்த படங்கள் வந்ததே .. மிகவும் நன்று ..
வாருங்கள் கண்ணபிரான், ஆம் விரல்களின் நுனுக்கத்திற்காகவே அந்த புகைப்படம்.. அதை கவனித்தமைக்கு நன்றி ..
என்ன செய்வது, மிகச்சிறிய குகை, அதனுள் இருக்கும் விளக்குகளின் பொஷிஷன் நம் கையில் இல்லையே, மேலும் குகையின் அளவு நாம் நகர்வதையும் கட்டுப்படுத்தி விடுகின்றது, முடிந்த வரை நிழல் நாம் எடுக்கும் சப்ஜெக்ட்ஐ இருட்டக்கதவரை நல்லது...
PiT-ல பதிவு போடுற அளவுக்கு விஷய ஞானம் இன்னும் இல்லீங்க, நானும் அங்க ஒரு மாணவன் தான் .. :-)
கருத்துரையிடுக