யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

பத்து

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மே 06, 2008
ப்ரியாவின் இந்த Tag , ஒரு பெரிய ப்ளா(தூ)க்கத்தில இருந்து விழித்து வந்து எழுத வச்சிருக்கு.. நன்றி ப்ரியா :-)

இப்போ இவை இல்லாம வாழ முடியாதுன்னு இருக்குற 10 பொருள்களின் ப்ராண்ட். இந்த ப்ராண்ட் மோகம்னு எதுவும் கிடையாது, எதோ கிடைக்குறத வச்சி ஓட்டிகிட்டு இருந்தேன் .. குறிப்பா இதுதான் வேணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்ததில்ல.. சரி இப்போ இங்க இருக்குற நிலைமையே வேற, என்னதான் அப்படி இல்லாம வாழ முடியாதுன்னு யோசிச்சா, இதோ அடுத்து வருது பாருங்க அவைகள் தான் ...


1. ADIDAS - என்கிட்ட இருக்குற பொருள்களிலேயே, இது இல்லாம இப்போ இருக்கவே முடியாதுனா என்னோட Adidas Supernova Shoe தான், என்னோட தட்டைப்பாதாங்களால் வெகு தூரமோ/ நேரமோ ஒடமுடியாம வலியில் துடிச்ச எனக்கு இது ஒரு வரம். கொஞ்சம் இல்லை, ரொம்பவே விலை அதிகம் தானோ-னு யோசிச்சு யோசிச்சு வாங்குன பொருள் ஆனா இப்போ அதுக்கு கொஞ்சமும் வருந்தவே இல்லை :-)

கொசுறு: All Day I Dream About Sports-னு பரவலா சொல்லப்பட்டாலும் இதோட பெயர்காரணம் வேறு.


2. Himalaya Hair Cream - இந்த பொருள் இல்லாம நான் இப்போ இருக்குற நிலமைல வெளியில தலை காட்ட முடியாது :-) , பின்னே இது இல்லைனா, சிங்கத்தோட பிடறி range-க்கு வெளியில போக எனக்கு விருப்பம் இல்லை :-D
கொசுறு: 78 வருடங்களுக்கு முன்பு மதம் பிடித்த யானைகளுக்கு குடுக்கப்பட்ட வேர்களின் ஆராய்ச்சி இந்நிறுவனத்தின் நிறுவனரின் முதல் முயற்சி


3. Honda Civic என்னோட லட்சுமி :-D , இவுங்க இல்லைனா இந்த ஊர்ல முடமாகித்தான் போயிருப்பேன். திசை தெரியா பயணங்களுக்கு அம்மணி தர்ற வேகமும் சரி, உறுமலும் சரி, அட்டகாசம்
கொசுறு: இந்நிறுவனத்தின் கார் தான் அமெரிக்காவில் தயாரான முதல் ஜப்பான் கார்.
4.Taco Bell என்னோட உணவுப்பழக்கங்களுக்கு ஈடு குடுத்து பன், இலை தழை தவிர ருசியான, வயிறார Bean Chalupa (சாப்பாடு) போடுற அன்னமிட்ட தெய்வம் :-) , எந்த நேரம் போனாலும் (எங்க ஊரைப்போல) சுடச்சுட சாப்பாடு கிடைக்குதுன சும்மாவா
கொசுறு: Chalupa என்றால் "படகு" ஸ்பானிஷில்-இல் ஒரு அர்த்தம், படகு போன்ற உருவில் அந்த fried bread இருப்பதனால் அதற்கு இந்த பெயர்.

5. சண்ட, ATM-னு மொக்க படங்களுக்கு நடுவே, மனதைத்தொடுறதுல இருந்து விறுவிறுப்பா, சட்டுன்னு கண்ணை நனைக்கும், பார்த்ததும் சந்தோஷம் பொங்கும் என பல நாட்டுப்படங்களுக்கு ஒரு திறவுகோல். ஆனந்தவிகடனில் செழியனின் உலக சினிமா படித்து விட்டு, Parris-ல தேடி அலையுறதும் இப்போ ரொம்ப எளிதாயிடிச்சு.
கொசுறு: சென்ற வருடம் தனது 1 Billion-th குறுந்தகடை பயனாளர்களுக்கு அனுப்பியது


6. ரோஷகுல்லா - இதுக்குனே ஒரு பெங்களிப்பெண்ணை கட்டிக்கலாம், 2003-ல பிடிச்ச பைத்தியம், தினமும் பத்து ரூபாய்க்கு 5/6 வாங்கி சாப்பிட்டு பழகிப்போய், சென்னை-ல பிரிஞ்ச இந்த காதலிய, இங்கிருக்குற இந்தியன் கடைகள்ள கண்டுகொண்டேன். தினம் இரண்டுனு, இரவு சாப்பாடு முடிச்சதும் பொறுமையா ருசிக்கும் அந்த நொடி.. அஹா !!!!
கொசுறு: ரோஷகுல்லா உருவானது மேற்கு வங்கத்தில் அல்ல, ஒரிசாவில் என்பது தெரியுமா ?

7. காபி சாப்பிடாத எனக்கு இந்த இடம் பிடிச்சதுக்கான காரணம் இங்க கிடைக்குற Bannana Nut Cake-உம் தனிமையும் தான். ஒரு காபி கப்போட அப்படியே ஒரு புத்தகத்தை எடுத்துகிட்டு ஓரத்துல போய் உட்காந்தா போதும், யாரும் எதுவும் கேட்க்காம எவ்வளவு நேரம் வேணாலும் உட்கார்ந்திருக்கலாம்.
கொசுறு: இவர்கள் முதலில் வைக்க நினைத்த பெயர் Pequod, ஆனால் Pee-quod என சொல்லி விட்டால் அதை குடிக்கப்போவது யார் என நினைத்துதான் பெயரை மாற்றி விட்டார்கள்.
8. Cadbury's Milk Chocolate with Roasted Almonds , ரொம்ப சந்தோஷமா இருக்குற நேரங்களும் சரி, கோபம், வருத்தமான நேரங்களும் சரி, இது ஒரு Stress Buster எனக்கு. தேவை இல்லாம என்னோட கோபத்தையும், வருத்தத்தையும் யார் கிட்டயும் காமிக்கத்தேவை இல்லாம, ஒரு பெரிய சாக்லடே பார் வாங்கிட்டு தனிய எங்கயாவது போய் சாப்ட்டு முடிக்கயில ஒரு நிலையில வந்து நின்னிருப்பேன் :-)
கொசுறு: 1905-இல் இருந்து ஒரு மில்க் சாக்கலேடில் பாரில் 1.5 கப் பால் என்ற அளவு தொடர்கின்றது ..
9. பெப்சி, கோக் மட்டுமில்லாம அவுங்களோட எல்லா பொருள்களையும் புறக்கணிப்புனு பேர்ல குடிக்க மாட்ட அப்போ இந்த ஊர்ல என்னதாண்ட குடிப்பேன்னு திட்டுன நண்பர்களால தேர்ந்தெடுத்த பாணம் :-)

10. மெக்சிக்கோ சலூப்பா போர் அடிச்ச சமயம் கைகுடுக்கும் மற்றொரு தலைவர் இவர் .. இவரின் Veggie Burgers ம்ம்ம்ம்ம்ம்ம் ....
கொசுறு: Burger King was the first fast-food restaurant to offer an enclosed and air-conditioned seating area
என்ன ஹீரோ , இந்த Tag-ஐ எடுத்துக்குரீங்களா ?

15 மறுமொழிகள்:

jeevagv சொன்னது… @ செவ்வாய், மே 06, 2008 6:19:00 முற்பகல்

பத்திலே பாதி சாப்பாடு விஷயங்களே இடம் பிடிச்சிருக்கு, வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
:-)

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், மே 06, 2008 6:44:00 முற்பகல்

ஹாஹாஹா ... இதில்லாம வாழ முடியாதுன்னு சொல்லிட்டாங்கள்ள ஒரு வேலை அதுனலதானோ ? ;-)

Maayaa சொன்னது… @ செவ்வாய், மே 06, 2008 9:33:00 பிற்பகல்

supperr.. adhu sari. neenga eppa u.s vandheenga!!
unmayavee yathreenganaa irukaeeengale..

naan romba varusham KY la irundhen..ippo illa!!

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், மே 06, 2008 9:47:00 பிற்பகல்

:-) .. நன்றி பிரியா , நீங்க KY Louisville-ல இருந்தீங்கன்னு நியாபகம் சரியா ?, அப்போ தான் உங்க "திண்ணை அரட்டை" மூலமா உங்க Blog அறிமுகமாச்சு.. அப்போ நான் Cincinati-ல இருந்தேன் ..

Maayaa சொன்னது… @ செவ்வாய், மே 06, 2008 9:58:00 பிற்பகல்

ayaa saami...
naanum chalupa fan dhaan..aduvum taco bell.. udamba paathukunga..warning.. naan 15 lb weight potten..aniyathukkuun unhealthy..

ippo arave vittuten!!

Maayaa சொன்னது… @ செவ்வாய், மே 06, 2008 9:59:00 பிற்பகல்

aaahaa.. neenga india photos podradha paathu..kolkattala irukeengannu nenachene

naan lexingtonla irundhen!!

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், மே 06, 2008 10:11:00 பிற்பகல்

>> aniyathukkuun unhealthy <<

அஹா.. இப்படி சொல்லிட்டீங்களே .. இனி பார்த்து தான் சாப்பிடனும் போல :-( (என்னதாங்க சாப்டுறது அப்போ இந்த ஊர்ல :-(

Cincinatti-ல கொஞ்ச நாள் இருந்துட்டு, திருப்பி இந்தியா போய் புவனேஷ்வர், கொல்கத்தா, டெல்லி, இமயமலை, அஜந்தா, எல்லோரானு ஒரு ரவுண்ட் போட்டுட்டு அடுத்த சில மாதங்களுக்கு இங்க வாசம்...

பெயரில்லா சொன்னது… @ வியாழன், மே 22, 2008 11:12:00 முற்பகல்

Indha tag pannina makkal la enakku therinju neenga dhaan HONDA car pathi eludhina mudhal NRI:)

வேளராசி சொன்னது… @ வெள்ளி, மே 30, 2008 3:58:00 பிற்பகல்

நம்ம ஊர் சரக்கு ஒன்னும் இதுல போடவே இல்லையே தலைவா?

யாத்ரீகன் சொன்னது… @ சனி, மே 31, 2008 2:12:00 முற்பகல்

@ வேளராசி:
ஹிமாலயாவும் , ஹால்டிராம் நம்மூரு மேட்டர் இல்லையா ? Priya ஊறுகாயை விட்டுட்டேன் .. ஹிஹிஹி ஒரே சாப்பாட்டு விஷயமா இருக்குன்னு சொல்லிராதீங்க :-D ..

உங்க பேர் வித்தியாசமா இருக்கே ..

யாத்ரீகன் சொன்னது… @ சனி, மே 31, 2008 2:14:00 முற்பகல்

@prabukarthik:

பின்னே ஏன் லட்ச்சுமிய பத்தி எழுதாமலா

தனசேகர் சொன்னது… @ சனி, ஜூன் 07, 2008 11:22:00 பிற்பகல்

///பெப்சி, கோக் மட்டுமில்லாம அவுங்களோட எல்லா பொருள்களையும் புறக்கணிப்புனு பேர்ல குடிக்க மாட்ட அப்போ இந்த ஊர்ல என்னதாண்ட குடிப்பேன்னு திட்டுன நண்பர்களால தேர்ந்தெடுத்த பாணம் ///

நானும் முடிந்த அளவு தொடாமல் இருக்க முயற்சி செய்தீன் ... ரொம்ப கடினமாக இருக்கிறது :( tropicana , vitamin water .. என எது எடுத்தாலும் அவர்கள் தான் ! இனி நீங்கள் சொன்ன v8 முயற்சி செய்கிறேன் !

ஜி சொன்னது… @ வியாழன், ஜூன் 26, 2008 9:31:00 பிற்பகல்

:)))

Taco Bell Chalupa... antha breadye fulla cheesenaala pannathunnu kelvi patten... Bean Buritto Chalupa kku parava illainu sonnaanga :)))

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:45:00 முற்பகல்

சரிதான் தனசேகர் .. சில நேரங்களில் எது அவர்களின் தயாரிப்பு இல்லைனு சொல்ற அளவுக்கு இருக்கு .. நல்ல செயல் தனசேகர் தொடருங்கள் ..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:55:00 முற்பகல்

அஹா முழு Cheese-ஆஹ் .. சுத்தம் :-((

கருத்துரையிடுக