யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

Whatzup Bro

Published by யாத்ரீகன் under , , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
                     ஊருக்கு செல்லும் முன் மூடிய Netflix கணக்கை மீண்டும் திறந்தபின் கிடைத்த முதல் குறுந்தட்டு “அந்த நாள்”. எத்தனையோ பேர் சொல்லக்கேட்டிருந்தாலும், நம்பிக்கையில்லாமல் பார்க்கத்துவங்கினேன், அட்டகாசம். எத்தனையோ முறை பலர் துவைத்து காயப்போட்டுவிட்ட விமர்சனமென்பதால் புதிதாய் சொல்ல ஏதுமில்லை, ஆனால் கவனத்தை சிதறடிக்காத திரைக்கதை மட்டுமல்ல, அந்தநாட்களில் மனிதர்களின் வாழ்கை நடைமுறை, போலிசாரின் உடை, மற்றவைகள் என மீண்டும் கவனிக்கவே மற்றோரு முறை பார்த்துக்கொண்டிருந்தேன். 

    இத்தனை நடுவிலும் படத்தில் சடாரென மனதில் ஒரு மின்னல்வெட்டு அந்த அழகான உதடுகள் :-) , யாரிது ?




முணுமுணுப்பு

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
...
...

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிப்பாயே
விழி தொடும் திசையே
உடல் தொடும் உடையே
விரல் தொடும் கணையே
இணைவாயே






பி.கு.:  அந்த படத்துக்கும் என் முணுமுணுப்புக்கும் சம்பந்தமில்லை. இப்பொழுதுதான் முதல் முறை கேட்கிறேன் ;-)

6 மறுமொழிகள்:

Jayaprakash Sampath சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 11, 2009 11:48:00 AM

//அந்த நாள்// அவங்க பெயர் சூர்யகலா.

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 11, 2009 12:02:00 PM

கலக்கிட்டீங ப்ரகாஷ்... பண்டரிபாய் பேர் மட்டும்தான் titles-ல போட்ட மாதிரி இருந்தது, படத்தை பற்றிய casting இணையத்திலும் இவுங்க பேர் கிடைக்கவே இல்லை... இனி இவுங்க வேற என்ன படம் நடிச்சிருக்காங்கன்னு தேடிறவேண்டியதுதான் ;-) ஹிஹி....

Jayaprakash Sampath சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 11, 2009 12:32:00 PM

சான்ஸ் இல்லை. அந்த வேடத்துக்குப் பிறகு, அது போலப் பெயர் சொல்லும் வேடங்களில் அவர் நடித்ததில்லை. துண்டு துக்கடா வேடங்களுக்குப் பிறகு, கடைசியாக, பாக்ய்ராஜின் சுந்தர காண்டத்தில் பார்த்தேன். ( பாக்யராஜுக்குப் பெண்களைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டுவாரே ஒரு பாட்டி, அது அவரேதான்.)... எப்படி இருந்த இவர், இப்படி ஆயிட்டாரே என்கிற ரீதியில், குமுதத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஸ்டோரி படித்தேன்.

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 11, 2009 12:37:00 PM

ஓஓ :-(((((

Muruganandan M.K. சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 25, 2009 10:36:00 PM

பார்த்ததில்லை. உங்கள் பதிவைப் படித்தபின் தேடிப் பாரக்க வேண்டும் போலிருக்கிறது

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 4:11:00 AM

@டொக்டர்
பழைய படங்களிலும் புதிய முயற்சிகள் எப்படி சுவாரசியமாய் இருக்குதுனு கட்டாயம் இரசிக்கக்கூடும்..

கருத்துரையிடுக