முக்கோணம்
Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 19, 2005
மற்றொரு நாள் கழிந்தது, அலுவலகம் சென்று மின்னஞ்சல்கள் படித்து, வலைப்பூக்கள் மேய்ந்து, கொஞ்சம் வேலைப்பார்த்ததுதான் இன்றைய அலுவலக நாட்குறிப்பு.
ஒருவழியாக, தம்பிக்கு கப்பற் (மரைன்) பொறியியற்ப்படிப்பை எடுக்க அப்பா சம்மதம் தெரிவித்து விட்டார் நேற்று. இனி, முதல் பருவத்திற்கு 1.5 இலட்சம் ஒரே தவணையில் கட்ட வேண்டுமாம். அதில் சிறிதும் நேரம் தரமாட்டார்களாம்.இங்கே இருந்து உடனடியாக பணத்தை அனுப்ப பல வழிகள் பார்த்து, இன்று அனுப்பித்து விட்டேன்.
ஒழுங்காக முதலிலேயே அனுப்பித்து இருக்க வேண்டும், ம்ஹம்..., தேவை இல்லாமல் கடைசி நேரத்து பதற்றம் இல்லாமல் இருந்த்து இருக்கும். இனி, நேரத்துக்கு கிடைத்து எவ்வித தடங்களும் இன்றி, அவன் சேர வேண்டும்.
நினைத்தை படிக்க அவனால் மட்டுமாவது முடிந்ததை நினைத்து, அதற்கு நான் சிறிது உதவியாக உள்ளேன் என்று நினைக்கையில் மனநிறைவுடன் சிறிது பெருமூச்சும் வந்தது.
உதவி தேவைப்படும் போதுதானே நட்பு, சிறிதே அறிமுகமானவர்கள் முதற்க்கொண்டு, உயிர் நண்பன் வரை, முடிந்ததாலான உதவி செய்ய முற்ப்பட்டது நல்ல நண்பர்கள் சேர்த்துளேன் என்று ஒரு மகிழ்ச்சி. அத்துடன், எதிர்ப்பார்த்த நட்பிடமிறிந்து, தவிர்த்தலே கிடைத்தது.
சில நேரங்களில், சில மனிதர்கள் !!!
உடனிருக்கும் அறை நண்பருடன், உரையாடுகையில் சொல்கிறார், "ராகுல் திராவிட், முதல் பார்ப்பணர் அற்ற, தெந்நிந்திய அணித்தலைவர்" என, தகவல் சரியா என்பது பிரச்சனை அல்ல, இப்படி ஒர் பார்வையும், கருத்துப் தேவைதானா ?. இவர், இயக்குனர் ஷங்கரின் படம் பார்க்காததற்க்கு கூறும் காரணம், அதில் பார்ப்பணர்-களே நல்லவர்கள் என காமிப்பதாலாம். காதலன் படத்தில் எந்த கதாபாத்திரம் பார்ப்பணர் ?, முதல்வனில் கதாநாயகனைவிட நல்ல கதாபாத்திரம் உண்டா, இருந்தால் அதில் பார்ப்பணர் கதாபாத்திரம் இருந்ததாக நினைவு இல்லை, பாய்ஸ் படத்திலும் இத்தகைய பாத்திரம் இல்லை, அதில் இருந்தெல்லாம் கருத்துகளை எடுக்கவில்லை, என்ன ஒரு சிந்தனை, படித்த மனிதரிடம்.
சரி, எல்லா செய்திகளிலும் மூன்று கோணங்கள் உண்டு என சொல்வார்ககள், சரியான கோணம், தவறான கோணம், என் கோணம் என்று, ஒருவேளை அதுதானோ இது ?!
இந்த நண்பர் ஒரு முதிர்கண்ணண், ஆம் அகவை 29 ஆகியும் திருமணம் தகையவில்லை என்ற கோபமும், வெறுப்பும் இவர் பேச்சில் தெரிக்கும். நன்று படித்தவர், மேல்நாட்டில் கடந்த 4 வருடங்களாக இருக்கிறார், கை நிறைய சம்பளம், தாய்நாட்டில் இருக்கும் வீட்டிலும் தேவைகள் இல்லை, என நிறைவான வாழ்க்கை, இருந்தும், அன்று பேசும் போது, என்ன இருந்து என்ன, கல்யாணம் ஆகவில்லையே, என்ன வாழ்க்கை என்றார். திருமணம்தான் வாழ்க்கையின் கடைசி மோட்சமா ? ஒரு மனிதன் மகிழ்வுடன், மனநிறைவுடன் வாழ திருமணம் முக்கியம் தானா ? இல்லை என்றே தோணுகிறது. மனதுக்குப் பிடித்ததை செய்திட சுதந்திரம், அர்த்தமுள்ள வாழ்வு, இவை தானே மனநிறைவுடன் வாழத்தேவை , இதில் திருமணம் எங்கே வந்தது ??

10 மறுமொழிகள்:
தமிழ்ப்பின்னூட்டதில் இருந்த பிழையினால் பதியத்தவறிய பின்னூட்டம்
-----------------------------------
முக்கோணம் நல்ல தலைப்பு. முதல் கோணம் உதவி செய்வதைப் பற்றியது. உதவி செய்வதில் உள்ள ஆத்ம திருப்தி வேறு எதிலும் இல்லை. ஆனால் சில சமயங்களில் பிறருக்கு உதவுவதாலேயே நமக்கு பிரச்சனைகளும் மன உளைச்சளுக்கும் ஆளாக நேரிடும்.
மூன்றாவது கோணம்.. தேவை என்பது, நிறைவு என்பது மனதினைப் பொருத்தது. திருமணம் ஆகவில்லை என்று ஒருவர் புலம்புவது அவரது தேவையின் அவசியத்தைக் குறிக்கிறது. அதற்காக திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று அவருக்கு வாக்காலத்து வாங்கவில்லை. சிறு வயதில் எப்படியும் நல்ல வேலையில் சேர வேண்டும் என்று படிப்பை தேர்ந்தெடுக்கிறோம். நான் எனது அறிவை வளர்த்துக் கொள்ளவே படிக்கிறேன் என்று இப்பொழுது ஒருவனும் சொல்வதில்லை. படிப்பே வேலையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. வேலை சேர்ந்த ஒருவனுக்கு நிறைவு அதோடு முற்றுப் பெறவில்லை. அடுத்தது கல்யாணம். அங்கேயாவது நிற்கிறது என்றால் இல்லை. குழந்தை அல்லது வேறு ஏதேனும் ஒன்று அவனை அடுத்தக் கட்டத்திற்காக ஏங்க வைக்கிறது. இவ்வளவு ஏன் சந்தோஷமாக ஒருவன் இருக்கும் போது கூட, அட இந்த சந்தோஷம் எவ்வளவு நேரம் நீடிக்கப் போகிறது என்ற கவலை, தற்பொழுதைய சந்தோஷத்தை சாகடித்து விடுகிறது. ஏனேன்றால் சிறந்த ஒரு முகப் படுத்தும் மனப் பயிற்சி பலருக்கு சரியாக தெரிவதில்லை.
அன்புடன்
கங்கா
@
http://zendaily.blogspot.com/
செந்தில் என் பின்னுட்டக் கருத்தினைப் பதிவு செய்தமைக்கு நன்றி
nalla tamil..nalla sindhanai..nall karuthu..
namma sandhosham namma kaila irukkunnu neriya per nenakarathu illa.. vera engairundho varapoguthunnu nenakradhunaala thaan kalyanam venumnnu nenikaraanga..
namma manasukku naame irundha nichaama podhum..pirar varannum avasiyam illa..
but, vandhu innum sandhosham / anbu / nimmadhi ivai yellam kootinaal nalla dhaan irukkum..
//...திருமணம்தான் வாழ்க்கையின் கடைசி மோட்சமா ? ஒரு மனிதன் மகிழ்வுடன், மனநிறைவுடன் வாழ திருமணம் முக்கியம் தானா ? ...//
அதானே, ஏன்... எதுக்கு... இல்லாட்டி என்ன!
கல்யாணம் ஆன எல்லாரும் கேட்கும் கேள்வி இதுதான்!!!
;-)))
வாங்க செந்தில். வந்து இந்த தமிழ்மணத்துலே கலந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.
உங்க பதிவுகளைப் பார்த்தேன். நல்ல தெளிவான சிந்தனை இருக்கு.
இப்ப இருக்கற 'இளைஞர்கள்'எல்லாம் வெளுத்துக் கட்டுறீங்களேப்பா!!!!
நல்லா இருங்க.
என்றும் அன்புடன்,
துளசி.
// ஒரு மனிதன் மகிழ்வுடன், மனநிறைவுடன் வாழ திருமணம் முக்கியம் தானா ? இல்லை என்றே தோணுகிறது. மனதுக்குப் பிடித்ததை செய்திட சுதந்திரம், அர்த்தமுள்ள வாழ்வு, இவை தானே மனநிறைவுடன் வாழத்தேவை , இதில் திருமணம் எங்கே வந்தது ?? //
மனிதர்கள் சமூக விலங்குகள் செந்தில்.. ஏதாவது ஒரு குறிக்கோளோடு ஒரு பணியில் முழுமூச்சில் ஈடுபட்டால் (சிலருக்கு) திருமணம் தேவைப்படாமல் இருக்கலாம்... ஆனால் திருமணம் செய்துகொண்டும் சுதந்திரமாக தாம் செய்வதில் ஈடுபடுபவரும் இருக்கத்தான் செய்வர். எல்லாராலும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் அளவு எதிலும் ஈடுபட முடியாது... மீண்டும் வாழ்க்கை என்பது திருமணமும் சேர்ந்த்துதான்.
நண்பர்களுடன் சேர்ந்து பொழுது போக்கும் இளமைப்பருவத்தில் ஒன்றும் தெரியாது. ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராய் குடும்பஸ்தர்கள் ஆவர். நண்பர்கள் வட்டம் இருந்தாலும் "அதே" மாதிரி இருக்க முடியாது... துணைக்கு ஆள் இல்லை... எல்லாரும் அவரவர் குடும்பத்தில் பிஸியாக இருக்கிறார்கள்.... அலுவலகம் முடிந்து என்ன செய்ய... செய்தாலும் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது... எவ்வளவு நாள் டிவி, டிவிடி, கம்யூட்டர், சாட் என்று பொழுதுபோக்க முடியும்... தினமும் வெளியே (தனியாக) அதுவும் சின்டி மாதிரி குற்றூரில் என்ன செய்ய...
அடுத்து என்ன என்ற கேள்வி வரும்... அங்கேதான் வருகிறது திருமணம்... தனக்கு என்று ஒரு துணை தேவை... மேலும் சந்ததி விருத்தி என்பது உயிர் வாழ்தலின் ஆதார செயல்... இவை இல்லாத அர்த்தமுள்ள செயல்கள் என்ன என்று அடுக்கடுக்காக உள்ளே சென்று யோசித்தால் அது முடியும் இடத்தில் இருக்கிறது உங்கள் கேள்விக்கான பதில்
நன்றி Prabz நீங்களும் தமிழில் எழுத கீழ்கண்ட வலைத்தளத்தைப்பாருங்கள்...
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
நன்றி ப்ரியா..
நான் சொல்ல வந்த கருத்தில், நீங்கள் குறிப்பிட்ட காரணமும் என் சிந்தனையை தூண்டிவிட்டதில் ஒன்று..
>>kootinaal nalla dhaan irukkum
நல்லாத்தான் இருக்கும் :-D
என்ன ஞானபீடம்...
நீங்க கேட்குறீங்களா.. இல்லை பாவப்படுறீங்களா ? :-D
ஊக்கத்துக்கு நன்றி துளசி.. :-)
கருத்துரையிடுக