யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஜென்ம சாபல்யம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், செப்டம்பர் 20, 2005
நாராயணன் அவர்களின் இந்த வலைப்பதிவில் எழுதியிருந்த கவிதை(?)யைப்பார்த்ததும்... மனதில் பளிச்சென தோன்றியது....

நாராயணன் சார்,... உங்க மேல தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை.. மனசுல பட்டது பதிச்சிட்டேன்.. :-)

தவறு... தவறு.....

கடும் புயல் மழையாயினும்..

பசிப்பிணி கொண்ட வறட்சியாயினும்...
காஷ்மீர் முதல் குமரி வரை..
மும்பாய் முதல் கல்கத்தவரை..
வடக்கு, தெற்கு...
கிழக்கு,மேற்கு,ஜாதி,மத,மொழி,நிற பேதமின்றி..
சுனாமியன்று..கை கோர்த்து நின்றோமே

அதுதான் வேற்றுமையில் ஒற்றுமையாம்...
மேல்நாட்டினர் தங்கள் தொலைக்காட்சியில் சொன்னார்கள்...

(ஹீம்.. நம்மிடம் உள்ள நல்ல விஷயத்தை மேல்நாட்டினர் மூலம் கேட்டால்தான் நம் ஜென்ம சாபல்யம் அடைந்திடுவோமா ???)


5 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, செப்டம்பர் 23, 2005 12:30:00 AM

hi

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, செப்டம்பர் 23, 2005 1:14:00 AM

வணக்கம் Anonymous...

என்ன பின்னூட்டம் இட மறந்துட்டீங்களா ?

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 10, 2005 8:02:00 AM

நன்றி கலை...

J S Gnanasekar சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 10:49:00 AM

உங்களுக்கு ஆதரவாக எனது கருத்து,

http://mentalcentral.blogspot.com/2005/09/unity-in-diversity.html

யாத்ரீகன் சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 10:08:00 PM

>> "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது >> மொழிக்காகச் சொல்லப்பட்டது

சரியாகச் சொன்னீர்கள்....

ஆனால் வறுமை-வளமை நம் நாட்டிலேயே உண்டல்லவா... சிங்காரச்சென்னையிலேயே அதைக்காணலாம்..

நான் நாராயணன் அவர்களின் அந்த கவிதையை எதிர்த்ததற்கு காரணம்.. நாட்டில் உள்ள நல்ல விஷயங்களை ஆராய்ந்து முன்னேராமல் , குறைகளை சுட்டிக்காமித்துக்கொண்டு மட்டுமிருப்பதாய் தோன்றியது...

கருத்துரையிடுக