நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - பாகம் 2
Published by யாத்ரீகன் under on புதன், ஜூலை 26, 2006
இந்தியாவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து, நாட்டின் மருத்துவத்துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவரைப்பற்றி முன்னோட்டத்தை சென்ற பதிவில் பார்த்தீர்கள், கண்டுபிடித்தீர்களா ?
புதிர்கள் தொடர்கின்றன....
இவர் மருத்துவராக தன் வாழ்வை தொடங்கியபோது இந்தியாவிலேயே மொத்தம் 8 கண் மருத்துவர்களுக்கு மேல் இல்லை. அச்சமயம் சுமார் 20 மில்லியன் மக்கள் கண் படலத்தால் பார்வையற்று இருந்தனர், இது நம் நாட்டில் சமச்சீரற்ற உணவு மற்றும் மரபணு காரணமாய் இத்தகைய நிலை இருந்தது.
இன்று இவரின் மருத்துவமனை, உலகத்தின் மிகப்பெரும் தனியாள் கண் அறுவைசிகிச்சை சேவை தரும் இடம். இவரினால் ஆர்வமூட்டப்பட்ட இவரின் குடும்பத்தினர், சுமார் 1,488 கிராமங்களை கண்டு கண் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளனர்.
எல்லாவற்றிலும் ஆச்சரியமானது, இந்த மருத்துவமனை அரசாங்கத்திடமிருந்து ஒரு பைசா உதவியும் பெருவதில்லை, மாறாக அவை சுயசார்புடயவைகளாக இயங்கி வருகின்றது.
இம்மாமனிதரிடம் மற்றுமொரு வியக்க வைக்கும் விஷயம், தான் வாழ்ந்த வரை மருத்துவமனையின் வருமானத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளாமல், தன் ஓய்வூதியத்திலேயே வாழ்ந்தது. எத்தகைய மன உறுதி, அதை வாழ்நாள் முழுதும் செயல்படுத்திய விதம்.
இத்தகைய குறைந்த/இலவச சேவையை எப்படி தர முடிகின்றது இவரால் என்று கேள்வி எழுகின்றதல்லவா ? இதோ இப்படித்தான்..
கண்படல அறுவைசிகிச்சை செய்யப்படும் முறையை சிறிது மாற்றி அமைத்தன் மூலம் அவரால் இதை சாதிக்க முடிந்தது. ஒரு மருத்துவக்குழுவுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், அறுவைசிகிச்சையின் 70 சதவிகித வேலையை அவர்கள் செய்துவிட, மருத்துவர்கள் அதிகமான சிகிச்சைகள் செய்ய முடிந்தது.
இதைவிட மிக முக்கியமானதொரு மாற்றம், அந்த மருத்துவமனை தனக்கு தேவையான "Intra-Ocular" லென்ஸ்களையும், கண் சிகிச்சைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறைந்த விலையிலும், மொத்த உற்பத்தி செய்துகொள்ளதொடங்கின.
இத்தகைய குறைந்த செலவுத்திறன் கொண்ட உற்பத்தியை, புதிய கட்டண திட்டங்களுடன் சேர்க்கும்போது, அதன் பலன் எல்லா வகையான மக்களுக்கும் கிடைக்கின்றது.
இவர்களின் "Aurolab" என பெயரிடப்பட்ட உற்பத்திக்கூடத்தில் உருவான பொருட்கள் உலகெங்கிலும் 120 நாடுகளில் கண் மருத்துவர்களாலும், மருத்துவமனைகளாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆக குறைந்த செலவு என்ற பெயரில் தரம் ஒன்றும் குறைவதில்லை, மாறாக பெரிதாக கூடியே உள்ளது. உலகெங்கும் உள்ள உற்பத்தியில், இங்கே மட்டுமே 10 சதவிகித தேவை நிறைவேற்றப்படுகின்றது என்பதை படிக்கும்போது, இந்த சின்ன ஊரிலா என்று நம்ப முடியவில்லை.
இதன் மூலம் முதலீட்டின் மேல் 30 சதவிகித வருவாய் பெருகின்றனர், மருத்துவர் தென் தமிழகமெங்கும் 5 கண் மருத்துவமனைகள் துவங்குகின்றார்.
இந்த மருத்துவமனையின் வெற்றியை, அவை பணத்தால் அவை ஈட்டி வரும் இலாபத்தை கொண்டு மட்டும் முழுதாய் கூறிவிட இயலாது.
இத்தனை வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் பின்னே நிற்பது நரைத்த முடியுடனும், இயல்பை மாறியுள்ள கைவிரல்களும் கொண்ட ஒரு 88 வயது இளைஞர்.
யார் இந்த மாமனிதர் - சென்ற பதிவின் தொடர்ச்சி

14 மறுமொழிகள்:
படிக்க ஆரம்பிக்கும் போதே மதுரை அரவிந்த் மருத்துவமனையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன்...
கூகிளில் தேடி அவர்கள் வலைத்தளத்தையும் பார்த்துவிட்டேன்..
அந்த மாமனிதரின் மறைவு இன்று தான் அறிந்தேன்...
அருமையான பணி..தொடருங்கள்...
/*Aurolab*/
Clue is fail enough...it is in Madurai...should be Arvind :)
My mother got operated by this great man for cataract surgery. I feel sad to know that he passed away recently. He is a great man indeed.
R.Venkataraman.
எல்லா ஊடகங்களிலும் சினிமா பிரபலங்களை பற்றி மட்டுமே படித்து வருகிறோம்...
சினிமா பிரபலங்கள் ஏதோ சமுதாயத் தொண்டு ஆற்றியது போல் அவர்களுக்கு சிலை வைப்போம்..
ஆனால் இது போன்ற மேன்மக்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் தான் இருக்கிறோம்..
அவரைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள ஆவல்.. முடிந்தால் எங்களால் ஆன சிறு பண உதவி (அவர்கள் விரும்பினால்) செய்யவும் ஆவல்... முழு தகவல்களை தெரிவிக்கவும். நன்றி
யாத்திரீகன்,
யாருன்னு சொன்னாதான் உங்க பதிவை படிச்சதா அர்த்தமா?
நான் இந்த தொடரை படிச்சேன் ஆனால் அந்த மனிதர் யாருன்னு தெரியலை.
ஆமா யாரு?
அன்புடன்
தம்பி
Dr.G. Venkataswamy,founder of Arvind Eye Hospital ???
நல்ல பதிவு.
@கப்பிப்பய:
ஹீம்.... பட படவெனதான் ஆராய்ஞ்சுட்டீங்க.. :-)
@டண்டணக்கா:
:-) கரெக்டா பிடிக்கிறீங்கப்பா க்ளூவை..
@வெங்கடராமன்:
மிகவும் வருத்தமான செய்திதான் :-(
@நக்கீரன்:
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நக்கீரன்.. ஆம் நீங்கள் சொல்வது மிகச்சரி, அடுத்த தலைமுறையான குழந்தைகளும், நிறைய இளைஞர்களும் தங்கள் வழிகாட்டியாக யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ பயமாய்த்தான் இருக்கின்றது..( இது பெரும்பான்மையான சராசரியான குழந்தைகள் பற்றிய கருத்து)
அந்த மருத்துவக்குழுவினர் பண உதவியை விரும்புவார்களா என்று சந்தேகம்தான்... சரியாய்த்தெரியவில்லை.. விவரங்கள் தருகின்றேன் .. பார்போம்..
@தம்பி:
தம்பினதும் பேரு வைச்சதும் கோபக்காரரா இருக்கீங்களே.. :-) (கண்ணை உருட்டி உருட்டி பேசுவீங்களா ;-)
மறுமொழிகள் இல்லாததனால் அண்மையில் பகுதியில் தொகுக்கப்படுவதில்லை, பலர் இதை படிக்க இயலாமல் போய்விடுமோ என்ற வழக்கமான பயம்.. வழக்கமான கட்டுரையாய் இருந்தால் கவலைப்பட்டிருக்கபோவதில்லை.. இந்த மனிதர் பற்றி பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதாலே இந்த பதிவு, அதான்.. :-)
@சுதர்சன்:
பாஸு, நீங்க கட்டாயம் வருவீங்கனு தெரியும் .. டாங்க்ஸ்பா.. :-)
@சோம்பேறிப்பையன்:
இரண்டெழுத்தில் மறுமொழி.. உங்க பெயர் சரிதான் ;-) (சும்மா தமாசு..!!)
கருத்துரையிடுக