யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 25, 2006

1918 அக்டோபர் 1, தூத்துக்குடியில் வடமலபுரம் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது....

அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் ஏதும் இல்லை, ஆனாலும் காலையில் எருமைமாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச்சென்றுவிட்டு, பின்னர் மூன்று மைல்கள் நடந்து பள்ளிக்கூடம் சென்று படிக்கத்துவங்கினான் அந்தச்சிறுவன்.

பல வருடங்களுக்குப்பிறகு, அதே கிராமத்தில் பள்ளிக்கூடம் தொடங்கிய தருணத்தில், அங்கே பென்சிலோ, பேப்பரோ.. ஏன் சிலேட் கூட அவர்களிடமில்லை. ஆனாலும், ஆற்று மணலெடுத்து தரையில் பரப்பி, விரல்களால் அதிலெழுதி பழகத்தொடங்கினான் அந்தச்சிறுவன்.

1944, கடுமையான உழைப்பின் பயனாக, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலிருந்து மருத்துவராக வெளிவருகின்றார். வெளிவந்ததும், இந்திய இராணுவத்தின் மருத்துவத்துறையில் "Obstetrics" பணிபுரிய சேர்கின்றார்.

வாழ்வின் முக்கியமான இந்த கட்டத்தில், வாழ்வின் மாபெரும் முரண்பாடுகள் "Rheumatoid Arthritis" என்று அவருக்கு அடுத்த தடைக்கல்லாக விழுகின்றது. (நல்ல படிப்பு இருந்திட்ட நேரம், வேலை செய்ய முடியாமற் போனது) இந்த நோய் அவரின் கைகளை தாக்க, கிட்டதிட்ட இரண்டு வருடங்கள் மருத்துவமனையிலேயே இருக்கின்றார். பின்னர் இதனால் கை விரல்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன, தங்களின் இயல்பான உருவத்தை இழக்கின்றன, நான்கே வருடங்களில் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அன்று தொடங்கிய வலி அவரை இறுதி வரை விட்டுப்பிரியவே இல்லை..

இத்தகைய நிலையையும் மீறி, மருத்துவக்கல்லூரிக்கு திரும்பி "Ophthalmology"-இல் பட்டம் வாங்கினார். தன் இயல்பை மீறிய கைவிரல்களுக்கு ஏற்றார்போல் தானே மருத்துவக் கருவிகளை உருவாக்கிக்கொண்டு, அதனால் உண்டாகும் கடும் வலியையும் பொருட்படுத்தாமல் கடும் மன-உறுதியுடனும், உழைப்புடனும் கண்படலம் (Cataract ) அறுவைசிகிச்சை பயிற்சி செய்யத்தொடங்கினார். ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 100 அறுவைசிகிச்சைகள் செய்ய அந்த புதிய கருவிகள் அவருக்கு உதவத்தொடங்கின. காலப்போக்கில்

அவர் தனியொரு ஆளாக, 1 இலட்சம் கண் அறுவைசிகிச்சைகள் செய்து, நாட்டின் வியக்கத்தக்க கண்படல அறுவைசிகிச்சை (Cataract Surgeon) நிபுணராக வேகமாக உருவெடுக்கின்றார்.

இத்தகைய அசுரவேகத்தில் 25 ஆண்டுகள் ஓடிவிட, தன் வாழ்வை மட்டுமல்ல, கண் மருத்துவத்துறையை முற்றிலுமாய் மாற்றிவிடப்போகும் மாற்றத்தின் ஊக்கியை கண்டார் - மெடொனால்ட் உணவகத்தின் தங்க நிற வளைவுகள் தான் அவை.

அன்றுதான் அந்த மருத்துவர் யோசிக்கத்துவங்கினார், "மெக்டொனால்ட் பில்லியன் பெர்கர்களையும், கோக்ககோலா பில்லியன் சோடாக்களையும் விற்க முடிந்தால், ஏன் நம்மால் மில்லியன் கண்பார்வை மீட்டுத்தரும் அறுவைசிகிச்சைகளை செய்ய இயலாது" என்று.

ஒரு இளைஞராக அவர் எடுத்த முடிவு, "அறிவாற்றலும்,திறமையும் மட்டுமே இருந்தால் போதாது. அர்த்தமுள்ளதாய் ஒரு செயல் செய்யும் மகிழ்ச்சியும் வேண்டும்". முடிவெடுத்ததும், 65 வயதில் தன் வீட்டை அடமானம் வைத்து, இரண்டே வருடங்களில் 11 படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனையை மதுரையில் ஒரு வாடகை வீட்டில் துவங்குகின்றார்.

மருத்துவமனையின் நோக்கம், "இலவசமாக அல்லது குறைந்த செலவில் இயலாத மக்களுக்கு கண்திரை அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென்பது". அந்த முதல் வருடத்தில் மட்டும், அந்த மருத்துவர் செய்த அறுவைசிகிச்சைகளின் எண்ணிக்கை ஐயாயிரம் (5,000).

இன்று, சுமார் மூவாயிரத்து அறநூறு (3,600) படுக்கைகள், ஐந்து மருத்துவமனைகளில் நாடெங்கும் பரவி, இரண்டு இலட்சத்துக்கும் (2,00,000) மேலான கண் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துவருகின்றது.

மேலும், அங்கு வரும் 70 சதவிகித நோயாளிகள் ஒன்றுமே அல்லது மிகவும் குறைந்தபட்ச கட்டணத்தையே செலுத்துகின்றனர். இதன் அர்த்தம், ஆயிரக்கணக்கான இயலாத இந்தியர்கள் நாடெங்கிலும் பார்வை பெருகின்றனர். வாழ்க்கையில் ஒளி பெருகின்றனர். வெளிநாடுகளில் 1600 அமெரிக்க டாலர்களுக்கு செய்துவருவதை இவர் வெறும் 10 டாலருக்கு செய்து முடிக்கின்றார்.

இது மட்டுமின்றி இந்த மருத்துவமனைகளின் இத்தகைய குறைந்த செலவில், நிறைந்த தர செயல்பாடு உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளின் வியாபார முன்மாதிரியாய் (Business Model)-ஆக திகழ்கின்றது.

இன்று ஒரு வருடத்தில் 2 மில்லியன் அறுவைசிகிச்சைகள் இந்த மருத்துவமனைகளின் நடைபெருகின்றன.

இத்தனை சாதனைகளுக்கும் உரித்தான அந்த மாமனிதர் மருத்துவர் யார் ? இத்தகைய சிறப்புவாய்ந்த மருத்துவமனை எது ? யோசித்துக்கொண்டிருங்கள்...

அடுத்த பதிவில்....

17 மறுமொழிகள்:

சீமாச்சு.. சொன்னது… @ புதன், ஜூலை 26, 2006 7:46:00 PM

யாத்ரீகன்..
மிக நல்ல பதிவு.. தொடருங்கள்... இந்த மாதிரி நல்ல விஷயங்களை தமிழ் வலைப்பதிவில் எழுதுபவர்கள் குறைவு. தவறாமல் தொடரவும்.

சமீபத்தில் காலமான டாக்டர் GV (அரவிந்த் கண் மருத்துவமனை)நிறுவனர் பற்றித்தானே இந்தப் பதிவு?

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 26, 2006 10:20:00 PM

ஒருவர் மட்டுமே இதை கண்டுபிடித்துள்ளார் அல்லது படித்துள்ளார் :-) :-(

மூன்றாம் பாகம் வரும்வரை.. அந்த மறுமொழியை நிறுத்தி வைத்திருக்கின்றேனே...!! கொஞ்சம் சுவாரசியம் கருதி.. (யார் படிக்குறாங்க :-( )

பொன்ஸ்~~Poorna சொன்னது… @ புதன், ஜூலை 26, 2006 10:31:00 PM

படிக்கிறேன்பா.. எழுத ஒண்ணும் இல்லை..அதான் எழுதலை :)

டண்டணக்கா சொன்னது… @ புதன், ஜூலை 26, 2006 10:45:00 PM

Is it Arvind Eye hospital doctor... not sure about the name Mr.Govind.....

siva gnanamji(#18100882083107547329) சொன்னது… @ புதன், ஜூலை 26, 2006 11:39:00 PM

டாக்டர் வெங்கடசாமியின் அரவிந்த் மருத்துவ மணை அவர் புகழை என்றும் பரப்பும்

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூலை 27, 2006 5:10:00 PM

@சீமாச்சு:
வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி... தொடரின் இறுதியில் பார்போமே அவர் யாரென்று.. :-)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூலை 27, 2006 5:11:00 PM

@பொன்ஸ்:
மறுமொழிகள் இல்லாததனால் அண்மையில் பகுதியில் தொகுக்கப்படுவதில்லை, பலர் இதை படிக்க இயலாமல் போய்விடுமோ என்ற வழக்கமான பயம்.. வழக்கமான கட்டுரையாய் இருந்தால் கவலைப்பட்டிருக்கபோவதில்லை.. இந்த மனிதர் பற்றி பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதாலே இந்த பதிவு, அதான்.. :-)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூலை 27, 2006 5:11:00 PM

@டண்டணக்கா:
ஹீம்.. உங்கள் கணிப்பு சரியாக்கூட இருக்கலாம்.. இன்னும் ஒரே பதிவுதான் , அதுல சொல்லிறேன்.. :-D

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூலை 27, 2006 5:12:00 PM

@சிவஞானம்ஜி:
பதிலில் அவ்வளவு உறுதியா இருக்கீங்களா. பார்ப்போமே.. :-)

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 12:06:00 AM

Pathilil romba uruthiya naanum irukiraen boss.. athu enga thaatha paati madiri neraya kannu theriyathavanga thiru Dr. Venakataswamy thaan..

melum vivarangaluku...
http://www.greenblue.org/cases/Aravind/home2.htm

manichukonga yathrigan unga suspence'a odaichathuku.. and moreover ithula suspence veikka ethuvum illa.. vadamalapuram kannu doctor apdinnu sonna most of the southie makkalukku romba nallavae theriyum.. athu aravind aasupathirinnu.. enaku blogspot la id kedaiayathu.. oru nanbaroda feed'la onga article'a pathina feed irunthuchu.. athaan ananymous comment.. porutharulga

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 1:37:00 PM

>> Pathilil romba uruthiya naanum irukiraen boss

:-)

>>> ithula suspence veikka ethuvum illa
சரிதான் நண்பரே... தெற்குப்பக்கம் அவரை எளிமையான பெயரால் நிறையபேருக்குத்தெரியும்.. பெரிய கட்டுரை.. கொஞ்சம் சுவாரசியமாக்கினால் நிறைய பேரை சென்றடையும்னு அப்படி செய்து பார்த்தேன் :-)

>>> oru nanbaroda feed'la

வைச்சு கண்காணிக்குற அளவுக்கெல்லாம் இந்த வலைப்பதிவு இருக்கா ... நம்பவே முடியல :-)



>> porutharulga

இதெல்லாம் கொஞ்சம் டூமச்சா தெரியல :-)

சதுர் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 2:02:00 PM

தலைப்பைத் திருத்துங்கள்,

நினைவுகூப்பட வேண்டியவர்!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 2:08:00 PM

கூர்ந்து.. நினைவு கூர்ந்து.. நினைவுகூரப்பட.. தானே சரி ?! மொதல்ல எனக்கும் இந்த 'ர' 'ற' குழப்பம் இருந்த்துச்சு....

எழுத்துப்பிழை அ யாராவது வந்து தெளிவுபடுதுவீங்களா...

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 3:19:00 PM

if you want any details.
pls go to the www.Aravind.org

i am working in Arvind Eye hospital

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 3:29:00 PM

@anon:
நன்றி Anon .. இந்த கட்டுரைகளில் தகவல் பிழை எதுவும் இல்லையென்று நினைக்கின்றேன்.. வருகைக்கும், தகவலுக்கும்.. நன்றி..

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 3:38:00 PM

i am not anon
i will not create blogs so i am give the suggestion.

if you want contact saravangovind@gmail.com

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 3:52:00 PM

நன்றி சரவண் கோவிந்... பெயர் ஏதும் முன்பு விடப்படாததனால் Anon என்று கூற நேர்ந்தது மன்னிக்கவும்... :-)

கருத்துரையிடுக