என்னிடமிருக்கும் சில போர்ட்ரெய்ட்கள் - 2
Published by யாத்ரீகன் under புகைப்படபோட்டி, புகைப்படம், போர்ட்ரெய்ட் on திங்கள், ஜூலை 30, 2007இமாலய பயணத்தின் போது மூன்றாம் நாள் சம்பா பள்ளத்தாக்கு நோக்கி செல்கையில் இடையே தென்பட்ட சிறு குழந்தை வியாபாரிகள், நுனி சிவந்த மூக்கும், கன்னங்களும், சிரிப்பதா வேண்டாமென்பதா என்ற யோசனையும், இலைகளூடே விழுந்த வெளிச்சத்தில் மிகுந்த அழகாய்த்தெரிந்தது....
சீனி - நெருங்கிய நண்பர் வட்டதினுள் ஒருவன், எப்போதும்ம்...எங்கேயும்ம்ம்... ஒருவித தேடலுடன் இருப்பவன். 8000 ஆயிரம் அடி உயரத்தில்....
வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணங்கள் மிகப்பெரிதாய் இருக்க வேண்டுமென்பதில்லையே, ஒரு மிட்டாய் சாப்பிடுவதாகக்கூட இருக்கலாமல்லவா.......
சூடாய் ஒரு டீ ஸீரோ டிகிரிக்குளிரில்.......
ஒளி வட்டம் தெரியுதுங்களா...!!!
யாரை எதிர்பார்த்து...!!! (less resolution pic - original lost)
ஒரு வெயில்கால உச்சி வெயிலில், குலசேகரப்பட்டின தென்னந்தோப்பினுள் ஆனந்த குளியல்
நினைவுகளில் தொலைந்திருந்த ஒரு வேளையில்
விளக்குகள் அணைந்த்துக் கொண்டிருக்கையில் ஓடும் இரயிலில் எதிர்பாரத ஒரு அற்புத சிரிப்பு
ஒரிஜினல் படமில்லாததால் ஏகப்பட்ட புள்ளிகள்...
21 மறுமொழிகள்:
யாத்ரீகன்,
1,3 5 அட்டகாசம். ரொம்ப பிடிச்சது!
நல்ல படங்கள்!!
அந்த live every moment is the best of the crop!! :-)
வாழ்த்துக்கள்!! :-)
வெயில்கால குளியல் மிக அருமை..
தேடலும் அருமை.
தவமிருக்கும் படம் நல்லா வந்தீருக்கு. ஆனா, ஓரு செயற்கைத் தனம், தியானம் செய்பவர் முகத்தில் :))
இமய மலை ட்ரிப் பத்தி விலாவரியா எழுதினா நல்லா இருக்கும். எங்கங்க எப்படி, எப்ப, etc...
@இளவஞ்சி:
வாத்தியார் கிட்டருந்து மொத காமெண்ட்... :-) நன்றி !!!
மூன்றாவது படம் பர்ஸ்ட் மோட் (Bஉர்ச்ட் Mஒடெ)-ல போட்டு பட படவென சுட்டுத்தள்ளியதில் தேறிய ஒன்று
@cvr:
நன்றி CVR :-) , ஏதோ சாக்லெட்க்கான கட்டவுட் விளம்பரம் போல இருக்குதுனு கிண்டல் பண்ணிட்டுருப்பாங்க பசங்க... It was one from a bunch of snaps in Burst Mode
@சர்வேசன்:
நன்றி :-)
அந்த வெயில்கால குளியல் ரொம்ப இரசிச்சு எடுத்த படம், ஆனால் அப்போ பல விஷயங்கள் தெரியாததால் இப்போ அதை பார்க்கும்போது பல விஷயங்கள் குறைவதாக தோணுது
அந்த செயற்கைதன அந்த பய முகத்துல கூடவே பொறந்தது ;-) , அதாவது அந்த சிரிப்பு, பயபுள்ள இருக்கும் இடம் எப்பவும் கலகலனு இருக்கும் அதான் அங்கயும் அப்படி..
பயணக்குறிப்புகள் எழுதனும்னுதான் இந்த வலைப்பூவே தொடங்குனது, ஒரு கணிணி கையோடு இல்லாததால், வெறும் புகைப்படங்கள் சிறு குறிப்புகளுடன் மட்டுமே போட முடிந்தது, எழுதனும் என்று நினைத்திருக்கும் பல பயண்ங்கள் இருக்கு.. :-(
ஆர்கைவ்ல (Archive) அந்த பயணத்தின்போது எடுத்த சில புகைப்படங்கள் இருக்கு,
Most of them are real life pictures and loved that little girl for your portrait one.
ஆ...(ஆச்சரியத்தில் பிளந்த வாய்)
குட்டிப்பாப்பா,அந்த கருப்பு வெள்ளை படம்,பம்புசெட் குளியல் படங்கள் அருமை...
வெற்றிபெற வாழ்த்துகள்...
wow! boss...
wat a nice foto blog...ur fotos speaking more than ur words...if any 1 dont feel anthing abt ur fotos ur gr8 captions vl make the to realise watz d picture is..!
Chlika lake trip 3rd foto is really super looks very natural(paya pulla chacolate papera sapdara palakam pogalaya enum?....)..tat showes tat u live every moment to d fullest(proof ur pump set bath)....
gr8 aplause to aathi for takin tat enlighment snap...olivaatam theriyuthu....
blk n white foto looks cool...apt caption...
tat cutie is really cho chweet...am havin a doubt...(aatha ellarum thugitangala,light la aanaichachu,apo nega ethu unga camera va vachu erunthiga?...raja rajan sengol madiri neega camera vooda thugunigala?.......)....lolzzzzzz
keep rockin....!!!!
#5 is my fave
டேய்... அந்த Chocolate foto ரொம்ப அருமையா வந்திருக்கு. அதைத் தான் போட்டிக்கு அனுப்புவன்ணு நினைச்சேன். :-(
@பாபா:
நன்றி பாபா.. அதில் மாடல் மட்டும்தான் நான், இதோ உங்கள் காமெண்டுக்கு கீழே காமெண்ட் எழுதியிருக்கும் ஆதிதான் அதை எடுத்தது அதனால் என்னால அதை போட்டிக்கு போட முடியல :-D நான் நல்லவனாக்கும் ;-)
@ஆதி:
மச்சான் என்னதான் ஐடியா என்னதா இருந்தாலும் எடுத்துக்கொடுக்க உதவியது வேற ஒருத்தர் அதனால இதை போட்டுக்கு போடலாம வேணாமனு யோசிச்சேன், யோசனை வந்தாலே, சரி போட்டிக்கு வேணாம் ஆனால் ஐடியா மட்டும் சொந்தம்னால இங்க போட்டுக்கிட்டேன்... :-) பாபா-கிட்ட சொன்னதேதான்.. உனக்கும் ரொம்ப நல்லா தெரியும் நான் ரொம்ப நலலவன்னு ;-)
@ப்ரியா:
நன்றி ப்ரியா
@சுதர்சன் அண்ணாத்தே:
ரொம்ப நன்றீங்கண்ணா !!!
பி.கு: உங்க மயில் கிடைச்சது, அதுவும் வாத்தியார் கிட்ட இன்ட்ரோ நான் எதிர்பார்க்கவே இல்லை, செம சந்தோஷமாயிடிச்சு :-) .. உடனடியா பதில் அனுப்ப முடியல மன்னிச்சிருங்க..
@சிஷ்யன்:
என்னப்பா எல்லோரும் இத்தையே சொல்றீங்க, பேசாம எழுதாம வெறுமனே படம் மட்டும் போடுனு :-( , இருந்தாலும் ராச ராசனோட செங்கோல் எல்லாம் ஓவரா தெரியல... நமக்கு கர்ணணோட கவச குண்டலம் மாதிரி, அந்த ஜீன்ஸும் , அதோட பாக்கெட்ல இருக்குற அந்த காமிராவும்.. கூடிய சீக்கிரம் இதை வைச்சு மேட்டர் நல்லா தெரிஞ்சப்புறம் வேற ஒரு காமிரா வாங்கனும்.. அது சரி..நீங்க எப்போ டங்கிலிபிசுல தட்டுறதை நிப்பாட்டப்போறீங்க.. ?!
குரு நாங்களா அம்மெட்சுர் உங்க லெவெல்க்கு ட்மிழ் லா வராது.......!!!!!!சரி இனி முடிந்த வரை தமிகுலிஷ் குரைச்சுக்குரன்.......
1,3,7 எனக்கு பிடிச்சிருக்கு. 7ல என்ன specialna freezing. நாமளே அங்க இருக்கிற மாதிரி இருக்கு.
simply superb..u r doing great..continue u r work ..hats off
simply superb..u r doing great..continue u r work ..hats off
@சிஷ்யன்:
செந்தமிழும் கைப்பழக்கம் :-) புதுமொழி.. சரியா..
@ஒப்பாரி:
நன்றி :-) .. அந்த 7வது படம் எடுக்க சொல்வதற்கு நண்பர்களுக்கு நான் நினைத்திருந்ததை காட்டி வாங்குவதற்குள் போது போதும் என்றானது ஆனால் இறுதிப்படம் திருப்தியாய் இருந்தது அன்று..
@சதீஷ்:
மிகவும் நன்றி சதீஷ்.. வருகைக்கு மட்டுமின்றி.. உங்கள் வலைப்பூவிழும் இந்த தளத்திற்கான முகவரி கொடுத்ததற்கு.. :-)
கருத்துரையிடுக