போட்டாச்சு எட்டு
Published by யாத்ரீகன் under TAG on செவ்வாய், ஜூலை 03, 20078) ஆரம்பத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து, 3/4 மாதங்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்த பிறகு அவளுக்கு திருமணமாகும் (வேறு ஒருவருடருந்தான் :-( ) என்று இருந்த இராசி இப்போ பவர் கூடி ஒரு பெண்ணைப்பார்த்து அழகாயிருக்கிறாள் என்று சொல்லி 2ஏ வாரத்தில் அவள் கல்யாணப்பத்திரிக்கையுடன் வந்து நிற்பது !!!! (நெருங்கிய நட்பு வட்டாரத்துக்கு மட்டும் இந்த தகவல் இதுவரை தெரிந்திருந்ததால் "கல்யாண மாலை" என்று நிறுவனம் ஒன்று ஆரம்பிக்க யோசித்துக்கொண்டிருந்தேன்)
5) கூட்டத்தோட இருக்கும்போது கல கல, ஆனால் தனிமை விரும்பி, குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒருமுறை எங்கே போறேன்னு தெரியாம அப்டியே கிளம்பி, போற இடத்தை இரசிச்சிட்டு வர்றது பிடிக்கும்.. கடந்து மூன்று பிறந்தநாள் கொண்டாட்டங்கள்(?) எனக்கு என்னோடதான் யாருக்குமே தெரியாம.. (No Travel Talks as said by ப்ரியா !!!! so stopping it)
1) சொல்லாமல் முறிந்தது முதல் முறை, சொல்லி முறிந்தது இம்முறை !!!
3) அநியாயத்துக்கு மிஷ்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், தினமும் வீட்டுக்கு வர்ற வழியில 10 ரூபாய்க்கு, 1ரூபாய்/2ரூபாய்ல ஏகப்பட்ட மிஷ்டீக்கள், ஒரு கட்டத்துல நண்பர்கள் யாருமே கம்பெனி குடுக்க முடியாத நிலமைக்கு போனது உண்டு, சில வகை மிஷ்டிக்கள் சாப்பிடுவதற்கெனவே "உல்டாடங்கா", "கருணாமொயி","சார் நம்பர் டேங்க் foot ப்ரிட்ஜ்", "MG ரோட்","நியு மார்கெட்" இப்படி பல இடங்கள் அலைந்து திரிந்து சாப்பிட்ட காலம் உண்டு... இப்போ, என்ன சாப்பிடுறேன்னு கூட யோசிக்கிறதில்லை
7) எல்லோருக்கும் தெரிந்தது எனக்கு இரு தம்பிகள் இருப்பது, தெரியாதது ஜீவி எனது தங்கை மாதிரியல்ல தங்கைதான் என்பது, எனது உயிர்த்தோழியின் தங்கை, கிராமத்து வெள்ளந்தி உள்ளத்தோடு "அண்ணா.. அண்ணா" என்று மனசு நிறைய கூப்பிடும் தங்கை.., சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தவறிய தங்கை அந்த வீட்டில் பிறந்துவிட்டாலோ என்று நினைக்குமளவுக்கு !!!
2) லடாக் பைக் டூரை சமீபத்தில் தவறவிட்ட அபாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.6) சுண்டல் மடித்துக்கொடுக்கும் காகிதத்தை கூட பிரிச்சு பிரிச்சு படிக்கும் ஆசாமி , எதைக்கண்டாலும் படிக்கணுமென்று தோன்றும், ஒவ்வொரு மாத சம்பளத்திலும் ஒரு புத்தகம் என்பதையும் மீறிவிடுவதால், புத்தகக்கடைக்கு போவதை முடிந்தவரை குறைக்கபார்க்கின்றேன்.. சமீபத்திய சாதனை: வெங்கடேஸ்வரா ரோட்டிலுள்ள "Crossword" கடைக்கு போய் பல மணிநேரம் புத்தகம் படிச்சிட்டு அங்கிருந்த காபி ஷாப்பில் செலவழிச்சது :-D !!!
4) உயிர்தோழர்களிடமும், உயிர்த்தோழிகளிடமும் சிறிது நேரம் செலவழித்து பல காலம் ஆகிவிட்டது..... :-(
சுவாரசியமா எழுத முடியாட்டியும், எதைச்சொல்றடு, எதைச்சொல்ல வேணாம்னு ரொம்ப யோசிக்க வைச்சிடுச்சு.. என்ன ப்ரியா & சுதர்சன் அண்ணாச்சி .. தேறுமா !?!?!?!
ஊருக்குள்ளே பலரும் எட்டு போட்டுட்டாங்க இனிமே யாரைக்கூப்பிடுறது.. சரி.. எங்க மொட்டை பாஸ் சீனியை கூப்பிடுறேன், உங்கள்ல்ல பலபேருக்கு தெரியாத எங்க கோஷ்டியில இருக்கும் ஒரு Interesting Character ...
10 மறுமொழிகள்:
மிஷ்டி ன்னா என்னங்க?
மிஷ்டீங்கறது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்புப்பண்டம் ஆகும்.இது வங்காளத்தில் மிகவும் பிரசித்தியானது.
ஹூம்.எள்ளுன்னா தம்பி எண்ணையா இல்ல வந்து நிக்கறாரு.
//இப்போ, என்ன சாப்பிடுறேன்னு கூட யோசிக்கிறதில்லை// இது இன்னா மேட்டரு..பாலும் கசந்த்தடா..படுக்கையும் நொந்ததடான்ங்கிற மாதிரி.
1,6,8க்கு ஏதாவது கனிக்ஷன் இருக்கா??
க்ராஸ்வேர்டில காப்பித்தண்ணியக் குடிச்சிட்டு இருந்தா லடாக் பைக் டூரை விடாம என்ன செய்யறது??
இவ்வளவு நல்லா எழுதிட்டு தேறுமான்னு வேற கேக்கறியேப்பா?இது நல்லாவா இருக்கு??
அப்புறம் கரகாட்டக்காரன் கதையைத் தனியா சொல்லறேன்.
@பொன்ஸ்:
சுதர்சன் அண்ணாச்சி சொல்றது சரி..
தமிழ்ல்ல பொதுவா இனிப்புனு சொல்றதுதான் வங்காள மொழியில பொதுவா மிஷ்டி... அது இனிப்பான என்பதையும் குறிக்கும், இல்லை எந்த ஒரு இனிப்பையும் குறிக்கும்..
"மிஷ்டி தொஹி" என்பது வங்காளத்துல எங்கேயும் கிடைக்கும், எல்லோருக்கும் பிடிக்கும்.. :-D
@சுதர்சன்:
>>> ..பாலும் கசந்த்தடா..படுக்கையும் நொந்ததடா
என்ன படம் ? என்ன பாடல் ? ;-) ..
8) நாங்கள்லாம் மருதக்காரங்க, வீரனுக்கு விழுப்புண் ஜகஜம்ங்க.. அசருவோமா.. விடாம போராடுவோம்ல..
6) அந்த கொடுமைய இப்டி புரிஞ்சிகிட்டீங்களா. :-))) இந்த ஊரு நம்பல இன்னும் நம்புதடா.. , படிக்க போன இடத்துலயும் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டீட்டு வந்ததை சொன்னேங்கண்ணா.. !!!
1) நோ காமெண்ட்ஸ் !!!!
கனீக்ஷனை இப்போ நீங்களே கணக்கு போட்டு பார்த்துக்கொங்க.. :-(
ஆமா யேன் இப்டி திடிர் நு 8ரன்டம் facts எழுத தொனுச்சு?......
*)>>>>1)
என்ன 1 ல ஏதொ ஒரு ool kuthu இருக்க மாதிரி இருக்கு?...என்ன விஜயம்?......
*)>>>>2) லடாக் பைக்.....
intha travel nd livin la povangalea athu madiri thanea ithu....romba nalla yosanai athu...neega romba duty concious ahh erukiga so athunalaya?......himalay treckin poyachu..but ithu pogala ya yean??...so bad...mothala u get a a bike...
*)>>>>>>3)
மிஷ்டி...mattr pathi na epo tha kealvi padurean....na unga kuda sen'nai' la erunthapa itha na note panavea illa....hmmm
*)>>>>>>4)
ithu la vaalkaila jagajam....
*)>>>>>5)
intha palakam enna kum eruku...actuly ma last b'lre tour was like tat only...took a pass in bus..mrg got in to d bus..bus pora pokula jolly ya nature ooda colors[;)] la rasichu tu...jolly ya erunthu chu...."ipdi la panean nu sonna naatla namala veety payanu solluraiga pa...enna panrathu?..."
*)>>>>>6
thanthai solla that ta tha paiyan neega....aama athu enna crossword book shop ku poniga ok...coffe shop la romba nearam?...something smoky happnd ter?.....erukatum erukatum....
*)>>>>>7
nice to xplore tat too have a secret sister...:)
*)>>>>8
wht do u mean by பெண்ணைப்பார்த்து?.....ithuku pala aartham tamil la oondu..etha mean panriga sir?.....
aaama epo ungaluku theriyatha ponugala ungaluku "கல்யாணப்பத்திரிக்கையுடன் வந்து நிற்பது" ...logic edikuthu thala......
ne way nega...6,8 layum அபாக்கியசாலி....he hehehe....
aama athuu enna "why d heck it happnd?..."oru caption?...enna thala nadanthuch?...
The 6th one applies to me also...
The photography is very good and also the writeup.
Keep writing.
@ஜெயந்தி:
முதல் வருகை வாசகி (?!?!) (அடங்குங்கப்பானு சொல்றது கேட்குது, ஆனா என்ன பண்ண) :-D வாங்க வாங்க !!!!
6வதுனா... புத்தகக் கடை போனாலும் சாப்பிடறதுங்களா ? :-)
போட்டோகிராபி பத்தின காமெண்ட்க்கு நன்றி... கொல்கத்தா, தஞ்சாவூர், கோனார்க்னு நிறைய போட்டோ இருக்கு முடிஞ்சா பாருங்க.. (ஒரு விளம்பரம்தான்..)
First class Rowdy... 'm so impressed by the Thamizh used here.. Then, andha 8 factors'la.. No:1 is ultimate da...
கருத்துரையிடுக