கற்களின் காவியம் - எல்லோரா - இறுதிப்பகுதி
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on புதன், ஜனவரி 16, 2008"கற்களின் காவியம் - எல்லோரா" தொடரை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும் , பின்னூக்(ட்ட)மளித்தவர்களுக்கும் மிக்க நன்றி . இத்தொடரில் வந்தவை மட்டும் எல்லோரா அல்ல, இதை விடவும் அறிய , அழகிய சிற்பங்கள் இருந்திருக்கலாம், எங்கள் கண்களில் தென்படாமல் போயிருக்கலாம். பலரை இந்த இடங்களுக்கு போக தூண்டுவதே இந்த தொடரின் நோக்கமாக வைத்து முயற்சி செய்தேன்.
முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி
நாம் பார்த்த பிரமாண்டமான சிலைகள் உள்ள குகை இருந்த சுற்றம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள் ? வேறொன்றும் இல்லாத அடர்ந்த காடாகவா ? சற்றே கிழே பாருங்க. இந்த புகைப்படம் , இதுதான் குகையின் பின்புறம்.
பச்சை பசேலேன்ற புற்களும் , அருகில் பெரிதாய் விழும் நீர்வீழ்ச்சியும் என எவ்வளவு இரசனையை இருக்கின்றது இந்த இடம். இதெல்லாம் பார்க்கும்போது , சத்தியமாய் கூண்டுக்குள் இருப்பது போல ஒரு வீட்டை நினைத்துப்பார்க்க கூட முடிய வில்லை :-)
அடர்ந்த கானகத்தினுள், குதிரையின் லாடத்தைப்போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கு . அந்த பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஒரு மிகப்பெரும் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கின் கிழே அந்த நீர்வீழ்ச்சியினால் உருவான ஆறு ஓடிக்கொண்டிருக்க, அந்த பள்ளத்தாக்கின் சுவற்றில்தான் அஜந்தா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன ..
கிழே உள்ளது , அந்த குகையின் உள்ள ஒரு பின் வாசல், இந்த வாசற்படிகள் , நீர்வீழ்ச்சியினால் உருவாகும் தடாகத்திற்கு கொண்டு செல்கின்றது .
நீண்ட மலைத்தொடரில், பல வருடங்களாக தொடர்ந்து நடந்த கடின உழைப்பு தான் அஜந்தா - எல்லோரா குகைகள் (சிலைகள் / ஓவியங்கள் ). அருகே நீர்வீழ்ச்சியும், பள்ளத்தாக்கும், அடர்ந்த கானகமும் என நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பார்ப்பவர்க்கு அருமையான சூழல்கள், ஆனால் இதை உருவாக்கியவர்களுக்கு ? அந்த முகம் / பெயர் தெரியாத கலைஞர்களுக்கும், இது சாத்தியமாயிருந்த அனைவருக்கும் நன்றிகள்.
வெளிநாட்டில் எல்லாம் ஊர் சுற்றி விட்டு, நம் ஊருக்கு வந்த உடன், சத்யம் , சிட்டி சென்டர் , பெசன்ட் நகர் , பெரிய விடுமுறை விட்டால் உடனே சொந்த ஊருக்கு போவது என பழக்கம் குறைந்து விட்டாலும், அப்படி இருக்கும் சிலரை இந்தியாவிலும் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளது என நினைக்க வைத்திருந்தால் மகிழ்ச்சியே ..
பாட புத்தகத்தில் மட்டுமே படித்தால் வரலாறு சத்தியாமாய் கசக்கத்தான் செய்யும், (அருமையானஆசிரியர் ஆசான் (நன்றி : இராம.கி ஐயா) இல்லாத நிலையில்). கோடை சுற்றுலாதலங்கள் தவிர்த்து உங்கள் மகன்/ மகள்களை இப்படி சுற்றுலா கூட்டிச்செல்லுங்கள், வெளிச்சத்தை நீங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், இருட்டை விட்டு வெளியே சீக்கிரம் வருவார்கள் ..
புத்தகம் படிக்கும் பழக்கம் , தாய்மொழியை நேசிக்கும் பழக்கம் , மற்றவற்றை மதிக்கும் பழக்கம் என்பதோடு .. உலகத்தை கண்களாலும், செவிகளாலும் , மனதாலும் பார்க்க இத்தகைய பயணங்கள் பயன்படும்.
பாட புத்தகத்தில் மட்டுமே படித்தால் வரலாறு சத்தியாமாய் கசக்கத்தான் செய்யும், (அருமையான
புத்தகம் படிக்கும் பழக்கம் , தாய்மொழியை நேசிக்கும் பழக்கம் , மற்றவற்றை மதிக்கும் பழக்கம் என்பதோடு .. உலகத்தை கண்களாலும், செவிகளாலும் , மனதாலும் பார்க்க இத்தகைய பயணங்கள் பயன்படும்.
வாருங்கள் பயணிக்கலாம் .... :-)
பி.கு:
அடுத்த பயணத்தொடர், இதுவும் எல்லோரா குகைகளில் ஒன்றான குகை எண் 16 -ஆன "கைலாசநாதர் கோயில்" எனப்படும் குகைக்கோயில். வாயைப்பிளக்கும் ஆச்சர்யத்தை உருவாகிய குகைக்கோயில் என்பதாலும், நீண்ட தொடர் என்ற அயர்ச்சி தவிர்க்கவும், இது தனியொரு தொடராக பதிவிட முயல்கின்றேன்.