யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கற்களின் காவியம் - எல்லோரா - 5

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, ஜனவரி 13, 2008
நம் நாட்டிலேயே உள்ள கலைச்செல்வங்களை பலரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் தொடர்களில் , எல்லோரா குகைச்சிற்பங்களைப்பார்த்தோம். பல நாள் கழித்து மீண்டும் இந்த தொடரை தூசி தட்டி , அடுத்த தொடருக்கான வழி வகுக்க வேண்டிய நேரம் இது.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி


இதற்கு முன் சிவனின் ருத்ர தாண்டவத்தை பார்த்திருந்தோம் , இங்கே பார்ப்பது சிவனின் ஆனந்த தாண்டவம். சிலையின் முகத்தில் இருக்கும் சிரிப்பிலிருந்தே அதை நீங்கள் புரிந்து கொண்டிருபீர்கள்.

குகைக்குள்ளிருக்கும் மிகக்குறைந்த ஒளியுடன் , என்னிடமிருந்த சாதரண பாயிண்ட் அன்ட் சூட் காமிராவும் தன் கடைசி காலத்தில் இருந்ததனால் [சில்கா ஏரியினுள் விழுந்ததால் :-( ] , இந்த புகைப்படம் பயங்கர ஆட்டம் கண்டிருக்கின்றது மன்னித்துக்கொள்ளுங்கள்.

எட்டு கரங்களுடன் நடனமாடும் சிவன். ஒவ்வொரு கையிலிருக்கும் பொருளுக்கும், முத்திரைக்கும் பல விளக்கங்கள் பல இடங்களில் படித்திருப்போம், அவை மிக அழகாக வடிக்கப்பட்டிருந்தது. முக்கியமாய் தலையில் சூட்டியிருக்கும் கிரீடம், மிகவும் நுணுக்கமாய் கலையம்சம் கொண்டதாய் செதுக்கப்பட்டிருக்கின்றது.

சுற்றி இருக்கும் மற்ற கடவுளர்கள் ஒவ்வொருவரும் பல வகையான வாகனங்களில் இருப்பதும், சிலர் இசைக்கருவிகள் மீட்டுவதும், சிவனுக்கு சாமரம் வீசுவதும் என நீள்கின்றது இந்த சிற்பம்.


நாம் கோயில் வாசல்களில் துவாரக பாலகர்கள் எனப்படும் வாயில் காவலர்களின் சிலைகளை பார்த்திருப்போம். என்றாவது யோசித்திருக்கிறீர்களா ஏன் பெண் சிலைகள் வாயிற் காவலர்களாய் இல்லையென்று ?

இங்கே கிழே இருப்பது அங்கிருக்கும் லிங்கத்தின் சன்னதியில் வாயிற் காவலர்களை இருக்கும் நந்தினிகள் அங்கிருக்கும் துவாரக பாலர்களுக்கு சிறிதும் குறையாதவர்கள். நாங்கள் இவர்களின் முட்டியளவு கூட இல்லை .இவர்களின் சிகையலங்காரத்தை பாருங்கள் எவ்வளவு அலங்காரங்கள் , சிலையை விட காதணியே பெரிதாய் இருக்கின்றது ;-)

இவ்வளவு பிரமாண்டமான குகைச்சிற்பங்கள் இருக்குமிடத்தை காக்கும் நிஜ காவலர்கள் எவ்வளவு கம்பீரமாய் , கவனமாய் இருக்க வேண்டும் , காவலிருக்கும் மற்ற காவலர்களுடன் எவ்வளவு Synchronize செய்து காவல் செய்ய வேண்டும். அவையெல்லாமே இந்த சிங்க காவலர்கள் செய்து விடுகின்றார்கள்.

எப்படி என்று கேட்கிறீர்களா ? ஒரு வாயிலில் சிங்கத்தின் சிலையருகே இருந்து இன்னொரு வாயிலைப்பார்த்தால் எந்த ஒரு தூணும் பார்வையை மறைக்காமல் இதற்கு குறுக்கே (Diagonal) இருக்கும் வாயிலில் உள்ள சிங்கத்தை பார்க்க இயலும். இத்தனை பருமனான , உயரமான தூண்களை , பரந்து விரிந்த இடத்தில் நிறுவும் போது இத்தகைய விஷயத்தையும் கருத்தில் கொண்டு செதுக்கியிருப்பது அவர்களின் கலை நுணுக்கம் மட்டுமின்றி, அறிவியல்/பொறியியல் அறிவையும் ஆற்றலையும் காட்டுகின்றது.இங்கே கீழிருப்பது இந்திரனின் மனைவியான இந்திராணியின் மரம். ஒரே மரத்தில் பல வகையான கனிகளும் , அதை பார்த்து உண்ண வந்திருக்கும் மந்திகளும் , பறவைகளும் என உங்களால் கண்டு பிடிக்க முடிகின்றதா ?இந்தரலோகம் என பெயரிடப்பட்ட குகையொன்று , அதன் உச்ச கட்டத்தில் மிகவும் வண்ண மயமாய் இருந்திருக்க வேண்டும் .. அதிலிருக்கும் தூண்களின் வேலைப்பாடுகளும் , இன்னும் மறையாமலிருக்கும் வண்ணங்களும் என இன்னும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்பதற்கு முன் இந்திரலோகத்தில் எங்கள் சீனி :-)80 டன் எடையுள்ள கற்கள் மிக உயரமுள்ள கோபுரத்தின் மேலிருப்பதும் , ஆயிரம் வருடங்களில் அழியாத வண்ணங்களும், நேரத்தை துல்லியமாய் கணக்கிட சூரிய கடிகாரத்தை கோயிலின் / தேரின் சக்கரமாய் வடிவமைப்பது .. என .. சொல்லிக்கொண்டே போகலாம் , இந்த நாட்டில் இருந்த அறிவும், ஆற்றலும், கலை நுணுக்கமும் .. எங்கே போனது அவையெல்லாம் ? பரம்பரை அறிவாய்கூட வழி வரவில்லையா ? இரண்டு தலை முறைக்கு முன் என் முன்னோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என இப்பொழுதுதான் கேள்வி எழுகின்றது , அதற்கு முழுதாய் பதிலளிக்கவும் என் தந்தையால்/தாயால் முடியவில்லை ..

மிகப்பெரும் அடையாளங்களை விட்டுச்சென்ற தலைமுறைக்கே இந்த கதி என்றால் , வெறும் கண்ணாடிக் கோபுரங்களும் , வசூல் வேட்டைக்கென உருவாகும் ஆன்மீக தங்கக்கோபுரங்களும் மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறையின் அடையாளம் எப்படி இருக்கும் ?

14 மறுமொழிகள்:

CVR சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 12:14:00 முற்பகல்

வழக்கம் போல தரமான பதிவு,நேர்த்தியான வர்ணனைகள்!

//வெறும் கண்ணாடிக் கோபுரங்களும் , வசூல் வேட்டைக்கென உருவாகும் ஆன்மீக தங்கக்கோபுரங்களும் மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறையின் அடையாளம் எப்படி இருக்கும் ?/////
சிந்திக்க வைக்கும் கேள்வி தான்! :-)

வவ்வால் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 12:36:00 முற்பகல்

யாத்ரிகன்,
நல்லப்பதிவு!

யாத்ரிகனு பேரு வச்சாலும் அந்த பேர காப்பாத்தனும், அப்படி காப்பாத்துற ஆளு நீங்க, உங்க தஞ்சைப்பயணமும் , சரி இதுவும் சரி பெரு மூச்சு தான் விட வைக்குது!(நான் தஞ்சாவுருக்கு ஏற்கனவே போய் இருக்கேன் , இந்த இடம்லாம் என் எதிர்கால ஆசைகள்)

நீங்க நிறைய யாத்திரைப்போகணும், நானும் நிறைய இடத்தை தெரிஞ்சுக்கணும்!

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 12:40:00 முற்பகல்

நன்றி சி.வி.ர் :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 12:44:00 முற்பகல்

@வவ்வால்:
தொடர்ந்த வருகைக்கு ரொம்ப நன்றி :-) .. கட்டாயம் போங்க, இந்த இடங்களை தவற விடக்கூடாது .. நான் பார்த்த பல இடங்களை இன்னொரு முறை கூட பார்க்கலாம்னு யோசிச்சிருக்கேன் .. ஆனால் பார்க்க வேண்டிய இடங்களே எக்கச்சக்கமா இருக்கு நம்ம நாட்டுல :-) .. அடுத்த பதிவுத்தொடரும் உங்களைக்கவரும் என நினைக்கிறேன் .

காட்டாறு சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 1:56:00 முற்பகல்

//இந்த நாட்டில் இருந்த அறிவும், ஆற்றலும், கலை நுணுக்கமும் .. எங்கே போனது அவையெல்லாம் ? பரம்பரை அறிவாய்கூட வழி வரவில்லையா ? இரண்டு தலை முறைக்கு முன் என் முன்னோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என இப்பொழுதுதான் கேள்வி எழுகின்றது , அதற்கு முழுதாய் பதிலளிக்கவும் என் தந்தையால்/தாயால் முடியவில்லை ..
//

பயணங்கள் நமக்கு தரும் விழிப்புணர்ச்சி ஏராளம் இல்லையா? அது எந்நாட்டில் இருப்பினும்! ம்ம்..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 3:39:00 முற்பகல்

கட்டாயம் காட்டாறு .. மார்க்கோ போலோ போன்ற எல்லோருக்கும் தெரிந்த பயணிகளால் தான், பல தொலைந்து போன கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், அறிவியல் முன்னேற்றங்கள் என நம்மிடையே இன்னும் இருக்கின்றது .. அதோடு ஒரு இடத்திலிருக்கும் நல்ல விஷயங்கள் பல இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதும் இது போன்ற பயணங்களாலும் , பயணிகளாலும் தான் :-)

Dreamzz சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 5:09:00 முற்பகல்

Nice :)

துளசி கோபால் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:29:00 முற்பகல்

பதிவு சூபர்ன்னா கடைசியில் கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி.....

அது அதி சூப்பர்!

யோசிக்க வைக்குது.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:49:00 முற்பகல்

வாங்க ட்ரீம்ஸ் ... நன்றி :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:50:00 முற்பகல்

:-) நன்றி டீச்சர் ..

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது… @ சனி, பிப்ரவரி 02, 2008 8:24:00 முற்பகல்

//வெறும் கண்ணாடிக் கோபுரங்களும் , வசூல் வேட்டைக்கென உருவாகும் ஆன்மீக தங்கக்கோபுரங்களும் மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறையின் அடையாளம் எப்படி இருக்கும்?//

வசூல் வேட்டை முடிந்த பின்னோ, இல்லை வேட்டையில் தோற்ற பின்னோ கலைந்து விடும்! :-)
நீர் மேல் எழுத்து-ன்னு அதான் சொன்னாய்ங்க! அதான் கல் மேல் எழுத்து-ன்னு கலைச் சிற்பங்கள் எழுதி வைச்சாய்ங்க!

இந்தக் காலத்துல கல் மேல் எழுத்துன்னா அது இணையம் தான்! :-)
சென்ற தலைமுறையின் அடையாளத்தை இப்போ நீங்க இணையத்துல எழுதி வச்சிட்டீங்க!

அடுத்த தலைமுறை நம்மள பத்தி இணையத்துல எழுதி வைக்க என்னவெல்லாம் உருவாக்கி வச்சிருக்கோம்?

ஆனாலும் கவலைப்படாதீங்க! நம்மள பத்தியும் எழுதுவாங்க! ஆனா நல்லபடியா எழுதுவாங்களா-ன்னு கேக்கறீங்களா? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது… @ சனி, பிப்ரவரி 02, 2008 8:35:00 முற்பகல்

//சிலையின் முகத்தில் இருக்கும் சிரிப்பிலிருந்தே அதை நீங்கள் புரிந்து கொண்டிருபீர்கள்//

சிவபெருமான் சிரிப்பை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வந்துராதீங்க! திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், அதற்கு என்ன ஆயுதம் பயன்படுத்தினார் தெரியுமா? இதான் " :-)"
Smiley is a weapon!

//காமிராவும் தன் கடைசி காலத்தில் இருந்ததனால் [சில்கா ஏரியினுள் விழுந்ததால் :-( //

அட, யாரைப் படம் புடிக்க, அப்படியே மெய் மறந்து, காமிராவை ஏரிக்குள்ளாற போட்டீங்க? உண்மையச் சொல்லுங்க :-))

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 6:55:00 முற்பகல்

>>>> அடுத்த தலைமுறை நம்மள பத்தி இணையத்துல எழுதி வைக்க என்னவெல்லாம் உருவாக்கி வச்சிருக்கோம்
>>>> நல்லபடியா எழுதுவாங்களா

:-))) தெரியல.. பார்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு ..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 6:56:00 முற்பகல்

>>> மெய் மறந்து, காமிராவை ஏரிக்குள்ளாற போட்டீங்க

:-D hehehehehe !!!!

கருத்துரையிடுக