யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கற்களின் காவியம் - எல்லோரா - இறுதிப்பகுதி

Published by யாத்ரீகன் under , , , , , on புதன், ஜனவரி 16, 2008
"கற்களின் காவியம் - எல்லோரா" தொடரை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும் , பின்னூக்(ட்ட)மளித்தவர்களுக்கும் மிக்க நன்றி . இத்தொடரில் வந்தவை மட்டும் எல்லோரா அல்ல, இதை விடவும் அறிய , அழகிய சிற்பங்கள் இருந்திருக்கலாம், எங்கள் கண்களில் தென்படாமல் போயிருக்கலாம். பலரை இந்த இடங்களுக்கு போக தூண்டுவதே இந்த தொடரின் நோக்கமாக வைத்து முயற்சி செய்தேன்.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி

நாம் பார்த்த பிரமாண்டமான சிலைகள் உள்ள குகை இருந்த சுற்றம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள் ? வேறொன்றும் இல்லாத அடர்ந்த காடாகவா ? சற்றே கிழே பாருங்க. இந்த புகைப்படம் , இதுதான் குகையின் பின்புறம்.பச்சை பசேலேன்ற புற்களும் , அருகில் பெரிதாய் விழும் நீர்வீழ்ச்சியும் என எவ்வளவு இரசனையை இருக்கின்றது இந்த இடம். இதெல்லாம் பார்க்கும்போது , சத்தியமாய் கூண்டுக்குள் இருப்பது போல ஒரு வீட்டை நினைத்துப்பார்க்க கூட முடிய வில்லை :-)

அடர்ந்த கானகத்தினுள், குதிரையின் லாடத்தைப்போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கு . அந்த பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஒரு மிகப்பெரும் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கின் கிழே அந்த நீர்வீழ்ச்சியினால் உருவான ஆறு ஓடிக்கொண்டிருக்க, அந்த பள்ளத்தாக்கின் சுவற்றில்தான் அஜந்தா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன ..

கிழே உள்ளது , அந்த குகையின் உள்ள ஒரு பின் வாசல், இந்த வாசற்படிகள் , நீர்வீழ்ச்சியினால் உருவாகும் தடாகத்திற்கு கொண்டு செல்கின்றது .

நீண்ட மலைத்தொடரில், பல வருடங்களாக தொடர்ந்து நடந்த கடின உழைப்பு தான் அஜந்தா - எல்லோரா குகைகள் (சிலைகள் / ஓவியங்கள் ). அருகே நீர்வீழ்ச்சியும், பள்ளத்தாக்கும், அடர்ந்த கானகமும் என நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பார்ப்பவர்க்கு அருமையான சூழல்கள், ஆனால் இதை உருவாக்கியவர்களுக்கு ? அந்த முகம் / பெயர் தெரியாத கலைஞர்களுக்கும், இது சாத்தியமாயிருந்த அனைவருக்கும் நன்றிகள்.

வெளிநாட்டில் எல்லாம் ஊர் சுற்றி விட்டு, நம் ஊருக்கு வந்த உடன், சத்யம் , சிட்டி சென்டர் , பெசன்ட் நகர் , பெரிய விடுமுறை விட்டால் உடனே சொந்த ஊருக்கு போவது என பழக்கம் குறைந்து விட்டாலும், அப்படி இருக்கும் சிலரை இந்தியாவிலும் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளது என நினைக்க வைத்திருந்தால் மகிழ்ச்சியே ..

பாட புத்தகத்தில் மட்டுமே படித்தால் வரலாறு சத்தியாமாய் கசக்கத்தான் செய்யும், (அருமையான ஆசிரியர் ஆசான் (நன்றி : இராம.கி ஐயா) இல்லாத நிலையில்). கோடை சுற்றுலாதலங்கள் தவிர்த்து உங்கள் மகன்/ மகள்களை இப்படி சுற்றுலா கூட்டிச்செல்லுங்கள், வெளிச்சத்தை நீங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், இருட்டை விட்டு வெளியே சீக்கிரம் வருவார்கள் ..

புத்தகம் படிக்கும் பழக்கம் , தாய்மொழியை நேசிக்கும் பழக்கம் , மற்றவற்றை மதிக்கும் பழக்கம் என்பதோடு .. உலகத்தை கண்களாலும், செவிகளாலும் , மனதாலும் பார்க்க இத்தகைய பயணங்கள் பயன்படும்.

வாருங்கள் பயணிக்கலாம் .... :-)

பி.கு:
அடுத்த பயணத்தொடர், இதுவும் எல்லோரா குகைகளில் ஒன்றான குகை எண் 16 -ஆன "கைலாசநாதர் கோயில்" எனப்படும் குகைக்கோயில். வாயைப்பிளக்கும் ஆச்சர்யத்தை உருவாகிய குகைக்கோயில் என்பதாலும், நீண்ட தொடர் என்ற அயர்ச்சி தவிர்க்கவும், இது தனியொரு தொடராக பதிவிட முயல்கின்றேன்.

18 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 5:14:00 முற்பகல்

வாவ்!
அந்த காலத்தில் இந்த இடம் ஒரு அருமையான இடமாக இருந்திருக்கக்கூடும்.
அந்த நீர்வீழ்ச்சி
அருமையிலும் அருமை.

கப்பி | Kappi சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 5:42:00 முற்பகல்

நன்றி!!

துளசி கோபால் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:36:00 முற்பகல்

இந்தியாவிலேயே பார்த்து அனுபவிக்கவேண்டிய இடங்கள் ஆயிரக்கணக்கில் இருக்குங்க.

நாம் போகும் சின்ன விடுமுறைகளில்
உறவு,ஊர்ன்னு நேரம் போயிருது.

ஒரு வருசம் முழுக்க இந்தியாவில் சுத்திப் பார்க்கும் திட்டம் ஒன்னு இருக்கு மனசில்.

வேலையிலிருந்து ஓய்வு கிடைத்தவுடன் கிளம்பிறணுமுன்னு இருக்கோம்.

கையும் காலும் ரொம்ப மோசமா ஆகறதுக்குள்ளே போயே தீரணுமுன்னு ஆதங்கம்.

இறைவனின் எண்ணம் எப்படி இருக்கோ?

உங்க தொடர் அருமையா இருந்துச்சு. அனுபவிச்சுப் படிச்சேன்.

கூடவே எங்களைக் கொண்டுபோனதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:43:00 முற்பகல்

வாங்க குமார் .. ஆமாம் இந்த இடத்துடைய கோல்டன் ஏஜ் என சொல்லக்கூடிய உச்சகட்ட நாட்களை நினைத்துப்பார்க்கிறேன் .. அற்புதமாய் இருந்திருக்குமல்லவா

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:44:00 முற்பகல்

:-) தொடர்ந்த வருகைக்கு நன்றி கப்பி ..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:48:00 முற்பகல்

துளசி டீச்சர், வெளிநாட்டில இருக்கும்போது இப்படிப்பட்ட பயணம் கஷ்டம்தான் .. ஐரோப்பிய மக்கள் போல வர்டத்தில் ஒன்று இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்து வந்து , நாட்டையும் , உலகத்தையும் சுற்றிப்பார்க்கனும் .. அந்த மக்களுக்கேலாம் என்பது ஒரு கவலை இல்லை என்பதால் அது எளிதாய் முடியுது .. ஹ்ம்ம்ம்ம்..

தொடர்ந்த வருகைக்கும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கும் மிக்க நன்றி டீச்சர் ..

நீங்கள் எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த விதமாய் இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள் .. :-)

Dreamzz சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 7:28:00 பிற்பகல்

அருமையான தொடர். இதை போன்ற தொடர் எழுதி, எங்களையும் அங்கு எல்லாம் பார்க்க தூண்டியமைக்கு நன்றி :)

jeevagv சொன்னது… @ வியாழன், ஜனவரி 17, 2008 8:44:00 முற்பகல்

அயர்ச்சி இல்லை, தொடருங்கள்.

அருவியைப் பார்த்ததும் முன்பு அங்கு சென்றது நினைவுக்கு வருகிறது!

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜனவரி 17, 2008 7:47:00 பிற்பகல்

நன்றி ட்ரீம்ஸ் :-)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜனவரி 17, 2008 7:49:00 பிற்பகல்

@ஜீவா :
நன்றி ஜீவா :-) .. போன ஜென்மத்து நியாபகமா ? ;-) ..

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது… @ சனி, பிப்ரவரி 02, 2008 7:05:00 முற்பகல்

நன்றி செந்தில்! அருவியின் படம் அருமை! Looked as if a bridge of water connecting the high and the low!

இதே போன்ற ஒரு சிற்பக் குகையில் விழும் அருவியைச் சிவகாமியின் சபதம் நாவலில், கல்கி வர்ணித்து இருப்பார்! ஆனால் அது அஜந்தா குகை. அங்கு தான் வாதாபி புலிகேசியும், நாகநந்தியும் தாக்கிக் கொள்வார்கள்!அதை இந்தப் படம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது!

தொடர் மிகவும் அருமை! பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சுவைத்தேன்!

//நீண்ட தொடர் என்ற அயர்ச்சி தவிர்க்கவும், இது தனியொரு தொடராக பதிவிட முயல்கின்றேன்//

முன்பு வைத்த வேண்டுகோளை நிறைவேத்தறீங்க! நன்றி! :-)

காட்டாறு சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 05, 2008 7:33:00 முற்பகல்

யாத்திரீகன், இந்த பதிவை எப்படி மிஸ் செய்தேன்னு தெரியல. அந்த அருவியும்,உங்கள் பதிவும் அற்புதம். பயணங்கள் நம்மை மென்மேலும் கூராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

sury siva சொன்னது… @ ஞாயிறு, பிப்ரவரி 24, 2008 9:22:00 பிற்பகல்

It is Thulasi Teacher who led me here. I'll have to thank her first. I stand spellbound not only at the intensity of your emotions (as you describe each sculpture in detail and in depth) but also at your innate desire to bring this to the attention of we, Tamils, who never had an opportunity to visit these caves. I am not exagerating when I quote, Thulasi teacher had well said that blogs serve as a school for people who want to learn.I have no doubt that your blog is an institution, to be recognized as a deemed University by all bloggers.
Amidst the deserts, yours is an oasis, where will I come whenever I feel thirsty.
Subbu rathinam
thanjai.
http://arthamullaValaipathivugal.blogspot.com
PS: My tamil font (unicode) drags me too long and hence my response in English.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 6:50:00 முற்பகல்

அஜந்தாவிலும் கிட்ட திட்ட இதே போன்றொதொரு இடம் உண்டு .. ஆனாலும் இந்த பசுமை, பாறைகளின் நடுவே ஒரு பரவச உணர்வை தந்தது .. இதோ இந்த வாரம் அடுத்த பகுதி வெளிஇட்டாச்சு

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 6:50:00 முற்பகல்

நன்றி காட்டாறு :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 27, 2008 10:31:00 முற்பகல்

மிகவும் நன்றி சுப்பு அவர்களே :-) , நீங்கள் கூறும் அளவுக்கு இன்னும் மிகப்பெரிதாய் எதுவும் பண்ணவில்லை , அவ்வப்போது ஊர் சுற்றுவதை பதிந்து கொண்டு இருக்கின்றேன் .. உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி , மேலும் பகிர்ந்து கொள்ள இயலும் .. மீண்டும் வாருங்கள்

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 08, 2008 2:42:00 முற்பகல்

அருமையான தொடர். இப்பொழுதான் தடம்[blog link] கிடைத்து பார்க்க முடிந்தது.
நான் அதிகமாக சிலைகளை ரசித்ததில்லை. ஏன் எனில் எனக்கு சிலைகளின் மொழி புரிந்ததில்லை. ஒவ்வொரு சிலைக்கும் உங்கள் விளக்கம் படித்த பின்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரம் நான் தவற விட்டவையும் புரிகிறது,.

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

[பின் வரும் நாட்களில் நானும் இவ் விடங்களை காண ஆவலாக உள்ளேன்]

-வாழ்த்துக்களுடன்
பிரபு

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:48:00 முற்பகல்

மிகவும் நன்றி இரவுப்பாடகன்/பிரபு அவர்களே .. கட்டாயம் காண முயலுங்கள்

கருத்துரையிடுக