யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

Das Leben der Anderen

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
              காது மடல்களை சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது இன்றைய மெல்லிய குளிர், ஊரெங்கும் மூடுபனியால் சூழ்ந்திருக்க, அட்டகாசமான வானிலை. சுடச்சுட இருந்த Starbucks-இன் White Chocolate Mocca-வுடன் வழக்கம்போல  நீண்டதாய் இலக்கில்லா வழியில் காரை ஓட்டிச்சென்று வீடு திரும்பியதும், இருந்த தூக்க கலக்கமெல்லாம் எங்கே சுருண்டுகொண்டதென்று தெரியவில்லை. 

            இருந்த புத்துணர்வுக்கு நல்ல படம் பார்க்கனுமென Que-வை மேயத்தொடங்க கிடைத்ததுதான் Das Leben der Anderen.  Run Lolla, Downfall போன்ற ஜெர்மன் படங்கள் ஏமாற்றாததால் நம்பிக்கயுடன் பார்க்கத்துவங்கினேன்.  ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு பற்றிக்கொண்டது (Valkyrie படத்தையும் ஒரு ஜெர்மனிய படமாக இந்த இயக்குனரே இயக்கியிருக்கலாம்). இயக்குனரின் முதல் படமாம், சத்தியமாய் நம்பமுடியவில்லை.
    
          படம் ஆரம்பிக்கும் விசாரணை காட்சியிலிருந்து, கடைசி காட்சியில் இருக்கும் டச் வரை அட்டகாசம். வசனங்களும், மிக மிக மிக முக்கியமாய் அந்த பிண்ணனி இசையும்.. படம் முடிந்தபின்பு அந்த கதாபாத்திரங்களிடையே நாம் வாழ்ந்து முடிந்தமாதிரி ஒரு உணர்வு. 

          என்ன புத்தகம் எழுதலாம், என்ன படிக்கலாம் என தமிழகஅரசாங்கம் மக்கள் சிந்தனையை  குறுக்க நினைத்து என்ன பண்ணுகின்றோமென உணராமல் முட்டாள்தனமாய் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த படம் பார்த்தது என்னவெல்லாமோ யோசிக்க வைத்துவிட்டது. 

        பிண்ணனியிசையென்றதும் நினைவுக்கு வரும் ஒரு கவித்துவமான காட்சி, படத்தின் உயிர் நாடிகளின் ஒன்றான அந்த பியானோ வாசிக்கும் ஒற்றை காட்சியில் எத்தனை அழகாய் படத்தின் போக்குக்கான justification.

        சரி அப்படி என்னதான் கதை ?   

  ஒருவரை ஒட்டுகேட்கத்துவங்குகின்றீர்கள்,  ஒரு வரி அல்ல ஒரு நிமிடமல்ல.. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு நொடியையும்.. உங்களின் செயல் எத்தனை தூரம் ஒட்டுக்கேட்கப்படுபவர்களையும், உங்களையும், சமுதாயத்தையும் மாற்றும் என நினைத்துப்பார்த்திருப்பீர்கள் ?   அதுதான் கதை. வழக்கமான அட்டுத்தனமான Action/Thriller வகையறாக்களல்லாமல் ரெக்ளைனரின் நுனிக்கே கொண்டுவந்துவிட்டதொரு பொலிடிக்கல் திரில்லர்.
Das Leben der Anderen (The Lives of Others)




 கருத்து மற்றும் சிந்தனை சுதந்திரம், ஐடியலான நல்லதொரு சமூகம்/அரசாங்கம், இவற்றில் இன்று நாம் அனுபவிக்கும் நல்லவிஷயங்கள் அதனால் நாம் கவனமின்றி, கவலையின்றி தவரவிட்டுக்கொண்டிருக்கும் உணர்வுகள் .. என பல விஷயங்களை கிண்டி கிளறிவிட்டது.. 

படம் முடிந்தபின், அடுத்த படத்திற்கோ/வேலைக்கோ கடிகார முட்களின் ஓட்டத்திற்கு நடுவே தவ்வுவதற்குமுன் கொஞ்சம் தனிமையும் அசைபோடுதலையும் சேர்த்துப்பாருங்களேன்.. Its worth it.

14 மறுமொழிகள்:

Chithran Raghunath சொன்னது… @ திங்கள், ஜனவரி 12, 2009 10:50:00 AM

உங்கள் பதிவுகள் தேர்ந்த எழுத்து நடையுடன் சுவாரஸ்யமாய் உள்ளன.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜனவரி 12, 2009 11:06:00 AM

நன்றி சித்ரன் :-) .. தொடர்ந்து வாருங்கள்..

ஆளவந்தான் சொன்னது… @ புதன், ஜனவரி 21, 2009 7:57:00 AM

//Das Leben der Anderen. Run Lolla, Downfall
//

நானும் பார்த்திருக்கேன் இந்த படத்தை. ஒட்டு கேட்டு அவர்களை பற்றி நன்கு தெரிந்தவுடன் அவர்களுக்கு உதவ முன் வர, துரதிர்ஷ்டவச்மாக சில அசம்பாவிதங்கள் நடந்து ஒருவித கனத்தோடு முடிந்தது இந்த படம்.. மிக அருமையான படம்.. பதிவும் ரத்தின சுருக்கமாக இருந்தது.

பெயரில்லா சொன்னது… @ புதன், ஜனவரி 21, 2009 8:51:00 AM

das leben der anderen படம் சோசியலிசம் என்ற சமூகச்சீர்கேட்டை கதைக் கருவாகக் கொண்ட படம்.

சோசியலிசத்தால் எப்படி அப்பவிகள் உயிரிழக்கிறார்கள், சோசியலிச அரசு எப்படி தன் கொள்கைக்கு விரோதமாக இருப்போரை நடத்துகிறது என்பதற்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு The lives of others.

Muruganandan M.K. சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 25, 2009 10:32:00 PM

அருமையான பதிவு. மிக நல்ல படமாக இருக்கும் போல.
எனக்கு பார்க்கக் கிடைக்கும் எனத் தெரியவில்லை.

பெயரில்லா சொன்னது… @ வியாழன், ஜனவரி 29, 2009 7:55:00 PM

தம்பி
நல்லதொரு விமர்சனம்.. ஒன்னும் புரியல :) இப்படி பட்ட நல்ல படங்களை காட்டி (T2 வை ) கொடுமை படுத்த வழி இல்லையே இப்போ :)

எத்தனை காலத்துக்குத்தான் ஸ்டார் பக்ஸ் காபியுடன் இலக்கில்லா பயணம் ?
குளிர் காலத்தில் பத்திரமாக கார் ஒட்டவும் .லக்ஷ்மி &அப்பு இருவரையும் பார்த்து கொள்ளவும் :)

Unknown சொன்னது… @ வெள்ளி, மார்ச் 13, 2009 8:07:00 PM

A blog which pulls in readers . .Nice presentation. Learned about a few movies from this blog (weeping camel, mountain patrol). Nnice effort. Best wishes...

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 3:58:00 AM

@ஆளவந்தான்
நன்றி :-) .. அந்த கனமான முடிவுதான் படத்தின் முக்கியமான கதாபாத்திரதின் மனமாற்றத்திற்கான justification ஆனது என நெனைக்கிறேன்..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 4:04:00 AM

@க.கா.அ.சங்கம்:
அன்பே சிவம் படத்துல கமல் தாஜ்மகால் vs கம்யூனிசம் பத்தி சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது
:-) , சோசியலிசத்திற்கோ, குடியரசுக்கோ வாக்காலத்து வாங்கவில்லை ஆனால் கொள்கைகளில் குறை நிறை இருக்கலாம் எல்லாம் முடிவில் நிச்சயிக்கப்படுவது அதை நிறைவேற்றுபவர்களின் முறையில்தான் என நினைக்கிறேன்..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 4:05:00 AM

@டொக்டர்:
நன்றி டொக்டர்.. உங்களுக்கு Netflix இருந்தால் online-லயே பார்க்கமுடியும் ..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 4:08:00 AM

@அனானிமஸ் அண்ணா :-)

T2 இப்போ இந்த மாதிரி படங்களை பார்க்க முடியலைனு ரொம்ப வருத்தப்பட்டான் :-) , நீங்க இல்லாததால starbucks-ஐ பார்த்துக்குறதுக்கான பொறுப்பை தம்பி நானல்லவா எடுத்துக்கனும் அதான் ;-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 4:10:00 AM

@The Scorp:
தொடர்ந்த வருகைகளுக்கு மிக்க நன்றி :-) ..

ஜெகதீசன் சொன்னது… @ வியாழன், ஏப்ரல் 09, 2009 11:05:00 AM

நல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள் யாத்ரீகரே.

kypn சொன்னது… @ திங்கள், மார்ச் 01, 2010 2:25:00 PM

உங்கள் எழுத்து, படத்தை விட அற்புதம்.

எனக்கு பிடித்த மேலும் சில German படங்கள்:

Die Fälscher (The Counterfeiters)
Good bye Lenin

முடிந்தால் பாருங்கள்.

கருத்துரையிடுக