இனி இரண்டு பயணச்சீட்டு
Published by யாத்ரீகன் under அனுபவம், திருமணம் on வெள்ளி, நவம்பர் 12, 2010தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல... எனத்தொடங்கினால் யார் அந்த வேதாளம் ? எனவும்,
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி.. என ஆரம்பித்தால் யார் அந்த மந்திரவாதி ? எனவும்,
தேவையற்ற கேள்விகள் எழும் என்பதால் :-)
எப்படித்தொடங்குவதென யோசித்துக்கொண்டே சில வாரங்கள் தாண்டிவிட்டன
பலவருட காத்திருக்குப்பின், நான் மேற்கொள்ளும் பயணங்களில் சிறு மாற்றம்,
30-Jan-லிருந்து நான் எடுக்கும் பயணச்சீட்டுகள் இனி இரண்டாகும் :-)
இந்த முறையும் நான் பார்த்த பெண்ணுக்கு, கல்யாணம் நடக்கப்போகுது,
ஆனா இந்த முறை என்கூட நடக்கப்போகுது :-)
எனக்கே நம்ப முடியல, ஆனா என்ன செய்ய, நீங்க எல்லோரும் நம்பித்தான் ஆகனும் :-D
பாரதியார் சொன்னது எது செய்ய முடிஞ்சதோ இல்லையோ, ஏதோ என்னால முடிஞ்சது, சேரநன்னாட்டிளம் பெண்ணை கண்டது ;-)
பேசும் மொழியிலிருந்து, பார்க்கும் படங்கள், கேட்கும் பாடல்கள்,
படிக்கும் புத்தகங்கள், செய்யும் வேலை,கனவுகள்.... என பெரும் காரியங்களிருந்து,
பிடித்த நிறம், பிடிக்காத உப்புமா,வணங்காத கடவுள்கள்... என சிறு காரியங்கள் வரை,
பல வேறுபாடுகள் இருந்தாலும்
பயணங்களின் மேலிருந்த காதலே எங்களிருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தது..
சந்தித்த இடமொன்று, பழகிய இடமொன்று,
தொடங்கிய இடமொன்று.. என பயணித்துக்கொண்டிருந்தது
நாங்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து காதலும்தான் :-)
திருமண தேதி: 30-January-2011
இடம்: மதுரை
திருமண வரவேற்பு: 2-Feb-2011
இடம்: திருவனந்தபுரம்
பதிவுகள் எழுதி பலகாலம் ஆனதால் இந்த வலைத்தளத்தை எவரும் தொடரவோ படிக்கவோ செய்வார்கள் என்று நம்பிக்கையில்லை :-) , பதிவர்கள் எவரிடமும் தொடர்ந்து பேசியதும், பழகியதுமில்லை..
இருப்பினும் நண்பர்கள் இந்த நேரத்தில் மதுரையிலோ, திருவனந்தபுரத்திலோ இருந்தால் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :-)
மேலும் விபரங்கள் விரைவில்..
17 மறுமொழிகள்:
//இருப்பினும் நண்பர்கள் இந்த நேரத்தில் மதுரையிலோ, திருவனந்தபுரத்திலோ இருந்தால் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :-)//
இல்லை என்றாலும் வந்துடுவோம்ல
வாழ்த்துகள்
@புருனோ நன்றி Dr .. இடம் + மற்ற தகவல்கள் முடிவானதும் சொல்கிறேன், கட்டாயம் வரவேண்டும் :-)
@ஏழர நீங்களும்தான் :-)
வாழ்த்துக்கள்..வர முயற்சிக்கிறேன் !
வாழ்த்துகள் பாஸ் ! :)))
//இந்த நேரத்தில் மதுரையிலோ, திருவனந்தபுரத்திலோ இருந்தால் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :-)/
அட அப்ப நானெல்லாம் வந்தா ??
வர்றேன் பந்தியில ஒரு டபுள் ஃபுல் மீல்ஸ்க்கு ஏற்பாடிடுங்க :)
வாழ்த்துக்கள் நண்பரே.
>>சந்தித்த இடமொன்று, பழகிய இடமொன்று,
தொடங்கிய இடமொன்று.. என பயணித்துக்கொண்டிருந்தது
நாங்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து காதலும்தான் :-) <<
ஒரு மாதம் சொன்ன கதைய சில வரியில்
>>சந்தித்த இடமொன்று, பழகிய இடமொன்று,
தொடங்கிய இடமொன்று.. என பயணித்துக்கொண்டிருந்தது
நாங்கள் மட்டுமல்ல எங்களோடு சேர்ந்து காதலும்தான் :-) <<
ஒரு மாதம் சொன்ன கதைய சில வரியில்
Congratulations!!!
Vaazhthukkal :-)
Twitter மக்கள் எல்லாம் முந்திகிட்டாங்களே. வாழ்த்துக்கள் யாத்ஸ். பதிவு எழுதறது முன்னாடியே நிறுத்தியாச்சி, கண்ணாலம் ஆனா ட்விட்டருக்கும் கோவிந்தாவா?
அப்படியே உங்க காதல் கதைய புனைவா போடுங்கப்பா #திண்ணை_வெத்தலை
Ha. One more bites the dust.
வாழ்த்துகள் செந்தில்!
மதுரைல எங்கேய்யா கல்யாணம்?
//ஏதோ என்னால முடிஞ்சது, சேரநன்னாட்டிளம் பெண்ணை கண்டது ;-//
அப்படியே உங்க in-laws பக்கம் நல்ல வரன் இருந்தா நம்ம ஆயில்யனுக்கு ரெக்கமண்ட் பண்ணி விடுங்க. அவரும் விவேக் மாதிரி மலையாளி வேஷம் போட்டுகிட்டு கேரளாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்காதான்னு புலம்பிகிட்டு இருக்கார் :)
வாழ்த்துகள்.
மேலதிக தகவல்கள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.
@ஆயில்யன், இனி FigureOfTheDay நீங்க தான் எடுத்து நடத்தனும் போல. அட நடத்துனா மல்லு பிகர் கிடைக்கும் அப்படின்னு யாத்திரிகன் சொல்றார். :-)
Anna, though i din't understand quite a few words, I managed to read it in full. Cool. Din't know that u r such a great writer :)My best wishes are always with u :))))
கருத்துரையிடுக