யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 2 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
பாகம் 1

குப்பை பிரித்தெடுக்கப்பட்டு ஓர்வண்டியிலேற்றப்ப்பட்டவுடன் ஆட்டோக்கள் பிடித்து மீனாட்ச்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஜெயேஷ்பாயும்-ஜானும் சேர்ந்து எங்களின் அடுத்த திட்டத்தை வகுக்க தொடங்கினார்கள். கோவிலின் சுவரைச்சுற்றியிருக்கும் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களிடையே இருக்கும் குழந்தைகளுக்கும் வளர்ந்திருக்கும் அசுத்தமான விரல்நகங்களை வெட்டிசுத்தப்படுத்தி, அவர்களிடையே புன்னகையையும், மகிழ்ச்சிதரும் இதமான வார்த்தைகளையும் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்தோம்.

ஜான் பசித்திருபவகளுக்கு பிஸ்கட் வாங்கித்தரத்தொடங்க, தெரு வியாபாரியிடமிருந்து ஒரு துண்டை வாங்கிய நான், பொதுக்குழாயில் நீரில் நனைத்து, அங்கிருக்கும் குழந்தைகளின் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கைகளையும், முகங்களையும் துடைத்துவிடத்தொடங்கினேன். இதை தொடர்ந்துகொண்டே, 300 மீட்டர் செல்வதற்குள் ஒருமணிநேரம் சென்றுவிட்டது.

தென்கிழக்கு மூலைநோக்கி நகர்ந்துசெல்கையில், அவ்வழியிலிருந்த தெருசுத்தம் செய்பவர்களைக்கண்டோம். இந்தியாவிலிருக்கும் இவர்களுக்கும், அமெரிக்காவிலிருக்கும் இதே வேலை செய்பவருக்கும் இரண்டு முக்கிய வித்தியாசங்கள் உண்டு. முதலில், கூட்டுதலும், குப்பையை பெருக்குதலும் வெறும் கையாலையும், குச்சிகளால் செய்யப்பட்ட விளக்கமாறுகளாலும் செய்யப்படும். இந்த விளக்கமாறுகளால் கூட்டப்படும்போது, குனிந்து தரைக்கலருகில் கூட்டவேண்டும், ஆதலால் முதுகெழும்பை முறிப்பது மட்டுமின்றி, தூசுகளால் மூச்சு முட்டும் வேலையிது. இதுவே அடுத்த வித்தியாசத்தை கூறிவிடும், ஆம் இந்த வேலையை செய்பவர்கள் பெரும்பாலானோர் பெண்கள்.

அத்தனை கடினமான வேலைசெய்யும் இந்த பெண்கள் அணிந்திருக்கும் நேர்த்தியான உடையான புடவை , அவர்கள் செய்யும் வேலைக்குச்சம்பந்தமில்லாதமிடிலும் அவர்கள் வசதியிலிருக்கும் தாழ்வுநிலையின்றி அவர்களின் பண்பாட்டையும், கண்ணியத்தையும் எடுத்துக்காட்டியது.

பெண்மையின் வெளிப்பாடாக தென்னிந்தியாவில் நான் கண்ட மற்றுமொரு சின்னம் தலையில் சூடும் மல்லிகைப்பூக்கள். தெருவின் எதிர்த்த வரிசையில் அமர்ந்திருந்த பூக்கள் விற்பவர்களிடம் பூக்கள் வாங்கி, இந்த சுத்தம் செய்பவர்கள் மூவருக்கு பூக்கட்ட உதவுகின்றேன்.

அப்பொழுது அங்கே வந்த ஜெயேஷ்பாய் மற்றும் ஜான், இவர்களிடமிருந்து சிறிதும் யோசனையின்றி, அந்த விளக்கமாறுகளை வாங்கி கோவிலின் தெற்கு பகுதியை சுத்தப்படுத்தத்துவங்கினர். இந்த நேரத்தில் அஞ்சலியும், நானும் அவர்கள் கூட்டிவைத்த குப்பையை அள்ளி சைக்கிள்களில் ஏற்றத்தொடங்கினோம். அப்பொழுது தீப்தியும், நிராலியும் நடைபாதைகளில் குடியிருப்பவர்களின் விரல்நகங்களையும், முகங்களையும் சுத்தப்படுத்துக்கொண்டிருந்தனர்.

ஆச்சரியத்துடன் அங்கே கூட்டம் கூடத்துவங்கியது, ஒருவழியாக ஆங்கிலம் பேசத்தெரிந்த நபர் ஒருவரை கண்டு, நாங்கள் நாளை நடக்கவிருக்கும் எங்கள் நண்பர்களின் திருமணப்பரிசாக இந்த சேவையை செய்கின்றோமென்று அங்கே கூடியிருந்தவர்களிடம் விளக்கச்சொன்னோம். இதை அவர் விளக்கமுயற்சிக்க, மற்றவர்கள் மேலும் குழப்பத்திலேயே ஆழ்ந்தனர். இறுதியில் இதை ஒருவர் புரிந்துகொண்டார்: கூட்டத்திலிருந்து, தன் நெற்றியிலிருக்கும் தழும்பைவிட அகலமான ஒரு புன்சிரிப்புடன் தோன்றிய அவர், ஒரு முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட ஓர் ஆட்டோ ஓட்டும் இளைஞர்.

உரக்கவாழ்த்தியபடி வந்த அவரின் சிரிப்பிலிருந்த உற்சாகமும், கண்களிலிருந்த அன்பும் காணாவிட்டால் அது எங்களை அடிக்கவந்திருப்பதாகவே புரிந்துகொண்டிருப்போம்.

தொடரும்...

2 மறுமொழிகள்:

தாணு சொன்னது… @ வியாழன், டிசம்பர் 15, 2005 9:32:00 பிற்பகல்

புதுவிதமான ஆனால் கருத்துள்ள பரிசு. ஆனால் இரண்டு பதிவிலும், ஆங்கிலம் தெரிந்த ஒருவர் மூலம் விளக்கினோம் என்று எழுதியுள்ளீர்களே அது எனக்கு விளங்கவில்லை. தமிழ் உங்களுக்கு பேச வராதா? இல்லை என் புரிதல் தவறா?

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 15, 2005 10:45:00 பிற்பகல்

@தணு: வருகைக்கு நன்றி :-)

இந்த பதிவு, வேறு ஒரு நண்பர் பார்வையில் விவரித்துள்ளேன்..பதிவுன் ஆரம்பத்திலேயே அனைத்தயும் விளக்கி விடுவதைவிட... சிறிதும் குழப்பமின்றி தெளிவாக இருப்பதைவிட, இது சற்று சுவாரசியத்தைக்கூட்டுமென்று நினைத்தேன்.

இறுதிப்பகுதியில்,எங்கு நடந்தது, எப்பொழுது நடந்தது என்று விளக்கமாக கூறுகின்றேன். :-)

கருத்துரையிடுக