யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 4 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
இரவு உணவுதயாரகிவிட, நமது நடைபாதைசுத்தப்படுத்தும் நண்பர்கள் வரத்துவங்கினர், அவர்களைத்தொடர்ந்து மதியம் நாங்கள் உதவிய மற்ற நண்பர்கள். இறுதியில் மொத்தமாக 75 சாப்பாடு. வந்திருந்த விருந்தினர்களில் சிலர், மேலும் சாப்பிடஇயலாத சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டிருக்க, சிலர் சிரிக்கநேரமில்லாததுபோல் விரைவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த உற்சாகம், உணவுச்சாலையின் ஊழியர்களையும் தொற்றிக்கொண்டது, சாதம், சாம்பார், காய்கறிகள்,ரசம் மற்றும் தயிர்ரென மாறி, மாறி சுழன்றனர். ஜானும், அஞ்சலியும் தண்ணீருடன் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தனர். நிராலி,ஜெயேஷ்பாயுடன் நானும், விருந்தினர்களுடன் கலந்து உணவு உண்ணத்தொடங்கினோம்.

பின் வேகமாக முகம் கழுவிவிட்டு,உடைகளை மாற்றிக்கொண்டு திருமணத்திற்கு முந்தின நாள் நடக்கும் திருமணநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்து சேர்கையில், சிலமணி நேரங்கள் தாமதமாயிருந்தோம். சற்றே வேர்வைகலந்த வித்தியாசமானதொரு வாசனையுடன் நாங்களிருந்தபோதிலும், அந்த நாளின் இரண்டாவது கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.

பி.கு:
மன்னிக்கவும், அன்றைய சேவையின் புகைப்படங்கள் என்னிடமில்லை, அப்பொழுது காமிரா கொண்டுசெல்லத்தோன்றவில்லை, இருப்பினும் அப்பொழுது எங்கள் கைகள் வேறு வேலைகளில் மும்முரமாய்த்தானே இருந்தது.

ம.பி.கு:
அன்றைய தினத்திற்கு அடுத்தநாள் மதியம், வேறு ஒரு நண்பர்கள் குழுவுடன் - அஞ்சலி, ஜெயேஷ்பாய்,நிராலி,ஜான்,டிம்,ப்ரியா,ப்ரியாவின் அம்மா மற்றும் யோ-மி உடன் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திற்கு சென்று ஒருமணிநேர தியானத்தை புதுமணதம்பதியர்களுக்கு சமர்ப்பித்தோம்.

இந்த பதிவானது வேறு நாட்டைச்சேர்ந்த ஒரு நண்பரின் பார்வையில் விவரிப்பதாய் எழுதப்பட்டிருக்கின்றது, இந்த சம்பவம் நடந்த இடம், சூழ்நிலை, நண்பர்கள் என சில விளக்கங்களை அடுத்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.

26 மறுமொழிகள்:

ilavanji சொன்னது… @ வியாழன், டிசம்பர் 15, 2005 11:26:00 PM

மனுசங்கையா நீங்க!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 16, 2005 12:11:00 AM

@இளவஞ்சி:
அட குரு.. இப்போத்தேன் உங்க வலைப்பதிவ படிச்சிகிட்டிருந்தேன் அதுக்குள்ள நீங்க இங்கன , நன்றி...

உங்க பாராட்டை பெற்றவுங்க யாரு, எங்க,எப்போ இது நடந்துச்சுனு அடுத்த பதிவுல கட்டாயம் வந்து பாருங்க..

துளசி கோபால் சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 16, 2005 5:10:00 AM

செந்தில்.
அருமையான சேவை.

உங்களோட பெருந்தன்மைக்குத் தலைவணங்குகின்றேன்.

நல்லா இருங்க.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 16, 2005 6:32:00 AM

வருகைக்கு நன்றி துளசி அக்கா..

அடுத்த பதிவுல அந்த நண்பர்களோட விவரத்த கட்டாயம் வந்து பாருங்க..

இந்த பில்டப்னால அவுங்க பெரிய பிரபலமானவுங்கனு நெனைச்சிராதீங்க.. நம்மளை மாதிரி சாதாரணமனவுங்கதான்..

நம்மலாலயும் இப்படி பண்ண முடியும்னறத காமிச்சவுங்க..

பெயரில்லா சொன்னது… @ ஞாயிறு, டிசம்பர் 18, 2005 12:18:00 AM

கைபுல்ல கலகிடிக....ரொம்ப நால நா ஊங்க pathi pugala padichu tu varean.....
evalo late ta va entha pathipugala veliedurathu(late ta vantha lu latest ta vanthu eruku)....valkai la 10 nimusham nalla karuthu kala thericju ketean....
unmayeal neega tha manithan...thi namu elunthom...orusothu nom,,,appa kasa grl frnd ku selavu panoom,cell la msg anupu nom nu unga collage life va veenpanama...super rana seyalgalai senjuerukiga....
ungala maathi ri nalla manithar gal la erukura nalla tha america vu ku enu alivuvarala...
India need youth like u senthil...en tha pathi pa padicha oodan nenaichean...ungala pathi nalla poorunju ketean...nalla nabargal natpu...nalla valkaiya amaiku ella ya?..
Neega anga panuna tharmam endrum..endrum ungali kakum...
Amma unga veetu la etha pathi enna sonnaga...esp ur dad..romba kadi panavaga la...ethavathu thitunagal ?...

பெயரில்லா சொன்னது… @ ஞாயிறு, டிசம்பர் 18, 2005 3:45:00 PM

கதை கதை யாம் கார்ணமாம் காரனதில் தொரணமாம்...ரொமப அருமையன பதிப் பு வைடிங் பார் தெ நெ௯ட்.......................

பெயரில்லா சொன்னது… @ ஞாயிறு, டிசம்பர் 18, 2005 3:59:00 PM

I read ur publishes really superb....etha pathi comment elutha na thaguthi ya navan ella.....sari nega ethu ku
//அங்கிருந்த ஆங்கிலமறிந்த ஒருவர் மூலம் அவர்களுக்கு விளங்கச்செய்தோம், மேலும் அவர்களின் இந்த சேவையில், எங்கள் நண்பர்களின் திருமணபரிசாக பங்கு கொள்கின்றோம் எனவும் புரியவைத்தோம். //
yean entha anniyan na expalin panna sonniga...tamil therium la ungaluku...athu tha kolpama eruku

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:41:00 AM

@நலன் விரும்பி:
வாங்க நலன் விரும்பி..எனக்கெல்லாம் நலன் விரும்பி இருக்காருன்றதே ஆச்சரியமா இருக்கு.. ரொம்ப நன்றி..

இந்த சம்பவத்தை பதிவு பண்ணனும்னே முதல்ல தோணல, ஆனா இது படிச்சதும், அட ஒருத்தர் கிட்டயாவது, ஒருமுறையாவது ஒரு மாற்றத்தை கொண்டுவராதான்ற நம்பிக்கையில பதிக்கத்தான் அந்த சின்ன இடைவெளி...

ஹைய்யய்யோ.. இந்த செயல்களெல்லாம் பண்ணது யாருன்னு தெரியாம பேசுரீங்களே.. அடுத்த பதிவுல பாருங்க..

>>america vu ku enu alivuvarala

இருந்தாலும் உங்களுக்கே ஓவரா தெரியலைங்களா !!! ஹிஹிஹி !!!

உன் நண்பர்களைப்பற்றி சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன்னு சும்மாவா சொன்னாங்க... சரிதானுங்க..

அப்பா இதெல்லாம் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.. ஆனா என்னவோ தெரியல அப்பா கிட்ட இதெல்லாம் பகிர்ந்துக்கல.. அம்மா வேணா என்னடா இதெல்லாம்னு சொல்லிருப்பாங்க.. :-)

நலன் விரும்பினு வேற சொல்லிருக்கீங்க.. அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டு.. உங்க பார்வைய பதிச்சிட்டு போங்க...

என்னங்க பேரு அது.. கைபுல்ல.. மதுரக்காரன்றதாலயா ?! ;-)

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:43:00 AM

@அண்டங்காகா:
காகா !!! நன்றிங்க..

ஆனா, சத்தியமா.. இது கதை இல்லீங்கண்னா.. நெசமாலுமே நடந்தது..

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 2:46:00 AM

@சஞ்சய் ராமசாமி:

என்னங்க பெரிய வார்த்தையெல்லாம்.. அதான் சொன்னேன்ல.. அத செஞ்சவுங்க சாதாரண ஆளுங்க.. நம்மலாலயும் முடியுங்க.. அத வலியுறுத்தி பலருக்கு சொல்லத்தான் இந்த பதிப்பே..

இந்த பதிப்பே, அதில் பங்கு கொண்ட ஒரு வேற்று நாட்டு நண்பர் பார்வையில் பார்பது போல் பதிக்கப்பட்டிருக்குங்க..

கொஞ்சம் வேலை அதிகமா இருக்குது, அதான் அடுத்த பதிவுக்கு நேரமாகுது..

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 4:09:00 PM

எப்படி மா எப்படி இதெல்லாம்... னா சாச்சுபுடுடிகலெ......சூபர் அண்ணா...என்னனொட புல்சபொடும் உங்கலுகு தான்......

Harish சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 10:37:00 PM

kelaparayyaaaa.....

Ram.K சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 20, 2005 11:52:00 PM

செந்தில்,
உங்கள் சேவை மற்றும் பெருந்தன்மை பாரட்டப்படவேண்டியது.
வாழ்த்துக்கள்

யாத்ரீகன் சொன்னது… @ புதன், டிசம்பர் 21, 2005 10:07:00 PM

@venkat:
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி வெங்கட்.. எதுக்கு "புல்சபொடும்"-னு சொல்லவே இல்லையே ;-)


@Harish:
கெளப்புனது நான் இல்லப்பு.. நண்பர்கள்...

@Chameleon:
பாரட்டப்படவேண்டியதும், வாழ்த்தப்படவேண்டிய நண்பர்கள் பற்றி அடுத்த பதிவில் விரைவில் குறிப்பிட வேண்டும்.. அத்துடன் அவர்களுடன் நடந்த ஒர் முக்கியமான உரையாடலையும் குறிப்பிடவேண்டும் அடுத்த பதிவில்,..

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 27, 2005 12:09:00 PM

machi.. machi..machi

யாத்ரீகன் சொன்னது… @ புதன், டிசம்பர் 28, 2005 8:38:00 PM

@fasdf:
வா மச்சி.. எப்டிக்கீர.. சொல்ல வந்தத.. பாதில விட்டுட்ட போல !!! :-)

Pot"tea" kadai சொன்னது… @ வியாழன், டிசம்பர் 29, 2005 3:06:00 PM

வாழ்த்தறம்பா!
நீங்க தான்பா மனுசனுங்க!

Maayaa சொன்னது… @ திங்கள், ஜனவரி 02, 2006 11:11:00 PM

I have blogrolled you.. yet to read ur post!

பெயரில்லா சொன்னது… @ புதன், ஜனவரி 11, 2006 11:17:00 PM

romba arumai senthil....nalla pathipu....yea enum mounam adutha pathipa velvedu seekaram...

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 13, 2006 4:46:00 PM

@pot"tea"kadai:

உங்கள் வாழ்த்துக்களை கட்டாயம் அந்த நண்பர்களிடம் சேர்த்துவிடுகின்றேன்..

@priya:
நன்றி ப்ரியா.. படித்து கருத்தைப்பரிமாறுங்கள்..

@radika:
அம்மு இது நிஜமாவே (?!) நீங்களா இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷம் :-) இல்ல என்ன கலாய்க்குற கல்லூரித்தோழர்களா இருந்தா டேய்.. இந்த வலைத்தள முகவரி எப்படி கிடைச்சது ?! எப்படியோ உஙக வருகைக்கும், நக்கலுக்கும் சந்தோஷம் ;-)

மத்தபடி நீங்க குறிப்பிட்ட அந்த dream girl (மன்னிச்சுக்குங்க அம்மு) ராதிகா இல்ல.. அந்த dream girl மிக நெருங்கிய நண்பர்களுக்கே தெரியாத "காயத்ரி" என்ற கற்பனை கதாபாத்திரம், அவுங்கள சந்திப்பேனானு தெரியல :-(

Ravindran Ganapathi சொன்னது… @ வியாழன், ஜனவரி 19, 2006 11:33:00 PM

Arumaiyana pathivu... ungal punai peyar ennai pala varudangal pinnoki kondu sendrathu(Bagkya'vil yatriganin katuraigalai virumbi padithavaragalil nanum oruvan)

Dei iruda... gaytri mattera group'la post panni ragalai arabikkaren.

பெயரில்லா சொன்னது… @ திங்கள், ஜனவரி 23, 2006 12:18:00 AM

hmm...paravaella senthil enna enum marakala...nee chennai vanthu ta polla...yean epo vanthu ta..hey nama college frnds ellaru keetaum contact unda?....hmm....enna un aduthapathipu enum varala senthil....un blogil velzhi vaithu kathu kondu erukirean....
na un dream gl ella ya :-((((sari paravaella.....give me ur email id....

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், ஜனவரி 24, 2006 4:11:00 PM

@ரவி:
ரவி உன் மறுமொழியைப்பார்த்ததும் சந்தோஷம், ஆமாம் பாக்யாவில் வந்த அந்த தொடரை எழுதிய புனைப்பெயரே இதற்கு ஒரு விதத்தில் இன்ஸ்பைரேஷன் :-)

அதான் காயத்ரி இதுவரை ஒரு கற்பனை கதாபாத்திரம்னு சொல்லிட்டேன்ல.. இன்னும் நம்பலையா :-)))

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், ஜனவரி 24, 2006 5:09:00 PM

@ammu(radika):

:-)))) ஹாஹாஹா!!!! நம்ம கல்லூரி நண்பர்களா.. சரிங்க.. (ஆமா நமக்கு எப்போ பொதுவான கல்லூரி நண்பர்கள் இருந்திருக்காங்க) நீங்க யாருனு சொல்லாட்டியும் உங்க எழுத்து நடையில இருந்து கண்டுபிடிச்சிட்டேன் நண்பரே.. :-)

இன்றுதான் சென்னை அலுவலகத்தில் எல்லாம் ஆகி வலைப்பூ பதிய தொடங்கி உள்ளேன்.. (ஒருவழியா..) இனி சிறிது நாட்களுக்காவது தவறாமல் தொடருமென நினைக்கின்றேன்..

Maayaa சொன்னது… @ புதன், பிப்ரவரி 01, 2006 11:28:00 AM

செந்தில்
எப்போ அடுத்து எழுதப் போகிறீர்??

பெயரில்லா சொன்னது… @ வியாழன், ஆகஸ்ட் 19, 2010 2:56:00 AM

Nice fill someone in on and this fill someone in on helped me alot in my college assignement. Gratefulness you for your information.

கருத்துரையிடுக