யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

உடலினை உறுதி செய்

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006
ஒன்பது வயது குழந்தை ஒன்றுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலை எந்த வகை இரத்தமாயினும் பரவாயில்லை, ஆனால் சில உடல்நலக்குறைபாடுகள் இல்லாமலிருக்க வேண்டும் என்று ஒரு மின்னஞ்சல் கிடைத்தவுடன்,

அதில் குறிப்பிட்டிருந்தவர்களை கூப்பிட்டு என் விருப்பத்தை சொல்லிவிட்டேன், சிறிது நேரத்தில் வந்து கூட்டிச்செல்வதாக சொன்னார்கள்.

விடாத இருமலும், சளியும் நேற்றுதான் குறைந்திருந்ததாக தோன்றியது, ஆனாலும் ஒரு சின்ன தயக்கம், மருத்துவமனை சென்றபின் இந்த உடல்நலக்குறைவை காரணம் காட்டி என்னை மறுத்துவிடுவார்களா என்று...

உடனே ஜீவிக்கு கூப்பிட்டு உறுதிசெய்துகொண்டேன், இந்த உடல்நலக்குறைவு எந்த வகையிலும் இரத்ததானம் செய்வதை பாதிக்காது என்று.. நல்லவேளை..

அங்கே சென்றபின் இந்த காரணத்தை காட்டி மறுத்திருந்தால் மனது மிகவும் கஷ்டமாயிருந்திருக்கும், இதற்காவது நம் உடல்நிலையை நல்லபடியாக வைத்திருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்....

2 மறுமொழிகள்:

Unknown சொன்னது… @ வியாழன், மார்ச் 02, 2006 4:06:00 பிற்பகல்

பாராட்டுக்கள்!

நீங்கள் 'மாதவன்' மாதிரி இருக்க மாட்டீர்கள் என நினைத்திருந்த்தேன் (உங்கள் போட்டோவைப்பற்றி சொல்லவில்லை, எதுவென்று கண்டுபிடியுங்கள்). நினைப்பு சரிதான் என நிரூபித்து விட்டீர்கள்.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 06, 2006 3:57:00 பிற்பகல்

:-))))))))) அஹா.. நீங்க இன்னும் இந்த போட்டோவை நக்கலடிக்குறதை நிப்பாட்டலையா :-))))) நன்றி துபாய்வாசி

கருத்துரையிடுக