யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

அதிமுக Vs திமுக

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மார்ச் 07, 2006

ஹீம்... அதிமுகவா, திமுகவானு எல்லோரும் அடிச்சிகிறாங்க...

கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள்னு நாம ஓட்டு போட்டுடோம்னா..

இந்த தேர்தல் கூட்டணியிலிருந்து அவர்கள் விலகி, ஒரு வித்தியாசமான தமிழகத்துக்கு தேவையான ஆண்டு அனுபவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிய கட்சிகளிடமிரிந்து மாற்றத்தை கொண்டுவருவாங்கனு தோணுது...


அரசியலில் நேர்மை, கொள்கை, சுயமரியாதை என்று பேசும் எத்தனை பேர் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை பிடிப்பை பாராட்டுவார்கள், மதிமுகவிற்கு திமுக கூட்டணியிலிருந்தால் ஓட்டு போட்டிருப்பர் ?


ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தால், அதற்கு கடிவாளம் வைகோ போடுவதற்கு வாய்ப்பும் அமையலாம் அல்லவா ?

அல்லது தேர்தலில் அதிக இடம் வைகோ ஜெயித்தபின், மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் அல்லவா ?

என்ன சொல்றீங்க.. ?!

8 மறுமொழிகள்:

Krishna சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:30:00 பிற்பகல்

Ada Ponga sir, ammava paththi onnume theriyaliye ungalukku. Not all the seats will be winnable seats to MDMK. She knows VaiKo will be a thrreat later. So tough seats will be major part of the seats. MDMK will get many seats only when there is a sweeo of ADMK alliance in which case his MLAs will have no power, simply like Congress, PMK and communists MLAS in the present assembly.

BALAJI சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:40:00 பிற்பகல்

அரசியல்வாதிகள்

சுயநலப்போக்கை கைவிடும் வரை

மக்களை மக்களே காப்பாதிக்க வேண்டியது தான்...

பா.ம.க ஒரு பண்படாத கட்சி

அதனால் மக்களுக்கு பாதகமே தவிர வேறொன்றும் இல்லை....

selvan சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:48:00 பிற்பகல்

-If ADMK wins single majority Jaya will be CM.
-If DMK wins single majority M.K will be CM.
-If ADMK&DMK lose single majority Jaya will support Vaiko for CM.
-If ADMK &DMK lose single majority MK will ask support from all to make Stalin as CM.
--If ADMK &DMK lose single majority and if MDMK is with DMK, Vaiko will never get chance to become CM.

Chance of becoming CM for Vaiko is more bright if he is with ADMK. Now everybody will accept that Vaiko decision is right.Good for tamilians

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:51:00 பிற்பகல்

@கிருஷ்ணா: அது வைகோவோட சாமர்த்தியத்தை பொருத்து.. :-) நீங்க சொல்றது மாதிரி நடப்பதுக்கு வாய்ப்பு நிறையவே இருக்கு... இந்த பதிவை எழுதும்போதே.. இதுக்கான சாத்தியக்கூற்கள் கம்மினு தோணுச்சு, ஆனா, புதுசா முயற்சிபண்ணுவதில் தப்பில்லைனு இதை பதிச்சேன் :-)

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:53:00 பிற்பகல்

@பாலாஜி:
அது ஒரு ஐடியலான கேஸ்.. அதுக்காக.. தேர்தலில் ஓட்டுப்போடாம இருந்திர முடியுமா.. அதிலும் நம்மாலான முயற்சியை கையாண்டுகொண்டே இருக்க வேண்டும்..

திடீர் பொறுப்பு சில மாற்றங்களை கொண்டுவரலாமல்லவா ?

G.Ragavan சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:54:00 பிற்பகல்

இப்படி வெச்சுக்கலாமா......மதிமுக போட்டி போடுற எடத்துல அதுக்கு ஓட்டுப் போடலாம். இல்லாத எடத்துல காங்கிரசோ பாமகாவோ விஜயகாந்தோ இருந்தா அவங்களுக்கு ஓட்டுப் போடலாம். இவங்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டது போக மிச்ச எடங்கள்ள திமுகவுக்கோ அதிமுகவுக்கோ போடலாம்......ஆனாலும் ஒரே கொழப்பமா இருக்கே.

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:55:00 பிற்பகல்

@செல்வன்:
நீங்கள் கூறியதில் 3ஆவது கருத்து எனக்கென்னமோ ஜெவின் நடவடிக்கை அப்படி இருக்கும் என்று நம்பிக்கையில்லை ... தேர்தல் முடிவில் தெரிந்து விடும்

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், மார்ச் 07, 2006 8:57:00 பிற்பகல்

அதைத்தான் சொல்லவந்தேன் இராகவன்... இறுதியில் குழப்பமான கூட்டணி ஆட்சிதான் :-) ஆனால் மக்கள் எந்த வகையில் இப்படி ஓட்டளிப்பார்கள் என்பது சந்தேகமே...

கருத்துரையிடுக