யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தானத்திலே சிறந்ததெது ?

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006



நண்பர்: நான் ஒல்லியா இருக்கேன், நான் இரத்தம் குடுக்க மாட்டேன்பா
நான்: குண்டாயிருந்தா நிறையவும், ஒல்லியா இருந்தா கொஞ்சமும் எடுக்க மாட்டாங்க, ஆரோக்கியமா இருந்தா போதும், கொஞ்சம்தான் எடுப்பாங்க
மனசாட்சி: மவனே, தின்னு கொழுத்து போயிருக்க, உன்னை கடத்திட்டு போய் ஒரு பாரல் எடுக்கலாமேடா, அவனுக்கென்னடானா 10 பாட்டில் இரத்தம் தேவை நீங்க ரெண்டு பேரும் இந்த பேச்சா பேசுறீங்க...

நண்பர்: ஹைய்யோ, இரத்தம் குடுக்குறது, எங்க மதத்துல தப்புங்க
நான்: இதுல தப்பு என்னங்க இருக்கு, ஒருத்தருக்கு உதவிதானே பண்றோம்..
மனசாட்சி: !%^&!@!@#

நண்பர்: நிறைய இரத்தம் எடுக்க மாட்டங்கள்ல ?
நான்: இல்லீங்க நம்ம உடம்புல சராசரியா 5 முதல் 6 லிட்டர் இருக்கும் அதில் 300 மிலி மட்டும்தாங்க எடுப்பாங்க.
மனசாட்சி: இவர் அன்பே சிவம் படம் பார்க்கலையா?

நண்பர்: நீங்க இதுதான் முதல் முறையா ?
நான்: இல்லீங்க இதுக்கு முன்னாடி குடுத்திருக்குறேன்
மனசாட்சி: கிட்னியாங்க கேட்டாரு, கொஞ்சம் இரத்தம் தானே...

நண்பர்: டயாலிசிஸ்னா என்னங்க ?
இன்னொரு நண்பர்: அதுவா... உடம்புல இருக்குற இரத்தத்தை மாத்துவாங்க.
நான்: இல்லீங்க, சிறுநீரகம் வேலை செய்யலைல, அதுனால இரத்தத்தை சுத்தப்படுத்த உடம்பால முடியாது, அதுனால ஒரு மிஷின் வச்சி இரத்தத்திலருந்து அசுத்தத்தை பிரிச்சு எடுப்பாங்க..
மனசாட்சி: நமீதாவோட லேட்டஸ்ட் படம் கேளு அவனுக்கு தெரியும், ஒக்காமக்க வெளுக்கனுமடா ஒன்னை...

நண்பர்: அப்போ எதுவரைக்கும் இது பண்ணவேண்டி இருக்கும் ?
நான்: மாற்று சிறுநீரகம் பொருத்துறவரைக்கும் பண்ணவேண்டி இருக்கும். மாற்று சிறுநீரகமும் யாராலயும் குடுக்கமுடியாது, டிஸ்யூ மாட்ச் ஆகவேண்டும் அதுவும் பெற்றோருக்கு மாட்ச் ஆகும் என்று சொல்ல முடியாது, பின்னர் மருத்துவ கவுன்சில் ஒன்றின் முன் தானம் செய்பவர் ஆஜராகி மனமுவந்து குடுப்பதை தெளிவுபடுத்தவேண்டும், என பல பார்மாலிட்டீஸ் உண்டுங்க...

இதையெல்லாம் கேட்டவர் யாருனு நினைக்குறீங்க, மருத்துவமனையில் அருகிலிருந்த ஒரு கிராமத்தவர் ? இல்லை !!!, சாதாரண ஒரு பாமரர் ? இல்லை !!!,

கேட்டது, சென்ற வருடம் பொறியியல் படித்து முடித்து, தற்போது கணிப்பொறி மென்பொறியாளராய் பணி புரிகின்றார்....

ஆச்சரியமாய் இருக்கின்றதல்லவா ? எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது... படித்தவர்களே இப்படியா என்று :-(

தேவையறிந்ததும் உடனே இரத்ததானம் அளிக்க வந்த அவருடைய மனப்பான்மையை பாரட்டுகின்றேன் அதே நேரத்தில் அவருடைய அறியாமையை நினைத்து வருந்துகின்றேன்.....

இரத்ததான தகவல்கள்:
1) 18 வயதுக்குமேல், 45 கிலோவுக்கு மேலிருந்தால் போதும்
2) சராசரியாக 5 முதல் 6 லிட்டர் இரத்தம் நம் உடம்பில் உண்டு
3) யாராயிருந்தாலும், எவ்வளவு ஆரோக்கியமாயிருந்தாலும் 300 மி.லி மட்டுமே எடுப்பார்கள்
4) 24/48 மணி நேரத்துக்குள் இரத்தம் சுரந்துவிடும்
5) இரத்ததானத்துக்கு பிறகு சிறப்பு உணவுப்பழக்கமோ, சிறப்பு உணவோ தேவையில்லை
6) 48 மணி நேரத்துக்கு முன் எந்தவித மருந்தும் உட்கொண்டிருக்க கூடாது
7) கடந்த மூன்று வருடங்களில் ஜான்டிஸ் இருந்திருக்க கூடாது
8) தானம் செய்பவர்களுக்கு அனீமியா, சர்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்க கூடாது

இதோடு சுத்தமான ஊசிகள் பயன்படுத்துவதை நாமும் உறுதிப்படுதிக்கொள்ளவேண்டும், காரண்ம் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமலிருக்க.

பயப்படாமல் இரத்ததானம் செய்திடுங்கள், ஓர் உயிரை காத்திடுவோம்..

மேலும் தகவல்களுக்கு:

1) http://members.rediff.com/bloodbank/bloodbanking.htm
2) http://www.iisc.ernet.in/medicare/bld.htm
3) http://www.google.co.in/search?hl=en&q=blood+donation+facts&meta=cr%3DcountryIN

5 மறுமொழிகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது… @ வியாழன், மார்ச் 02, 2006 6:42:00 PM

செந்தில்,
இந்தியாவில் இருந்த வரை நான் தொடர்ந்து இரத்தம் கொடுத்து வந்தவந்தான்.
இங்கே அமேரிக்காவில் இரத்தம் கொடுப்பதற்கு முன் கிட்டத்தட்ட ஒரு நேர்முகத்தேர்வே நடத்துகிறார்கள்.
இந்தியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்தால், இங்கில்லாத வியாதிகள் இரத்ததில் இருக்குமாம். அதனால் எடுத்துக் கொள்ள மாட்டார்களாம். போய் வந்து ஒரு வருடத்திற்கு மேலாயிருக்க வேண்டுமாம்.
இவர்களுக்காக நான் என் தாயகம் வராமல் இருக்க முடியுமா? அதனால் இரத்தம் கொடுப்பது நின்றே போய்விட்டது. :(

சீனு சொன்னது… @ வியாழன், மார்ச் 02, 2006 7:43:00 PM

//24/48 மணி நேரத்துக்குள் இரத்தம் சுரந்துவிடும்

நான் அறிந்த வரையில் நம் உடம்பில் எடுக்கப்பட்ட இரத்தம் சுரப்பதர்க்கு 3 மாதம் வரை ஆகும். உடம்பு இழந்த இரத்தத்திற்கு பழக்கப்பட வேண்டுமானால் 24 / 48 மணி நேரம் பிடிக்கும். சற்று விளக்கவும்.

சீனு.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 06, 2006 4:17:00 PM

@கொத்ஸ்: ஹீம்.. கேட்டறியாத புது தகவல், ஆனாலும் அவர்களைவிட நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் அல்லவா :-) , உங்களின் இந்த நல்ல செயல் உங்களோடு நிற்காமல் உங்களைச்சார்ந்தவர்களிடமும் பரவட்டும்

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 06, 2006 4:21:00 PM

@சீனு:
இரத்த fluid சுரப்பதற்கு 24/48 மணி நேரம் வரையே ஆகும், ஆனால் இரத்ததானத்தினால் நாம் இழக்கும் சிவப்பு இரத்த அணுக்கள் சுரந்து முழுமை அடவதற்கு 2 மாதங்கள் ஆகும், ஆகவே இரு இரத்த தானங்களிடையே முழு 3 மாதங்கள் வேண்டும்....

ஒரு மருத்துவ நண்பரிடம் கேட்டு உறுதி செய்து கொண்டது.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 06, 2006 4:22:00 PM

@செந்து:
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.... அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

கருத்துரையிடுக