யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - Dr.V

Published by யாத்ரீகன் under on வியாழன், ஜூலை 27, 2006
இந்த மாமனிதரையும், அவரின் மருத்துவமனையைஉம் கிட்டதிட்ட அனைவருமே கணித்துவிட்டனர்...

தெரியாதவர்கள் வருத்தம் கொள்ளவேண்டாம், அவர் யாரென்று தெரிந்துகொண்டு மரியாதை செய்ய மற்றொரு தருணம் இது..

யாரவர் ?

அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சுமார் 2 மில்லியன் மக்களிடமும், 1,60,00,000 வெளி நோயாளிகளிடமும் அன்புடன் Dr.V என்றழைக்கப்பட்ட , திரு. கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களே இந்த கட்டுரைக்கதாநாயகர், மாமனிதர்.


இந்த 83 வருட இளைஞரே மதுரை அரவிந் கண் மருத்துவமனையை உருவாக்கியவர். சற்று மனதை கனக்கச்செய்யும் செய்தி, சமீபத்தில் காலமாகிவிட்டார் என்பதே.

கண் மருத்துவத்துறையில் அவர் ஒரு சகாப்தம், இலவச கண் சிகிச்சை முகாம்களை 1970லிலேயே நடத்திக்காட்டிய முன்னோடி.

அவரின் அரவிந்த கண் மருத்துவமனையின் செய்ல்பாடுகளை, பல உலகநாடுகளில் உள்ள மருத்துவமனைகள் வந்து படித்துச்சென்று, செயல்படுத்தி வருகின்றன..

சில மாதங்களுக்கு முன்பு கூட Dr.V, கிட்டத்திட்ட அனைத்து தினங்களுக்கும் அரவிந்திற்கு வருகை தந்து வேலை செய்துகொண்டிருந்தார். மருத்துவமனைக்கு சீக்கிரம் செல்பவர்கள், அவர் அங்கே தன் பிரார்த்தனையுடன், அந்த நாளுக்காக ஆயத்தமாவதைக்கண்டிருக்கக்கூடும்... அவர் சொல்லிக்கொள்வதைப்போல..

"..புனிதமான வேலைக்கான சிறப்பான கருவியாய்..."

சமீபத்தில் கோமாவில் சென்ற இவர், அதிலிருந்து மீண்ட உடனே, மருத்துவமனையை சக்கர நாற்காலியில் சுற்றிச்சென்று, வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தாரென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.... என்ன ஒரு அர்பணிப்பு..

தன் வாழ்நாள் முழுவதும், சிறிதென்பதை மறுத்து வந்த Dr.V தனக்குத்தானே எப்பொழுதும் கேட்டுக்கொள்கிறார், "என் பணி என்னை எப்படி ஒரு மேலும் சிறந்ததொரு மனிதனாக மாற்ற முடியும், எப்படி இந்த உலகை சிறந்ததாக மாற்ற முடியும்" என்று.

இத்தகைய தனித்துவமானதொரு நோக்கத்தை முன்னிருத்தி அவரிடம் "உங்களுக்களிக்கப்பட்ட பரிசாக/வரமாக எதை கருதுகின்றீர்கள்" என்று கேட்டதற்கு, "பலர் தங்களுக்கு பார்வை அளித்ததற்கு என்னை வாழ்த்துகின்றனர், என்னைப்பொருத்தவரை, என்னிடமிருப்பதைக்காட்டிலும், பிறருக்கு என்னால் அளிக்க முடிந்ததையே மிகப்பெரும் பரிசாக/வரமாக நினைக்கின்றேன்" என்பதுதான் அவரின் பதிலானது.

அவரின் மருத்துவமனைகளில் நடைபெரும் ஆராய்ச்சிகளை வரவேற்கும் Dr.V, அதே நேரத்தில், நிபுணர்கள் (Consultants) ஏழைகளைப்பற்றி பேசும்போது உடனே சொல்கிறார், "அரவிந்தில் உள்ள எவரும் ஏழைகள் என்ற சொல்லை பயன்படுத்துவதுகூட கிடையாது". "ஏழை என்பது பண்பற்ற சொல், ஏழைகள் என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தும்போது, அது அவரை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமில்லை, அவர் எந்த வகையில் ஏழை என்பதை அவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகின்றது..."

மேலும், "நீங்கள் இலவச மருத்துவமனைக்கு தனியாக தகுதி பெறத்தேவையில்லை, நாங்கள் யாரையும் கேள்விகள் கேட்பதில்லை, நாங்கள் சில நேரம் பணக்காரர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கின்றோம், நாங்கள் வியாபாரம் நடத்தவில்லை, அவர்களுக்கு பார்வை அளிக்கின்றோம்" என்று அவர் சொல்லும் போது, அவர் செயல்களில் உள்ள உன்னதம் புரிகின்றது.

இதோடு நிற்காத அவர், 1978-ஆம் ஆண்டு "சேவா பவுண்டேசன்" எனும் தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த நிறுவனம் இபோது நேபாள்,திபெத்,கம்போடியா,பங்களாதேஷ்,எகிப்து,டான்சானியா மற்றும் Gஉஅடெமல போன்ற நாடுகளில் எல்லோராலும் பெறக்கூடிய கண் சிகிச்சையை செய்து வருகின்றது.

இவரைப்பற்றிய சில சுவாரசியமான நிகழ்வுகள்:
Dr.V, சுவற்றில் சாய்ந்தபடி கொஞ்சம் நிலைதடுமாறியவரைப்போல் நின்றுகொண்டிருக்கின்றார், அதைக்கண்ட மருத்துவர் ஒருவர் உதவி செய்ய முயல, அதற்கு அவரின் பதில், "உன்னால் எனக்கு உதவ முடியாது, நான் இந்த சுவற்றை சாய்ந்துவிடாமல் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்" என்றாராம் :-) , தன்னம்பிக்கையையும் நகைச்சுவையுணர்வோடு.

மருத்துவமனையின் புதிய வாயிற்காப்பான், இவரை அறியாமல், மக்களின் வழியை மறிக்காமல் உட்காருங்கள் பெரியவரே என்று கூறியதும், அதன் படியே வரவேற்பறையில் உட்கார்ந்து விடுகின்றார். அவரை அறிந்தவர்கள் வந்து ஏன் என்று கேட்டதற்கு, "என்னால் இப்போது செல்ல இயலாது என்று கூறி விட்டனர், அதனால் காத்திருக்கின்றேன்" என்றாராம்.

ஒருநாளுக்கான அதிக அறுவைசிகிச்சைகள் (155) செய்த உஷா அவர்களிடம் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி, "கிராம முகாம் ஒன்றை முடித்துவிட்டு 102 டிகிரி காய்ச்சலுடன் மருத்துவமனையில் சேர்ந்த அவரை, காலையில் மருத்துவமனை வந்த Dr.V, "என்ன ஆனது " என்று கேட்க, "காய்ச்சல்" என்ற பதிலை கேட்ட அவர் சிறித்துக்கொண்டே, "என் காய்ச்சல் 104, உன்னுடையது ?" என்று சிரித்துக்கொண்டே கேட்டதுதான் தாமதம், உஷா படுக்கையை விட்டு வேலைக்குச்செல்கிறார். என்ன ஒரு மன/உடல் உறுதி.

ஒரு முறை, டெல்லியைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அரவிந்திற்கு வருகை தந்து, "எனக்கு ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும், இந்த மருத்துவமனை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது, உங்களால் என்னுடன் வரமுடியுமா" என்று கேட்டதற்கு, Dr. V, "உங்களிடம் தான் அதற்கு சாத்தியமான பணம் உள்ளதே உங்களால் முடியும்", என்று பதில்ளளிக்க. அந்த தொழிலதிபர், "எனக்கு வெறும் மருத்துவம்னை வேண்டாம், அரவிந்தின் கலாச்சாரத்துடன் ஒரு மருத்துவமனை வேண்டும், இங்கே மனிதர்கள் விலைமதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள், பணத்தை விட அவர்களே மதிக்கப்படுகின்றார்கள். அவர்களிடம் ஒரு கருணை தெரிகின்றது, எப்படி உங்களால் முடிகின்றது".


இவர் வாங்கிய விருதுகள்:
* இந்தியாவின் உயர்ந்த பத்மஷிரி விருது
* ஹெலன் கெலர் சர்வதேச விருது
* AAOவின் IAPB (International Blindness Prevention) விருது
* உலக சுகாதார மையத்தின் "எல்லோருக்கும் உடல்நலம்" விருது (WHO Award for Health for Al)
*Academy International Blindness Prevention Award
*International Social Entrepreneurship Award
*Medal of the Presidency of the Italian Republic
* Demonstrated the link between vitamin A deficiency and childhood blindness.
* Developed and pioneered the concept of eye camps and safe assembly-line techniques, which have become models for blindness prevention and treatment programs worldwide.
* Personally performed over 100,000 successful eye surgeries.
* While at the Government Erskine Hospital, introduced the following for the blind:
* Eye Camp Programme (1960)
* Rehabilitation Center for the Blind (1966)
* Low Vision Aid Clinic (1968)
* Glaucoma Demonstration Center (1968)
* Ophthalmic Assistant Training Program (1973)
* Rural Rehabilitation for the Blind Project (1973)


இவரின் முக்கியமான ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் மேலாண்மை பற்றிய சாதனைகள்:
* Lifetime Service Award from the International Agency for the Prevention of Blindness,

* 1982 Honorary Doctorate from University of Illinois,
* 1985 Lions Clubs’ Melvin Jones Fellow Award,
* 1987 Harold Wit Lectureship, Harvard Divinity School,
* 1991 Pisart-Lighthouse for the Blind Award,
* 1992 International Blindness Prevention Award, American Academy of Ophthalmology,
* 1993 Susrata Award, Asia Pacific Academy of Ophthalmology

இவரின் புத்தக படைப்புகள்
கண் மருத்துவ உலகில் மிக முக்கியமான, புகழ்பெற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகள்கண் பார்வை பரிபோவதை தடுபதைப்பற்றியதான இவரின் பல கட்டுரைகள் மிக புகழ்பெற்றவை..


வாழ்க அவர் புகழ்

அவரின் நோக்கங்கள் அவரின் குடும்பத்தினரால் சீராக நடைபெறுகின்றது, அவர்களுக்கும் நன்றி/வாழ்த்துக்கள்...

இவரைப்பற்றிய கதையை உங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள், விதைகள் வீரியமாய் இருக்கட்டும்

அவர் கைகளுக்கான கருவிகளைப்பற்றி சொல்வது போல...
"..சிறப்பாய் தேவைக்கேற்றபடி உருவாக்கப்பட்ட சிறந்ததொரு கருவி"..


19 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது… @ வியாழன், ஜூலை 27, 2006 11:07:00 PM

நல்ல அறிமுகம். நல்ல இடுகை..

கப்பி | Kappi சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 1:03:00 AM

Dr.V மேற்கொண்டது அர்த்தமுள்ள பயணம்..

நன்றி யாத்திரீகன்..

Sundar Padmanaban சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 2:49:00 AM

முக்கியமான மனிதரைப் பற்றிய முக்கியமான பதிவு. பாராட்டுகள்.

நன்றி.

சுந்தர்

பி.கு.:- கொஞ்சம் பதிவின் தலைப்பைக் 'கூர்ந்து' கவனித்து 'அருள்கூர்வீராக'. :)

கதிர் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 3:33:00 AM

யாத்ரீகன்,

ஒரு மாபெரும் சாதனையாளரை பற்றி
அறிந்து கொண்ட திருப்தி இருக்கிறது.
உண்மையிலயே அருமையான பதிவு.

இவரை பெரும்பாலானவர்கள் அறியாதிருப்பதெ இவர் புகுழுக்கு ஆசைப்படாத ஒரு புனிதர் என்று தெரிகிறது.

அன்புடன்
தம்பி

murali சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 4:13:00 AM

அவசியமான பதிவு யாத்ரிகன்; நன்றிகள்.
ஆச்சரியமான காரியங்கள் செய்தவர்கள்
இப்படித்தான் அர்ப்பனிப்பு உணர்வோடும்
ஈடுபாடோடும் வாழ்ந்திரிக்கிறார்கள்.

உங்கள் மனம் கவர்ந்த Dr.v
ஊருக்கும் உதாரண புருஷன்தான்.
என்றும் நிலைத்திருக்கும் அவர் புகழ்
ஏற்றம் பலபெறும் அரவிந்த் கண்ஒளிமனை
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 12:44:00 PM

@பொன்ஸ்:
நன்றி பொன்ஸ் ... (இன்னைக்கு நன்றி நவிலும் நாளோ ? :-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 12:45:00 PM

@கப்பி பய:
ஆமாம் சினியர் [ பதிவுக்கும், புனைப்பெயருக்குமேற்ற மறுமொழி, கலக்கீட்டீங்க :-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 12:47:00 PM

@சுந்தர்:
நன்றி சுந்தர்..
பி.கு: கூர்ந்து கவனித்ததற்கு மற்றொரு நன்றி சுந்தர் :-) பதிகையிலேயே குழப்பம் இருந்தது.. நெட்வொர்க் வேறு பயங்கர மெதுவாக உள்ளது.. சரியானதும் சரிபடுத்திவிடுகின்றேன்...

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 1:00:00 PM

@தம்பி:
ஆம் தம்பி, மிகவும் எளிமையான மனிதர்

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 28, 2006 1:16:00 PM

@முரளி:
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி :-)

கப்பி | Kappi சொன்னது… @ சனி, ஜூலை 29, 2006 6:49:00 AM

//ஆமாம் சினியர் //
நீங்க தான் சீனியர் ஹி ஹி ஹி...

சொல்ல வந்தது - இந்த வாரம் ஆ.வி. தலையங்கம் Dr.வெங்கடசாமி மறைவு குறித்து.

Maayaa சொன்னது… @ சனி, ஜூலை 29, 2006 11:02:00 AM

sendhil
sari..romba naala kaanume ungalannu nenachukitta ingu vandha enakku oru inba adhirchi..

ippadi oru maamanitharai pathi engalukku theriyappauthiyadharku romba nandri.. chance illa..

romba nalla post.. nallavangala indha kalathula irukave mudiyaadhunnu edho oru salipoda vandha enakku nalla boost!!

Syam சொன்னது… @ சனி, ஜூலை 29, 2006 11:51:00 PM

அரவிந்த் கண் மருத்துவமனையை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது...ஆனால் Dr.V பற்றி இப்பொழுது தான் தெறிந்து கொண்டேன்...ஒரு மாமனிதரை பற்றி சிறந்த பதிவு... :-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூலை 31, 2006 6:45:00 PM

@கப்பிப்பய:
ஆமா கப்பி.. கவனித்தேன்.. நல்ல தலையங்கம்.. கட்டுரையாயும் வந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன்...

பி.கு:
ஓ !!! :-)

@ப்ரியா:
நன்றி ப்ரியா :-) .. என்றுமே சலிப்படையாதீங்க.... இப்படிப்பட்டவர்கள் அடையாளம் காணப்படாமல் ஏராளம்.. அடையாளம் தேடாததே அவர்களின் தனித்துவம்..

@syam:
நன்றி syam.. மீண்டும் வருக..

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 8:25:00 PM

Senthil,
I shared your blog entry with the rest of the family/hospital. It means alot to know that people understand what he has stood for and how much he can inspire.
Thank you.

Intelligence and Capability are not enough. There must be the joy of doing something beautiful.
-Dr. V

மணியன் சொன்னது… @ வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006 8:33:00 PM

ஒரு மாமனிதருக்கு சரியான அஞ்சலி. நான் முன்னரே இப்பதிவைத் தவற விட்டுவிட்டேன். நல்ல பதிவு.

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2006 5:46:00 PM

@தீபா:
வருகைக்கு நன்றி தீபா.. அவரைப்பற்றி அறிந்திருந்துமே... தகவல்களுக்காக தேடத்தேட.. நிறைய ஆச்சரியங்களை கடந்துகொண்டே போனேன்.. அவை என்னுடனே நின்றுவிடவேண்டாமென்றும்... அவர் செயல்களை பலரும் அறிந்து, சிறிதளவேணும் உயர்வுள்ளல் பெறவேண்டுமென்றுதான் இந்த பதிவு... குடும்பத்தாருடனும், மருத்துவமனையினருடனும் பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி..

@மணியன்:
நன்றி மணியன்...

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது… @ சனி, செப்டம்பர் 09, 2006 8:20:00 AM

யாத்திரீகன்!

இந்த மாதிரி அற்புதமான மனிதர்கள் உலகுக்கு அவ்வளவாக வெளியே தெரியாமல் போகக்கூடாது.

keep it up.

உங்களால் நான் ஒரு நல்ல மனிதனைப்பற்றி தெரிந்துகொண்டேன்.

நன்றி

sarathy சொன்னது… @ சனி, மார்ச் 21, 2009 7:32:00 PM

ரகளை தான் போங்க....

கருத்துரையிடுக