யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

அடுத்த பயணம் - துள்ளிக்குதிக்குது மனசு

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 14, 2006
முக்கியமான நிகழ்வு ஒன்றிருந்தாலும் மனதில் துள்ளிக்கொண்டு முதலில் வருவது, இப்போது பார்த்து வந்திருக்கும் படம். அருமையான கதைக்களம், நுட்பமான் உணர்வுகளை அருமையாய் கையாண்டிருக்கக்கூடிய வாய்ப்பு, ஆனால் எதுவும் இல்லை.

அருமையான பாடல், அட்டகாசமான சூர்யா, வழக்கம்போல் மிக மிக அழகாய் பூமிகா, இருந்தும் சொதப்பல்தான்.

சில படங்கள் அவை கிளறிவிடும் நினைவுகளுக்காகவே மனதில் தங்கிவிடும், அந்த வகையில் ஏதேதோ நினைவுகள் மனம் நிரம்பியிருக்க, யாருக்குமெ பிடிக்காத ஒரு படம் மனதில் தங்கிவிட்டது.

Project கிடைக்கும் வரை என்னை என்ன செய்வதென்ற குழப்பம், என்ன செய்யலாமென்று யோசித்து முடிப்பதற்குள் புவனேஸ்வர் கிளம்புவதற்கான வேலைகள் முடிந்து விட்டிருந்தன.

நாளை காலை கிளம்பி 9ஆம் தேதிதான் திரும்புகின்றேன்.

கல்கத்தாவிற்கு ஒரு முறை எட்டிப்பார்த்து விட்டு வந்துவிடவேண்டும் என்று துள்ளிக்குதிக்கின்றது மனசு.

மறக்க நினைக்கும் நினைவுகள் தந்தபோதிலும், மறக்க முடியாத ஊர் அது. யரைப்போய் பார்பேன் அங்கே, ஒருவரும் இல்லை ஆனால் ஒவ்வொரு வீதிகளும், ஆட்டோக்களும் இனிமையான பயணங்கள் தான்.

கோனார்க்கில் மனம் கரைய உட்கார்ந்து வர வேண்டுமென்கின்றடு இன்னொரு ஆசை.

வித்தியாசமான அனுபவங்களை கொண்ட பயணமாகத்தான் போகின்றது.

விரைவில் சந்திப்போம்..

2 மறுமொழிகள்:

Sud Gopal சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 4:43:00 PM

--- வழக்கம்போல் மிக மிக அழகாய் பூமிகா --

உண்மையோ உண்மை.அது சரி பூமிகாவுக்குக் குரல் தந்தது சின்மயி என்பது தெரியுமா?

--- சில படங்கள் அவை கிளறிவிடும் நினைவுகளுக்காகவே மனதில் தங்கிவிடும், அந்த வகையில் ஏதேதோ நினைவுகள் மனம் நிரம்பியிருக்க---

ஓ...தம்பிக்கு கண்ணால ஆஜை வந்திட்சி போல ;-)

--- மறக்க நினைக்கும் நினைவுகள் தந்தபோதிலும், மறக்க முடியாத ஊர் அது.யரைப்போய் பார்பேன் அங்கே, ஒருவரும் இல்லை ஆனால் ஒவ்வொரு வீதிகளும், ஆட்டோக்களும் இனிமையான பயணங்கள் தான்.---

பயணம் ஒரு இனிய,புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைத் தர வாழ்த்துகள்.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், செப்டம்பர் 28, 2006 10:03:00 AM

நெறய ஓமப்பொடி வச்சிருக்கீங்கய்யா.. :-D , ஆனா செமயா சூட் ஆகியிருக்கு, முக்கியமா அந்த இரகசியமாய் போன் பேசும் காட்சி..

கண்ணால ஆசையா.. நீங்க வேற அண்ணாத்தே... (அதுசரி.. போட்டுதள்ளுறதுலயே மக்கள் குறியாத்தான் இருக்காக...) பூமிகாவைப்பார்த்ததும் தான் ஆசை வந்திருக்கு, ஆக வந்தது கல்யாணமில்ல காதல் ஆசை ;-) ஹிஹிஹி... !!!

டான்க்ஸ் அண்ணாத்தே !!!

கருத்துரையிடுக