கற்களின் காவியம் - எல்லோரா - 1
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on சனி, டிசம்பர் 08, 2007
எல்லோரா குகைச்சிற்பங்கள் ! நம்மில் பலரால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படிக்கப்பட்டு மறக்கப்பட்ட இடம். அசோகர் மரம் நட்டார் என்பதோடு, அஜந்தா எல்லோரா சிற்பங்களுக்கு புகழ் போனது என படித்து மட்டும் கண்ணில் காணாமல், அதன் அழகு பலருக்கு தெரியாமல் போன இடம்.
சில மாதங்களுக்கு முன், அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு சென்ற பயணத்தின்போது எடுத்த படங்கள், இங்கே செல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்காகவும், இந்தியாவிலிருந்தே இங்கே போகாமலிருப்பவர்களுக்கும் இந்த பதிவுத்தொடர்.....
(டெம்ப்லெட்-ஐ) வார்புருவை சரி படுத்தி மறுபடியும் தமிழ்மணத்தோடு இணைய உதவி புரிந்த சி.வி.ஆர்-க்கு நன்றி..
இப்பொழுது இந்த சிலையின் விவரத்தை பார்ப்போம் ..
சூழல்:
கடவுள் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது என்று வரம் வாங்கிய அசுரன் ஒருவனின் வாதம், ஷக்தியின் முன்னிலையில். அந்த அசுரனின் வரத்தில், இரவிலோ, பகலிலோ மரணம் நேரக்கூடாது என்றும், நிலத்தில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் தானே உருவாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றான்.
அசுரனின் அட்டகாசம் தாங்காமல் வரும் சிவன், யானை ஒன்றின் தோலை வைத்து சூரியனை மறைத்து, பகல்-இரவு இரண்டுமிலாமலும் உருவாக்குவதை சிவனின் தலைக்கு மேலே சென்றிருக்கும் இரண்டு கைகள் பாருங்கள். படத்தின் இடது மேல் மூலையில் யானையை காணலாம்.
தாக்க வரும் மற்ற அசுரர்களை அழிப்பதை இடது கையில் காணலாம்.
வலது கையோன்றில் உள்ள வாளை கொண்டு அசுரனை அழிப்பதும், அவன் இரத்தம் சிந்தாமளிருக்க அதன் கிழே ஒரு கை கொண்டு பாத்திரம் வைத்து பிடிப்பதும்,
சிவனின் பெருமையை உணர்ந்த நிலையில், அசுரன் கை தொழுது வணங்குவதும்..
சிவனின் ருத்ர தாண்டவத்தை கண்டு பயந்த நிலையில் உள்ள ஷக்தியும், அதை பிரதிபலிக்கும் ஷக்தியின் முக உணர்வுகளும் ..
சிவனின் புலித்தோலாடையும்,
எல்லாவற்றிலும் மேலாக, சிவனின் முகத்தில் உள்ள கோபம், இந்த ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த சிலையின் மொத்த சிறப்பையும் உணர்த்திவிட்டது. சிவனின் முகத்தை சற்றே பக்கவாட்டில் சென்று நேருக்கு நேர் பார்த்தால், நம்மைப்பார்த்து கோபப்படுவது போன்ற உணர்வு ..
கிழே உள்ள படம் அப்படிப்பட்ட ஒரு கோணத்தில் எடுத்தது। நான் சொல்வது உண்மையா என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம் ॥
இந்த சிலை என்ன உயரம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? கிழே பாருங்கள் ....

இந்த படத்திலிருக்கும் சிவனின் ருத்ர தாண்டவத்தை பற்றியே ஒரு பதிவுத்தொடர் எழுதலாம், அந்த அளவுக்கு என் உள்ளம் கொள்ளை கொண்ட சிலை. மிகவும் பிரமாண்டமாய், தத்ரூபமாய், உயிருடன் எழுந்து வந்துவிடுமோ என ஒரு நொடியாவது நினைக்க வைத்த சிலை. இத்தனை பிரமாண்டத்திலும், ஒவ்வொரு சிறிய விஷயங்களையும், நுணுக்கமாக கவனித்து கவனித்து செதுக்கியிருக்கும் சிலை. வழக்கமான நகைகள் மட்டுமின்றி, அந்த காட்சியின் உணர்வுகள், அந்த காட்சியில் இருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்தின் பங்கும்.. என பொன்னியின் செல்வனின் வரும் கல்கியின் வர்ணனை போன்று, மிக மிக அனுபவித்து, விலாவரியாய் செதுக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசம்.
இப்பொழுது இந்த சிலையின் விவரத்தை பார்ப்போம் ..
சூழல்:
கடவுள் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது என்று வரம் வாங்கிய அசுரன் ஒருவனின் வாதம், ஷக்தியின் முன்னிலையில். அந்த அசுரனின் வரத்தில், இரவிலோ, பகலிலோ மரணம் நேரக்கூடாது என்றும், நிலத்தில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் தானே உருவாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றான்.
அசுரனின் அட்டகாசம் தாங்காமல் வரும் சிவன், யானை ஒன்றின் தோலை வைத்து சூரியனை மறைத்து, பகல்-இரவு இரண்டுமிலாமலும் உருவாக்குவதை சிவனின் தலைக்கு மேலே சென்றிருக்கும் இரண்டு கைகள் பாருங்கள். படத்தின் இடது மேல் மூலையில் யானையை காணலாம்.
தாக்க வரும் மற்ற அசுரர்களை அழிப்பதை இடது கையில் காணலாம்.
வலது கையோன்றில் உள்ள வாளை கொண்டு அசுரனை அழிப்பதும், அவன் இரத்தம் சிந்தாமளிருக்க அதன் கிழே ஒரு கை கொண்டு பாத்திரம் வைத்து பிடிப்பதும்,
சிவனின் பெருமையை உணர்ந்த நிலையில், அசுரன் கை தொழுது வணங்குவதும்..
சிவனின் ருத்ர தாண்டவத்தை கண்டு பயந்த நிலையில் உள்ள ஷக்தியும், அதை பிரதிபலிக்கும் ஷக்தியின் முக உணர்வுகளும் ..
சிவனின் புலித்தோலாடையும்,
எல்லாவற்றிலும் மேலாக, சிவனின் முகத்தில் உள்ள கோபம், இந்த ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த சிலையின் மொத்த சிறப்பையும் உணர்த்திவிட்டது. சிவனின் முகத்தை சற்றே பக்கவாட்டில் சென்று நேருக்கு நேர் பார்த்தால், நம்மைப்பார்த்து கோபப்படுவது போன்ற உணர்வு ..
கிழே உள்ள படம் அப்படிப்பட்ட ஒரு கோணத்தில் எடுத்தது। நான் சொல்வது உண்மையா என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம் ॥
இந்த சிலை என்ன உயரம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? கிழே பாருங்கள் ....
18 மறுமொழிகள்:
ஒரு நல்ல கலைஞனின் உழைப்பு ஒரு நல்ல இரசிகனால் தான் வெளிக்கொணர முடியும்!!
உங்கள் இரசனைக்கு விருந்தான கலை நுட்பத்தை நாங்களும் ரசிக்க வைத்ததற்கு நன்றி! :-)
Simply Amazing Information!Deserves Sincere appreciation..
Wonderful pictures of the place which I aways wanted to visit and never had an oppurtunity....and a very good explanation for them...
@சி.வி.ர்:
நன்றி சி.வி.ர் .. எங்கள் கண்களுக்கும் இத்தனை நுணுக்கங்களும் உடனே தெரியவில்லை, சிலையின் பிரமாண்டத்தில் அசந்திருத்தேன்... அங்கிருந்த வழிகாட்டி ஒருத்தர் (அதிசியமாய், தன் சொந்த கதைகளை சேர்க்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி எங்களையே கண்டு பிடிக்கவைத்து விளக்கினார்) .. நீங்கள் சொன்ன பாராட்டு அவருக்கும் போய் சேரும் ...
நன்றி ஹெவன் பாய் MIT:
yeah.. it was hell of details in all those sculptures around..
@Ramcii:
வருகைக்கு நன்றி .. கட்டாயம் ஒரு முறை சென்று பாருங்கள் ...
இருப்பதிலே அழகான இரசிக்கத்தவறவிடக்கூடாத படங்களை மேலும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்... மீண்டும் வாருங்கள்
மும்பயிலிருந்து ஓர் இரவு பயணம்... கடும் கோடை காலத்தில் மட்டும் வேண்டாம் .. மற்றபடி அவுரங்கபாத்தில் தங்கிஇருந்து அஜந்தா எல்லோரா இரண்டையும் பார்த்து முடித்து விடலாம் .. (சனி, ஞாயிறு.. திங்கள் ஒரு நாள் விடுமுறை என அது போதும் ... மும்பை-க்கு போக வர ப்ளைட்டில் )
Wow! Superu!
நன்றி டிரீம்ஸ் :-)
மிகவும் நன்றி டீச்சர் .. :-D , இந்த மாதிரி ஊக்குவிப்பு உற்சாகம் தருது..
தேசிபண்டிட்-ல நீங்க கேட்டிருக்கும் கேள்விக்கு பதிலானது..
அவுரங்காபத்திலிருந்து இருபுறமும் இருக்கும் இடங்கள் அஜந்தா , எல்லோரா.. . அவுரங்கபாத்தில் இரு நாள் டோரா போட்டால் இரு ஊர்களையும் பார்த்து விடலாம்.. அந்த அந்த இடங்கள் காடு போன்ற பிரதேசங்களில் இருப்பதால் தாங்கும் வசதி அவுரங்காபாத்தில் நன்றாக இருக்கும்..
இப்படி, மொதல்ல போனவுங்க சொல்ல ஆரம்பிச்சத இருக்கும்,.. அஜந்தா - எல்லோரா -னு ஜோடிய.. அப்படியே ஒட்டிகிச்சு.. :-))
gigantic posekku unga edhir pose superb..
indha kadhai ungalukku yaaru sonna..anga guide irundhangala
:-) .. ஆமா பிரியா .. இதை அவர் கதை மாதிரி சொல்லாம.. ஒவ்வொரு விஷயமா காமிச்சு காமிச்சு.. என்ன தெரியுது என்ன தெரியுதுனு கேட்டு சொல்லும்போது.. it was like,he made us realize those intricate things in the statue.. rather than him just story narrating it.. nice man..
எல்லா எல்லோரா பதிவுகளையும் இப்போதுதான் பார்த்து முடித்தேன், அருமை, நன்று.
எழுதி முடித்தபின், ஒன்றுக்கு இரண்டுமுறை எழுத்துப் பிழைகளை proof read செய்து திருத்தினால் படிக்கும் பொழுது இடர்கள் இல்லாமல் இருக்கும்!
@ஜீவா:
உங்கள் ஆர்வத்திற்கும் , பொறுமைக்கும் மிகவும் நன்றி ஜீவா :-) .. எழுடும்போதே தெரிந்து விடுகின்றது பிழை .. புதியதாய் இருக்கின்றது .. அலுவலக வேலைகள் , நேரம் என்று காரணம் சொல்ல மனது வரவில்லை .. பொறுமைதான் இல்லை :-( .. கட்டாயம் கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமையுடன் திருத்திக்கொண்டிருக்கின்றேன் ..
The four posts pertaining to the கற்களின் காவியம் - எல்லோரா was so good. The photos with supporting information is really awesome. Thanks for your efforts.
உங்கள் இரசனைக்கும், உழைப்புக்கும் சபாஸ்..! நன்றி!
மிகவும் நன்றி பாரதிய நவீன இளவரசன் :-) .. யாரும் படிக்க வராமலிருப்பின் , அஜந்தா தொடரைப்போலவே இதையும் பாதியிலேயே நிறுத்தியிருப்பேன் ...
தொடர்ந்து படித்து வந்தமைக்கு மிகவும் நன்றி .. பலருக்கும் இவ்வகை புகைப்படங்கள் பிடித்திருப்பதால் இன்னும் சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கின்றேன் ..
இப்பத் தான் அஜந்தா, எல்லோரா இடுகைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் யாத்ரீகன். யாரும் படிக்க வரவில்லை என்றெல்லாம் எண்ணிக் கொண்டு எழுதுவதை நிறுத்திவிட வேண்டாம். அப்புறம் இவ்வளவு அற்புதமான சிற்பங்களை எல்லாம் அருமையான கலை எழுத்துகளுடன் பார்க்கும், படிக்கும் வாய்ப்புகள் எங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
சோம்பேறித்தனத்தை முழுவதுமாய் விரைவில் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும் :-(
நன்றி குமரன் :-) , கவனிக்க தவறிய சிலவற்றை பொறுமையாய் உடைந்த ஆங்கிலமும் ஹிந்தியுமாய் சொல்லிய அந்த வழிகாட்டிக்கும் நன்றி ..
கருத்துரையிடுக