கற்களின் காவியம் - எல்லோரா - 3
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on திங்கள், டிசம்பர் 10, 2007
எல்லோராவின் குகைகளில் , இந்த குகை மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் கருதுகிறேன் .. காரணம்.. நான் இப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கும் சிலைகளின் அளவை பார்த்தீர்கள் , அப்படியானால் இவை செதுக்கப்பட்டிருக்கும் / குடையப்பட்டிருக்கும் குகையின் அளவை கற்பனை பண்ணிப்பாருங்கள் ... இருப்பதிலேயே மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் குகை இது. இதிலிருக்கும் சிலைகளும் குகையின் உயரத்திற்கேற்ப இருப்பதால் .. மிகவும் அட்டகாசமாய் இருக்கின்றது .. உள்ளே நுழையும் போது நாம் மிகச்சிறியதாய் தோனுகின்றோம்
எல்லோரவில் செதுக்கப்பட்டிருக்கும் கற்களான காவியங்களை பகிர்ந்து கொள்ளும் தொடரின் அடுத்த பகுதி இது ..
முதல் பகுதி இங்கே
இரண்டாவது பகுதி இங்கே
சென்ற முறை வைத்த சஸ்பென்ஸ் , நான் எந்த ஊர் என தெரிந்தவர்களுக்கு ஒன்றுமில்லாததாக இருக்கும் :-) .. குறைந்த பட்சம் புதியதாய் இந்த பதிவிற்கு வருபவர்களுக்கு .. நச்சென்ற கதைகளுக்கும் , தொடர் கதைகளுக்கும் இடையில் கொஞ்சமாவது சுவாரசியம் அளிக்க வேண்டுமல்லவா .. ;-)
இம்முறை பார்க்கப்போவது "சிவன் - ஷக்தி திருமண வைபவம"
பார்க்கப்போவதற்கு முன் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி , இந்து மத திருமணங்களில் பெண் ஆணுக்கு எந்த பக்கம் நிற்பார்கள் ? (மற்ற மத திருமணங்களில் எப்படி ?) இதை நான் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுத்து கவனித்ததில்லை .. இந்த சிலைகளை கவனிக்கும் வரை...
அது மட்டும் தவறு அல்ல .. என்னும் எத்தனையோ வகையான தவறுகள் உள்ளன என புரிய வைத்த சிலைகள் இவை ..
இரண்டு சிலைகளும் அற்புதமான படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை .. ஆனால் சிறிய தவறோன்று நிகழ்ந்ததால் ஒன்று மூலையில் கடாசி இருப்பதும், மற்றொன்று கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதும் .. சத்தியமாய் ஒப்புக்கொள்ள முடியவில்லை ..
யோசித்துப்பாருங்கள் , எவ்வளவு உழைப்பிர்க்குப்பின் தவறை மற்றவர் வந்து சுட்டிக்காட்டினால் :-(
நல்ல வேலை தவறுக்காக சிலையை சிதைக்காமல் விட்டார்களே, அது போதும் ....
அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்ளப்போவது,சந்தோஷம் பொங்கி வழியும் காட்சி கொண்ட ஒரு சூழலின் சிலை அமைப்பு ॥ (Offcourse தவறுகள் ஏதுமின்றி :-)

சூழல் :
சிவன் - ஷக்தி திருமணம் , விஷ்ணு - பிரம்மா முன்னிலையில் , அவரவர் பூதகணங்கள் புடைசூழ ...
சிலையின் விபரங்கள்:
சிவனும் ஷக்தியும் கைகோர்த்து திருமண மேடையில் இருக்கும் நிகழ்வு இது..
கிழே பிரம்மா யாகம் வளர்த்துக்கொண்டிருப்பதும் , இடது புறம் விஷ்ணு இருப்பதும் (விஷ்ணு என்று கையிலிருக்கும் சங்கு சக்கரத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும் :-) தெரிகின்றதா ?
மேலே முதல் வரிசையில் தேவர்களும், அதற்கு அடுத்த வரிசையில் யக்ஷர்களும் (யானையின் மீது இருப்பவர்கள்) .. மலர் தூவி வாழ்த்த ..
மணமக்களின் நகைகளும், மணமகளின் நாணமும் மிக அருமையாய் வந்திருக்கும் சிலை ..
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் விரல்களும்,மூக்கும், கண்களும் மிக மிக நுணுக்கமாய் செதுக்கப்பட்டிருக்கின்றது ..
சிலையின் மொத்த பிரமாண்டத்தை காண்பிக்கும் வகையில் எடுத்த புகைப்படம் ஒன்று கிழே

இந்த சிலையில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று உள்ளது.. முன்பு பார்த்த சிலைகளின் Detail பார்த்தோமே அது தவிர வேறு எதாவது உங்கள் கண்களுக்கு தென்படுகின்றதா ?
இல்லையெனில் , பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதிலை வைத்து இந்த புகைப்படத்தை பாருங்கள் .. எதாவது புரிகின்றதா ?
இல்லையெனில் , பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதிலை வைத்து இந்த புகைப்படத்தை பாருங்கள் .. எதாவது புரிகின்றதா ?
இன்னும் இல்லையெனில், கிழே உள்ள புகைப்படத்தை பாருங்கள், மேலே உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள் ..
இப்பொழுது வித்தியாசம் தெரிகின்றதா ? .. எந்த கற்சிலைகளை பார்த்தாலும் எனக்கு எழும் முதல் கேள்வி.. இதில் தவறு நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று .. தவறு என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது அங்க ஹீனமான ஒரு சிலையைத்தான் ,
அது மட்டும் தவறு அல்ல .. என்னும் எத்தனையோ வகையான தவறுகள் உள்ளன என புரிய வைத்த சிலைகள் இவை ..
இரண்டு சிலைகளும் அற்புதமான படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை .. ஆனால் சிறிய தவறோன்று நிகழ்ந்ததால் ஒன்று மூலையில் கடாசி இருப்பதும், மற்றொன்று கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதும் .. சத்தியமாய் ஒப்புக்கொள்ள முடியவில்லை ..
மேலே உள்ள இரு புகைப்படங்களில் இருக்கும் இந்த சிலையில் , ஷக்தியின் நாணத்தை காண்பிக்க , உடல் வளைத்து , தலை சாய்த்து, கால் கட்டை விரலால் மண்ணைக்கீறும் வகையில் செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..
யோசித்துப்பாருங்கள் , எவ்வளவு உழைப்பிர்க்குப்பின் தவறை மற்றவர் வந்து சுட்டிக்காட்டினால் :-(
நல்ல வேலை தவறுக்காக சிலையை சிதைக்காமல் விட்டார்களே, அது போதும் ....
அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்ளப்போவது,சந்தோஷம் பொங்கி வழியும் காட்சி கொண்ட ஒரு சூழலின் சிலை அமைப்பு ॥ (Offcourse தவறுகள் ஏதுமின்றி :-)
23 மறுமொழிகள்:
ஹைய்யோ................
அருமை
டீச்சர் .. கேள்விக்கு பதில் சொல்ல நீங்க :-) .. டீச்சருக்கே கேள்வியானு கேட்குரீங்கள ? ;-) .. இருந்தாலும் இதற்கு பதில் சொல்ல பொருத்தமானவர்களுள் ஒருவர் நீங்க ..
எனக்குத் தெரிஞ்சவரை,
தாலி கட்டுமுன் வலப்பக்கத்திலும், தாலி கட்டியபின் இடம் பக்கத்திலும் மணமகள் இருப்பாங்க. ( அப்பத்தானே ரொம்ப இடங்கொடுத்துட்டான்'ன்னுசொல்லிக்க முடியும்)
விஷ்ணுவைக் கும்பிடும் இல்லத் திருமணம் என்றால் இதுவே முதலில் இடம், அப்புறம் வலம் என்று இருக்கலாம்.
நம்ம வீட்டுக் கல்யாணங்களில் முதல்லேயே இடம் கொடுத்துருவாங்க:-)))))
என் கல்யாணம் வெறும் கையெழுத்தோட சரின்றதாலே சொந்த அனுபவம் இல்லை(-:
இவ்வளவு பெரிய முயற்சி செய்யும்போது முதலிலேயே எந்த பக்கம் யார் வர வேண்டும் என்று பார்க்க மாட்டார்களா! :-)
வியர்வை சிந்தி உழைத்த உழைப்பு வீனாக போவதை பார்க்க எந்த கலைஞனுக்கு தான் பிடிக்கும்!
பாவம்!! :-)
அருமையான தொடர்!!
வாழ்த்துக்கள்!
அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க!! :-)
சிலையின் பிரமாண்டம், அதன் முன் நீங்கள் இருக்கும் படத்தை பார்க்கும் வரை தெரியவில்லை.
மணமகள் வலது பக்கம்- இப்படித்தான் என் திருமணம் நடந்தது.மேலே உட்காராமல் எங்கு உட்காந்தாலும் சரித்தான். :-))
@வடுவூர் குமார்:
புகைப்படத்தில் பார்க்கும்போது நேரில் பார்பது போல தெரியாது என்று தான் அந்த படம்.. மத்த படி.. ஒரு விளம்பரத்துக்காக கிடையாது ;-)
இதற்கு முந்தைய பகுதிகளையும் பார்க்க உங்களை அழைக்கிறேன் ...
nalla interesting pathivu! continue the series!
பிரமாண்டம்...ம்ம்... குமார் சொன்னது போல சிலைகளின் பிரமாண்டம் நீங்கள் இருந்த புகைப்படத்தில் அருமையாக தெரிகிறது.
வித்தியாசத்தை காண்பிக்க நீங்கள் பொறுப்புடன் எழுதிய பதிவாகத் தெரிகிறது... :-)
மத்தபடி திருமணம் அப்போ எந்த பக்கம் உட்காருவாங்கன்னு தெரியல. :-)
வீட்டில் இருக்கும் படங்களை எடுத்துப்பார்த்தேன்.
தனித்தனிச் சிற்பங்களா இல்லாம கோயில் கோயிலா குகைகளையும், கூட்டமா நிக்கும் யானைகளையும்( எனக்காக) படம் பிடிச்சுட்டு வந்திருக்கார்.
தூண் வேலைப்பாடுகள் எல்லாம் பிரமாதம்.
ஓஹோ .. இவ்ளோ மேட்டர் இருக்கா.. தாலி கட்டும் முன், கட்டும் பின்-னு சொல்லி :-)))
நான் நிஜ கல்யானங்கள்ள கூட கவனிச்சது இல்லை , இந்த சிலை கம்பேரிசன் வந்த உடன் உதவி செஞ்சது, மீனாக்ஷி கல்யாண கோலம் தான், எங்க ஊர்ல தான் எந்த கடைல திரும்புனாலும் இருக்குமே.. அப்படியே பிரிண்ட் எடுத்து ஒட்டுன மாதிரி நியாபகம் இருந்தது.. :-D
அதை வைச்சுத்தான், இந்த சிலைகள்ள ஒன்னு தப்புன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது ..
>>> சொந்த அனுபவம் இல்லை(-: <<<
:-)
சி.வி.ர் .. சரியாத்தான் சொல்றீங்க.. ஆனா.. ப்ராஜெக்ட்-ஐ டெலிவர் பண்ணும்போது தானே ரிக்குயர்மேன்ட் சரி பார்க்குரோமே ;-)
ஜோக்ஸ் அபார்ட் ... உண்மையாவே யோசிச்சா.. ஒரு கால யந்திரம் வேணும்..
கோனார்க் , அஜந்தா , எல்லோரா , தஞ்சாவூர் , மதுரை , ஹம்பி .. இப்படி ஒரு லிஸ்ட் இருக்கு.. கால யந்திரத்துல பயணம் செஞ்சு பார்க்க .. நம்ம புரிதல்கள் எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை , அவர்களோட கோணம் என்ன .. இப்படி தெரிஞ்சு பார்க்க எவ்வளவு சுவாரசியமா இருக்கும்..
வடுவூர் குமார் :-)))
கட்டாயம் டிரீம்ஸ் ... இந்த முறை சில regular visitors-um இருப்பதால் .. கட்டாயம் தொடரும்.. :-)
ஆமாம் காட்டாறு.. இந்த தொடரின் முதல் பகுதியில் வரும் புகைப்படத்தை பாருங்கள்.. அதில் இன்னும் நல்ல தெரியுது இதானோடு சேர்ந்த சிலைகளின் உயரம்..
நன்றி.. எனக்கும் தெரிஞ்சதோ, இல்லை இதெல்லாம் கவனிக்கனும்னோ தோன்றியதே இல்லை.. இந்த சிலைகளை பார்க்கும் வரை.. :-)
:-) குகை கோயில் படங்கள்.. அடுத்து வரும் பகுதிகள்-ல இருக்கு டீச்சர் .. இதுவரை கண்ட குகைகோவில்களிலேயே மிக வித்தியாசமாய்.. அசர வைத்த குகை கோயில்கள் ..
ayyyyyyyyyyy,
enaku pudicha topic dhaan.. aana nnum padikala..
attendence kudka vandhen..
padichutu varen again
Sooore.... thnx priya :-)
so, andha innoru silai thavara panninadhaala dhaan adha orama vechutaangalaa??
idhellam kooda document panni vechurukaangalaa??
adhu enna offcourse..of courseku badhil!!
அப்படி ஓரமா வைக்கும் மாதிரி தனி சிலை இல்லை.. எல்லாமே மலையை குடைந்து செய்தது .. ஆனால் அந்த தவறான சிலை ஒரு அளவுக்கு மேல் செதுக்கப்படவில்லை .. அந்த வித்தியாசம் நன்றாகவே நேரில் தெரிந்தது...
இந்த Google Indic Transliterator டைப் பண்ணுவது எல்லாத்தையும் தமிழில் மாற்றுது.. and blogger converts english to hindhi.. :-( அதை மறுபடியும் ஆங்கிலத்தில் மாற்றியில் iShpelling Mishtake :-D hehehe !!!!
சரிதான், பொதுவாக திருமணக் காட்சிகளிலும், திருமணத்துக்குப் பின்னரும் (இருவரும் சேர்ந்து வணங்குதல் போன்றவற்றில்) மனைவி வலப்புறமாக இருப்பது வழக்கம்.
இந்த மீனாட்சி திருமண படத்திலும்.
@ஜீவா:
ஹ்ம்ம்.. இப்படிப்பட்ட விஷயங்களை சரியாய் கவனிக்கணும் என்பது ஒரு கலைகனோட அர்பனிப்பைத்தான் காண்பிக்குது .. எந்த ஒரு சின்ன விஷயமும் தவரைப்போய் விடக்கூடதுனு எவ்வளோ கவனம் ...
Hi,
Lovely post. I run a blogsite on sculpture and art appreciation
www.poetryinstone.in
Can i invite you to do a guest post / feature.
the site is bilingual and you can switch between them anytime
pl do write to me
rgds
vj
விஜய் உங்களின் தளத்தை பார்த்தேன் அட்டகாசம்.. அட்டகாசம்.. எத்தனை சிற்பங்கள், விளக்கங்கள் , புகைப்படங்கள் .. குறிப்பாக இருமொழிகளிலும் இந்த தளத்தை நடத்தி வரும் உங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது.. :-) .. நீங்கள் செய்துவரும் அளவுக்கு இல்லாவிடினும் என்னால் இயன்ற அளவுக்கு எழுத ஆர்வமாயிருக்கிறேன் ..
கருத்துரையிடுக