யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கற்களின் காவியம் - எல்லோரா - 4

Published by யாத்ரீகன் under , , , , , on திங்கள், டிசம்பர் 10, 2007
ருத்ர தாண்டவத்தில் தொடங்கினோம் , அடுத்து திருமண நிகழ்ச்சியை பார்த்தோம் .. இப்போ அதுக்கு அடுத்த கட்டம் , திருமணத்துக்கு பிறகு நடக்கும் மணமக்களுக்கிடையே யான விளையாட்டுக்களை குறிக்கும் வகையில் இருக்கும் சிலையைப்பார்போம் ...

இடம்:
முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..

உயரம்:
முன்பு பார்த்த சிலைகளின் உயரம்

சூழல்:
திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே நிகழ்த்தப்படும் சிறு சிறு விளையாட்டுக்களின் பகுதியாக , அவரவர் பூதகணங்கள் சூழ சிவனும் ஷக்தியும் தாயம் உருட்டி விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஷக்தியிடம் சிவன் தோற்றுப்போகிறார். விளையாட்டு முடிந்தபின் எழுந்து செல்ல முயற்சிக்கும் போது, சிவன் ஷக்த்தியின் கரம் பற்றி இழுத்து இன்னொரு முறை விளையாடலாம் என்று அழைக்கிறார்.

சிலையின் விபரம்:
சிவனின் பக்கமிருக்கும் பூதகணங்கள் சிவன் தோற்றதால் வருத்தமுடன் இருப்பதும் , ஷக்தியின் பக்கமிருக்கும் பூதகணங்கள் தங்கள் பக்கம் வென்றதால் மகிழ்வாய் இருப்பதும் தெரிகிறதா ?

இரு பக்கமும் பானைகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்பது , இன்னும் பின்பற்றி வரும் பழக்கங்களுள் ஒன்று என்று நினைக்கும் போது ஆச்சர்யமாய்த்தான் இருக்குது .. எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள் என்று .. (அர்த்தம் புரிந்து பின்பற்றுகின்ற்ரர்களா என்பது வேறு விஷயம் ..)

எழுந்து செல்ல முயற்சிக்கும் ஷக்த்தியின் கையை பிடித்திழுக்கும் சிவனின் குறும்பான புன்முறுவல் அட்டகாசம் , இவ்வளவு வெளிப்படையாய் கடவுள்களின் புன்னகையை/புன்முறுவலை எங்கேயும் பார்த்ததில்லை... பார்த்ததும் நம்மை அறியாமல் நமக்கே ஒரு சிரிப்பு வந்து விடுகின்றது.. ஒரு சந்தோஷ உணர்வு ..

எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தால், நாணிக்கொள்ளும் ஷக்தி ... அட எவ்வளவு அழகாய் வெளிப்பட்டிருக்கின்றது அந்த வெட்கம் , புன்னகை, சந்தோஷம் ..

இந்த உணர்வுகளை, மேலும் உன்னிப்பாக கவனிக்க , கிழே உள்ள படங்களை பாருங்கள் .



இந்த படத்தில் , ஷக்தியின் ஆபரணம் ஒன்றான ஒரு ருத்ராட்ச மாலையை கவனியுங்கள், ஒவ்வொரு ருத்ராட்ச்சத்தையும் சிறிதும் பிசிறில்லாத உருண்டைகளாய் , மொத்த மாலையும் பிறண்டு இருப்பதையும் அச்சு அசலாய் வடித்திருக்கிறார்கள் ..

கிழே ஒரு பக்கம் பிரம்மாவும், மறுபுறம் விஷ்ணுவும் இருக்கிறார்கள்

எல்லாவற்றையும் விட .. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் .. கிழே நடுவில் இருக்கும் சிவனின் நந்தியும் , அதைச்சுற்றி விளையாடும் பார்வதியின் பூதகணங்களும் ..


கூர்ந்து கவனியுங்கள், எல்லோரும் விளையாட்டில் மும்முரமாய் இருக்கையில், சிறு குழந்தைகளாய் உருவகப்பட்டிருக்கும் ஷக்த்தியின் பூதகணங்கள் , தங்கள் பக்க வெற்றியை கொண்டாட , சிவனின் நந்தியை சீண்டுவதை பார்க்கலாம் ..

நந்தியின் பின்புறமுள்ள பொடியன் ஒருவன் அதன் வாலைக்கடிப்பதும்,

முன்புறமுள்ள ஒருவன் அதன் கால்களை பிடித்து இழுப்பதும்..

மேல்புறம் இருக்கும் ஒருவன் , அதன் கொம்புகளை பிடித்து திருகுவதும் ...

கோபம் கொண்டு மிரளும் நந்தி, காலருகே இருக்கும் ஒரு பொடியனை , மிதிப்பதும் ..

ஒரு முழு குதூகலமான கல்யாண சூழலை , மணமக்கள் , அவர்கள் இருவரின் பக்கம், அங்கிருக்கும் குழந்தைகளின் சேட்டை , அங்கிருக்கும் செட்டப் ... எப்படி அத்தனையும் கவனித்து , நிதானமாய் திட்டமிட்டு , அருமையாய் நிறைவேற்றி இருக்கிறார்கள் ..



மேலே இருக்கும் கடைசி படம், நாங்கள் குகையினுள் இருக்கும்போது பார்க்கும் ஒரு கோணம் .. சிலைகளின் உயரம் தான் உங்களுக்கு தெரியுமே, குகையின் உயரத்தையும், அதிலிருக்கும் தூண்களின் உயரத்தையும் கண்பிக்கவே இந்த புகைப்படம் ..

இனி அடுத்து வரும் பகுதிகளில் , வர்ணனைகள் அதிகமின்றி .. அழகான சிலைகளின் படங்கள் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன் ..

20 மறுமொழிகள்:

CVR சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 5:00:00 AM

//வர்ணனைகள் அதிகமின்றி .. அழகான சிலைகளின் படங்கள் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன் ..////
ஏன் அண்ணாச்சி???
வர்ணனையோட பாக்க நல்லா இருக்கு!!
பதிவிற்கு மிக்க நன்றி!! :-)

Dreamzz சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 5:02:00 AM

Wow, wonderfull pics and nice explanation! Wish I had a time machine!
D

jeevagv சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 5:20:00 AM

Wonderful, Thanks for the explanations!

துளசி கோபால் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 5:30:00 AM

என்ன சொல்றதுன்னு தெரியாம வாயடைச்சு நிக்கறேன்.

ஹைய்யோ.....

பெயரில்லா சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 5:57:00 AM

The pictures are taken in different angles clearly so that we can enjoy its beauty. Once again hats off to your explanations. I am not sure even if we would have visited the place, we would have noticed these interesting things.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 6:59:00 AM

சி.வி.ர்:

எந்த படத்தை விடுறது , எதை போடுறதுன்னு தெரியல.. அதான் விட்டா மெகாத்தொடர் மாதிரி போய்டும் சி.வி.ர் :-) .. தொடர்ந்து வந்து நீங்க படிக்குறதுக்குதான் நான் நன்றி சொல்லணும் :-)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 7:03:00 AM

@ ட்ரீம்ஸ்:
கிடைச்ச சொல்லுங்க ட்ரீம்ஸ் .. நிறைய இடம் போக வேண்டி இருக்கு.. நன்றி :-)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 7:04:00 AM

@ஜீவா:
முதல் முறை வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ..

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 7:05:00 AM

@துளசி டீச்சர்:
:-) நேர்லயும் அப்படித்தான் ஆச்சு டீச்சர் .. இந்த குகையை விட்டு வர மனசே இல்லை..

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 7:14:00 AM

@ramcii:
நன்றி இராம்சி .. நேர்ல பார்த்தது மறக்கவே மறக்காது இருந்தாலும் , அதை பார்த்தது போலவே பதிவு பண்ணி நினைவுக்கு வச்சிக்குறது ஒரு வழக்கம் , வெறும் மலைவாசல் தளங்களுக்கு போறதுக்கு பதிலா இப்படிபட்ட இடங்களுக்கு போற வாய்ப்பு நிறைய மக்களுக்கு கம்மி வேற ... அதனால பொட்டீலையே வைக்காம இங்கயே போட்ட பலரும் பார்த்துகுவாங்க , அப்படியாவது ஒரு பயணக்கட்டுரை போட ஆரம்பித்த வலைப்பூவின் சின்ன திருப்தி கிடைக்கும் பாருங்க ;-)

பெயரில்லா சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 12:14:00 PM

I have seen these pics only in my history books. Good that you have uploaded the pics with a detailed explanation. Keep up the good work.
I too love travelling but could not pull out time from my monotonous life and visit places like this. You are lucky. (with a jealousy grin )
:-)
-JD.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 13, 2007 1:39:00 PM

:-) நன்றி JD ..

எப்படியாவது வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள் ..

சென்னையில் எனக்கு அமைந்தது ஒரு அருமையான கல்லூரி நண்பர்கள் வட்டம் .. 4/5 பேர்களானாலும் , எல்லோருக்கும் ஊர் சுற்ற வேண்டுமென்ற எண்ணம்.. எவ்வளவு தான் வேலைக்கு நடுவிலினிலும் :-) .. அது ஒரு அட்வாண்டேஜ் ஆகிப்போனது ,

அதனால் லக்கி , இப்படிப்பட்ட நண்பர்கள் வட்டத்தினில் சிக்கியதற்கும்தான் ...

என்றாவது நான் சோர்ந்து போனாலும் .. கூட இருப்பவர்கள் அந்த பயணத்திற்கு இழுத்துச்செல்லாமல் விடுவதில்லை :-)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 14, 2007 6:51:00 AM

யாத்திரீகன்
இந்த வலைப்பூவை தாமதமாக வந்து படித்தாலும், பிடித்திருப்பதால் தவறாது படித்து விடுகிறேன்! சில அலுவல்கள் காரணமாக உடனே பின்னூட்ட முடிவதில்லை!
இனி என் கூகுள் ரீடரில் இட்டுக் கொள்கிறேன்! அப்போது உடனே வர முடியும் அல்லவா? :-)

கற்களின் காவியம் தொடர் மிகவும் அருமை. இது வரை அஜந்தா, எல்லோரா கவர் செஞ்சிருக்கீங்க! இதை விடாது தொடர வேண்டும் என்பது என் ஆவல். இனி வரும் காலங்களில் கூட நீங்கள் பயணம் செல்லும் கோவில்கள் இல்லை சிற்பக் கூடங்கள் இவற்றை எல்லாம் கண்டு வந்த பின்னால் வலையேற்ற வேண்டும்!

நம் தேசத்துச் சிற்பிகள், மன்னன் ஆணைக்குக் கட்டுப்பட்டு விதியே என்று எதையும் செதுக்கியதில்லை! இப்படி ஒரு ஜீவகளை கல்லில், மரத்தில், உலோகத்தில் வரணும்னா அதுக்கு தன் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து இருக்கணும்.

Art Romanticizes life என்பார்கள்.
நாம் கண்டு மகிழும் இந்த ரொமாண்டிக் காட்சிகளுக்கு, தங்கள் ரொமாண்டிக் நேரத்தை விட்டுக் கொடுத்துச் செய்ய மிகவும் பெரிய மனசு வேணும்.

இதை வடித்தது யார் என்று கூட நமக்குத் தெரியாது அல்லவா? நாளைக்கு இது போன்ற வேறு படங்களைப் பார்த்தால், அட யாத்திரீகன் அப்போ போட்டாரே; அது மாதிரி இருக்கே-ன்னு தான் தோணுமே தவிர, ஒரு காலத்திலும் இந்தச் சிற்பிகள் பெயர் வெளிவரப் போவதில்லை!

இவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு, இதை ரசிப்பதும், பிறரை ரசிக்க வைப்பதும் தான்! அதனால் இதைத் தொடர்ந்து தாருங்கள்.

அஜந்தா, எல்லோரா போல் அல்லாமல், தமிழக கலைக் கூடங்களிலும் ஆலயங்களிலும் இருளில் மண்டிக் கிடக்கும் கலைப் பொக்கிஷங்கள் எத்தனையோ! நீங்கள் செல்லும் போது அவற்றில் சிலவற்றையாவது வலைக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்!
கலையை கலையே விரும்பும் என்பார்கள். நீங்களும் ஒரு புகைப்படக் கலைஞர் என்ற கோணத்தில் உங்க பங்களிப்பாக இது அமையும்.

முடிந்தால் கற்கள் காவியத்துக்கு என்றே தனி வலைப்பூவாகச் செய்து விடலாம். one stop shop ஆக இருக்கும்! varalaru.com இலும் சில நல்ல கலை நுணுக்கப் படங்கள் வருகின்றன.

வாழ்த்துக்கள் யாத்திரீகன் :-)

காட்டாறு சொன்னது… @ வியாழன், டிசம்பர் 20, 2007 9:57:00 PM

ரீடரில் வாசித்ததால் பின்னூட்டமிடவில்லை. மன்னிக்கவும். KRS பின்னூட்டம் இப்பதிவை மேலும் மெருகூட்டியுள்ளது.

நெறையா எழுதுங்க!

தனசேகர் சொன்னது… @ ஞாயிறு, டிசம்பர் 23, 2007 12:49:00 PM

வாழ்த்துக்கள் யாத்திரீகன் .. !!

all are awesome ....
வரலாற்றுப்புத்தகத்தில் பார்த்து மறந்துவிட்ட .. அழகான .. ஓவியங்களை எங்களுக்கு அழகுப் புகைப்படங்களாக காட்டியுள்ளீர்கள்.

//எல்லோருக்கும் ஊர் சுற்ற வேண்டுமென்ற எண்ணம்.. எவ்வளவு தான் வேலைக்கு நடுவிலினிலும் :-)

மிகவும் நல்ல எண்ணம். இருக்கும் மிகச்சில நாட்களில் முடிந்த அளவு ஊர் சுற்ற வேண்டும் :)

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 13, 2008 8:31:00 PM

@கண்ணபிரான் :
வருகைக்கும் , விரிவான பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி :-)
>>>>> தன் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து இருக்கணும் <<<<<

மிகச்சரியான வாதம்.. ஒவ்வொரு சிலை மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள சூழல், அந்த சூழலில் இருக்கும் மற்ற சிலைகள், உடைகள், ஆபரணங்கள் என .. எளிதாய் கற்பனை செய்துவிடாமல்.. யோசித்து யோசித்து மெருகேற்றி இருப்பார்கள் என நினைக்கிறேன்.. அது நீங்கள் சொன்னது போல இருந்தால் தான் முடியும் ..

வரலாற்று நிகழ்வுகளில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாவிடிலும், என்னாலான பயணங்களையும் அதை பதிதலையும் கட்டாயம் செய்கிறேன் .. முன்பே தஞ்சாவூர் கோயிலின் புகைப்படத்தொடரும் ஒன்று உள்ளது .. அதையும் நீங்கள் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன் ... (புகைப்பட கருவி இல்லாத பொது சென்ற பயணங்களை மீண்டும் செல்ல மிக ஆர்வமாக உள்ளேன் :-) ..)

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 13, 2008 8:33:00 PM

@காட்டாறு:
தொடர்ந்த வருகைக்கும் பின்னூ(க்க)ட்டத்திற்கும் மிகவும் நன்றி :-)

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஜனவரி 13, 2008 8:35:00 PM

@தனசேகர்:
மிகச்சரி தனா :-) .. நன்றி...

Baby Pavan சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 6:57:00 AM

எங்க ஊரு பக்கம் தான் இம்சைய சீக்கிரம் கூட்டிட்டு போக சொல்லுரேன்

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜனவரி 16, 2008 7:10:00 AM

ஓ ஊருக்கு பக்கமா ? ரொம்ப நல்லதா போச்சு .. அஹமதாபாத்ல இரண்டு நாட்கள் டார போடுங்க , யாரை இம்சைனு சொல்றீங்க ? அப்பாவையா அம்மவையா ?

கருத்துரையிடுக