வெள்ளம்
Published by யாத்ரீகன் under அனுபவம், வெள்ளம் on புதன், ஜூலை 02, 2008
வெள்ளம் வந்ததற்கான அறிகுறிகள் முற்றிலும் மறைந்துபோய்விட்டன, சிலவாரங்களுக்கு முன் கடும் வெள்ளம் வந்த ஊரா எனும் எண்ணும் வண்ணம் வெயில் கொளுத்துகின்றது. மூடப்பட்டிருந்த சாலைகள், அலுவலகங்கள் எனமுழுமையாய் திறந்து செயல் படத்துவங்கி விட்டன. வெயிலின் புழுக்கம்அதிகமாகி, ஒரே இரவில் Tornado warning என்பதும் thunderstom warning என்பதும் மிகவும் நெருக்கமாய்விட்டது.
100 வருடங்கள் கழித்து இப்படி ஒரு கடும் பாதிப்பு என்பதாலோ என்னவோ, உடனடி உதவிக்கு வந்தவரிலிருந்து தீயணைப்புத்துறையினர் வரை திகைத்துப்போய் விட்டனர்... எங்கிருந்து தொடங்குவது , யாரை எப்படி கவனிப்பது, யாருக்கு முதலிடம் குடுப்பது என அத்தனை குழப்பம்.. ஆனால் மிகவிரைவாய் மீண்டு, ஒரு ஒழுங்கு முறையோடு மீட்பு பணிகளை நடத்தியவர்களை பாராட்டித்தான் ஆகவேண்டும்.
கால்வாயின் படுகையினோரம் இருந்ததால் அலுவலகம் உச்சகட்டபாதிப்புக்குள்ளானது. இருந்த Test Engines , Prototypes, Servers, Wirings என அத்தனையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விட, இன்றுவரை 150 பேர் இராப்பகலாக உழைத்தும் அலுவலகம் முழுமையாய் செயல்படத்துவங்கிய பாடில்லை. வெகுசில இடங்களில் மட்டும் மின்சாரம், காற்றும் வெளியில் இருந்து generator மூலமாக பம்ப் செய்யப்பட்டு, குடிதண்ணீரும் இலவசமாய் பாட்டில்-களில் விநியோகிக்கப்பட்டு இன்று முதல் இங்கு மீண்டும் வேலை தொடங்கினோம்.
வெள்ளத்தின் சூழல் அறியாமல் Volleyball விளையாண்டு முடிக்கையில் எங்களை சுற்றி கால்வாயில் வழிந்த உபரி நீர், சூழ்ந்திருந்த நீரில் விளையாண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டோம். வரும் வழியில் ஆங்கிலம் தெரியுமா, உதவிக்கு வர முடியுமா என்று அழைத்தவரிடம் சென்றால், எங்கோ ஒரு முதியோர் இல்லத்தை காலி செய்து வீட்டினருகே இருக்கும் பள்ளியில் தஞ்சம் புகுந்துகொண்டிருந்தனர். அதுவரை வெள்ளத்தின் விபரீதம் புரியாமல் தான் விளையாண்டுகொண்டிருந்தோம்.
எத்தனை முதியோர்கள், சும்மா இல்லை குறைந்தது 85-95 வரை இருந்திருப்பார்கள். தொட்டாலே வலிக்குமோ என்பது போல மெல்லிய தோல். இருவரை கவனமாய் இறக்கி பள்ளியில் விட்டபின் நம்ம வீடு என்னாச்சு பார்ப்போம் என்று புறப்பட்டாச்சு.
நள்ளிரவில் மின்சாரமும் முழுமையாய் தடைபட்டு போனது (பாதுகாப்புக்காரணங்களுக்காக), வீட்டைக்காலி செய்ய அறிவிப்பு வந்ததும்தான் மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் வீட்டில் இல்லாதது உரைத்தது :-) , இருந்த கைபேசி வெளிச்சத்தில் பாஸ்போர்ட், சில துணிகள் தூக்கிக்கொண்டு வெளியேற ஆரம்பித்தோம். அடுத்த நாள் விடியும் வரை இப்படியே திரிவோம் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
காரை கிடைத்த மேட்டில் ஏற்றிவிட்டு கடைசி ஆசாமி புறப்படுகையில் Apartment Complex-எ ஒரே ரணகளம்தான்.
அந்த முதியோர்களை ஏற்றும்போது இதே இடத்துக்குத்தான் நாமும் வருவோம்னும் கொஞ்சமும் எதிர்பார்க்கல :-) , மடக்கு படுக்கை, போர்வை, சிறிது தின்பண்டம்னு சட சட்னு விநியோகம் ஒரு பக்கம் ஆரம்பிச்சாச்சு. சரி இந்த நிலைமைல நம்ம ஊர் மக்களும் இந்த ஊர் மக்களும் என்னதான் பண்றாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சேன்.. ஹ்ம்ம்..
கொஞ்ச நேரத்திலேயே படார்னு பயங்கர சப்தம், பூட்டியிருக்கும் கதவை ஒடச்சிட்டு தண்ணிர் உள்ளே வருது.. ஏதோ ஆங்கில படம் பார்க்குற உணர்வு, 15 நிமிஷம் இடுப்பளவு தண்ணீர் இந்த பள்ளியினுள். அந்த இடத்துலதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லா விநியோகமும் நடந்ததுனு நெனச்சுபார்த்தா, சரி ஏதோ பெருசா நடக்கபோகுதுனு தான் தோனுச்சு.. கீழ power lines எல்லாம் short circuit ஆகிகிட்டு இருக்கு, ஒரு பக்கம் படகுகள், life jacket-நு குவியுது.. குழந்தைகள் வச்சிருந்தவுங்க எல்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. நம்ம bachelor பசங்க கோஷ்டி வழக்கம் போல மச்சான் அங்க பாருடா அந்த வயலட் கலர்னு இந்த ரணகளத்துலயும் ஒரு குதுகலமாத்தான் இருந்தாங்க :-) .. இத்தனை குழப்பத்துல , ஒரு அதிகாரியும் ஒரு அறிவிப்பும் வெளியிடுற மாதிரி தெரியல, வெளிய கொண்டுபோரதுக்கு எதுவும் நடவடிக்கை எடுக்குற மாதிரியும் தெரியல ..
நல்ல வேளை, தாமதமா ஆனாலும் மக்களை Panic அடையவிடாம அடுத்த பள்ளிக்கு எல்லோரையும் மாற்றி, அடுத்தநாள் காலை, மதியம் உணவுன்னு கொடுத்து நல்ல விதமாவே முடிஞ்சது.
அடுத்த ரெண்டு நாளைக்கு வீட்ல வர்ற தண்ணியில குளிக்க கூட கூடாதுன்னு கடும் அரசாங்க உத்தரவு, மின்சாரம் இல்லை, மின்சார அடுப்புனால எதுவும் சமைக்க முடியல, refridgerator-உம் வேளை செய்யாததால எல்லா கூத்தும் முடியும்போது இருந்த எல்ல பொருட்களையும் வெளில தான் தூக்கி போட வேண்டி வந்தது. ஊர்ல இருந்த கடைகள் எல்லாத்திலையும் தண்ணீர் பாட்டில் காலி, ஊருக்கு உள்ள வர்ற I-65/US-31 ஹைவேக்களும் மூடியாச்சு. வீட்ல இருந்த கேன்ஐ உலுக்கி உலுக்கி கடைசி துளி வரை பொறுப்பா பயன்படுத்துன நாட்கள் அவை :-)
மொத்தத்தில ரொம்ப வித்தியாசமான அனுபவம், நம்மூர்ல வெல்லம் மட்டுமே பார்த்தவனுக்கு இங்க வந்து வெள்ளம் பார்த்ததுல சிறுபுள்ளத்தனமான திருப்தி :-) , வீட்ல இருந்தே வேளை பாக்குறேன்னு NetFlix-ல வரிசையா படமா பார்த்து தள்ளின சந்தோசம் :-)
வித்தியாசமான அனுபவம்னு போக பல விஷயங்களை யோசிச்சு பார்க்க வைத்தது, அதையெல்லாம் பதிவு பண்ண, மனதில் தோன்றும் எண்ணங்களை அதே வேகத்தில் Blogger-இல் பதிவு செய்ய ஒரு சாதனம்தான் வேண்டும்.
(இதை பதிவு பண்றதுக்குள்ள அடுத்த வெள்ளமே வந்திருக்கும் போல :-)

9 மறுமொழிகள்:
//இதை பதிவு பண்றதுக்குள்ள அடுத்த வெள்ளமே வந்திருக்கும் போல//
Recording it worth very second of its effort, Thanks for that!
சுடச்சுட மறுமொழியா .. நன்றி ஜீவா :-) .. நாட்குறிப்பு பழக்கம் போய் இப்போ வலைக்குறிப்பு பழக்கமா மாறிடுச்சே :-)
எண்ணியல் மாறி எண்ணயியல் மீண்டும் மலர வேண்டும். நினைவூட்டுகிறது உங்கள் இந்த பதிவு. அருமை; வாழ்த்துக்கள்.
audacity தரவிறக்கி பேசிப் பதிவு பண்ணிடுங்க.. நல்லா விவரிச்சிருக்கீங்க வெள்ளத்தை.. மற்ற பகுதியும் மிஸ் பண்ண மனசு வரலை..
>>>>>> bachelor பசங்க கோஷ்டி வழக்கம் போல மச்சான் அங்க பாருடா அந்த வயலட் கலர்னு இந்த ரணகளத்துலயும் ஒரு குதுகலமாத்தான் இருந்தாங்க :-) .. >>>>>
bachelor pasanga gostila neega illayo??.....
நன்றி அறிவகம்
நன்றி பொன்ஸ்.. நீண்ட நாளுக்குப்பின் வருகை :-) .. மீண்டும் வாங்க

தென்றல், அந்த கோஷ்டில இல்லாம இந்த டயலாக் எல்லாம் எப்படி தெரிய வரும்.. அந்த கோஷ்டியின் ஆயுட்கால உறுப்பினராக்கும் .. ;-)
கருத்துரையிடுக