யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 3 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005

எங்களின் உணர்ச்சிகரமான புதிய நண்பரின் பெயர் வீரப்பன், தான் கேள்விப்பட்ட செய்திகளிலேயே இதுதான் மகத்தானதொரு செயலென்று தனக்குத்தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் எங்களிடம் உரையாட ஆரம்பிக்கிரார்.


திடீரென உதித்தது மற்றுமொரு யோசனை, இங்கிருக்கும் நடைபாதையில் வாழ்பவர்களுக்கும், இந்த தெருவை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளுக்கும் ஓர் இனிய விருந்தளித்தாலென்னவென்று. சாப்பாடு பறிமாறுவதற்கான வாழைஇலை எங்கு கிடைக்கும், சாதம்,சாம்பார் பறிமாற பாத்திரங்கள் எங்கு கிடைக்கும் என்று எனக்குத்தெரியும், ஆனால் நல்ல சுவையான சாப்பாட்டிற்கான இடத்திற்கு வீரப்பனின் சிபாரிசு தேவை. குப்பைபெருக்குவதில் கலந்துகொள்ளாவிடினும், எங்களுடன் சிறிதும் தாமதிக்காமல் கலந்துகொண்டு, எங்களின் நோக்கத்தைப்புரிந்து கொண்டு உதவத்தொடங்கினார்.


இவர்களுக்கு இங்கு சாப்பாடு பறிமாறுவதைவிட, நல்லதொரு உணவுச்சாலைக்கு கூட்டிச்செல்வது நன்றாக இருக்குமென்பது அவரின் சிபாரிசு. ஜெயேஷ்பாயையும், தீப்தியையும் உரிமையுடன் கைகளால் பிடித்து சிறிது தூரத்திலிருந்த "ஷ்ரீ ஷங்கர் பவன்"-க்கு கூட்டிச்சென்றார். கொஞ்சம் கருப்படைந்த, இருட்டான சின்னதொரு உணவுச்சாலை அது, இருப்பினும் இந்த சாலையில் உள்ளதொரு நல்ல உணவுச்சாலை என அறிமுகம் செய்தார்.


நல்லவேளை அதன் உரிமையாளர் நாங்கள் பேசுவதை புரிந்துகொண்டார், ஜெயேஷ்பாய் அவரிடம் 50 பேருக்கான இரவு உணவைதயாரிக்க சொன்னபோது அவரால் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை போலிருந்தது. ஆனால், சாப்பிட வரப்போவபர்கள் யாரென அறிந்தபோது வியாபாரத்துக்கான அந்த உற்சாகம் முழுவதும் வடிந்துபோனது. ஜெயேஷ்பாயின் விடாமல் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்து, அந்த 50 பேரும் இரவு உணவு அங்கே உண்ண ஏற்பாடானது.


சுத்தமாகிவிட்ட எங்களின் அந்த நடைபாதை நண்பர்களிடம் சென்று, இரவு உணவுக்கான அழைப்பைவிடுக்க ஆரம்பித்தோம்.வீரப்பனால் உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலாமல், அவரே முன்வந்து மேலும் ஒரு நடைபாதைவாசியை அழைக்க ஆரம்பித்தார், அப்படியே அங்கிருந்த அனைவருக்கும் பெரிதாக சப்தமிட்டு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார். "சரியான செய்தி, ஆனால் தவறான வெளிப்பாடு", என்று அவருக்கு புரியவைக்க முயற்சிசெய்கின்றேன்,


அவரின் முகத்திலருகில் சென்று, "நீங்களும் எங்களுடன் உணவருந்த வாருங்க்கள்", என்று உச்சஸ்தாயில் கத்தினேன், அடுத்து உடனே ஒரு அடி பின் சென்று, மெதுவாக என் கைகள் இரண்டையும் நீட்டி அவரை வரவேற்கும் விதமாக வைத்து, அமைதியாக "எங்களுடன் இரவு உணவு சாப்பிடுவதின் மூலம் எங்களுக்கு உதவுவீர்களா", என்று கேட்க, அடுத்த நபரிடம் சென்று கத்தியழைப்பதற்கு பதிலாக அவரின் கைகளைப்பற்றி அழைக்கச்செல்வதற்குமுன், பெரியதொரு புன்சிரிப்புடன், வியர்த்துவழிய உண்ர்ச்சி மேலிட என்னை கட்டியணைத்துக்கொண்டார் :-).


இரவு உணவு ஆரம்பிப்பதற்கு இன்னும் 1 மணிநேரம் உள்ளது, அதற்குமுன் கோவிலுக்குச்செல்ல எங்களுக்கு வீரப்பன் அழைப்பு விட ஆரம்பித்தார். கோவிலின் வெளிப்பிரகாரங்களில் ஓர் சின்ன சுற்றுலா (கோவிலின் உள்ளே இந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி) முடிந்தபின், கோவிலுள் தெற்குவெளி வீதியில் சிறிதுநேரம் அமர்ந்து இளைப்பார முடிவெடுத்தோம்.


எங்களினருகில் அமர்ந்திருந்தது ஓர் வயதான கிழவர், கடைசிக்காலத்தை கோவிலில் பிச்சையெடுத்துப்பிழைத்துக்கொள்ள அவரின் குடும்பத்தினரால் இங்கு விடப்பட்டவர். அவரருகே சென்ற ஜெயேஷ்பாய் "அருகில் வாருங்கள் சகதோரா",என்று கூற. அவருக்கு ஹிந்தி புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஜெயேஷ்பாயிடம் இந்தவொரு அற்புதமான ஒரு திறன் உண்டு,எவரிடமும் மொழியின் எல்லைகள்தாண்டி பரிசுத்தமான அன்புடன் செயல்முறையில் உரையாடும் திறன்தான் அது.


உடனே வேகமாக தன்னுடைய பலவீனமான மெலிந்த தேகத்தை எங்களை நோக்கிதிருப்பத்தொடங்கினார் அந்த வயதானவர். ஜெயேஷ்பாய் எங்களிடமிருந்த ஈரமான துண்டையெடுத்து, அந்த வயதானவரின் வாயினருகே ஒட்டியிருந்த உணவுப்பருக்கையை துடைத்துவிட்டு, அவரை திரும்பச்சொல்லி, சின்ன எண்ணெய் பாட்டிலை எடுத்து அவரின் தலையில் தடவி பிடித்துவிடத்தொடங்கினார். அவரிடமிருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லை, ஜெயேஷ்பாயின் கைகள், கைதேர்ந்த ஓர் தலைமுடிதிருத்துவரைப்போல இந்த வயதான அன்பரின் தலையில் விளையாடத்துவங்க, அவரின் முகம் மலரத்தொடங்கியது. பின் ஓர் சீப்பையெடுத்து மெதுவாக சீராக வாரத்துவங்கினார். இப்பொழுது அவரின் கந்தல் ஆடைமட்டுமே அவரை நடைபாதையில் வாழ்பவரென காட்டியது.


இதைக்கண்ட வீரப்பனால், தன்னுடைய உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை, அவர் ஜெயேஷ்பாயருகில் வந்து, தலையில் விளையாடத்துவங்கினார். ஆரம்பிக்கும்போதிருந்த அளவைவிட முடிக்கும்போது சிறிது அதிகமாகவே கம்மியாகவே ஆனது ஜெயேஷ்பாயின் தலைமுடி ;-). அந்த வயதான அன்பர் பெற்றது மென்மையானதென்றால், தான் பெற்றது கொஞ்சம் முரட்டுத்தனமான அன்புகலந்திருந்தது என்று பின்னர் சொன்னார் :-). அதேநேரத்தில் அஞ்சலி பொறுமையாக அங்கிருந்த மற்றொரு வயதானவரின் தலைமுடிக்கும் இந்த எண்ணெய் வைத்தியத்தை நிகழ்த்த, நிராலி அங்கிருந்த பல வயதான பெண்மணிகளுக்கு விரல்நகங்களை வெட்டிவிட, இவர்களுடன் ஜானும், தீப்தியும் பலூன்களை வாங்கி ஊதி அங்கிருந்த சிறுவர்களுடன் கோவிலின் உள்வீதியில் விளையாடத்துவங்கினார்கள்.

தொடரும்.....

பாகம் 1 , பாகம் 2

4 மறுமொழிகள்:

Dubukku சொன்னது… @ வியாழன், டிசம்பர் 15, 2005 10:06:00 PM

செந்தில் மிகவும் உன்னதமான நோக்கம். ஆனால் யார் இந்த சம்பவத்தை சொல்லுவதாக்க அமைத்திருக்கிறீர்கள் என்பது தான் சற்றுக் குழப்பமாக இருக்கிறது. தெளிவுபடுத்துங்களேன். இதையெல்லாம் வட இந்தியாவிலிருந்து வந்த உஙகள் நண்பர் கூட்டம் செய்ததா?

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 15, 2005 10:42:00 PM

@டுபுக்கு:
இறுதிப்பாகம் முடிந்ததும் முழுவதுமாக விளக்கிவிடுகின்றேன், சிறிது சுவாரசியமாக இருக்கட்டுமென்று ஆரம்பத்தில் எதுவும் முழுவதுமாக விளக்கவில்லை, மன்னிக்கவும்.

@nu$h@ சொன்னது… @ செவ்வாய், ஜனவரி 17, 2006 4:05:00 PM

hi senthil,
welcome back to chennai.... me looking forward to the same thing.....

:-)

en iniya pongal nalvazhthukkal..

anusha

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 4:54:00 PM

@ @nu$h@:
வாழ்த்துக்களுக்கு நன்றி

கருத்துரையிடுக