செய்ய நினைக்கும் தொழிலே தெய்வம்
Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூன் 12, 2006
ப்ரியாவின் Tag (சங்கிலித்தொடருக்கான) விருப்பத்தை தொடர்ந்து இந்த பதிவு.
எல்லோருக்கும் நாம் காணப்போகும் வேலையைப்பற்றி ஒரு கனவு இருந்திருக்கும், பள்ளிப்பருவத்திலே ஒரு fantasy (கற்பனை) , கல்லூரிபருவத்திலே ஒரு passion (பெரும் ஆசை), வேலை கிட்டாத வேளையிலே ஒரு தார்மீக கோபம், கிடைத்த வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு ஆதங்கம், குடும்பப்பொறுப்பில் மீள்கையில் ஒரு பெருமூச்சு என அந்த கனவு கலைந்திருக்கக்கூடும்/கலைந்துகொண்டிருக்கக்கூடும்...
வெகு சிலரே தன் சூழ்நிலைகளையும் மீறி.. தன் கனவுகளை புதைத்துவிடாமல், தோல்வி,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,உழைப்பு என அத்தனை உரங்களையும் அதில் பொறுமையாய் இட்டு முன்னேறிக்கொண்டிருப்பவர்கள்..
சரி எதற்கு இத்தனை கட்டுமானப்பணி [builtup தமிழாக்கம் ? :-) ]
ப்ரியாவின் இந்த சங்கிலித்தொடர்பதிவுக்காண தலைப்பே காரணம், வழக்கமான பிடித்த 7 என்ன என்ன என்ன.... என்றில்லாமல் .. இதோ கீழே..
"If.... if incase you HAVE TO switch fields once in every 5 years between your 30 to 50 yrs of age assuming that your monetary needs are taken care in upper-middle class standards, what (4-5 professions) you would wish to do (and say few words about it) ? "
சரி... இதோ என் தேர்வுகள்.. (இதில் குறிப்பிட்டிருக்கும் வரிசையிலேயே அமையவேண்டும்)
1) பைக்கர்:
இதனை ஒரு வேலையாக , ஏன் ஒரு பொருட்டாகவே கூட இங்கே யாருமே கருதுவதில்லை... ஒரு பைக் ஒன்றை சொந்தமாக வாங்கிக்கொண்டு, நேரம், காலம், திட்டமிடுதல் ஏதும் இன்றி, சாப்பாடு,தங்குமிடம் என்ற யோசனையின்றி கிடைப்பதே போதும் என்று, அங்கங்கே கிடைக்கும் வேலையை செய்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாடு முழுவதையும் (முக்கியமாய் மூலை முடுக்காக) சுற்ற வேண்டும். இது முதல் 5 வருடங்களில்.
காரணம்:
இந்த வயதில் இயல்பாக உள்ள வேகம், ஆர்வம் இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி இந்த பணியில் இருந்து வாழ்கை என்னவென்பதை கற்றுக்கொள்வதோடு, பல வகையான மக்கள், அவர்களின் வாழ்வு முறை என புரிந்து கொள்ள இயலும்.
2) விவசாயி:
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை " என சிறப்பிக்கப்பட்ட தொழில். கற்ற கல்வியின் மூலமும், திரட்டிய அனுபவ அறிவின் மூலமும், சிறந்த முறைகளை (உதா. இயற்கை உரங்கள் போன்று) பயன்படுத்தி, அதைப்பற்றி சக விவசாயிகளுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும், தான் விளைத்தவறால் தான் நஷ்டப்பட்டு, அதன் மூலம் பிறர் இலாபப்படுவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும். இது அடுத்த 5 வருடங்களுக்கான தொழில்.
காரணம்:
கற்ற கல்வியையும், அனுபவத்தையும் .. இந்த வயதில் உள்ள ஆரோக்கியமான உடலுழைப்புடன் கலந்து சிறந்த பணி ஆற்ற வகை செய்யும் இந்த தொழில். மேலும் நாட்டின் முக்கிய பங்காற்றும் ஒரு பிரிவினர் படும் இன்னல்களை நேரடியாக களத்தில் சந்தித்து அதில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொள்ள உதவும்.
3) தினசரி ஊடகத்தின் ஆசிரியர்:
மக்களிடம் தினசரி போய்ச்சேரும் ஒரு ஊடகத்தின் தலைமை ஆசிரியராக. அது பத்திரிக்கையானாலும் சரி, தொலைக்காட்ச்சியானாலும் சரி. ஊடகங்களின் நோக்கம் வெறும் விற்பனை/இலாபம் மட்டும் இல்லை. வெறும் செய்திகளை தொகுத்து தருவது/மறைப்பது மட்டுமின்றி, மக்களிடையே பல தலைப்புகளில் விழிப்புணர்ச்சி கொண்டுவருவதும், செய்திகளின் பின் உள்ள உணர்வுகளையும், அதில் மக்களின் பங்கு என்னவென்று அவர்களை உணர்த்துவதுமே. அதை திறம்பட செயலாக்க வேண்டும்.
காரணம்:
இந்த வயதில், வெறும் வேகம் குறைந்து, நிதர்சன வாழ்வில் பல அனுபவங்களை சந்தித்து, மனது சிறிது பக்குவப்பட்டிருக்கும், அது ஒரு செய்தியின் பல கோணங்களை காணும் சிந்தனையை கொடுக்கும். மேலும், முன்பு சந்தித்த அனுபவங்களை பலரிடம் சேர்க்க இயலும், சேர்த்து அவர்களுக்கு தீர்வு காண இயலும்.முதலில் இத்தகைய ஊடகத்தின் நிருபர் என்று யோசித்தேன், பின் நாம் என்னதான் உழைத்தாலும் அது இதன் தலைமைப்பொருப்பை சார்ந்தே அது வெளியாவது உள்ளது, மேலும் தலைமைப்பொறுப்பிலிருந்தால் இன்னும் பலரை ஊக்குவிக்கலாம் என்ற பேராசை :-)
4) ஆசிரியர் (மூன்றாம் வகுப்பு முதல் - ஐந்தாம் வகுப்பு வரை)
எந்த ஒரு சமூகத்தின் எதிர்காலமும், அதில் உள்ள குழந்தைகளின் குணநலன்களைப் பொருத்தே அமையும். இந்த குழந்தைகளின் குணநலன்கள் என்பது, இந்த குறிப்பிட்ட வயது குழந்தைகளிடையே எளிதாக நம்மால் பதிய வைக்க இயலும். ஆக நல்ல எதிர்காலத்துக்கான விதைகளை நாம் இங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இவர்களுக்கு வெறும் நீதிக்கதைகளை மனனம் செய்ய கற்பிக்காமல், அதில் உள்ள நீதியை விளக்கி, அவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை பதிய வைக்கவேண்டும். படிப்பவற்றை தேர்வுக்கு மட்டுமின்றி, தினசரி அவர்கள் காணும் சக குழந்தைகளிடமிருந்தே அவர்கள் பயன்படுத்த துவங்க வேண்டும்.
காரணம்:
கற்ற அனுபவத்தை சிறந்த வழியில், எதிர்காலத்தில் சிலருக்காவது பயனுள்ள வகையில் செலவழிக்க இயலும்.
5) மாநில கல்வி இயக்குநகரத்தின் இயக்குநர்:
மனனம் செய்து கல்வி கற்கும் முறையை மேலும் சீராக்கி, பாடதிட்டத்தை எதிர்காலத்துக்கு (அவர்களின் வேலைவாய்புக்கு) மட்டுமின்றி, நல்ல மனிதர்களாகவும், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல், தெளிவான உலகறிவு பெற்றிட ஒரு வாய்ப்பாகவும், தன்னம்பிக்கை அளித்திடவும்... என சீர்படுத்தப்பட்ட பாடதிட்டத்தை, எந்த தலையீடு வந்தாலும் அசராமல் அதை நடைமுறைப்படுத்தவேண்டும்.
காரணம்:
இதை இறுதியாக தேர்ந்தெடுத்த காரணம், இத்தகைய முக்கியமான பணி புரிவதற்கு முன் பரந்துபட்ட உலகறிவும், நம்மக்களின் தற்கால வாழ்வு முறை பற்றியும், மாணவர்களின் தேவை என்ன என்றும் தெளிவான சிந்தனை வேண்டும், இதற்கு இதுவரை கடந்து வந்த பாதை உதவி புரியும் என்று நம்புவதால்.
இதை படிக்கும் சிலருக்கு நிஜ வாழ்வுக்கு ஒத்துவராத புனித பிம்பங்களின் Ideal சிந்தனை என்று தோன்றலாம்...
ஆனால் பெரும் செயல்களுக்கு பின்புலமாய் இருந்தவை Ideal கனவுகளே....
"நட்சத்திரங்களை குறிவை, கட்டாயம் மண்ணிலே வீழ மாட்டாய்"
பிகு:
யாருக்கேனும் இந்த சங்கிலிப்பதிவு சுவாரசியமாய் தோன்றினால் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. பலருடைய கனவுகள் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாமென்ற ஆசைதான் :-)

13 மறுமொழிகள்:
sendhil,
kalakunga!! naama rendu perum paadathitathai maathi amaikka muyalvomaa...enna solreenga:)-
built up..kattumaana pani ellam balamma dhaan irukku ponga!!:)-
good luck!!!
Once i heard u saying that u wanna serve country by joining army...Surprised its missing here!!!
-KSB
@ப்ரியா:
கட்டாயம் ப்ரியா, எங்க தொடங்குவது என்று தெரியாமல் என்னலாமோ பண்ணிக்கொண்டு இருக்கின்றேன் :-))
நன்றி.. என்னை மீண்டும் இவற்றையெல்லாம்
@KSB:
கல்லூரி நண்பரா நீங்க :-) ஆமா KSB, அப்படி ஒரு பெரும் ஆர்வம் கட்டாயம் இருந்தது, இன்னும் இருக்குது.. ஆர்மி என்பதை விட.. விமானப்படைனு இன்னும் தெளிவா இருந்தேன்.. நேர்க்காணலுக்கு போகையில் அம்மா சென்டிமென்ட் ஆனதால் அப்போது அதை கைவிடவேண்டியதானது..
தேசிய மாணவர் படையில் இருந்த போது,பெங்களூரில் நடந்த ஆர்மி அட்டாச்மெண்ட் கேம்பிற்கு சென்று வந்த பிறகு, அங்கிருந்த ஜவான்கள் ஊக்குவித்த கருத்தையெல்லாம் கேட்ட பிறகு.. கொஞ்சம் பார்வை விரிவானது... இங்கே தொகுத்துள்ளது எல்லாம், நாம் பெற்ற கல்வியறிவு/உலகறிவு மூலம் எவ்வளவு பேரை பயனடைய வைக்க முடியுமென்ற தளத்தில் யோசிக்க யோசிக்க தோன்றியது...
Reading your blogposts after a very long time.
Suvayaana thaervugaL
Sariyaana kaaraNangaL..
@வினேஷ்:
ஹே வினேஷ் !!! பலநாட்களுக்குபிறகு இணையத்தில் :-) அதுவும் என் தளத்தில்.. வருகைக்கு மிகவும் மகிழ்ச்சி மச்சி !! பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.. :-)
நண்பா!இந்த டெம்பெளேட் நல்லா இருக்கு ஆனா பாண்ட் சொதப்புதே :( கவனி
ஆமாம் மச்சி.. இன்னும் முழுசா முடிக்கல... இது பயன்படுத்தும் CSS வேறு ஒரு செர்வரில் உள்ளது.. அதில் தான் மாற்றங்கள் செய்யனும் போல, அதை மாற்றினால் அதை எங்காவது இணையத்தில் சேமித்து வைத்து, அந்த பாதையை இந்த டெம்ளேட்டில் refer செய்ய வேண்டும்.. எங்கே சேமிப்பது என்று தெரியவில்லை, நிறைய தளங்களை இங்கே தடுத்துள்ளார்கள்.. :-(
வித்யாசமா சிந்திச்சிருக்கிங்க. நல்ல முயற்சிக்கு எனது பாரட்டுக்கள்.
என்னுடைய மிக முக்கியமான ஆசை முதலமைச்சராவது..ஆனா இதுவரை ஏதும் முயன்றது இல்லை.. ஏதோ பன்னீர்செல்வதிற்கு கிடைத்த மாதிரி கிடைத்தால் தான் உண்டு..
புதுவூடு ஜூப்பராவே இருக்கு.
என்ன இருந்தாலும் சில மேட்டர் சைட்டுகளை ஞாபகப்படுத்திய, உங்க பழைய வூட்டோட கறுப்பு பின்னணி இங்கன இல்லாதது கொஞ்சம் வருத்தமாத்தேன் இருக்கு :D
@தம்பி:
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தம்பி.. ( மறுபடியும் வாங்க :-)
@கார்த்திகேயன்:
:-))))) வாழ்த்துக்கள்.. ஒருவேளை காலில் விழும் கலை என்று வாழும்கலை இரவிசங்கர் மாதிரி யாரும் கோர்ஸ் நடத்துறாங்களானு பாருங்க.. ;-)
@சுதர்சன்:
யய்யா.. உங்க பாராட்டு(?)க்கப்புறம்தேன் இத்தை மாத்தியாகனும்னு அந்த பாடுபட்டு ஒரு வழியா மாத்திருக்கேன்.. நீங்க வேற :-))) காலேஜுப்பசங்க நடமாட்டம் வேற இருக்குற மாதிரி தெரியுது இப்படியெல்லாம் கெளப்பிவிட்டீங்க, என்னை நொங்கெடுத்துருவானுங்க..
பிகு:
சாம்பல் நிறம் என்பது கருப்பின் அடர்த்தி குறைந்த நிறம்தானே ;-) அதாவது ஒரு ப்ரொபசனல் டச் குடுத்தப்புறம் வர்ற கலர்னு சொல்ல வர்றேன்.. :D
கருத்துரையிடுக