யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

சொல்ல வந்த கதை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 27, 2006
இந்த கதையில் நான் சொல்ல வந்தது, விடலைப்பருவ மாற்றம் என்பது ஒரு கணநேர அதிர்ச்சியில் உருவாவது அல்ல, அதை நாம் நம்மை அறியாமலே அடிமேல் அடிவைத்து கடந்து வருகின்றோம். மாற்றத்தை நாம் உணரும்போது என்றோ அதை கடந்து வந்திருப்போம் என்பதே.

விடலைப்பருவ மாற்றங்களில் பல கோண்ங்கள் உண்டு, இனக்கவர்ச்சி, வாழ்க்கை பற்றிய எண்ணங்கள், குடும்பப்பொறுப்பு.. என்று. அதில் ஒன்று நட்பு/உறவுகள் பற்றிய பார்வையும் மாற்றங்களும்.

நண்பர்கள், நட்பு, உறவுகள் பற்றிய பார்வை எப்படி ஆரம்ப காலங்களில் இருக்கின்றது, நாட்கள் செல்லச்செல்ல அதில் உருவாகும் மாற்றங்கள், அந்த மாற்றத்திற்கு காரணமான நிகழ்வுகள், அது எப்படி எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று சொல்ல நினைத்தேன்.


கதை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வாயிலாக, நிகழ்வுகளாக விவரிக்கப்படுகின்றது. அதில் பின்நோக்கிய நினைவுகளை நினைத்துப்பார்ப்பதாக இருக்ககூடாது என முயன்றேன், காரணம் எந்த ஒரு திரைப்படத்தையும் நினைவு படுத்தி விடக்கூடாது என்று.

கதையின் இடையே, அந்த கதாபாத்திரத்தின் மனதின் குரல் மூலம் அதற்குள் நடைபெரும் சின்ன சின்ன மாற்றங்களை படம்பிடிக்க முயற்சித்தேன்.

ஆரம்பத்தில் தாய், தந்தையருடன் உறவு எப்படி இருக்கின்றது, நண்பர்களே இல்லாமல், பின் இடையில் அதில் கவனமேயின்றி முழுவதுமே நண்பர்களுடன் பொழுது என்று மாற, அதன்பின் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கும் முறையும், நேர அளவும் மாற.. மீண்டும் தாய் தந்தையர் பற்றி நினைப்பதும், பின் அதிலும் மாற்றம் வருவதும் என மனதின் குரல் மூலம் காண்பிக்க நினைத்தேன்.

கல்லூரிகாலங்களில், நாள் முழுவதும் நண்பர்களுடன்.. ஆனால் பின்பு அதே நண்பர்களின் நேரமின்மை காரணமாக அவர்கள் மீது கோபப்படுவதும், பின் புரிந்துகொள்வதுமான வளர்ச்சி என...

இதையெல்லாம் வெளிப்படையாக சொல்லியபின் படிப்பவர்களுக்கு புரியக்கூடாது, அது சொல்லப்பட்ட விதத்திலேயே புரிந்திருக்க வேண்டும், அதுதான் வெற்றி.

அதனாலயே உங்கள் மறுமொழிகளுக்கு பதில் அளிப்பதில் நேரம் தாழ்த்தினேன். அந்த வகையில், உங்கள் மறுமொழிகளிலிருந்து ஒரளவு வெற்றி கண்டேன் என்பதை காணும்போது மகிழ்ச்சியே..

நன்றி !!!

2 மறுமொழிகள்:

குழலி / Kuzhali சொன்னது… @ செவ்வாய், ஜூன் 27, 2006 6:34:00 பிற்பகல்

ஒரு ஆலோசனை... :-) கதையின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என நினைக்கிறேன்.

யாத்திரீகன் சொன்னது… @ செவ்வாய், ஜூன் 27, 2006 6:55:00 பிற்பகல்

சுடச்சுட மறுமொழி :-) நன்றி குழலி.. ஆமாம் நானும் அதைத்தான் நினைத்தேன்.. இந்த புதிய பதிவில் பாருங்கள்.. நீளத்தை குறைப்பதில் நான் குழம்பிப்போனதில் :-)

கருத்துரையிடுக