வடக்கே கங்கை கரையோரம் கொண்ட தன் வெற்றியை கொண்டாட பேரரசன் மகன், உருவாக்கிய சோழர்கால தலை நகரமான கங்கை கொண்ட சோழீச்வரம்.சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க தன் தந்தையின் படைப்பான பிரகதீஸ்வரர் கோவில் போன்ற தோற்றத்தில் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுர கோவிலின் நுழைவாயிலில். தஞ்சை பெரிய கோவிலைப்போலவே இங்கேயும் உள்ள ஒரே கல்லில் உருவான நந்தி. இங்கே வழிபாடு அவ்வளவாய் இல்லாததும் ஒரு விதத்தில் நல்லது, இந்த நந்தி சிலையில் உள்ள வேலைப்பாடுகளை அருகே இருந்து இரசிக்க முடிந்தது.
தஞ்சை கோவில்களுள் உள்ள துவாரகபாலர்கள் சிலைகளின் அமைப்பு மிகவும் பிரசித்தி பெற்றவை, இதனருகே நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் எடுத்த புகைப்படம். ஆறடி உயரம் உள்ள நாங்கள் எங்கே, அந்த சிலையின் உயரம் எங்கே !!!
எங்களுள் எழுந்த மிகப்பெரும் கேள்வி, யாருக்காவது விடை தெரியுமா ??
கேள்வி: கோவிலை கட்ட தீர்மானித்த உடன், எங்கிருந்து ஆரம்பித்திருப்பார்கள் ? அவ்வளவு பிரமாண்ட சிலைகளை எங்கிருந்து செதுக்க துவங்கிருப்பார்கள் ? கோவிலின் வெளியே செதுக்க துவங்கியிருந்தால், தூண்களை நிறுவுவதற்கு முன் உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும், இப்படி பல கேள்விகள் !!!!
ஒரு கால இயந்திரம் இருந்தால் , தஞ்சை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விஜயநகர காலம், ஹம்பி நகரம் செழிப்பாக இருந்த காலம் என்று சுற்றி வரவேண்டும் !!!!
பண்ணிரண்டரை அடி உயரம் உள்ள கோபுர கலசம்
வெயில் கொடுமை !!! :-)
பெரிய கோவிலைப்போலவே உள்ள கங்கை கொண்ட சோழபுர கோவில்
நடராசர் சிலையின் முகத்தில் உள்ள புன்சிரிப்பையும் நளினத்தையும் பாருங்கள், இதை செதுக்கியவர் எவ்வளவு அனுபவித்து செய்திருக்கவேண்டும்.
கோபுரத்தின் மேலே இருந்த பல சிற்பங்களில் ஒன்று, 12X புகைப்பட கருவி பயன்படுத்தியதன் பயன்.
கோவிலின் மேலே இருந்த அதிகம் கவனிக்கப்பட்டிராத ஒரு பெண்ணின் சிலை, எந்த நாட்டுப்பெண்ணோ !!! இது போல் இங்கிருக்கும் "வடபுரமிருந்த சிவன் மன்மதனை எரிக்கும்" சிற்பம் மிகவும் அழகானது என்று கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் அதை இறுதி வரை கண்டு பிடிக்க முடியவில்லை :-(கோபுரத்தின் மேலிருந்த பட்டைகள்.