கங்கை கொண்ட சோழபுரம் - ஒரு காலவெளிப்பயணம்
Published by யாத்ரீகன் under கலை, சிற்பங்கள், தஞ்சாவூர், தஞ்சை, பயணம், புகைப்படம் on செவ்வாய், மே 08, 2007
வடக்கே கங்கை கரையோரம் கொண்ட தன் வெற்றியை கொண்டாட பேரரசன் மகன், உருவாக்கிய சோழர்கால தலை நகரமான கங்கை கொண்ட சோழீச்வரம்.
சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க
தன் தந்தையின் படைப்பான பிரகதீஸ்வரர் கோவில் போன்ற தோற்றத்தில் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுர கோவிலின் நுழைவாயிலில்.
தஞ்சை பெரிய கோவிலைப்போலவே இங்கேயும் உள்ள ஒரே கல்லில் உருவான நந்தி. இங்கே வழிபாடு அவ்வளவாய் இல்லாததும் ஒரு விதத்தில் நல்லது, இந்த நந்தி சிலையில் உள்ள வேலைப்பாடுகளை அருகே இருந்து இரசிக்க முடிந்தது.
தஞ்சை கோவில்களுள் உள்ள துவாரகபாலர்கள் சிலைகளின் அமைப்பு மிகவும் பிரசித்தி பெற்றவை, இதனருகே நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் எடுத்த புகைப்படம். ஆறடி உயரம் உள்ள நாங்கள் எங்கே, அந்த சிலையின் உயரம் எங்கே !!!
எங்களுள் எழுந்த மிகப்பெரும் கேள்வி, யாருக்காவது விடை தெரியுமா ??
கேள்வி: கோவிலை கட்ட தீர்மானித்த உடன், எங்கிருந்து ஆரம்பித்திருப்பார்கள் ? அவ்வளவு பிரமாண்ட சிலைகளை எங்கிருந்து செதுக்க துவங்கிருப்பார்கள் ? கோவிலின் வெளியே செதுக்க துவங்கியிருந்தால், தூண்களை நிறுவுவதற்கு முன் உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும், இப்படி பல கேள்விகள் !!!!
ஒரு கால இயந்திரம் இருந்தால் , தஞ்சை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விஜயநகர காலம், ஹம்பி நகரம் செழிப்பாக இருந்த காலம் என்று சுற்றி வரவேண்டும் !!!!
நடராசர் சிலையின் முகத்தில் உள்ள புன்சிரிப்பையும் நளினத்தையும் பாருங்கள், இதை செதுக்கியவர் எவ்வளவு அனுபவித்து செய்திருக்கவேண்டும்.

15 மறுமொழிகள்:
அருமையான புகைபடங்கள்!!
மேலும் இது போன்ற பல பதிவுகளை பதிய வாழ்த்துக்கள்!! :-)
நன்றி CVR, இதற்கு முன்பும் பல பயணப்புகைப்படங்கள் இந்த வலைப்பூவில் உள்ளது, முடிந்தால் பாருங்கள்...
அந்த கோபுரத்தின் மேல் உள்ள ஆறு ஜோடி கைகள் உள்ள கடவுள் யார் என்று தெரியுமா?ஆறுமுகன் என்றால்... வாகனம் யானையாக உள்ளதே?
சிவபெருமான் சிற்பம் இன்னும் முடிந்த மாதிரி தெரியவில்லையே..அதற்குள் பதவி போய்விட்டதோ என்னவோ!அழகிரி ஆட்கள் வந்துவிட்டார்கள் போலும்.:-))
சிலையின் கால் மற்றும் கை கல்லின் மீதே உள்ளது.
மற்றபடி சிற்பங்களை போல் படமும் உயிரோட்டமாக உள்ளது.
@குமார்:
ஆமாம் குமார், அது என்ன சிலை என்று யோசித்தே அதை எடுத்திருந்தேன்.. மற்றபடி :-) நன்றி !!!!
யாத்திரீகன்,
மிகவும் அருமையான பதிவும் படங்களும். மிக்க நன்றி.
கங்கை கொண்ட சோழீச்சரம் தமிழகத்திலா இருக்கிறது?
எம் முன்னோர்களின் கலைப் பொக்கிஷங்களை பார்க்க வேணும் எனும் ஆவல் உங்களின் பதிவைப் பார்த்ததும் இன்னும் அதிகரிக்கிறது.
மிகவும் நன்றி வெற்றி !!!! :-)
sendhil..
i am reading the book udaiyar by balakumaran (6 volumes) which describes how the temple should have been built..
at what point they would have started etc. though balakumaran's imagination would have created this book, it also has archaelogical facts..
i am in 2nd volume.. its interesting so far...either you get and read the book or give me ur no and i will call you after i raed this book to talk about it!!
@ப்ரியா:
ஓ !! இரண்டாவது புத்தகமா.. ஹீம்..., உங்க தோழி சுபா பதிவின் மூலம தெரியவந்து முன்பே முதல் புத்தகம் வாங்கியிருந்தேன்.. மீதியெல்லாம் இனிமேதான்.. இந்த இடத்தை பார்த்தப்புறம் தான் அடுத்த புத்தகங்களை படிப்பதா முடிவெடுத்திருந்தேன், இந்த பயணம் அந்த முடிவு சரிதான்னு தோண வச்சிருச்சு, கோவில்லயே ஒரு முழு நாள் செலவழிச்சோம், பிறகு கலைக்கூடம், ம்யூசியம் ஒரு நாள்.. அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் கற்பனையில் திளைத்து அனுபவித்த நிமிடங்கள்..
ஒரு காலயந்திரம் இல்லையென வருத்தப்பட்ட மிகச்சில இடங்களில் ஒன்று... !!!!
the way pictures have been taken is very good...It exposes the minute architecural work beautifully...really enjoyed watching the pictures
Raji.
@raji:
Nandri Raji..
pls increase font size
ஹைய்யோ................. கோயில் அழகு அப்படியே மனசை
அள்ளிக்கிட்டுல்லே போகுது.
எப்பப் பார்க்கப் போறோமோன்னு ஏக்கமாக்கூட இருக்குங்க.
அழகான படங்களுக்கு நன்றி .
Please view the video in Google.
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301&q=south+indian+king&total=235&start=0&num=10&so=0&type=search&plindex=0
That talks about how the temple would have been built.
@மாஹிர்:
டொனெ !!!
@துளசி டீச்சர்:
பாராட்டுக்கு நன்றி :-)
@அனானி:
நன்றி அனானி, மிகவும் நல்லதொரு ஆவணப்படம் அது, கோவிலைப்பார்பதற்கு முன், பண்ண ஹோம்வொர்க்ல இதுவும் ஒன்னு ;-)
Nice post. Firstly the styling of the Vimana in GKC is very different from that of Tanjore - as it gently curves as against the straight lines of the Big temple.
Secondly, the Nandhi in the Big temple ( currently in front of Peruvudayar) is not the original Chola sculpture but a later Nayaka replacement.
The larger monolithic door guardians would have been most probably sculpted on site.
The figure on the Elephant - has been a point of contention - not this particular one, but generally even in earlier temples - Indra had the Elephant vahana and he would be depicted, but slowly as he lost popularity and skanda gained - in the current case you see Muruga on the elephant mount.
Lastly, the Sudhai figures incl the smile of Nataraja are most probably touched up recently as much of the Vimana was in a very bad state and was repaired by ASI in the 1960's
கருத்துரையிடுக