கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1 (எல்லோரா - கயிலாசநாதர் குகைக்கோயில்)
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, குகைக்கோயில், சிற்பங்கள், பயணம், புகைப்படம் on புதன், பிப்ரவரி 27, 2008சென்ற தொடரில் எல்லோராவின் கலைக்களஞ்சியத்தின் சில முக்கிய இடங்களைப்பார்த்தோம், அவற்றுள் மிக அற்புதமாய் நான் உணர்ந்த ஒரு குகை தான் "கைலாச நாதர் குகைக்கோயில்" . மற்றுமொரு குகையென 16 என்று இலக்கமிடப்பட்டே அழைக்கபடுகின்றது என்ற போதிலும், இது சிறப்பாக கருதப்படுவது, உருவத்தின் பிரமாண்டத்திற்கு மட்டுமின்றி, கலை நயத்திற்கு மட்டுமின்றி, இந்த குகைக்கோயில், அறிவியல் மற்றும் பொறியியல் முறையிலும் நம்மை அசத்த வைக்கும்.
இங்கே பொறுமையாய் காண பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதால் இதை தனி தொடராக பதிய நினைத்திருந்தேன் .. படித்து, பகிர்ந்து மகிழ்வோம் :-)
கிழே இருப்பது தான் கைலாச நாதர் கோயில் எனப்படும் குகைக்கோயில். மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் இதன் உருவத்தை படத்தில் புள்ளியென தெரியும் மக்களை பார்த்தால் தெரியும். இத்தனை பிரமாண்டத்திலும் இதன் கலை நயம் சிறிதும் குறைந்ததில்லை.

Kailashanadhar Temple - Cave 16 - The Most Amazing Cave temple ive ever seen, originally uploaded by யாத்திரீகன்.
சரி இவ்வளவு பில்டப் கொடுத்தாச்சே, அப்படியென்ன இந்த குகையில் ?
ஆச்சர்யம் #1:
எந்த ஒரு குகைக்கோயிலோ அல்லது குகைச்சிற்பமோ எப்படி செதுக்கப்பட்டிருக்கும் ?
முதலில், குகைப்பாறையின் பக்க வாட்டில் தொடங்கி, குடைந்து கொண்டே உள்ளே சென்று சிற்பங்களும், கோயில் போன்ற அமைப்பும் பாறையினுள் செதுக்கத்தொடங்குவார்கள்.
இயல்பான இந்த முறைக்கு நேர்மாறாய் செதுக்கப்பட்டது தான் இந்த குகை. எப்படி ? , ஒரு பெரும் பாறையை, அதன் மேல் அமர்ந்து கொண்டு செதுக்கத்தொடங்கி உள்ளே இறங்கி, மேலிருந்து கீழ் எல்லா சிற்பங்களையும், கோயில் அமைப்பையும் செதுக்கத்தொடங்கினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இந்த குகைக்கோயிலும், அதன் உள்ளே இருக்கும் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாய் பார்த்தால் வித்தியாசம் மிகவும் எளிதாய் தெரியலாம், ஆனால் மேலே பாறையை குடைய ஆரம்பிக்கும் போது, எவ்வளவு கிழே செல்ல வேண்டும், ஒவ்வொரு உயரம் கிழே செல்ல செல்ல எவ்வளவு பாறை எடுத்து விட வேண்டும் என கணக்கிடுவதும், என்ன செதுக்கப்போகின்றோம் என உருவகப்படுத்தி பார்ப்பதிலும் உள்ள கஷ்டங்கள் மிக மிக அதிகம். சாதரண முறையில், கரியை வைத்து கோட்டுருவம் வரைந்து விட்டு எளிதாய் செதுக்கி விடலாம் , ஆனால் இங்கே உள்ளே சென்று குடைவதற்கு எப்படி அளவுகளை குறித்துக்கொள்வது ?
இங்கிருந்து தொடங்குகிறது ஆச்சரியம்...

a cave temple, originally uploaded by யாத்திரீகன்.
ஆச்சர்யம் #2:
மொத்த கோயிலின் நிலப்பரப்பு எதேன்சில் உள்ள பார்த்தேனான் ஐ விட இரு மடங்கு பெரிது என்ற போதிலும் ஒரே பாறையில் குடையப்பட்ட கோயில் இது.
ஆச்சர்யம் #3:
5 வருடம் , 10 வருடம் என முடியவில்லை இந்த கோயில். கிட்டதிட்ட 100 வருடங்கள் எடுத்திருக்கின்றன. 2 இலட்சம் டன் எடையுள்ள பாறை அகற்றப்பட்டிருக்க வேண்டுமென கணிக்கப்படுகின்றது.
Temple within the mountain, originally uploaded by யாத்திரீகன்.
ஆச்சர்யம் #4:
இத்தனை களேபரத்திலும், எவ்வளவு நுணுக்கமாய், இரசித்து இரசித்து செதுக்கப்பட்டிருக்கும் என என்ன வைக்கும் வேலைப்பாடுகள், அங்கிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் தெரியும்.

entering the cave temple, originally uploaded by யாத்திரீகன்.
உள்ளே நுழைந்ததும் ஆச்சர்யப்பட்டு நிமிர வைக்கும் ஒரு கோபுரம்

when your inside this temple - its your within a rock cube whose inside is carved out for temple and statues, originally uploaded by யாத்திரீகன்.
சாதரணமாக ஒரு குகைக்கோயிளுக்குள் செல்லும் போது இருட்டு, குறைந்த காற்று, வவ்வால்களின் எச்சம் என பல விடயங்கள் நம்மை அங்கிருக்கும் அழகை இரசிக்க விடாது. ஆனால் இந்த குகையின் வித்தியாசமான குடைந்த முறை, வெளிச்சத்தை மேலிருந்து கொண்டு வருவதால், உள்ளிருக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமாய் இருக்கின்றது.
ஏதோ ஒரு கல்லின் உள்ளே மேலிருந்து ஓட்டை போட்டு, அதனுள் நிறைய சிற்பங்களாய் செய்துவிட்டு, அதனுள் நம்மை இறக்கி விட்டு சென்றது போல் ஒரு உணர்வு .. எங்கு நோக்கினும் சிற்பங்கள் , மேலிருந்து வரும் வெளிச்சம் அத்தனையும் அழகாய் காட்ட .. எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை .. அனுபவித்து பார்க்க வேண்டிய தருணம் அது ...

Temple top-1, originally uploaded by யாத்திரீகன்.
உள்ளிருக்கும் ஒரு கோபுரத்தின் க்ளோஸ் அப் ஷாட் , அதன் வேலைப்பாடுகளைக்காட்ட ..
அடுத்த பகுதியில், உள்ளிருக்கும் சிற்பங்களையும் .. மேலும் சில ஆச்சர்யங்களையும் பார்க்கலாம்...
23 மறுமொழிகள்:
நிஜமாகவே அசத்தலாக இருக்கு.
பிரம்மிக்க வைக்கிறது.
மேலிந்திருந்து கீழாக குடையப்பட்டது என்பது புதிய செய்தி, மிக்க நன்றி.
அப்புறம், இந்த கைலாசநாதர் கோவில் மாமல்லபுர குடைவரைக்கோவில்களில் அமைப்பைப் போலவே இருகிறது அல்லவா!
nichayam oru muraiyenum parka vendum ennum en aavalai kootiyadhu :)
@வடுவூர் குமார்:
முதல்ல இதோட பரப்பளவை பார்த்தே அசந்திருந்தோம் .. செதுக்கிய விதத்தை கேட்டதும் எங்களுக்கும் ஆச்சர்யம் கூடிருச்சு ..
@ஜீவா:
இதை வடிவமைத்து செதுக்கிய சிற்பிகள் தெற்கே பல்லவர்களின் இராச்சிய பகுதியில் இருந்தவர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு ... நீங்களும் சரியா சொல்லிடீங்க .. :-)
@dreamzz:
கட்டாயம், வெயில் காலத்தை தவிர்த்து விட்டு வேறு காலத்தில் போங்க , நல்ல இரசிக்க முடியும் ..
very nice post and also photo are picture perfect....
good job...
கைலாசனாதர் குகை பற்றிய
உங்கள் மெல்லிய யதார்த்தமான வர்ணனை
எத்தனை பாராட்டினாலும் தகும்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
படங்களில் பார்க்கும்போதே பிரமிப்பா இருக்கு. நேரில் இன்னும்............ ஹைய்யோடா!!!!
100 வருசமுன்னா அஞ்சாறு தலைமுறைகளா இங்கே இருந்து செதுக்கி இருப்பாங்களோ?
அவுங்க வாழ்க்கை அப்ப எப்படி இருந்திருக்கும்?
சரித்திரத்தை எழுதும்போது சிற்பிகளை எழுதாம விட்டவங்க நாமளாதான் இருப்போம்(-:
I wonder how you remember each and every thing you saw.... to relate with the photos.. Its really amazing...
@kannan:
நன்றி கண்ணன் .. மீண்டும் வருக...
Welcome & Thank you kannan :-)
@sury:
நன்றி சுப்பு இரத்தினம் :-)
@sury:
நன்றி சுப்பு இரத்தினம் :-)
எங்களை மிக அற்புதமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். மிக பிரமிப்பாக இருந்தன புகைப்படங்களும் உங்கள் விளக்கமும். நன்றி. கோவில் அமைப்பு முறை எட்ட நின்று பாரக்கும்போது எனக்கும் மாமல்லபுரத்தை நினைவூட்டியது.
chance illa !! epdi ungalukku mattum inga ellam pora chance kedakudhu!!
அட்டகாசம் தம்பி அருமை.தொடரட்டும் உங்கள் பயனம்
நன்றி டொக்டர் ... இங்கே பணியாற்றிய சிற்பிகளில் பல்லவர் பகுதி சிற்பிகளும் உண்டென சில தகவல்களும் உண்டு ..
நன்றி ப்ரியா .. மும்பையா பூனேயா னு குழம்பியிருந்த நேரத்தில .. எல்லோரா அஜந்தாவுக்கென மொத்த திட்டத்தையும் அதிரடியா மாற்றினோம் .. அற்புதமாய் அமைந்து அந்த பயணம் ..
நன்றி அண்ணா :-)
அமா டீச்சர் .. நேர்ல கட்டாயம் உங்களை மறந்திடுவீங்க .. மாமல்லபுறமாவது வெயில்னு சாக்கு சொல்லுவாங்க சிலர் ஆனா இங்க நிலவும் சூழல் இரம்மியமான சூழல் .. எல்லோரும் தங்கள் திறமைகளை பதிச்சாங்கலே தவிர சொந்த பெருமை கூடாதுன்னு நெனச்சாங்களோ என்னமோ அவுங்களை பத்தி ஒன்னுமே பதிக்கல அல்லது நமக்கு கிடைக்கல :-( , இதினாலேயே ஒரு காலச்சக்கரம் செஞ்சு போய் பார்க்கனும்னு ஆவல் கூடிகிட்டே போகுது :-D
நன்றி ரம்யாசித்ரா .. it was one of the wonderful trips i've ever had and i relished each and every moment being there probably that was the reason :-)
கல்லூரிக்காலத்தில் சித்திர பாடத்தில் கற்றது நினைவுக்கு வருறது.நேரில் பார்த்ததில்லை. அந்தக குறையை படத்துடனும் வர்ணனையுடனும் தந்து நீக்கியமைக்கு நன்றி யாத்திரீகன்.
நன்றி வருண் :-)
கல்லூரில எல்லோரா பத்தியா ? என்ன படிச்சீங்க ? :-)
கருத்துரையிடுக