யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

பைசா பெறாத பதிவு அல்ல !!

Published by யாத்ரீகன் under on புதன், நவம்பர் 09, 2005












எத்தனையோ பழைய நாணய வகைகள் இருந்தாலும், இங்கே இருப்பவைகளை கண்டவுடன்என்னவென்று சொல்ல இயலா ஒரு சந்தோஷம் :-D

அடிக்கடி உடைத்த உண்டியல்கள், பெரும் போராட்டத்துக்குப்பின் உடைக்காமல் எடுத்த சில்லறைகள்,நண்பர்களுடனான பரிமாற்றங்கள், பாட்டியிடமிருந்து கிடைக்கும் சின்ன சின்ன லஞ்சங்கள், கடைக்குச்சென்றுவருகையில் சுருட்டிவிட்ட மிச்ச சொச்சங்கள், சேர்த்து வைத்து வாங்கிய காரம்போர்ட்டு, சேர்த்து வைத்துவாங்காமல் போன சைக்கிள் என எல்லாவற்றையும் நினைவு படுத்தியதாலா ?

பி.கு: நல்ல வேலை இதை யாரும் பைசா பெறாத பதிவுனு சொல்ல முடியாது ;-)


15 மறுமொழிகள்:

சிவா சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 12:04:00 AM

Hmmmmmm. உண்மை தான். இப்போ 10 ரூவா கொடுத்தாலும் அந்த சந்தோசத்தை இந்த கால குழந்தைகளிடம் காண முடிவதில்லை.

Ganesh Gopalasubramanian சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 12:24:00 AM

//சேர்த்து வைத்து வாங்கிய காரம்போர்ட்டு//
அது என்னங்க எல்லாரும் சேர்த்து வைத்த பணத்தில் காரம்போர்டே வாங்கறோம். ஏதாச்சும் ரகசியம் இருக்கா என்ன?

//நல்ல வேலை இதை யாரும் பைசா பெறாத பதிவுனு சொல்ல முடியாது ;-)//
சரியான சில்லறைப் பதிவா இருக்கும் போல...(சும்மா தமாசுக்குத்தான் சொன்னேன் தப்பா நினைச்சுக்காதீங்க..)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 1:35:00 AM

@சிவா: 10 ரூபாவா... நீங்க வேற. அசால்டா நூறு ரூபாய் பாக்கெட் மணி-ல கேட்குதுங்க.. :-)))

@கணேஷ்: வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்கய்யா.. :-))) , அப்போ அடுத்த தடவை கோகினூர் வைரம் படத்தைப்போட்டு, விலை மதிக்க முடியாத பதிவுனு போடனும் போல இருக்கே... ;-)

அதுசரி நீங்களும் காரம்போர்ட்தானா :-) , அந்த நேரத்துல, காரம்போர்ட்னா ஒரு பெரிய விளையாட்டுப்பொருள், யாராலும் அவ்ளோ எளிதா வாங்க முடியாம இருந்தது, அதுபோக என்னனு சொல்ல முடியாத ஒரு Attraction அதன் மேல

Dubukku சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 4:47:00 AM

ரொம்ப சரிங்க...நாம் சேர்த்து வைச்ச உண்டியல் ரொம்பி உடைச்சு அதை எண்ணும் போது ஒரு பர பரப்பு வரும் பாருங்க...அந்த ஆனந்தமே தனி. இந்த பைசாவலாம் பார்கறதுக்கே நல்லா இருக்கு... நன்றி

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 7:37:00 AM

சரியாச்சொன்னீங்க..
அதுவும் அன்னைக்கு இருக்குறது 100 ரூபாயா இருந்தாலும் 1000 ரூபாய்க்கு கனவு காண்போம் பாருங்க ;-)

இந்திய நாணயங்கள் வரலாறு என வந்த மின்னஞ்சல்ல இருந்த பல நாணயங்களில் இவை மட்டுமே கண்ணை மட்டுமல்ல மனதையும் கவர்ந்தது டுபுக்கு :-)

எல்லாம் சரி,

-ங்க-லாம் எதுக்கு டுபுக்கு,எதோ ஜூனியர்ஸ் நாங்க... ;-)

வெளிகண்ட நாதர் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 8:24:00 AM

ஒத்த 5 பைசாவை உடாம பையில பிடிச்சுகிட்டு, இன்னொரு கையில சிலேட்டு பையை புடிச்சிகிட்டு ஸ்கூல் உட்டோன ஒடி வந்து கருப்பையா கடையில கம்மர் கட்டு வாங்கித் தின்ன ஞாபகம் தான் வருது

Pradeep Kuttuva சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 9:00:00 AM

super post..we were having this same discussion about old coins some time back...very nice...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 9:11:00 AM

வெளிகண்ட நாதரே வாங்க வணக்கம்... ஹீம்.. நீங்க சொன்ன கமர்கட், தேன்மிட்டாய், சூடமிட்டாய்லாம் இந்த காலத்துல யாருக்குத்தெரிய போகுது

நன்றி மதுரைஆரியன் :-)

பரஞ்சோதி சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 10:22:00 AM

ஆகா, தலைப்பு அருமையாக வைக்கிறீங்க.

பைசா, அதை நினைத்தாலே உள்ளம் குதுகலம் அடையும்.

இப்போ கூட கனவில் பைசாக்கள் தான் கீழே இருந்து எடுப்பதாக வருகிறது, நோட்டுகள் வரவே மாட்டேங்குது.

NambikkaiRAMA சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 10:38:00 AM

பரஞ்சோதி சொன்னதுபோல் தலைப்பு மட்டுமா அருமையா வைக்கிறீங்க? அதுக்கான பி.கு வும் அருமையா வச்சி தப்பிச்சிடுறீங்க :)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 6:25:00 PM

நன்றி பரஞ்சோதி மற்றும் ராமா..

:-D ஹிஹிஹி..!!!!!

Known Stranger சொன்னது… @ புதன், ஜனவரி 04, 2006 10:20:00 PM

i have no knowledge how you people use tamil font from key board that has english alphabets. how ever i am not good at tamil key board too.

the best coin i love to keep looking at is one i excaved at a temple ( no idea how old it is. In child hood i had a fascination that in old temples somewhere i could find a treasure and use to search the temple compounds in evening . The coin i have is semi square and a semi circular one - should be of chola kingdom because i found it in a old temple of chola kingdom.

Pot"tea" kadai சொன்னது… @ வியாழன், ஜனவரி 05, 2006 12:09:00 PM

ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே...பொக்கிசமாக உண்டியலில் சேர்த்த 10 காசு, 5 காசு ...எல்லாம் ஞாபகம் வருதே!

அது மட்டுமா...2ம் வகுப்பு படிக்கும் போது 5 பைசா திருடி, அம்மாவிடம் செவிலில் வாங்கின அறை கூட ஞாபகம் வருதே!

நல்ல பதிவு ராசா!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜனவரி 13, 2006 5:07:00 PM

@known stranger:
hey buddy.. nice name :-) try out the KuralSoft software available at http://kstarsoft.com/ you could also start tamil typing.. its called phonetic typing.. you type A and it interprets as அ, AA --> ஆ.. and it goes on..

hm... nice to hear abt ur coins.. yeah.. all childhood fantasies are treasures :-)

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜனவரி 14, 2006 11:52:00 PM

@sivanadiyaar:
ஆஹா.. திருட்டுப்பயலா இருந்திருப்பீங்க போல ;-)

potteakadai:
அட.. இன்ஸ்டன்ட் பாடலா :-))

கருத்துரையிடுக