யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு கோப்பை பழங்களும்

Published by யாத்ரீகன் under on வியாழன், நவம்பர் 10, 2005



சில நாட்களுக்கு முன் வீட்டுக்கதவைத்தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி. அவர் ஆப்பிரிக்க அமேரிக்கர், மேலும் மிகவும் வயதானவர். சாதாரண நாட்களில் பக்கத்து வீடுகளில் யாரிருக்கின்றார் என்று தெரியாது, ஆனால் அன்று வீட்டுக்கதவை தட்டியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


என்ன விஷயமாக இருக்கும் என்று யோசிக்கையில், "எனக்கு உடல் சரியில்லை, மருந்து வாங்கி வர வேண்டும்,எனக்கு வாங்கித்தர யாரும் இல்லை, வாங்கி வர இயலுமா பணம் தந்து விடுகின்றேன்", என்றார். ஆஹா, "ஹே மை மேன் !!!, டு யூ ஹாவ் 5 டாலர்ஸ்" என்று கேட்கும் கருப்பண்ணனை சொல்லி பலர் பயமுறுத்தி இருந்ததால் ஒரு நொடி என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.

இதே பெண்மணிதான், நான் லாண்டரி ரூம் சாவியை உள்ளே வைத்துப்பூட்டியபின் உதவி கேட்க கதவைத்தட்டியபோது, கையில் கத்தியுடன் (பாதுகாப்புக்கு) வந்து கதவைத்திறந்து, என்னை ஒரு நொடி திகிலடயச்செய்தவர்.

பிறகு வயசானவர் தானே என்று சரியென்று சொல்லி மருந்து சீட்டை வாங்கி வால்கிரீன்ஸ் சென்றால், அங்கே அவர்கள் பண்ணும் அலும்பு தாங்கவில்லை, நாலு மருந்த்துக்கு, சீட்டை இங்கே குடு, மருந்தை அங்கே வாங்கு, 15 நிமிடம் கழித்து வா.. (மதுரை இராமகிருஷ்ணா மருந்து கடையில் 5 நிமிடம்தான்)

அங்கே மருந்துக்கு பணம் செலுத்த தேவையில்லை, அவர் ஆயுள் காப்பீடு பார்த்துக்கொள்ளும் என அவர்கள் சொல்லி விட, பிறகு எதற்கு பிறகு பணம் தருகிறேன் என்று சொன்னார் என யோசித்தேன். கடைசியில் அதில் ஒரு மருந்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்றதும், சரியென செலுத்திவிட்டேன், உடனிருந்த நண்பர், வேண்டாம் வேண்டாத வேலை என்பதையும் மீறி.
மருந்து கொண்டு வந்து கொடுக்கையில், பணம் செலுத்தியது சொன்னதும், இந்த மருந்து வேண்டாம் என்றுவிட்டார், திருப்பி போய், கொடுத்து,என அது ஒரு தனி கூத்து.

பின்னர் ஒருநாள், அன்று சென்று வந்ததற்காக கார் எரிபொருளுக்கு பணம் தருகின்றேன் என்றவரை தடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

திடீரென, மறுபடியும் இருநாட்களுக்கு முன் வீட்டுக்கதவை தட்டிய அவர், கையில் ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு பெரிய பை நிறைய பழங்கள். என் மகள் எனக்கு வாங்கி வந்தாள், உங்களுக்கு நன்றி சொல்ல இது என்று கையில் திணித்து விட்டார். சிறிது நேரத்துக்கு முன்தான், ஒரு பெண், கையில் நிறைய பைகளுடன் வந்து, அந்த வீட்டுக்கதவை ஓங்கி உதைத்து திறந்து உள்ளே சென்று வேக வேகமாக, வைத்து விட்டுச்சென்றதை நான் பார்த்ததை அவர் அறியவில்லை.




மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் அந்த வாழ்த்து அட்டை....

உடல் சரியில்லாத நீங்கள்தான் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று கூறி, வேண்டுமானால் சிறு கோப்பையில் வேண்டுமானால் நிரப்பிக்குடுங்கள் என்றேன். நீங்களே வேண்டுமானதை எடுத்துவிட்டு மீதம் தாருங்கள் என்று கூறி விட்டார்.
எல்லாம் முடிந்தபின் எனக்கு என்னவென்று சொல்ல இயலா உணர்வு !!!!
15 வயதில் வீட்டை விட்டு தனியே சென்று சொந்தக்காலில் நிற்கத்தொடங்கி படிக்கும் இவர்களின் வாழ்வு முறையை மெச்சுவதா, இல்லை 50 வயதில் யாருமின்றி ஞாயிறானால் சர்ச், மற்ற நேரங்களில் TV, கதவைத்தட்டிய சத்தம் கேட்டால், கையில் கத்தியுடன் திறக்க என்று இருக்கும் வாழ்வு முறையை கண்டு வருந்துவதா என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் எல்லா வீட்டிலும் இப்படியில்லைதான், ஆனாலும் பெரும்பான்மை இப்படித்தானே ?!

எதையோ உருப்படியாக செய்த நிறைவைத் தந்தது அந்த ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு கோப்பை நிறைய பழங்களும்.

20 மறுமொழிகள்:

துளசி கோபால் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 9:04:00 AM

//15 வயதில் வீட்டை விட்டு தனியே சென்று சொந்தக்காலில் நிற்கத்தொடங்கி படிக்கும் இவர்களின் வாழ்வு முறையை மெச்சுவதா,......திறக்க என்று இருக்கும் வாழ்வு முறையை கண்டு ...//

இதுதான் இங்கேயும் .
எல்லாம் யதார்த்தமோ?

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 9:24:00 AM

கலை, நானும் ஒரு நொடி, கத்தியை கையில் பிடித்திருக்கும் வகைய பார்த்ததும், என்னடா தப்பு பண்ணீட்டமோ, Rental Office போய் சாவி வாங்கிருக்கலாமோனு தோணுச்சு...

கதவு தட்டி பணம் கேட்டாங்களா..
அடங்கொய்யா.. இப்படிலாம் வேற நடக்குதா... பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க..

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 9:26:00 AM

துளசி அக்கா, மொத முறையா நம்ம வலைப்பூவுக்கு வந்துருக்கீங்க பெரியவுங்க.. வணக்கம் :-)

இங்கேயும்-னு நீங்க சொல்றது நியூசிலாந்து தானே ?! ஹீம்.. நிறைய மேலைநாடுகள்ல அதுதானே வழக்கம் ஆகிடுச்சு... நம்ம மக்கள் யாரும் இதைப்பார்த்து பழக கூடாதுனு வேண்டிக்குவோம்...

NambikkaiRAMA சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 10:05:00 AM

நியாயமான கேள்வியை கடைசி பாராவில் எழுப்பி உள்ளீர்கள்.

Ganesh Gopalasubramanian சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 10:33:00 AM

//எதையோ உருப்படியாக செய்த நிறைவைத் தந்தது அந்த ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு கோப்பை நிறைய பழங்களும்.//
பழத்தை சாப்பிட்டு பாத்தீங்களா.... பின் விளைவுகள் ஏதுவுமில்லையே... (ஒரு தாமாசுக்குத்தான்)

நல்ல பதிவு. எனக்கு அமெரிக்காவின் வாழ்க்கை முறை தெரியாது. இப்படித்தான் இருக்குமென்றால் இனிமேல் போய் தெரிஞ்சுக்கவும் விரும்பலை.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 6:22:00 PM

ஆமாம் ராமா, இந்த கேள்வியை நம் நாட்டிலும் கேட்க்க வேண்டி வந்து விடுமோ என்று ஒரு பயம்தான்... :-(



வாங்க கணேஷ், சரியான பார்ம்-ல இருக்கீங்க போல, கமெண்ட் போட்டு தாக்குறீங்க :-) , நாம அவுங்களுக்கு குடுத்து இருந்தா அவுங்க வாங்கி இருப்பாங்களானு சந்தேகம்தான் (எல்லாம் பயம்தான்)... ஆனா நமக்கு அந்த அளவு சந்தேக புத்தி (முன்னெச்சரிக்கை) வரலை ;-) , இதோ இந்த பின்னூட்டம் இடுற வரைக்கும் நல்லாத்தான் இருக்கேன் ;-))

நம்ம ஊர்கள்லயும், தனிக்குடித்தனங்கள்னு, இந்த கலாச்சாரம் நகரங்கள்ல வருதுல ?!

Ganesh Gopalasubramanian சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 6:49:00 PM

//வாங்க கணேஷ், சரியான பார்ம்-ல இருக்கீங்க போல, கமெண்ட் போட்டு தாக்குறீங்க :-)//
செந்தில் ஃபார்ம் அவுட்டாயிருந்த எல்லாரும் ஃபார்முக்கு வந்திட்டாங்க. நாம் மட்டும் அப்படியே இருந்தா எப்படி? (மனசில எதுவும் வச்சுக்காதீங்க.... எல்லாம் ஒரு தோழமைக்குத்தான்)

// நல்லாத்தான் இருக்கேன் ;-)//
பழத்தைச் சாப்பிட்டீங்களா இல்லையான்னு சொல்லவே இல்லையே :-)

//இந்த கலாச்சாரம் நகரங்கள்ல வருதுல ?!//
ஆனாலும் அதில சொந்த பந்தங்கள் அப்பப்போ வந்திட்டு போய்ட்டு இருப்பாங்க. அதுதானே நமக்கு வேணும்.

பெயரில்லா சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 8:05:00 PM

un blogaa padichavoodanae romba santhosamma irunthuthu.............
usllathaan ppadeenu naenaikaathae makkal yellam...........
inga bangalorelaiyum appadithaan........pakathu veetla yaarum paesikka maataanga.........
avanka undoo avanga vaelai undoo avalavuuthaan.............

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 8:08:00 PM

நன்றி பூவிதழ்,
மதுரையில்யே என்னோட கல்லூரி வரைக்கும் இருந்திட்டு, கல்கத்தா போனதும் அங்கயும் நீ சொன்ன மாதிரி இருந்ததை ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாவே இருந்தது.. இங்கேயும் அதையே நினைவு படுத்துற மாதிரி நடந்ததும்...எங்க போய்கிட்டு இருக்கோம்னு யோசனையாப்போச்சு...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 8:25:00 PM

@கணேஷ்: :-)))) ஹாஹாஹா.. கட்டாயம் தப்பா எடுத்துக்கலை.. படிச்சதும் சிரிச்சிகிட்டுதான் இருந்தேன்...

கல்லூரி நேரங்களில ஒருத்தரை ஒருத்தர் கமெண்ட் அடிக்கிற மாதிரிதான் எடுத்துக்கிட்டேன் :-)

>>> ஃபார்ம் அவுட்டாயிருந்த >>எல்லாரும் ஃபார்முக்கு வந்திட்டாங்க

தமாசு இல்லாம உள்குத்தையும் ஆரம்ப்பிச்சுட்டீங்க.. சரியான டைம்ல தான் நட்சத்திரமா அகி இருக்கீங்க...

பெயரில்லா சொன்னது… @ வியாழன், நவம்பர் 10, 2005 8:41:00 PM

Hi Machan..
Super da machan.......
Nama makkal mathavangulukku eppothum uthavia iruppomnu nirubichute irukarathu romba santhosathukku uriyathu...

Then..
Avanga Culture its 400 years old. But ours its some 3000 years..
Ivalo kalam eduthukitathukana oru muthirchi (Experience).......nalla irukku illai...

Man is a social animal - Yaro oru muthiyavar sonnathu..
Those guys are trying to break it and they are making it as "Man is an animal".

Muthal 30 varudangal thanimai inimaya kudukalam....aana konjam vayasachunna attam kanduduthu nama manasu udal ellam...
So its painful to lead a lonely life...that too a lonely diseased old man's life...

Ithu oru padam...
Athitha Suthanthirathin azhivu.......Romba suthanthiram thanthathunaala undara prachinaigal...

The freedom they visualised was to have the entities enjoy their freedom within the social setup...but the freedom has gone to the extreme of breaking the setup and living like islands........like XTreme programming......ithu nama arasiyalvatheenga mathiri.........reservation reservation-nu solli erkaname munerunavana munethura muyarchi....pinnala irukaravana appidiye kandukama vittu alichidarathu...ithanala pinnala irukaravan konja naal-la illama airuvan....so ulagame munerunatha aidumama??? eppadi irukku kathai...


So ellam vazhkaikkum oru plus minus irukka than seyuthu..
Inga pennadimai.....25 vayasu aanalum oru dress vanga appa amma mugam pakka vendiya suzhnillai..

Anga evan appa evan ammanu theriyathu oru nilamai..

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, நவம்பர் 11, 2005 8:33:00 PM

@உமா கிருஷ்ணன்:

நன்றி உமா.

ஆமா நமக்கும் சொந்த ஊரு மருதை தான்... நான் மீனாட்சி அம்மன் கோவிலருகில்.

திருநகரும் எனக்குப்பழக்கம் கல்லூரி நண்பர்கள் பலர் அங்கே உண்டு....

மிகவும் சந்தோஷம் சக ஊர்காரர்களைச்சந்திப்பது :-)

பி.கு: ப்ளாகரில் உங்கள் ப்ரோபைலில் உள்ள இரண்டு வலைப்பூக்களும் இல்லை என்று வருகின்றதே...?

யாத்ரீகன் சொன்னது… @ சனி, நவம்பர் 12, 2005 12:38:00 AM

ஆம் அநானிமஸ்களின் அட்டகாசங்கள் ஒருசில நேரங்களில் தாங்க முடிவதில்லை.. :-)))

யாருதாங்க நல்ல எழுத்தாளர் ;-) எதோ ஒரு மடிக்கணினி கொடுத்துட்டாங்க.. கொஞ்சம் வேலையை சீக்கிரம் முடிச்சாச்சு, ப்ளாகரிலும் இலவச அனுமதி, கேட்கவா வேணும்.. மனசுல தோணுரதை எழுதவேண்டியதுதான்..:-D

>> don't think that I don't want to >> write in Tamil.

அப்படியெல்லாம் நினைக்கல, ஒவ்வொருத்தருக்கும் ஒரு வசதி..

செந்தமிழும் நாப்பழக்கம்ன்றது போய், இப்போ செந்தமிழும் கைப்பழக்கம்னு வந்துட்டுதே :-) அதே எழுத்துக்களுக்கும் பொருந்தும்...


*Holds a board saying உங்கள் வரவு நல்வரவாகுக, மீண்டும் வருக*

ஹிஹிஹி..!!!! :-D

பெயரில்லா சொன்னது… @ ஞாயிறு, நவம்பர் 13, 2005 10:43:00 AM

Hi Senthil,

Romba nandri for posting the tamil translation urls. I am goin to start bloggin in tamil soon. :)

Anbae Sivam! May the americans learn this.

Sudhakar Kasturi சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 11:09:00 AM
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Sudhakar Kasturi சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 11:11:00 AM

//15 வயதில் வீட்டை விட்டு தனியே சென்று சொந்தக்காலில் நிற்கத்தொடங்கி படிக்கும் இவர்களின் வாழ்வு முறையை மெச்சுவதா,..//
வெகு யதார்த்தமான கேள்வி. அவரவர் வாழ்க்கைமுறை அவர்களுக்கு. மும்பையில் என்ன வாழுதாம்? நான் இங்கு ப்ரம்மச்சாரியாக இருந்தகாலங்களில், என்வீட்டுப்பக்கத்து வீட்டில் யார் இருந்தனர் என்று இன்றும் தெரியாது. காய்ச்சலில் கிடந்தால் கிடக்க வேண்டியதுதான்... அறை நண்பன் அறிந்து எதாவது செய்யும்வரை.
இது மனிதம் மட்டுமல்ல, சமூகம் மட்டுமல்ல, மனித நேயம் சார்ந்தது. தறிகெட்டோ டும் நகர வாழ்வில் இதெல்லாம் நடக்குமானால் அதிர்ஷ்டம் எனக் கொள்ளலாம்.
நல்ல பதிவு. யாத்ரீகன். பாராட்டுகள். நன்றிகள்
அன்புடன்
க.சுதாகர்

ilavanji சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 11:28:00 AM

//எதையோ உருப்படியாக செய்த நிறைவைத் தந்தது //

படிக்கற எனக்கே சந்தோசமாத்தான் இருக்கு! நல்லதொரு பதிவு யாத்ரீகன்..

அதுசரி.. போட்டோல எங்கயோ போய்கிட்டே இருக்கீரு?! சுண்டல்பையனைத் தேடியா? :)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 10:03:00 PM

@முத்து ஆன்லைன்: தமிழ் இணையத்துக்கு வருக முத்து.. :-) ஆரம்பித்த உடன் தமிழ்மணத்தில் இணைக...

யாத்ரீகன் சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 10:13:00 PM

@ஸ்ரீமங்கை (சுதாகர்): நன்றி சுதாகர், ஆம் நான் கல்கத்தாவிலிருந்த நாட்களிலும் சில மாதங்கள் இப்படி அனுபவித்திருக்கின்றேன்... ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் கூட்டத்தைக்கண்ட உடன் அந்த அந்நியத்தன்மை போய்விடும்... :-) இங்கே வெளியே வந்தால் நாய் கூட ஒய்யாரமாய் காரில்தான் செல்கின்றது ;-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 10:15:00 PM

நன்றி இளவஞ்சி... வசிஷ்டமிடமிருந்து வாழ்த்துக்கள் :-) நன்றி...

சுண்டல்பையனையா ?! நான் கடலை ;-) தேடில போய்கிட்டு இருக்கேன்..

கருத்துரையிடுக