யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தோள்களிரண்டு

Published by யாத்ரீகன் under on புதன், நவம்பர் 16, 2005
மனதின் குடும்பக்கவலையை சிறிதே இறக்கிவைத்தார் அப்பா..
படிப்பின் கவலையை கொஞ்சம் இறக்கிவைத்தான் தம்பி..
குறைவதாய் நினைத்து பாசத்தின் கவலையை கொஞ்சம் தாத்தாவும்
சாப்பாட்டுக் குறையை நிறையவே இறக்கிவைத்தார் உடனிருக்கும் அன்பர்

தன் கவலையை இறக்கிவைத்தாள் தோழி..

இவர்களில் யாருமே அறியவில்லை

நட்பும் அறியவில்லை

அவன் தலையும் இரு தோள்களை தேடுகின்றதென்று..

சாய்ந்து கொள்ள உன்னிரன்டு தோள்கள் தவிர வேறொன்றும் நிரந்தரமில்லை என்று

முதலில் இருந்தே கூவிக்கொண்டிருக்கின்றது அவன் மனம்..

6 மறுமொழிகள்:

Ganesh Gopalasubramanian சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 2:20:00 PM

அவன் தலையும் ஒரு தோளைத் தேடுகிறதென்று இருந்திருக்க வேண்டுமோ??

யாத்ரீகன் சொன்னது… @ புதன், நவம்பர் 16, 2005 10:18:00 PM

@கணேஷ்: சரிதான் கணேஷ்.. ஆனால் மனதில் குடைந்துகொண்டிருந்ததை வெளிப்படித்தியபோது சொல்குற்றத்தைக்கூட நான் பார்க்கவில்லை.. இதை ஒரு வடிகாலாகத்தான் பார்த்தேன் :-) திருத்தாமலே விட்டுவிடுகின்றேனே


@கலை: நன்றி கலை :-)

வெளிகண்ட நாதர் சொன்னது… @ வியாழன், நவம்பர் 17, 2005 7:09:00 AM

தோள் கொடுப்பேன் தோழா!

யாத்ரீகன் சொன்னது… @ சனி, நவம்பர் 19, 2005 1:46:00 AM

நன்றி வெளிகண்ட நாதரே.. :-) இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருமே அதன் மூலம் தோள்தந்தவர்கள் தான்..

பி.கு:
உங்க பெயரை, ஆரம்பத்தில் வெளிகண்ட நாரதர்னு வாசிச்சுகிட்டுருந்தேன், ரொம்பநாள் கழிச்சுதான் தெரிஞ்சுருக்கு நாதர்னு :-) ஹிஹிஹி...!!!

ப்ரியன் சொன்னது… @ புதன், டிசம்பர் 07, 2005 11:29:00 AM

அருமை நண்பா!ஒருவனின் மன் ஏக்கத்தை அழகாய் படம் பிடித்திருக்கிறீர்.முன்னொரு நாளே இதை உங்கள் வலைப்பூவில் வாசித்தேன் ஆனால் அப்போது இருந்த அவசரத்தில் எனக்கு புரியவில்லை :) இப்போது நிதானமாகப் படித்தேன் மிகவும் அருமை :) வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வழங்குங்கள் ;)

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 08, 2005 10:17:00 PM

@ப்ரியன்:
அந்த ஒருவன் நானா இருந்ததால தான் வரிகள் மனசுல இருந்தத அப்படியே கொண்டு வந்திருக்கு :-)

மனசு ரொம்ப சஞ்சலப்பட்டு இருந்த தினமது.. ஐந்து நிமிடங்கள்ள மனசுல தோணுனத.. படபடவென எழுதி.. கொஞ்சம் திருத்தி பாத்த பிறகுதான் மனசு நிலைவந்தமாதிரி ஒரு உணர்வு..

கருத்துரையிடுக