யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தமிழ் வலைப்பூ உலகிற்கு இது புதுசு

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 08, 2006
வருங்கால சந்ததிக்கு வாழ இடமளிப்போம்

ஆங்கில வலையுலகத்துக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விஷயம் TAG, நாம் ஒரு விஷத்தைப்பற்றி பதிவு பண்ணிவிட்டு பின்னர் நாம் யாரிடமிருந்தும் அதைப்பற்றிய கருத்தை அறிய விரும்புகின்றோமோ அவர்களை TAG செய்வதன் மூலம் அவரும் அதைப்பற்றி கட்டாயம் பதிவு பண்ணவேண்டும் என்பது பதிவு செய்யப்படாத வலையுலக சட்டம்.

அதை மீறுபவர்கள் "அந்நியனிடம் மன்னிப்பு கேட்டு நூறு பின்னூட்டங்கள்" இடனும், இடாதவுங்க வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதாங்க இன்னும் எளிமையா சொல்லனும்னா விட்டகொற தொட்டகொற :-)

சரி எதுக்கு இவ்வளவு அறிமுகம் ? சக வலைப்பதிவு நண்பர் ப்ரியா கேட்டுக்கொண்டத்துக்கு இணங்க இந்த பதிவு.

சரி விஷயத்துக்கு வருவோம்..

1) மரம் வளர்ப்போம்:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்பதென்பது வெறும் வெற்றுக்கோஷமாகிவிட்ட இன்றைய கான்கிரீட் கலாச்சாரத்தில், பிறந்தநாள் கேக்குகளிடையே ஓர் மரம் நட்டு அதை மறக்காமல் பாதுகாப்போம். எங்கங்க மரம் வளர்குறதுக்கு இடம்னு நீங்க கேக்குறது புரியுது, பள்ளிக்கூடங்கள்ள, கல்லூரிகள்ளனு நடலாம்.. வேறு மாற்று (ப்ராக்டிகலான) யோசனைகள் இருக்கா ?!

2) அன்பு வளர்ப்போம்:
வாழும் வகையில் பூமியை விடவேண்டுமென்றால், அதில் உடன் அமைதியாய் வாழ மனிதர்களும் வேண்டும், ஆக குழந்தைகளிடம் வேற்றுமை பாராமல் அன்பை செலுத்தும் குணத்தை பெரியவர்களாகிய நாம் வளர்க்க வேண்டும்.

3) ப்ளாஸ்டிக் குறைப்போம்:
மனித கண்டுபிடிப்புகளில் மிகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை நோக்கி செல்லத்தொடங்கி உள்ளது. தேவையற்ற ப்ளாஸ்டிக் பயன்பாடு குறைப்போம். உதாரணம், தேவையற்ற நேரங்களிலும், சிறு,சிறு பொருட்கள் வாங்குகையிலும், துணிப்பைகளோ (அது பழைய பேஷனாக தோன்றினால்), கட்டை கைப்பிடிகள் வைத்த அலங்கரிக்கப்பட்ட பைகள் பயன்படுத்தலாம்.

4) பேப்பர் டிஷ்யூக்கள்:
இப்பொழுது பேஷனாகிவிட்ட காகித டிஷ்யூக்கள், இதற்கு பதில் துணி கைக்குட்டைகளை பயன்படுத்தினால், மரம் நடாவிட்டாலும், இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் காப்பாற்றலாம்.

5) விலங்குகளை காப்போம்:
விலங்குகள் இயற்கை உணவுச்சங்கிலியின் முக்கியமான ஓர் பகுதி. விலங்குகளை நேரடியாக காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, வளர்க்க முடியாவிட்டாலும் சரி, விலங்குகளின் தோல்,கொம்பு.. போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள பொருட்களை தவிர்ப்போம்.

6) மக்கும் குப்பை, மக்காத குப்பை:
மக்களுக்கும், அதை கையாளும் பணியாளர்களுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றி மேலும் விழிப்புணர்ச்சி வேண்டும், அவைகளை தனித்தனியே பிரித்து கையாளுவதில் தொழில்நுட்பரீதியில் உயரவேண்டும்.

7) மறு சுழற்சி:
மறு சுழற்சி பற்றி மக்களுக்கும், பொருட்கள் தயாரிப்பவர்களுக்குமான விழிப்புணர்ச்சி கூடி, அதை அதிநவீன முறையில் நடைமுறைப்படுத்தி, அதில் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.

8) கல்வி:
இவையனைத்தும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும், இதை வெறும் மனனப்பாடம் செய்யும் நோக்கில் கற்பிப்பதைவிட தொலைநோக்கு பார்வையில் ஆசிரியர்கள் கற்பிக்கவேண்டும்.

இதில் சொன்னவற்றை என்னால் இயன்றவரை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றேன், முக்கியமாக 1 முதல் 5 வரையிலானவற்றை கட்டாயமாக கடைபிடிக்கின்றேன், 6,7 பற்றி அதிகமாக தெரியவில்லை, யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.

இந்த விட்டகுறை தொட்டகுறையை (அதாங்க TAG), ப்ரியன் தன் எண்ணங்களை ஒரு கவிதையாக வடிக்க வேண்டும்.

9 மறுமொழிகள்:

NONO சொன்னது… @ புதன், பிப்ரவரி 08, 2006 2:08:00 PM

2,8 தவிர மற்றைய எல்லாம் ஏற்கனமே கடைப்பிடிக்கிறேனாக்கும்!!
3,4,5,6,7தீவிரமாய் கடைப்பிடிக்கிறேன்!

//குழந்தைகளிடம் வேற்றுமை பாராமல் அன்பை செலுத்தும் குணத்தை பெரியவர்களாகிய நாம் வளர்க்க வேண்டும்.//சில குழந்தைகளை போட்டு மிதிக்கவேண்டும் போல் இருக்கின்றது ஆகையால் sooory!!(அவ்வளவுக்கு அட்டகாசம்)

தாணு சொன்னது… @ புதன், பிப்ரவரி 08, 2006 2:53:00 PM

செந்தில்
உருப்படியான பதிவு. நிறைய செய்யணும்னு தோணினாலும், சிரமம் எடுத்து செய்வது நம் வாழ்க்கைச் சூழலில் முடியாததாகிப் போயிடும். ஆனால் நீங்க சொல்லியிருப்பது வாழ்க்கையோடேயே இணைந்து வரவேண்டியது இல்லையா?

``குப்பைகளைத் தரம் பிரித்து-மனதின்
குப்பைகளை வெளிக் கொட்டுவோம்

தரம் கெட்ட பொருள்கள் தவிர்த்து
மரம் நட வகைகள் செய்வோம்

விதைகளை மண்ணிலும் ஊன்றலாம்
விழுதுகளின் மனங்களிலும் ஊன்றலாம்''

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 08, 2006 6:39:00 PM

@ஒளியினிலே: வருகைக்கு நன்றி ஒளியினிலே, என்னங்க இப்படி சொல்லீட்டீங்க.. இந்த வயசுல குறும்பு செய்யாம எந்த வயசுலதான் செய்யுறது, அதுல இருக்குற அவுங்க கற்பனா சக்தியை இரசிக்க ஆரம்பிங்க, அவுங்க என்னதான் செஞ்சாலும் பட்டுனு சிரிச்சுருவீங்க.... அதுக்காக போட்டு மிதிக்க வேணும்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் அதிகம்தாங்க.. அங்க அங்க குழந்தைகளை அடிப்பது தவறுனு சட்டமெல்லாம் போடுறாங்க நீங்க வேற.. :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 08, 2006 6:53:00 PM

@தாணு:
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி :-) , சரியாச்சொன்னீங்க வாழ்கையோடு இணைந்து நம் இயல்பான பழக்க வழக்கமாக மாறவேண்டுமே தவிர, என்றோ ஒருநாள் செய்வது சரிவராது, அதனால் தான் முடிந்தவரை எளிமையான வழிமுறைகளையும், சிந்தனைகளையும் எடுத்து வைத்துள்ளேன்.. கவிதை அருமை, எளிமையான வார்த்தைகள், நேரடியான கருத்துக்கள்
உங்கள் கருத்துக்களையும் எடுத்து வைத்தால் நன்றாயிருக்குமே.. இந்த பின்னூட்ட மறுமொழியை உங்களையும் TAG செய்ததாக எடுத்துக்கொள்ளுங்களேன் :-)

NONO சொன்னது… @ புதன், பிப்ரவரி 08, 2006 10:17:00 PM

//அங்க குழந்தைகளை அடிப்பது தவறுனு சட்டமெல்லாம் போடுறாங்க நீங்க வேற.. :-)//

மிதிக்க வேண்டும் போல்தான் இருக்கிறது எண்று சொன்னேன், இன்னும் மிதிக்கல...!!!:-)

Maayaa சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 09, 2006 11:59:00 AM

அருமை செந்தில்!!! ரொம்ப அழகா சொன்னீங்க!!!

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 09, 2006 2:03:00 PM

@ஒளியினிலே: :-))))

@ப்ரியா: நன்றி ப்ரியா..

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 12:37:00 AM

epadi pa epadi...eapdi ethula....

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 11:17:00 AM

அதெல்லாம் அதுவா வருதுபா... கண்டுக்காத ;-)

கருத்துரையிடுக