யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தயவு செய்து போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள் !!!

Published by யாத்ரீகன் under on திங்கள், பிப்ரவரி 06, 2006

சென்னை வந்த உடன் நண்பர்களுடன் நேரம் களிக்கவேண்டுமென்று நினைத்தது உண்மைதான் அதற்க்காக இப்படியா :-( , சென்னை வந்ததிலிருந்து மருத்துவமனையிலேயே நண்பர்களுடன் நேரம் களிப்பதாய் அமைந்துவிட்டது...


இதைப்படிக்கும் அதிவேக விரும்பிகளே, அதிவேகத்தை துணிகரமான வீரச்செயலென்று நினைப்பவர்களாய் இருந்தால் சுவற்றில் சென்று முட்டிக்கொள்ளுங்கள்..


சென்ற வாரம் என் நண்பன் சீனியின் இந்த பதிவை படித்ததும்,மிகவும் உற்சாக வேகத்திலிருந்தேன், ஆனால் இந்த வாரம் இப்படி ஒரு பதிவை பதிப்பேனென்று எதிர்பார்க்கவில்லை....


நேற்று சென்னையில் என் மற்றொரு கல்லூரித்தோழனுக்கு ஓர் விபத்து...


அதிவேகத்தில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்து, மோதிய வேகத்தில் நசுங்கிய வாகனத்திலிருந்து அவனை மீட்பதே கஷ்டமாயிருந்ததாம்..


கால் முட்டியிலும், முட்டிக்கு மேலும் பட்ட அடியில் கிரிக்கெட் பந்து வைக்கும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது,காலில் பல இடங்களில் சிக்கலான எழும்பு முறிவு, கையில் ஐந்து இடங்களில் எழும்பு முறிவு, நெஞ்செலும்பில் காயம், முகத்திலும் கண்ணாடி தெரித்ததில் காயம், புருவம் ஒன்று முழுவதுமாய் காணாமல் போய்விட்டது, மூளையின் உள் இரத்தக்கசிவு, அது இரத்தக்கட்டானால் கோமாவிற்கு சென்றுவிடும் அபாயம் என எவ்வளவு சிக்கல்கள்..


நேற்று இரவு அறுவைசிகிச்சை நல்லபடியாய் முடிய, காலில் பல இரும்பு தகடுகள், நட்டுகள் பொருத்தப்பட்டன.., இன்று மதியம் செய்யப்போகும் Cற்T ஸ்கேனில் இரத்தக்கசிவுன் நிலவரம் தெரிந்துவிடும்.


ப்ளேட்டுகள் பொருத்தப்பட்டதால் 12 நாட்கள் மருத்துவமனையிலும், 3 மாதங்கள் மருத்துவமனையிலும் இருக்க வேண்டும்.. அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... உடைந்த எலும்புகள் ஒட்டவேண்டும்,அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... பொருத்திய இரும்பு ப்ளேட்டுகள் அகற்றப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை...நட்டுகளின் ஓட்டைகள் நிரப்பப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... முழுவதுமாய் முன்பு போல் இயல்பாக இல்லாமல் ஒருவித கவனத்துடனேயே இருக்கவேண்டும்..
வேறு என்ன நடந்துகொண்டிருக்கின்றது ?


நிர்வாகவியல் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியிருந்த நேரம், நல்ல அனுபவங்கள் கிடைத்துக்கொண்டிருந்த நேரம், தன் கனவுகள், எதிர்காலம் என தெளிவாக திட்டமிட்டு போய்க்கொண்டிருந்த நேரம், நல்ல நண்பனாக, அன்புள்ள அண்ணனாக, நல்ல பிள்ளையாக இருந்தான்..


இன்று அவனையும் உடலால் காயப்படுத்திக்கொண்டு,அனைவரையும் மனதால் வருத்தப்படவைத்து, இந்த ஆறு மாதங்களில் அவன் வளர்ச்சியை ஈடுகட்டப்போவது எது ?


நல்ல வேளை நல்லபடியாகவே அறுவைசிகிச்சையும் நடந்து முடிந்துவிட்டது...


இவையெல்லாம் ஒரே செயலால் தவிர்க்கப்பட்டிருக்கலாம், சீட் பெல்ட் அணிந்திருக்கலாம், நள்ளிரவு நேர, குதூகலத்துக்கான அதிவேக பயணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் வாழ்வில் இத்தகைய விஷயங்கள் இல்லாவிடில் சுவாரசியமேது என்பவர்களுக்கும், வாழ்வில் எதில்தான் ஆபத்து இல்லையென்பவர்களுக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.. போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள்...


இந்த சின்ன விஷயத்துக்கு நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படவேணாமென்று பலர் நினைக்கலாம், நான் இங்கே உணர்ச்சிவசப்படவில்லை, இதை இவ்வளவு விலாவாரியாக விவரித்துக்கூறியதற்கு காரணம், இதைப்படிக்கும் சிலரில் ஒருவருக்காவது இதன் இயல்பு நிலவரம் புரிந்து கவனமோடிருக்கலாம் என்ற நம்பிக்கையில்...


வேகம் விவேகம் அல்ல


சீட்பெல்ட் அணியுங்கள், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியுங்கள்... ப்ளீஸ் !!!!

24 மறுமொழிகள்:

Pavals சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 06, 2006 5:09:00 PM

rightu!! rightu!!

Karthik Jayanth சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 06, 2006 9:06:00 PM

//இன்று அவனையும் உடலால் காயப்படுத்திக்கொண்டு,அனைவரையும் மனதால் வருத்தப்படவைத்து//

//வேகம் விவேகம் அல்ல //

Well said ..

My prayers for u r friend.

ilavanji சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 07, 2006 12:41:00 AM

பிரதர்!

எங்க போனீங்க?! ரொம்பநாளா ஆளைக்காணோம்! :)

நீங்கள் சொல்வது சரி! ஒரு நல்ல ஓட்டுனரின் திறமை வேகமாக செல்வதில் இல்லை! பாதுகாப்பாக ஓட்டுவதிலேயே உள்ளது! நானும் யமஹா முறுக்கி இன்பம் கண்டவந்தான்! ஆனா இப்பெல்லாம் ரொம்ப பொறுப்பாதான் வண்டி ஓட்டறது...( வயசாகுதில்ல?! :) )

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 07, 2006 11:05:00 AM

@ராசா: வாங்க ராசா, மொதமொறையா வந்துருக்கீக..

@கார்த்திக்: நன்றி கார்த்திக், பிரார்த்தனைகளோடு, நாமும் விதிகளை கடைபிடிப்போம்..

@இளவஞ்சி: ஊருக்கு வந்து, புது பணியிடம் அது இதுனு ஒரு கணிப்பொறி கிடைப்பதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடிச்சு :-) ஹீம்... எல்லோரும் ஒரு கட்டத்துல வேகத்துல இன்பம் காண்றவுங்கதான், இப்படி எதாவது பக்கத்துல இருந்து பின்விளைவுகளை பார்த்ததும் மனசு ரொம்பவே மாறிடுது... இளவஞ்சி.. நீங்க இந்த பதிவை பார்தீங்களா ?? உங்க எல்லோரோட கருத்தும் வேணும்..

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 07, 2006 11:06:00 PM

what u said is right anna....//வேகம் விவேகம் அல்ல //
We must be very concious in road saftey...vega ma porath koraikarathu nalla matum road safety ya thaduka mudiyathu....gavanamagavum cellanum...we should not think abt some thng and drive.(phycly present mentaly absent).
oru china thapu oruperiya thavaruku karanam aaedum..
oru incident..

This is a real incident that happened in a local
hospital in Bangalore.
A 4 year old girl was admitted due to leg fracture. As it
was an open fracture, She was hooked on to life support system, as a part
of the process. The doctors had to input some data prior to the operation
to suit different conditions.

Thereafter, the operation proceeded. Half way through
the process, the life support system suddenly went dead.

The culprit:- Some one was using his/her hand-phone
outside the Operation theatre.. And the frequency had affected the system.
>>
They tried to track the fellow but to no avail. The little girl, died soon after. Sad to say, she was an only child.
>>
"Message:- Be compassionate! Do not use your hand
phone /mobiles specially at any hospitals or within the Aircraft or any places
where you are told not to use it.. You might not be caught in the act, but
you might have killed someone without knowing.
>>
" Sometimes it's a matter of Life & Death....!!!!
so nama seiura seiyal namalaum namalla,namalla suthi erukavangalum bathikakudathu...

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 08, 2006 10:53:00 AM

கருத்துக்களுக்கும், தகவலுக்கும் நன்றி வெங்கட்.. இங்கே என் நண்பன் இருக்கும் ICU-விலும் மொபைல் போன்களை அணைத்துவிடச்சொல்லி அறிவிப்பு அங்கு உண்டு. வெங்கட், நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் வண்டி ஓட்டும் போது தலைக்கவசமோ, சீட் பெல்ட்டோ மறக்காமல் அணியுங்கள், இதுவரை நீங்கள் அது செய்ததில்லை என எனக்குத்தெரியும், இனி அது வேண்டாமே, ப்ளீஸ்...

பெயரில்லா சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 4:09:00 PM

yathreegan, neenga rowdi senthil a? saadhu senthil a?

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 5:38:00 PM

@Anonymous :
தெரியலையேபாஆஆஆஆஆஆ !!!!!!

:-)

பெயரில்லா சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 6:13:00 PM

maapla nee sonnadhu vijaya prakash pathi thana? adhaan ketten :-)...
naanum TCE thaan

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 6:34:00 PM

அட.... நம்ம காலேஜ் மக்கா....

ஆமாம்டா மச்சான் அவனேதான்... இப்போ எல்லா அறுவைசிகிச்சைகளும் முடிந்து நல்லபடியா இருக்கான், ஆனால் என்ன இன்னும் 4 மாதங்கள் படுக்கையில் ஓய்வு எடுக்கனும்...

பெயரை விட்டுப்போயிருக்கலாம் :-)

பி.கு:
சாதுவான என்னை ரவுடினு தான் கூப்பிட்டுக்கிட்டு இருந்தானுங்க...

மணியன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 6:42:00 PM

வேகம் விவேகம் அல்ல என்று சாலையறிவிப்புக்களில் ஏற்படாத தாக்கம் உங்கள் உண்மை நிகழ்வில் ஏற்படுகிறது. எல்லோருக்கும் பயனாகும் அறிவுறுத்தல். நன்றி.
விஜய்பிரகாஷ் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 7:06:00 PM

நன்றி மணியன், இந்த பதிவின் நோக்கம் சிறிதள்வேனும் நிறைவேறிவிட்டதாக ஒரு திருப்தி :-) இதற்குத்தான் அவனுக்கு பட்ட அடிகளையும் செய்த சிகிச்சைகளையும் , பல தளங்களில் அவனுக்கு இந்த விபத்தினால் ஏற்பட்ட இழப்புகளையும், கஷ்டங்களையும் விரிவாக விவரித்தேன்....

பெயரில்லா சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 7:40:00 PM

செந்தில் உண்மையிலே யோசிக்க வச்சிறுச்சு நீங்க விலாவரியா எழுதுனது. இங்க http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post.html பாத்திங்கன்னாத் தெரியும் நம்ம வருத்தம். நன்றிப்பா.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 16, 2006 12:43:00 PM

பதிவைப்படித்டேன் அப்டிப்போடு... நீங்க சொன்ன மாதிரியேதான் அங்க இருந்த வரை, சமயம் கிடைக்கும்போதெல்லாம் மாட்டிக்காம அதிவேகமா போயிருக்கேன்... ஆனா இப்படி ஒரு விபத்துக்குள்ளானவரை இவ்வளவு அருகிலிருந்து கவனிக்கும் வரை... முக்கியமாக கைகளிலும், கால்களிலும் கம்பிகள் நீட்டிக்கொண்டிருப்பதையும்.., அவன் படும் உடற்வலியை காணும்போதும் போதுமடா என்றிருக்கின்றது..

Sud Gopal சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 16, 2006 12:59:00 PM

சரியாச் சொன்னீங்க.நம்ம சக வலைப்பதிவர் விஜயநகரத்து இளவரசனை உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.

இந்த தமிழ்மணத்துக்கு முந்தைய வலைப்பூக்களில் ஒரு வார விண்மீனாய் இருந்தவர் அவர்.தமிழக வரலாறு மற்றும் இந்திய சிற்பக்கலைகள் போன்றவற்றில மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவர்.
அவரும் இப்படித்தான் சென்ற ஆண்டு ஆகஸ்ட்26ல் நடந்த ஒரு சாலை விபத்தில அகால மரணமடைந்து விட்டாரு.ரொம்ப சின்னவயசுக்காரர்.கேக்கவே ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு.

என்ன செய்ய...? நாம சுதாரிப்போட இருந்துக்கணும்.இல்லைன்னா கஷ்டம் தான்.கொஞ்சம் நெறயத்தான் எழுதுங்களேன்.

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 16, 2006 6:21:00 PM

கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு, இளம்வயதில் வேகம் சுவாரசியமே, ஆனால் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருந்தால் நல்லா இருக்கும்..

எழுதுவதுக்கு உற்சாகமூட்டியதுக்கு ரொம்ப நன்றி கோபால் :-) என்னால முடிஞ்சத முயற்சி பண்றேன், உங்க எல்லோரோட வழிகாட்டுதல் வேணும்..

rv சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 3:35:00 AM

செந்தில்,
அதீத வேகம் ஆபத்தில்தான் முடியும். நானே பல விபத்துகளில் சிக்கியிருக்கீறேன். முருகன் அருளால் உயிர் பிழைத்துமிருக்கிறேன்.

seat belt அணியாமற் போயிருந்தால், திண்டுக்கல் அருகில், 160 kmph இல் ஒரு லாரியுடனான என் head on collision- லான என் கடைசி விபத்தில் நான் உயிர் பிழைத்தே இருக்க மாட்டேன். அதனாலேயே, இந்தியாவில் பலரும் சிரித்தாலும், சக பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் போனால், வண்டியை ஸ்டார்ட் செய்ய மாட்டேனென்று கொள்கை வைத்துள்ளேன்.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 1:37:00 PM

@இராமநாதன்:
யப்பா.. கேட்கவே.. அதிர்ச்சியா இருக்கு.. சரியான கொள்கைதான்... எல்லோரும் அதன் முக்கியத்துவம் அறிஞ்சு கடைபிடிச்சாங்கனா.. நல்லா இருக்கும்... எனோ தெரியல.. திடீரென.. மின்னலே படத்துல விவேக் அடிக்குற ஜோக் நியாபகம் வருது.. "வண்டி நல்லா ஓடனும்னா, அதுல இருக்குற நூறு பார்ட்ஸை மாத்துங்கடா.. அத விட்டுட்டு.. எலுமிச்சம்பழம் கட்டுனா எப்படினு" :-)))) அதுமாதிரி சீட்பெல்ட் போடாம.. பூசணி சுத்துறவுங்கதானே நம்பாளுங்க...

நண்பன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 2:48:00 PM

ஒவ்வொரு சாலையும் ஒவ்வொரு வேகத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும். கூடிய வரையிலும் அதை மீறாமல் இருப்பது நல்லது. சாலையில் நமக்கு முன்னால் யாருமே இல்லையே அதனால் வேகமாகப் போனால் என்ன என்ற எண்ணம் கூட தவறானது தான்.

இங்கே நான் பார்க்கும் சில விபத்துகளைப் பார்த்ததும் ஆயாசமாயிருக்கும். எப்படித்தான் இத்தனை மோசமாக மோதிக் கொள்கிறார்கள் என்று.

சில காரணங்கள் -

சரியான தூக்கமின்மை. வண்டியோட்டும் பொழுது அசத்தி விடும். தூக்க கலக்கம் இருப்பது மாதிரி தெரிந்தால், சூயிங்கம் மெல்லுங்கள். அல்லது எங்காவது வசதியான இடத்தில் நிறுத்திக் கொண்டு, சற்று தூங்கி விட்டு மீண்டும் ஓட்டுங்கள்.

மிக அதிக இரைச்சலில் இசை. பின்னால் வரும் வாகனங்கள் தரும் எச்சரிக்கை ஒலியைக் கவனிக்காது போய்விடக் கூடும்.

வன்மம் வைத்துக் கொண்டு - என்னையா முந்துகிறாய் - உன்னை விரட்டிப் பிடிக்கிறேன் பார் என்ற 'ரேஸ்' - முட்டாள்தனமானது.

சாலையை இலக்காக கொள்ளாமல், சாலையின் இருபுறத்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டு போவது - குறிப்பாக அரைகுறை ஆபாச விளம்பரங்கள், அழகிய பெண்கள் இவை போன்ற வேடிக்கைகளைத் தவிருங்கள்.

கவனத்தைத் தடம்புரள வைக்கும் மற்றொன்று - கைப்பேசியில் பேசிக் கொண்டே வண்டியோட்டுவது. இது கண்டிப்பாக உங்கள் கவனத்தைத் தடை செய்வது மட்டுமல்ல, வண்டியின் இயக்கத்திலும், குழப்பங்களை ஏற்படுத்தும்.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 4:34:00 PM

முக்கியமான தகவல்களை குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே.. இந்த விபத்து நடந்தது சென்னையில் புகழ்பெற்ற ECR சாலை... நல்ல சாலை என்று பெயர் பெற்றதைவிட அதிக விபத்துக்கள் நடக்கும் சாலை என்றே அதிகம் புகழ் பெற்றுள்ளது..

நீங்கள் சொன்னதில் இப்பொழுது அதிகம் நடக்கும் விபத்துக்கள் கைத்தொலைப்பேசிதான் காரணம் என்று அறிகின்றேன்...

அதிலும் என் தோழனின் இந்த விபத்துக்கு காரணம் தூக்கம்.. ஓட்டுனர் (அதுவும் மற்றொரு தோழனே) அருகில் அமர்ந்திருந்த என் தோழனும், வண்டியின் பின் அமர்ந்திருந்த மற்றொரு தோழனும் தூங்கியதாலும் .. அதிவேகத்தில் சென்றதால் திடீரென வாகனத்தின் செயல்பாட்டினை கட்டுப்படுத்த முடியாததாலும்தான்..

நண்பர் கூறியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாயினும், மீண்டும் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

பரஞ்சோதி சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 4:53:00 PM

யாத்ரீகன்,

நல்லதொரு பதிவு. அனைவரும் படித்து கவனமாக வாகனம் ஓட்ட வேண்டியது அவசியம்.

அனைவரும் விஜயநகரத்தாரை நினைவு கூறுவது நலம்.

நண்பன் அவர்களின் கருத்துக்கள் அருமை.

கொஞ்சம் கவனம் சிதறினாலும் வாழ்வே நரகமாகிவிடும் என்பதை மறக்கக்கூடாது.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 6:37:00 PM

வருகைக்கும், கருத்தை பதித்தமைக்கும் நன்றி பரஞ்சோதி...

Unknown சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 3:49:00 PM

இப்போது தான் உங்கள் சுட்டியின் மூலம் இப்பதிவினை படித்தேன். இப்போது உங்கள் நண்பர் எப்படி இருக்கிறார்?

சீட் பெல்ட் அணிவது இங்கேயெல்லாம் கட்டாயம். அப்படி அணியாமல் இருந்து பிடிபட்டால், 500 திராம் அபராதம். நமது ஊரில் 50 ரூ. லஞ்சம் கொடுத்து தப்பிவிடலாம் என நினைப்பவர்களே அதிகம் - சீட் பெல்டினை தனது பாதுகாப்பிற்காக அணிபவர்களை விட.

(உங்கள் இரத்த தான பதிவுக்கு இணைப்பு கொடுத்து, சீக்கிரம் ஒரு பதிவு இடுவேன்~. நீங்கள் நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவுகளில் ஒருவர்!).

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 5:32:00 PM

@துபாய்வாசி:
உடனே படித்தமைக்கு நன்றி :-) .. இப்போழுது 80 சதவிகிதம் குணமாகிவிட்டான். இல்லாமல் நடக்கின்றான், ஆனாலும் கை இன்னும் முழுமையாக சாதரணநிலைக்கு திரும்பவில்லை.. இத்தனை நாட்கள் அவன் வேலை களத்திலிருந்திருந்தால்.. அவன் தொடங்கியிருக்கும் நிறுவனம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதை மறுக்க/மறக்க முடியவில்லை...

ஆம்.. இங்கே நகரத்துக்குள் ஓட்டும் வேகம் குறைவாக இருப்பதால் அதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை, இத்தகைய சம்பவங்களை கேட்கும் வரை.. அரசாங்க/தனியார் ருட் பேருந்த்துகளிலும் இந்த சீட்பெல்ட் இல்லை இங்கே.. :-( ஆக அரசாங்கமே இதற்கு முக்கியத்துவம் குடுப்பதில்லை போன்ற தோற்றம் இருக்கின்றது..

>>> நீங்கள் நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவுகளில் ஒருவர் <<

மிக மிக நன்றி துபாய்வாசி.. என் பதிவுகள் எதுவும் பலரது கவனம் பெற்றதில்லை என்றே நினைத்து வந்துள்ளேன்... உங்கள் பின்னூட்டம் படிக்கும்போது மிகவும் மகிழ்சியாகவும், உற்சாகமூட்டுவதாகவும் உள்ளது. மீண்டும் நன்றி துபாய்வாசி :-)
பிகு:
நீங்கள் தானே உங்கள் சிறுவயது படம் ஒன்றை Profile-இல் வைத்திருந்தீர்கள் :-)

கருத்துரையிடுக