யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தாவணி போட்ட தீபாவளி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, பிப்ரவரி 10, 2006
நேத்துதான் 16 வயதினிலே படம் எதோ ஒரு சேனல்ல ஓடிக்கிட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பையில பக்கத்து ரூம்லருந்து சத்தம்.. "நான் சப்பாணி இல்ல கோவாலகிருஸ்ணன்"னு.. அட நம்ம பரட்டை அடிவாங்குற காட்சினு வேகவேகமா ரூமுக்கு போய் பார்த்ததுக்கப்புறம்தான் திருப்தியாச்சு :-)

சரி அதுல என்ன Splனு கேட்குறீங்களா.. அதுல ஒரு காட்சில நம்ம கதாநாயகியும் அவுங்க பட்டணத்து தோழிகளும் தாவணியோட சுத்திகிட்டு இருந்தாங்க..

அட எவ்ளோ அழகான உடை, இரசனையானது இப்போ எங்கே இதை பார்க்க முடியுது, சினிமாவில கூட எப்பயாவது நம்ம கதாநாயகனுக்கு காதல் ஆரம்பிக்குற காட்சில மட்டும் கதாநாயகி தாவணில வருவாங்க, அதுகப்புறம் ஒரே நாகரீகம்தான் ;-)

ஹைய்யோ ஆத்தா !! நான் ஒண்னும் பெண்விடுதலைக்கு எதிரி இல்லீங்க... , "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே"னு பாடுற காட்சில மட்டும் வேட்டி மடிச்சி கட்டுற புரட்சித்தமிழன் இல்லீங்க.. எதோ என் ரசனையையும் ஏக்கத்தையும் சொன்னேங்க.. (நம்ம தமிழ் வலைப்பூ பெண் நண்பர்கள் யாரும் நம்மல தப்பா புருஞ்சிகிட்டு விலாசிரக்கூடாது பாருங்க.. அதான் அந்த சுய விளக்கம்..)

இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட அடுத்தநாள், அதாங்க இன்னைக்கு காலைல அலுவலகத்துக்கு பஸ்ல வரும்போது ஒரு நிறுத்தத்துல ஒரு பொண்னு ஏறுனாங்க, ஒரே பார்வையில ஆள அசத்துற அழகொன்னும் இல்லீங்க, பளிச்சுனு கண்ணை உறுத்துற மாதிரி பஞ்சுமிட்டாய் கலர் உடையும் இல்லீங்க,

சாதரணமான மெரூன் நிறத்துல மேலாடை, வெள்ளை நிறத்துல தாவணி அதுல மெரூன் நிறத்துல ஓரம், பெரும் வேலைப்பாடலெல்லாம் இல்லிங்க, ரொம்ப எளிமையா ....

அட பளிச்சுனு இருந்தாங்க அந்த உடையில

எனக்கோ சந்தோசம் கொல்லல, ஜெமினில இறங்குற வரைக்கும் கிடைச்ச சிறு சிறு சந்தர்பங்கள்ல அவுங்கள பார்த்தேனோ இல்லையோ, அந்த தாவணி உடையை இரசிச்சேங்க....

ஹீம் இனி எப்போ பாக்கப்போறோமோனு பெருமூச்சோட...

ஏங்க நீங்க எப்போ பாத்தீங்க கடைசியா ?!!?!

34 மறுமொழிகள்:

Pavals சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 3:10:00 PM

//ஹீம் இனி எப்போ பாக்கப்போறோமோனு பெருமூச்சோட...//

அவ்ளோ காய்ஞ்சு போய் கிடக்கரீங்களா?? அய்யோ பாவம் ;-)

//ஏங்க நீங்க எப்போ பாத்தீங்க கடைசியா ?!!?!//

எதுக்கு பாவம்.. சொன்னா, அப்புறம் உங்க பெருமூச்சு.. பொறாமைமூச்சா மாறிடும்..

Pavals சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 3:12:00 PM

அதான் மட்டுறுத்தல் போட்டாச்சே.. அப்புறம் எதுக்கு அந்த வேர்ட்வெரிபிகேஷன்?.. நம்மள மாதிரி ஒரு நாலு தடவையாவது அடிச்சாத்தான் சரியான வார்த்தை விளங்கும்ங்கிறவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க.. அதை தூக்குங்க முதல்ல..

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 4:12:00 PM

You have left a space before BlogOwnerPhotoUrl$> in ur thamizmanam part-2 code.if u correct it your profile image will be displayed nearby ur post in thamizmanam.

error:< $BlogOwnerPhotoUrl$>
solution::<$BlogOwnerPhotoUrl$>

no need to publish this comment.Good luck!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 4:25:00 PM

ஆமா ராசா... கல்கத்தாவில ரெண்டுவருசம் ஓடிப்போயிருச்சு, அதுக்கப்புறம் 10 மாசம் வேற நாட்டுல காலி, இப்போவாவது பார்கலாம்னா.. சிங்காரச்சென்னையில எல்லாமே நவ நாகரீகமாப்போச்சு, சுடிதாரே கொறஞ்சுகிட்டு வருதுபோல... ;-) எண்ணிக்கையச்சொன்னேங்க....

நீங்களாவது நல்லாருங்கையா..!!!!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 4:29:00 PM

என்னடா இது, காலைலதான் நெனைச்சேன் என்னாடா என்னோட படம் மட்டும் வரமாட்டேங்குதேனு, இதுக்கும் உடனடியா தீர்வு கிடைச்சிருச்சு.. என்னமோ ஆச்சுபோ நெனைச்சதெல்லாம் நடக்குது..
இருக்கட்டுமய்யா அனானிமஸூ, எல்லாரும் அனானிமஸுங்கள திட்டும்போது, ஒரு நல்ல ஒதவி பண்ணியிருக்கீங்க.. உங்களுக்கு பாராட்டு, இதப்படிக்குற யாருக்காவது இதே பிரச்சனை இருந்தா ஒதவியா இருக்குமுல.. இந்த மறுமொழி இருக்கடுமய்யா..

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 4:57:00 PM

Hi!!!!:) How u doing???

-L-L-D-a-s-u சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 5:37:00 PM

1999 ஆம் வருடம் (அப்பவே இப்படின்னா இப்ப எப்படியோ?) அண்ணா பல்கலையில் , சுடிதார் ஜீன்ஸ் கூட்டத்திற்கிடையில் 'ஜில்'லுன்னு ஒரு தென்றல் தாவணியில் வர... ஆஹா...எல்லோர் பார்வையும் அந்த பெண்மீதுதான் ..

Dubukku சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 6:20:00 PM

என்ன ஒரே தாவணிக் கனவுகள் போல? :P

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 7:06:00 PM

ஹாய்யா.. fine-யா... ஹவ் யூ யா ?! :-) (நம்ம ஆட்டோக்காரன் style-ல படிச்சிக்கோங்க..)

ஹாய் நண்பரே.. என்ன உங்க பேர சொல்ல மறந்துட்டீங்க போல..? நான் சென்னையில சூப்பரா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டுப்போங்க.. அப்டியே சென்னையில இருந்தீங்கனா எங்கயாவது பார்த்துக்குவோம்.. சொல்லுங்க...

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 7:08:00 PM

ராசா.. வேர்ட் வெரிபிகேசன் தூக்கியாச்சு..!!!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 7:22:00 PM

வாங்க தாஸூ... இப்போ அட்லீஸ்ட் பொறியியல் படிக்குற பசங்க மட்டும் பாவம், மத்தவுங்க கொஞ்சம் பரவாயில்லனு தோணுனுது.. ஆனா ஐ.ஐ.டி சாரங் போயிருந்தேன் நம்ம சிங்காரச்சென்னையானு ஆகிப்போச்சு.. ;-)

தாணு சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 8:42:00 PM

செந்தில்
கொஞ்ச கொஞ்சமா தாவணி பேஷன் ஆகத்தொடங்கிவிட்டது தெரியாதா? ஈரோடு பக்கமெல்லாம் அப்பப்போ தாவணியில் அசத்தறதுதான் இப்போதைய ட்ரெண்ட். இன்னும் சென்னை வரை வரல போலிருக்கு!!

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 10, 2006 11:48:00 PM

nambitean na nambitean..nee ga atha ponu thavani ya rasichi cha ni gala na nambitean...So nall site adi kurigala..atha nagarigama solitiga...ne ga romba vevaram...
enaiku yarapathiga...

வெளிகண்ட நாதர் சொன்னது… @ சனி, பிப்ரவரி 11, 2006 1:08:00 AM

இப்ப எப்படியோ தெரியாது, அந்த காலத்தில தாவணிகள் அதிகமா பார்த்து கிறங்கி போவோம், அந்த அழகே ஒரு தனி! பொண்டுகளும் விரும்பி போட்டுக்குவாங்க அப்ப, முழு சேலையில்லாத ஒரு கவர்ச்சி, இதல இருக்கும். ரஜினி பதினாறு வயசில சொல்ற மாதிரி 'இவ ஆத்தாலுக்கு தாவணிப் போட்டாலும் நல்லாத்தாண்டா இருக்கு'ங்கிற மாதிரி யாருக்கு தாவணி போட்டு பார்த்தாலும் நல்லாத்தான் இருக்கும்!

Sud Gopal சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 13, 2006 4:09:00 PM

இயக்குனர் ஹரிக்கும் இந்த பாவாடை,தாவணி மேல ரொம்ப கிரேஸாம்.எப்பவோ எங்கயோ படிச்ச ஞாபகம்.தமிழ்ல ஆரம்பிச்சு சாமி,கோயில்,அருள்,ஐயான்னு அவரோட பட நாயகிகள் எல்லாம் தாவணி போட்டிட்டு தான் வருவாங்க(ஒரே ஒரு எக்ஸப்ஷன் சமீபத்திய ஆறு).

Sud Gopal சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 13, 2006 4:13:00 PM

அட.இப்போ தான் கவனிக்கிறேன்.

என்னோட பதிவை இங்கே பல ஜாம்பவான்களின் பதிவோட சேர்ந்து சுட்டியதற்கு நன்றிகள் பல.

நாமக்கல் சிபி சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 13, 2006 4:50:00 PM

பார்த்துங்க, எதுனா லேடி கான்ஸ்டபிளா (மப்டில) இருக்கபோறாங்க!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 13, 2006 4:57:00 PM

@டுபுக்கு:
:-)))) கனவா மட்டும் ஆகிடகூடாது ;-)

@தாணு:
ஓ இதுவேறயா.. எப்படி இருந்தா என்ன, தாவணில வந்தா சர்தான் :-D

@அனானிமஸீ:
டம்பி, பேரச்சொல்லீட்டு போயிருக்கலாமுல்ல... சைட்டா.. அது ஒரு அழகிய நிலாக்காலம்.. :-D ,அதெல்லாம் கூட்டமா பண்ணாத்தான் சுவாரசியமே.. இப்போ எங்கே அவனவன் ஆபிஸ்லயே செட்டில் ஆகிட்டான் (வேலையும் சரி, சைட்டும் சரி :-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 13, 2006 5:13:00 PM

@வெளிகண்ட நாதர்:
இப்பவும் அப்படித்தான்.. என்னதான் ஜாரிங்க ஜீன்ஸ்,டிசர்ட்னு வந்தாலும், தாவணிக்குதான் மதிப்பே.. :-D ,பரட்டை டயலாக்.. செம டைமிங் கமெண்ட் :-))))))

@சுதர்சன்.கோபால்:
அட ஆமா.. நீங்க சொன்னப்புறம்தான் நான் கவனிக்குறேன், தமிழ்-ல்ல தாவணிபோட்ட சிம்ரன் அழகே தனிங்க

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 13, 2006 5:21:00 PM

வாங்க சிபி,மொத மொறையா வந்துருக்கீங்க...
அஹா... இதுல இதுவேறயாங்கய்யா.. :-( , அழகை இரசிக்கலாம் துன்புறுத்தக்கூடாதுனு டயலாக் அடிக்குறதெல்லாம் சினிமாவுல மட்டும்தான் வேலைக்காகுமா என்ன ;-)

நாமக்கல் சிபி சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 13, 2006 5:43:00 PM

//பார்த்துங்க, எதுனா லேடி கான்ஸ்டபிளா (மப்டில) இருக்கபோறாங்க!//

அடப்பாவமே! மொத்த சந்தோஷமும் இந்த ஒத்தை வரியால ஆஃப் ஆய்டுச்சேன்னு ஃபீல் பண்ணுறீங்களா யாத்ரீகன்?

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 14, 2006 12:26:00 PM

@சுதர்சன கோபால்:
இந்த மட்டுறுத்தல்னால சில மறுமொழிகளுக்கான மின்னஞ்சல் தாமதமா வருது, ஜாம்பவான்னு இதை வைச்சு சொல்றீங்களா... ;-)

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 14, 2006 12:36:00 PM

@சிபி:
அட நீங்க வேற, அப்படி திருந்துற, பயப்படுற கேசா இருந்தா நாங்க காலேஜ்லயே முன்னேறியிருக்கனும்... :-))))

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 14, 2006 6:12:00 PM

rowdy kanna..thavani diwali..yaa...pathu ba!!!

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 12:04:00 PM

@அனானிமஸூ கல்லூரித்தோழா:
என்னத்த தாவணி தீபாவளி.... அது அடுத்த பொங்கல் வரைக்கும் கூட தாங்க மாட்டேங்குதே.. :-( , நீ சொல்றத பாத்தா அடிபட்டு அனுபவப்பட்ட மாதிரி இருக்கே ;-) என்ன சரியா ?

Unknown சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 4:29:00 PM

எனக்கு எனது 'வாலிப வயது தோழி' சொன்னது:

"எல்லா ஆம்பளைங்களுக்கும் தாவணி தான் புடிக்கும். நீங்க மட்டும் என்ன விதிவில்க்கா என்ன?"

எனக்கு அந்த டயலாக் தான் ஞாபகம் வருதுண்ணோவ்.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 4:38:00 PM

அடாடா என்ன இது அனானிமஸ் சொன்ன மாதிரியே பண்ணியும் இன்னும் புது பதிவு போடயில எம்படம் தமிழ்மணத்துல வரமாட்டேங்குதே.. :-(

யாத்ரீகன் சொன்னது… @ புதன், பிப்ரவரி 15, 2006 4:48:00 PM

பசங்க பல்ஸ் தெரிஞ்சவுங்களா இருக்காங்க.. , ஏனுங்கன்னா போட்டோ என்னங்கன்னா... ஒரு 10/15 வருசதுக்கு முந்துனதுங்களா.. .. இன்னும் பழசா எதுவும் கிடைக்கலையா ;-) சும்மா டமாசு !!!

Unknown சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 16, 2006 10:10:00 AM

இன்னும் பழசு கூட இருக்கு, ஆனா அதுலே முதுகு தான் தெரியும், அதான் வேண்டாம்னு போடலே (நான் உங்களைப் பத்தி சொல்லலிங்கோ!).

he he

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 16, 2006 12:21:00 PM

@dubaivaasi:
:-)))))))) வேணாங்க.. இதுலயே நல்ல அடையாளம் தெரியுதுங்கோ.. !!!

Maayaa சொன்னது… @ ஞாயிறு, பிப்ரவரி 19, 2006 9:34:00 PM

sendhil..
this is one thing that i really wished.. 12thclass varai chudidhar!!!
aprom northindiala college... aprom u.s..now wears saree sometimes...thaavani periode en lifela illa...
koncham kastam.

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 20, 2006 12:25:00 PM

@ப்ரியா:
:-) நீங்க வடநாட்டுல படிக்கும் போது மிஸ் பண்ணீட்டீங்களோனு தோணுது :-), என்ன பண்ண மதுரைல இருந்தப்பயே கல்லூரிக்கும் சரி, எந்த விழாவுக்கும் சரி எந்த பெண்களும் தாவணி போட்டதில்ல... சின்ன பொண்ணா இருந்தாலும் கல்லூரிக்கு சம்பந்தமே இல்லாம சேலையிலதான் வந்தாங்க.. , உங்களுக்கு கஷ்டம்தான்..

நம்மல யாரும் இப்படி ஒன்னும் சொல்லிரக்கூடாதுனுதான் கல்லூரிலயே வேட்டி கட்டியாச்சு... :-D

Udhayakumar சொன்னது… @ புதன், மார்ச் 01, 2006 2:42:00 PM

தாவணி மற்றும் சேலையைவிட கவர்ச்சியான உடை இந்த உலகத்தில் இல்லை.

நல்லா இருக்குங்க உங்க போஸ்ட் !!! என் ந்ண்பர்களுக்கும் பிடிக்கும் என்று என் ஃப்ளாகில் உங்களுக்கு லிங்க் கொடுத்து விட்டேன்.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், மார்ச் 01, 2006 7:12:00 PM

@உதயகுமார்: ஆஹா.. இப்படி வேற சொல்லிப்புட்டீங்களா :-) இனி பொண்ணுங்க போடாததுக்கு இத வேற காரணமா சொல்லிட போறாங்க... :-)))

நன்றி உதய், பாராட்டுக்கும், லிங்குக்கும் :-)

கருத்துரையிடுக